குஜராத் சட்டப்ரேவை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் நிறுத்தப்பட்டுள்ளார். மணிநகர் தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட ஸ்வேதா பட் மனுதாக்கல் செய்துள்ளார். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று ஸ்வேதா பட் கூறியுள்ளார். மக்கள ஆட்சியை நிலைநாட்டுவதற்கு முதல் படியாக மோடியை எதிர்த்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே முதல்வர் நரேந்திர மோடியும் மணிநகர் தொகுதியில் போட்டியுட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்த சஞ்சீவ் பட். இதனைதொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 2002ம் ஆண்டு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த இனவழிப்புக் கலவரத்தின் சூத்திரதாரி நரேந்திர மோடி தான் என்றும், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ‘இந்துக்கள்’ தொடுக்கப் போகும் தாக்குதல்களைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று மோடியே குறிப்பிட்டார் என்றும் சஞ்சீவ் பட் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் குஜராத் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்புப் புலணாய்வுத் துறையின் முன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் டிசம்பர் 13ந் தேதி மற்றும் 17ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி சமீப காலங்களாக அகில இந்திய ரேஞ்சுக்கு கனவு கண்டு வருகிறார். இதற்காகவே ஊடகங்கள் மூலம் ஊதிப் பெருக்கி பலவண்ணங்களில் இமேஜ் பலூன்களைப் பறக்க விட்டுள்ளார். இந்நிலையில், சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் அந்த பலூன்களில் ஊசியால் பொத்தலிட்டு விட்டது. சண்டையை மறப்போம், வளர்ச்சியைப் பற்றியும் அதற்குத் தேவையான ‘அமைதியைப்’ பற்றியும் மட்டுமே இனி பேசுவோம் என்று மிகச் சுலபமாக ஆயிரக்கணக்கான முசுலீம் பிணங்களைத் தாண்டிச் சென்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மோடிக்கு சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் ஆப்பறைந்தது.
Lal Krishana Adavani must be watching carefulyy too.