கொழும்பு, ஜன. 2: விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. கிளிநொச்சிக்குள் நுழையும் வழியில் உள்ள இரண்டு முக்கிய இடங்களை பிடித்த ராணுவம் மேலும் முன்னேறி சென்று, தலைநகரை கைப்பற்றி உள்ளதாகவும், அப்போது நடந்த சண்டையில் 50 புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
|
|
. | |
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ தலைமை இடமாக இருந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப்பகுதி ஏற்கனவே ராணுவத் தின் வசம் வந்து விட்டநிலையில், கிளிநொச்சியை பிடிக்க கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவம் கடும் போர் நடத்தி வருகிறது.
ராணுவத்துக்கு உதவியாக இலங்கை விமானப்படையும் அவ்வப் போது குண்டுவீச்சு நடத்தி வருகிறது. ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளும், உக்கிரமான போரில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக இருதரப்பிலும் ஆயிரக்கணக்கா னோர் கொல்லப்பட்டனர். கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வந்த இலங்கை ராணுவம் நேற்று புலிகளின் முக்கிய பாதுகாப்பு நகரான பரந்தனை பிடித்தது. இன்று காலை மேலும் முன்னேறிய ராணுவத்தினர் இரனமாடு பகுதியையும் மேலும் ஒரு முக்கிய பகுதியையும் பிடித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த விடுதலைப்புலிகள் கொரில்லா யுத்த முறையை பின்பற்றியதாகவும், எனினும் புலிகள் தரப்பில் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்ட தாகவும், சுமார் 50 பேர் உயிரிழந் திருக்கக்கூடும் என்றும், மேலும் 100 பேர் காயமடைந்திருக்க வேண்டும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து இரண்டு முனைகளிலும் கிளிநொச்சி நகரத்துக்குள் நுழைந்ததையடுத்து கிளிநொச்சி ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் வந்திருப்பதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை ராணுவம் கிளிநொச்சியில் நுழைந்ததை அனைத்து ஊடகங்களும் உறுதிப்படுத்தியிருந்தன. எனினும், புலிகளின் தரப்பில் இதுபற்றிய தகவல் ஏதும் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் கோலேச்சி கொண்டிருந்த விடுதலைப்புலிகள் கடந்த 25 ஆண்டுகளாக நடந்த இனப்போரில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது பகுதிகளை ராணுவத்திடம் இழந்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக புலிகளின் தலைமையிடமாக கிளிநொச்சி திகழ்ந்து வந்தது. ராணுவ தலைமையிடமாகவும், அரசியல் தலைநகரமாகவும் திகழ்ந்த கிளிநொச்சியில், புலிகள் பல்வேறு கட்டிடங்களை உருவாக்கி தனி நாடாகவே அரசாங்கம் நடத்தி வந்தனர். புலிகளுக்கென தனி காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், வரிவசூல் அலுவலகங்கள் இயங்கி வந்ததுடன், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவையும் இயங்கி வந்தன. தங்கள்வசம் இருந்த கிளிநொச்சி பகுதியையும் புலிகள் தற்போது இழந்துள்ளது விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் நடந்து வரும் சண்டை பற்றி தெரிவித்த புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் நடேசன், கிளிநொச்சி வீழ்ந்தாலும் போர் ஓயாது என்றும், விடுதலைப் புலிகள் கொரில்லா யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. |
22.10.2008அன்று நக்கீரனில் வெளியானதை இங்கு குறிப்பிடுவது சாலப்பொருந்தும்.இதோ நக்கீரன் சார்பாக தலைவரிடத்தில் கேட்ட கேள்வியும்.அதற்கான தலைவரின் பதிலும்
கேள்வி: உங்களின் தற்போதைய தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே.இலங்கையின் உண்மையான நிலைமை என்ன?
பதில்: இலங்கை அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து எராளமான ராணுவ உதவிகளை பெற்று வருகிறது.ராணுவ தளவாடங்களை வாங்கிக் குவிக்கிறது.இதனை கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலைகொண்டுள்ளன. எமது விடுதலைப்போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலில், ராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்துவருகின்றனர்.இதனால்,இலங்கை ராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களை நடத்துகின்றனர்.இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத்தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர்.ஆனால், கிளிநொச்சியை பிடித்து விடுவோம் என்பது ராஜபக்சேவின் பகற்கனவு.
அய்யா சான்
நக்கீரனுக்கு பிரபாகரன் பேட்டி தரவில்லை என்று
லக்பிமவில் பிரபாகரன் ‘கொடுத்த’ பேட்டிக்கு பிறகு
அவர்களின் பேச்சாளர் (தமிழீழ விடுதலைப்புலிகளின்பேச்சாளர் நடேசன்)
சொல்லியிருந்தாரே !
வாசிக்கவில்லையா?
திருவாளர், வெற்றி அவர்களுக்கு.கற்றது கைமண் அளவு என்பதை மீண்டும் ஒருமுறை நான் உணர்ந்தேன்.
அதற்காக முதலில் உங்களுக்கு நன்றி.
ஒரு சிறு சந்தேகம்,பொங்கு தமிழ் ஆதரவாளர்களுக்காக, புலிகள் தொடர்ந்தும் தமிழ் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.இது எப்பவும் போலவே,தந்திரோபாய பின்வாங்கலா? அல்லது தற்காலிகப் பின்னடைவா? அல்லது புலிகளுக்கு பாரிய இழப்பா?
அய்யா சான்
//ஒரு சிறு சந்தேகம்இபொங்கு தமிழ் ஆதரவாளர்களுக்காகஇ புலிகள் தொடர்ந்தும் தமிழ் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.இது எப்பவும் போலவேஇதந்திரோபாய பின்வாங்கலா? அல்லது தற்காலிகப் பின்னடைவா? அல்லது புலிகளுக்கு பாரிய இழப்பா?//
இது கேட்கப்படவேண்டிய கேள்விதான். ஆனால் இடம்மாறி எனக்கு விடுத்திருக்கிறீர்கள்.
நடசேன் என்று ஒருவர் இவற்றுக்கு பதில்சொல்ல வன்னியில் இருக்கிறார்.