தேசியம், தன்னுரிமை, தேசியத் தலைமை, தேசிய மொழி போன்ற சொல்லாடல்களின் ஊடாக மக்களின் உணர்வுகளை வெறுமனே ஒருங்கிணைப்பிற்கு உட்படுத்த முனைகின்ற சிந்தனையைத் தேசியம் என்று அழைக்கலாமா? கே.பி என்றழைக்கபடும் செல்வராஜா (குமரன்) பத்மநாதன் இந்திய ஊடகங்கம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல், அதன் பின்னான நிகழ்வுகளில் ஆரம்பித்து நீண்ட தூரம் பின்னோக்கிச் சென்றால் இதற்கான பதிலை மட்டுமல்ல இதன் பின்புலத்திலுள்ள அரசியலையும் புரிந்து கொள்ள முடியும்.
மில்லியன் கணக்கான முதலீடுகளின் சொந்தக்காரின் மகளான தாய்லாந்து அமைச்சர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்துகொண்ட கே.பி என்கின்ற மில்லியன்களின் அதிபர், இலங்கை அரச பாசிஸ்டுகளோடு இணைந்து கொண்டார்.
முன்னதாகப் புலிகளின் முக்கிய உறுப்பினராகவும், பிரபாகரனின் இழப்பின் பின்னதாகப் புலிகளின் தலைவராகவும் அறிவிக்கப்பட்ட கே.பி இன்றை வரைக்கும், தேசியத் தலைமை, தமிழ்த் தேசியம் போன்றவற்றை உச்சாடனம் செய்துகொண்டே, மிகத் தந்திரோபாயமாக இலங்கை அரசிற்காகவும், அதன் நண்பர்களுக்காகவும் செயற்பட்டு வருகிறார்.
கைதானோர் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. அப்பாவிமக்கள் மீதான இராணிவ ஒடுக்கு முறைக்கு ஊடாக தனது இராணுவ சர்வாதிகாரத்தைக் கட்டமைக்கும் மகிந்த ராஜபக்ச அரசு பேச்சு வார்த்தை குறித்துப் பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.
உண்மைகள கால்ம் ஒருநாள் ஒலிக்கும் போது அது தீர்ப்பிடும் எட்டப்பர்,காக்கை வன்னியன் போல கே.பி யும் நவீன உலகின் உளவாளீயாக அறீயப்படுவார்.வ்ரலாறூ நெடுக தொட்ரும் இந்தக் க்ழுத்தறூப்பின் புதிய கதாநாகனாய் கேபி இருப்பார்.ஆனால் யூதாஸ் தற்கொலை செய்து கொண்டது போல கேபி செய்ய மாட்டார் ஏனெனில் புலிகள் கழுத்தறூப்பு ஊடாகவே வளர்ந்தவர்கள் ஆக கேபி இன் காலங்கள் பிரகாசமாகவே உள்ளது.பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் புத்தகம் எழுதி இன்னும் அவர் மில்லியன் பணம் பண்ணலாம்.