இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் அவரது நண்பரான பாடகர் இரஜ் என்பவரும் கொழும்பில் பாடசாலைகளில் புகுந்து குளப்பம் விளைவிக்கின்றனர். கடந்தவாரத்தில் மட்டும் விசாக வித்தியாலய, டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலய மற்றும் சிரிமாவோ பண்டார நாயக்க வித்தியாலய ஆகிய உயர்தரப் பள்ளிகளில் திடீரெனப் புகுந்துள்ளனர். நாட்டின் குரூரமான சர்வாதிகாரியின் மகன் என்ற அடிப்படையில் மாணவர்கள் அச்சம்கலந்த மௌனம் சாதித்தனர். சிரிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் பாடசாலை மட்டும் வேறுபட்ட நிலை எடுத்திருந்தது.
சிரிமாவோ பண்டாரநாயக்க பெண்கள் பாடசாலைக்குள் நுளைந்த இக்குழுவினர், பெண்களை உட்பகுதியிலிருந்த பயிற்சிக் கூடத்திற்கு பயிற்சிக்கு வருமாறு அழைத்திருக்கிறது. அங்கு தான் ரகர் பயிற்சியை ஆரம்பிக்கப்போவதாக சில மாணவிகளை நாமல் அழைத்துள்ளார். அதே வேளை இராஜ் வீரரத்ன பாடல்களைப் பாடும் போது மாணவிகளை ஆடுமாறு பணித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்த முழுப் பாடசாலையும் நாமல் குழுவினருக்கு கிளர்ந்தெழ பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் மாணவிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு நாமல் கும்பலை வெளியேற்றினர்.
கொலை மிரட்டலுக்கும் அஞ்சாமல் மாணவிகளின் வீரம்மிக்க ஆர்ப்பாட்டம் பாராட்டுதலுக்குரியது.