குஜராத் மாநிலத்தில் 45 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுள்ளதாக காங்கிராஸ் கட்சி, தேர்தல் பிரசார சுவரொட்டிகளை குஜராத் மாநிலம் முழுவதும் ஓட்டியுள்ளது. இது தவிர, மாற்றம் ஏற்படுத்த ‘கை’ கோர்ப்போம் என்ற தலைப்பில் நேற்றைய நாளிதழ்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இதில், எலும்பும் தோலுமாக ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம், தற்போது குஜராத் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தையின் புகைப்படம் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, எடுக்கப்பட்டது என்றும், அந்த புகைப்படம் வெளியான இணையதளத்தின் முகவரியையும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் வறுமையை விளம்பரம் செய்வதற்கும் இந்தியாவின் வியாபாரப் பசிக்குப் பலியான இலங்கைக் குழந்தைகள் விளம்பரமாகப் பயன்படுகின்றனர் என்பது அதிர்ச்சியான தகவல்.
முஸ்லீம்களை இனப்படுகொலை செய்த பாரதீய ஜனதா மதவெறியர்களோ இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்ட காங்கிரசோ இலங்கை மக்களை விளம்பரங்களிலும் சூறௌயாடுவதை விடப்போவதில்லை.