ரஷ்யாவைச் சூழவுள்ள நான்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு 600 படைகளை அனுப்புகிறது. ஐரோப்பாவில் போர் மேகங்கள் சூழ்கின்ற அறிவிப்பை 600 படைகளும் எடுத்துச் செல்கின்றன. கடந்தவாரம் அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி பொய்யான ஆதாரங்களை உக்ரையின் தொடர்பாகச் சமர்ப்பித்து கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டார். இது அமெரிக்க அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹிட்லரை வழிபடும் அமெரிக்க ஆதரவு வலதுசாரி நிறவெறி நாசிப் படைகள் உக்ரையினில் சதிப் புரட்சி ஊடாக ஆட்சியைக் கைப்பற்றின. அதன் பின்னர் உக்ரையினில் மாபியா நாசிப் படைகளுக்கு எதிராக மக்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடிவருகின்றனர். யூதர்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் தமது உரிமைக்கான போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். தனது வியாபார நிலைகளிலேயே குறியாகவுள்ள ரஷ்யா உரிமைக்காகப் போராடுவோரைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் போலந்து, லத்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா ஆகிய நாடுகளுக்கு தமது படைகளை அனுப்புகிறது. அமெரிக்கப்படைகள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தம்முடன் எடுத்துச் செல்லும் என பென்டகன் தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாமல் அமெரிக்க டாலர் அழியும் நிலை உருவாகியுள்ளது என்றும் அதனோடு அமெரிக்காவின் உலக ஆதிக்கம் அற்றுப்போகும் எனவும் அதற்கான முன் தயாரிப்பையே அமெரிக்க இராணுவம் மேற்கொள்கிறது எனவும் ஸ்கொட் லெய்லர் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆவணப்படம்:
All are expected…
Citizens of Ukraine have to decide…
Or will be another Iraq, Sirea, or Afghan…
Yes they have to decide whether to be bullied by the criminal Putin or to live free.