கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில்(2012), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 200, 044 வாக்குகளைப் பெற்றிருப்பதுடன் 14 ஆசனங்களைப் பெற்று 12 ஆசனங்களும்; போனஸ் ஆசனங்கள் 02 மாக 14 ஆசனங்களை அக்கட்சி பெற்றிருக்கிறது. இதே வேளை வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாசண சபைகளிலும் ஐ.மு.சு.முன்னணி பெரு வெற்றி பெற்றிருக்கிறது. கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 200, 044 வாக்குகள் – 14 ஆசனங்கள்
தமிழ் அரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) – 193, 827 வாக்குகள் – 11 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 132, 917 வாக்குகள் – 07 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 74, 901 வாக்குகள் – 04 ஆசனங்கள்
தேசிய சுதந்திர முன்னணி – 9, 522 வாக்குகள் – 01.
தமிழ் அரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) 193, 827 வாக்களைப் பெற்று 11 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) 1,40682 வாக்களைப் பெற்று 6 உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவகள்,
தமிழ் அரசுக் கட்சி – 1,40,682 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 23,083 வாக்குகள் – 1 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 64,190 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
த.அ.கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பிலும், பட்டிருப்பிலும் வெற்றி பெற்றிருக்கிற போதும், கல்குடாத் தேர்தல் தொகுதியில் ஐ.மு.சு.முன்னணி 22,965 வாக்குளைப் பெற்றிருக்கிறது. கல்குடாத் தொகுதியில் ஐ.ம.சு.முன்னணியில் பிள்ளையான், கருணா, அமீர் அலி ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. த.அ.கட்சி 39 வீத வாக்குகளைப் பெற்றிருக்கிற போதும், முஸ்லிம் காங்கிரஸ் 15 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கிறது.
தமிழ் அரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) திருகோணமலை மாவட்டத்தில் 44,396 வாக்குகளைப் பெற்று 3 உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவகள்,
தமிழ் அரசுக் கட்சி – 44,396 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 26,176 வாக்குகள் 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 43,324 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய சுதந்திர முன்னணி – 9, 522 வாக்குகள் – 1 ஆசனம்
திருகோணமலை தேர்தல் தொகுதியில், த.அ.கட்சி 28, 067 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.
கிழக்கு மாகாண சபை தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132, 917 வாக்களைப் பெற்று 07 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.மு.காங்கிரஸ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவகள்,
தமிழ் அரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) – 44, 749 வாக்குகள் – 02 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 83, 658 வாக்குகள் – 04 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 92, 530 வாக்குகள் – 05 ஆசனங்கள்.
ஆயினும் ஸ்ரீ.மு.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
did ex chief minister chandra kanthan win?