கிழக்கு மாகாணத்தில் சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. இதன் பொருட்டு 500 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் சுதந்திர வர்த்தக வலயத்தின் நிர்மாண வேலைகள் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் சுதந்திர வர்த்தக வலயம் புதிதாக நிர்மாணிக்கப்படுவதால் கைத்தொழில் மற்றும் விவசாயத்துறைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவிருக்கின்றன. இம்மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகள் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பலவும் உருவாக்கிக் கொடுக்கப்படவிருக்கிறது.
உத்தேசத்திட்டத்தின் கீழ் கைத்தொழில் மற்றும் விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவிருக்கின்றன.
சுதந்திர வர்த்தக வலயம் பற்றி அய்ரோப்பாவில் வரும் இணையத்தில் சில பிரஸ்தாபங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன.
சுதந்திர வர்த்தக வலயம் கொழும்பில் பெண்களின் மிதூன பாலியல் வன்முறை மையமாக விளங்குகிறது.
தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கிறது.
உலகமயமாததின் வலைப்பின்னலைப் பின்னும் மையம்தான் அது என்பது அனைவரும் அறிந்தது.
இந்நிலையில் கிழக்கின் விடிவெள்ளிகள் அது கிழக்கு;கு விடிவு தரும் என்று நம்புகையில் அறியாமை வாய் பொத்திச் சிரிக்கிறது.
கிழக்கின் விடிவெள்ளிகள் அது கிழக்கு;கு விடிவு தரும் என்று நம்புகையில் அறியாமை வாய் பொத்திச் சிரிக்கிறது.”
எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது.
கிழக்கில் சுதந்திர வர்த்தக வலயம்!!! : நிர்மலா.
https://inioru.com/?p=1168