பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரித்தானிய மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கில் ஒரு ஆங்கிலேயர்கள் தமது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உணவருந்தாமல் பட்டினியிருக்கும் நிலை கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.Trussell Trust, TESCO என்ற பல்பொருள் அங்காடி, உணவுப் பங்கீட்டு நிறுவனமான FareShare ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
40 வீதமான பிரித்தானியர்கள் நாளாந்த உணவை வழமைபோலப் பெற்றுக்கொள்ள சிக்கல்படும் அளவிற்கு தமது பண நெருக்கடி கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மின்சாரத்திற்கும் சூடேற்றிகளுக்குமான செலவுத் தொகையை குறைத்து குடும்பத்திற்கு வழமைபோல உணவை வழங்க உத்தேசித்திருப்பதாக மூன்றில் இரண்டு பகுதி பிரித்தானியர்கள் தெரிவிதுள்ளனர்.
53 வீதமான பிரித்தானியர்கள் தமது வீட்டுச் செலவீனங்கள் குறித்துக் கவலையடைந்துள்ளனர். 33 வீதமான குறைந்த ஊதியமுள்ளவர்கள் தமது வேலை எந்த நேரத்திலும் பறிபோகலாம் எனத் துயரடைந்துள்ளனர்.
பிரித்தானியா மட்டுமன்றி ஐரோப்பா முழுவதும் பல்தேசிய பெருநிறுவனங்களின் சூறையாடலுக்கு உள்ளாகப்பட்டுள்ளது. இன்று காணப்படும் ஐரோப்பிய ஒழுங்கு எந்த சரிவடைந்து அழிந்துகொண்டிருக்கின்றது. வரலாறு காணாத நெருக்கடியை நோக்கி முதலாளித்துவம் தவிர்க்கமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
அழிந்துகொண்டிருக்கும் ஐரோப்பியப் பொருளாதார ஒழுங்கை தற்காலிகமாகக் காப்பாற்றுவதற்காக அரசுகள் வன்முறையைப் பிரயோகிக்கின்றன. தன்னார்வ நிறுவனங்கள் மக்களைத் தற்காலிகமாகப் போராட அனுமதிக்காமல் தடுக்கின்றன. மிகக் குறுகிய கால எல்லைக்குள் உலகின் தெருச்சண்டியர்களான ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் முடிவிற்குவருவது தவிர்க்கமுடியாதது.
Great Britain is still a great place to live, work and raise a family. Then they will never say, Thank You, to the Sri Lankan Tamils for bringing the whole of Small Britain in after 90 years of separation. They kept the six counties in Ulster in the United Kingdom. The whole world knows that that rest of the Ireland is another Banana Republic. UK will become UBR – United British Republics.