விளையாட்டு அமைச்சினால் இலங்கையில் 9 மாகாணங்களிலும் அமைக்கப்படுவதற்கு உத்தேசித்திருக்கும் 9 விளையாட்டு மைதானங்களில், வடக்கு கிளிநொச்சியில் அமைக்கப்படும் மைதானத்திற்காக, மீள் குடியேற்றப்படாத மக்களின் இடங்களை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி நகரில் சிறியதொரு மைதானமாக இருந்த ரொட்ரிகோ விளையாட்டு மைதானமானமே இவ்வாறு விசாலமாக அடுத்த மாதம் முதல் மாற்றியமைக்கப் பட உள்ளதோடு மைதானத்தின் இருபுறத்திலிருக்கும் பெறுமதி வாய்ந்த, யாரும் குடியமர்த்தப்படாத நிலத்தில் 8 ஏக்கர்கள் இம் மைதானத்துக்காக எடுக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக பாராளுமன்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் கடந்தவாரம் கிளிநொச்சி ஆளுனர் காரியாலத்தில் இடம்பெற்றது.
புலி வென்றிருந்தாலும் இது நடந்துதான் இருக்கும். போராட்டம் மக்களுக்காக நடக்கவில்லையே.