Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிழக்கில் தமிழ்-முஸ்லீம் முரண்பாட்டைத் திட்டமிட்டுத் தூண்டும் ஹக்கீமின் கொலைவெறி: அஜித்

இனியொரு... by இனியொரு...
02/08/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts
மகிந்த ஹக்கீம்
மகிந்த ஹக்கீம்

கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கில் பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பிற்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத நோக்கங்களுக்குத் துணை போகும் வகையில் முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சரத் தெரிவு செய்துள்ளது.

சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழ் பேசும் அனைத்து மக்கள் பிரிவினரதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் ஒடுக்கும் தேசம் ஒன்றில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் முஸ்லீம் காங்கிரஸ் செயற்பட்டுவருகின்றது. குறிப்பாக, கொழும்பை மையமாகக் கொண்ட தரகு முதலாளித்துவ வியாபாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் தலைமைகள் சாமானிய முஸ்லீம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது.

ராஜபக்ச ஆட்சியின் கீழ் பொதுபல சேனா என்ற பௌத்த பாசிசக் கட்சி இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்களை நடத்திய வேளையில் ராஜபக்சவுடன் ஒட்டிக்கொண்டிருந்த ரவுப் ஹக்கீமின் வரலாறு முழுவதிலும் இரத்தக் கறைகளைக் காணலாம்.

Mohammad Hussein Muhammad Ashraff (Oct 23, 1948 – Sep 16, 2000)
Mohammad Hussein Muhammad Ashraff (Oct 23, 1948 – Sep 16, 2000)

அரசியல் கொலைக் கலாச்சாரத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய முன்னோடி அரசியல் வாதியாக ரவுப் ஹக்கீம் கருதப்படுகின்றார். 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொலைசெய்யப்பட்ட அஷ்ரப் அலி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கொழும்பு சார் முஸ்லீம் தலைமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரவூப் ஹக்கீம் அஷ்ரப் அலியின் கொலைக்கு பின்னணியில் செயற்பட்டார் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்பட்டது. கொலையாளிகளை அதிகாரத்தில் வைத்துக்கொண்டு அடிப்படை ஜனநாயகத்தைக் கூட உறுதிப்படுத்த இயலாது என்பதற்கு ரவுப் ஹக்கீம் ஒரு முன்னுதாரணம்.

தமிழ் – முஸ்லீம் மக்களிடையே நீண்ட கால வரலாற்றுத் தவறுகளின் ஊடான முரண்பாடுகள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தணிய ஆரம்பித்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் உட்பட இயக்கங்கள் ஆகியவற்றின் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களும், முஸ்லீம் அடிப்படைவாதக் குழுக்களின் எழுச்சியும் முரண்பாடுகளை ஆழப்படுத்த, ரவுப் ஹக்கீம் போன்ற கொடூரமான அரசியல் தலைகள் அந்த முரண்பாடுகளைப் பேரினவாதிகளின் நோக்கங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

திட்டமிட்ட பௌத்த சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப்பேசும் மக்களைக் கிழக்கில் சிறுபான்மையாக்கின. 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் 40 வீதமானவர்கள் முஸ்லீம் அல்லாத தமிழர்கள், 37 வீதமானவர்கள் முஸ்லீம் தமிழர்கள், மிகுதி 23 வீதமானவர்கள் சிங்களவர்கள். கல்லோயாத் திட்டத்தில் ஆரம்பித்த சிங்களக் கு டியேற்றங்கள் இன்று மொத்த கிழக்கு மக்கள் தொகையில் 27 வீதமாக அதிகரித்துள்ளது.

 கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி
கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி

பெருந்தேசிய வாதிகளின் நோக்கங்களுக்குத் துணை சென்ற தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளை ஆழப்படுத்தும் தமிழ்த் தரகுமுதலாளித்துவக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்கொள்ள தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை அஷ்ரப் அலி வலுப்படுத்த முனைந்த போதே கொழும்பு முஸ்லீம் தலைமைகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று அந்த ஒற்றுமை முன்னெப்போதும் இல்லாத அளவில் இறுக்கமடைந்து வரும் நிலையில் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ரவூப் ஹக்கீம் முரண்பாட்டை ஆழப்படுத்த விரும்புகிறார்.

அதன் மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்கிற்கு முரண்பாட்டை ஆழப்படுத்திவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரகு முதலாளித்துவத் தலைமைகள் இந்திய இந்து அடிப்படைவாத மதவாதக் குழுக்களான ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றுடன் கூடத் தொடர்புவைத்துக்கொள்கின்றன. இவர்களின் நோக்கம் மக்கள் சார்ந்ததல்ல. முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகளை நிராகரித்து ஒடுக்குமுறைக்கு எதிரான புதிய தலைமைகளின் தோற்றம் இன்று அவசியமானதும் அவசரமானதுமாகும்.

இச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் தன்னார்வக் குழுக்கள், வடக்கைப் போன்று கிழக்கிலும் சிவில் சமூகங்களை உருவாக்க முயல்கின்றன. மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் தன்னார்வ நிறுவனங்கள் சிவில் சமூகங்கள் உருவாக்கி நீண்டகால நோக்கில் மக்களை அடிமையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. மக்களை அணிதிரளவிடாமல் தடுக்கின்றன.

மக்கள் அணிதிரட்டப்பட்டால் மட்டுமே சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும் போராட முடியும். வட கிழக்குத் தமிழர்களின் தன்னாட்சி எவ்வளவு முக்கியமானதோ, முஸ்லிம் மக்களும் தமது தன்னாட்சி உரிமைக்காக பொது எதிரியான பேரினவாத அரசிற்கு எதிராகப் போராட வேண்டியதும், அதற்கான அரசியலை முன்வைப்பதுமே இன்றைய தேவை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பேசப்படாத ஐக்கிய அமெரிக்காவின் வரலாறு!

பேசப்படாத ஐக்கிய அமெரிக்காவின் வரலாறு!

Comments 2

  1. S.G.Ragavan (Canada) says:
    11 years ago

    அஜித் தங்களின் கட்டுரை தொட்டுச் செல்லும் விடயங்கள் பெறுமதியானவை கனதியானவை ஆனால் தங்களின் தலையங்கம் கடுமையான உறுத்தலை கொண்டது. இப்படியான தலையங்கங்கள் கூட இனமுறுகலை உருவாகக் கூடியது.
    கிழக்கில் தமிழ்-முஸ்லீம் முரண்பாட்டைத் திட்டமிட்டுத் தூண்டும் ஹக்கீமின் கொலைவெறி என்ற தலையங்கம் கட்டுரையில் உள்ளடக்கத்தின் நடுநிலைத் தன்மையை புறந்தள்ளி விடுவதாக காண்கிறேன்.

  2. a voter says:
    11 years ago

    கிழக்கு மாகாண சபை பற்றிய பிரச்சினை பெரிது படுத்தப்பட வேண்டியதல்ல.
    1. மாகாண சபைகளிற்கு அதிகாரம் இல்லையென்றால் முதலமைச்சர் பதவியை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்?
    2. தமிழர்களின் விருப்பம் என்று மட்டும் வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி செய்ய முடியாது. அங்கு முஸ்லீம்களும் சிங்களவர்களும் கூட கணிசமான அளவு இருக்கிறார்கள்.
    3. அஷ்ரப்பின் கொலைக்கு ஹக்கீம் மீது பழி சுமத்துவது ஆதாரமற்றது. முன்னர் சந்திரிக்கா மீது பழி சுமத்தப்பட்டது. அஷ்ரப்பின் மரணம் கொலை தானா என்பதே விவாதத்திற்குரியது. கிசுகிசுக்களையும் வதந்திகளையும் வைத்து வியாக்கியானம் செய்வது தவறு.
    4. மற்றப்படி கட்டுரையின் கடைசிப்பகுதியுடன் எனக்கு முரண்பாடு இல்லை. ராகவன் கூறியது போல தலைப்பு ஒருதலைப்பட்சமானது.

    கடைசியில் ஒன்றுமில்லாத ஒரு பதவிக்காக இப்படி இவர்கள் அடிபடுவதைப் பார்க்கையில் கவலையாக இருக்கிறது. இருதரப்பினரும் (ததேகூ – முகா) மக்களைப் பிரிப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...