கிழக்கில் அகற்றப்பட்ட நிலக்கண்ணிகள்

கிழக்கில் இதுவரையில் 95 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை பூரணமாக அகற்ற முடியுமென அமைச்சின் ஆலோசகர் எம்.எஸ். ஜயசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிராண் பகுதியில் மாத்திரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாது எஞ்சியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளின் மூலம் இதுவரையில் 280,000 கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவப்படையினர் மற்றும் 7 அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.