யுத்தத்தோடு இணைந்த சமூகச் சீரழிவிற்கு அதிகாமகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் இலங்கையின் வறிய மாகாணங்களில் ஒன்றாக மாறிவருகிறது. இங்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களே. நாடோடிகளோடு இணைந்து கொண்ட சிறுவர்களும், வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களும் அனாதையான ஆரோக்கியமற்ற சந்ததி ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்வி அமைச்சின் ஆய்வொன்றில் 3215 சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.







