பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரச ஆதரவு பௌத்த பிக்குகளின் கும்பல் ஒன்று நடத்திவருகிறது. பல இஸ்லாமிய மசூதிகள் கடந்த காலங்களில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டன. தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.
எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தாக்குதல்கள் இலங்கை அரச படைகளின் நேரடி, மறைமுக ஆதரவுடனேயே நடைபெற்றுவருகிறது.
இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவாலயங்களின் போதகர்கள் கூறியுள்ளனர்.
ஜன்னல்கள், இசை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்கள் அடித்து நொருக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு சம்பவங்களிலும் வழிபாட்டாளர்கள் தப்பிவிட்டார்கள்.
ஒரு பௌத்த மதகுரு தன்னை இழிவான வார்த்தைகளால் திட்டி, கொன்றுவிடப்போவதாக மிரட்டியதாக அஸம்பிளி ஆஃப் காட் திருச்சபையைச் சேர்ந்த மதபோதகரான பாஸ்டர் சிந்தக பிரசன்ன கூறினார்.
தம்மீது சனிக்கிழமை இரவே தாக்குதல் நடக்கலாம் என்று பொலிஸார் எச்சரித்திருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது பொலிஸார் ஸ்தலத்தில் இருந்தாலும், அவர்கள் பௌத்தகுருமாரைத் தடுக்க எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
சிங்கள பௌத்த வெறியைத் தூண்டி வளர்த்துவரும் மகிந்த ராஜபக்ச அரசு, இவ்வாறான மதவாதக கருத்துக்களையும், தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திவருகின்றது. இவ்வாறான மதவெறியின் பின்னணியில் சரிந்து விழும் இலங்கை அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்த முயல்கிறது. பௌத்த பயங்கரவாத அமைப்புக்கள் ஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் கிளைகளை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
This has been the case for a long time. Now the traditional churches had been attacked too. The Christian community among Sinhalese work on the premises “Love thy neighbour”. Theravada Buddhism always looked through the Mahavansa ideology that is in conflict all other religious influences including Mahanama Buddhism. Continuing intolerances at state level and establishment level must be curbed. Christians, Muslims and Hindus must rally to avoid ending up like Tamil Buddhists and Mahanama sect.