இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தி வருவதால் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மூன்று மாதங்கள் போதுமானது என கருணா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் பாதுகாப்பற்ற பிரதேசங்களில் உள்ள மக்களை அரசாங்கத்தின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அச்சுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் அரசாங்கம் ஏதேனும் சமாதான பிரதேசம் ஒன்றை அறிவித்தால் வன்னி மக்கள் தடைகளை மீறி அரச கட்டுபாட்டு பகுதிகளுக்கு வருவர் எனவும் விடுதலைப்புலிகள் தமது தோல்வியினால் பொது மக்களை பலிகொடுக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னைய செவ்வி ஒன்றில் வன்னியைக் கைப்பற்றுவது இலகுவான காரியம் அல்ல நீண்ட காலம் எடுக்கலாம் என கருணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னுக்குப்பின் முரணான கருத்தை வெளியிடுவது அரசியலில் சாதாரண விடயம் தான். கருணா மட்டும் விதிவிலக்கா என்ன?
அடுத்து தானும் ஒரு ஆள் இருக்கிறேன். என்னையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்களென்பதற்கு, அவ்வப்போது இப்படி கொக்கரித்துக் கொண்டிருப்பார். இதை எல்லாம் போய் பெரிசுபடுத்தி………………..