கிழக்கு மாகாணத்தி;ல் சில அரசியல் கட்சிகளுக்கும், நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர்என்.கே.இளங்கக்கோனிடம், தேர்தல் திணைக்களம் எழுத்து மூலம் கோரியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தம்மை ஆயுத முனையில ;அச்சுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர்ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தனிப்பட்ட நபர்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள்வழங்கப்பட்டிருந்தால் அவற்றை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினரிடம் ஏற்கனவேகோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.