கிளிநொச்சி வெகுவிரைவில் மீட்கப்படும் : ஜனாதிபதி உறுதிமொழி

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சிப் பிரதேசம் வெகுவிரைவில் மீட்கப்படும் என ஜனாதிபதி அமைச்சர்களிடம் உறுதியளித்துள்ளதாகப் பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவப்படையினர் நேற்றைய தினமும் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகளைக் கைப்பற்றியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச படையினர் முன்னெடுக்கும் யுத்தத்திற்கு நிபந்தனையற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்