உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அமைச்சரின் மகன் நடத்திய கார் தாக்குதலில் 9 விவசாயிகள் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு செல்ல இருந்த ராகுல்காந்திக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே ப்ரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல்காந்தி தடையை மீறி அங்கு செல்ல இருப்பது அம்மாநிலத்தில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,
“கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க நான் செல்வதை பாஜக அரசு தடுத்துள்ளது. ஆனால் நான் எனது நண்பர்கள் இருவருடன் அங்கு செல்ல இருக்கிறேன். இதே லக்னௌ நகரில்தான் இந்திய பிரதமர் மோடி அந்த நகரத்திற்குச் சென்றுள்ளார். இந்த் சுதந்திரம் பெற்ற நாடு ஆனால் ஒரு இடத்திற்குச் செல்ல முடியவில்லை. சட்டீஸ்கர் முதல்வர் விமானநிலையத்திலேயே தடுக்கப்பட்டார். ப்ரியங்காகாந்தி சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். என்னையும் தடுக்கிறார்கள் இதுதான் சர்வாதிகாரம். மத்திய இணை அமைச்சராக உள்ள ஒருவரின் மகனும் அவரது ஆதரவாளர்களும் கார் ஏற்றி விவசாயிகளை கொன்றிருக்கிறார்கள். அதை நான் பார்க்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முயல்கிறோம் இதைத் தடுத்தால் நாடு முழுக்க கிளர்ச்சி வெடிக்கும்” என எச்சரிக்கிறேன் என்றார் ராகுல்காந்தி