‘மன நலம் பாதிக்கப்பட்டவர்’
‘இவரால் இனி எந்தப் பெண்ணும் கிறிஸ்தவ துறவு வாழ்க்கைக்கு வர மாட்டார்கள்’
‘சீப்பான பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து விட்டார் ஜெஸ்மி’’
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எல்லாம் அவதூறுகளாக நினைத்து துடைத்துப் போட்டு விட்டு தான் எழுதிய ஆமென் (ஒரு கன்னியாஸ்திரியோட ஆதம கதா ) நூலை ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி, மொழிகளில் கொண்டு வரும் பணியில் தீவீரமாக இருக்கிறார் சிஸ்டர் ஜெஸ்மி. பெண்துறவிகளை இறைப்பணிக்கு உருவாக்கும் சபைகளுள் ஒன்றான கார்மல் சபையில் இருந்து வெளியேறி இப்போது கேரளாவின் கோழிக்கோட்டில் வசிக்கும் ஜெஸ்மி கொழுத்திய தீ இப்போது கேரள கிறிஸ்தவத்துக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. துறவு வாழ்க்கை, பாலியல் அநீதி, சுதந்திரம், சுயசிந்தனை, இறைவாழ்வுக்கான அர்ப்பணம் என பல கேள்விகளை எழுப்பியிருக்கும் ஜெஸ்மியின் ஆமென் நூல் வெளிவந்த மூன்று மாதங்களில் ஐந்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்று தீர்ந்திருக்கிறது. அப்படி என்னதான் எழுதினார் ஜெஸ்மி.
‘‘இது எனது கதைதான். வேறு யாரைப்பற்றியும் நான் எழுத வில்லை. ஆனால் இங்கு கிறிஸ்தவத்துக்குள் ஒரு பெண்துறவியாக இருக்கும் நானென்பது நான் மட்டுமே அல்ல கிட்டத்தட்ட முப்பாதாயிரம் கேரள கன்னியாஸ்திரிகள் கதையும் இதுவாகத்தான் இருக்கிறது. என்னைப் பற்றி நான் எழுதுகிற போது அதை ஜனநாயகரீதியில் விமர்சன பூர்வமாக இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என் கதையும் ஏனைய கன்னியாஸ்திரீகளின் கதையும் ஒன்றாக இருக்கும் என இவர்களே நினைக்கிறார்கள் இல்லையா? ’’ என்று கேட்கும் ஜெஸ்மிக்கு வயது 52.
‘‘ஒரு கிறிஸ்தவமத பெண் துறவியாக மாறி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும், கல்வி போதிக்க வேண்டும், சமூக அநீகளுக்கெதிராக போராட வேண்டும் என்கிற உந்துதலில்தான் நான் கார்மல் மாதா சபையில் பெண் துறவியாக சேர்ந்தேன். அங்குதான் படித்தேன். ஆனால் முதலில் இருந்த ஆர்வம் வருடங்கள் செல்லச் செல்ல எனக்கு குறைந்து கொண்டே வந்தது. கடவுளிடம் நெருங்கலாம் என்று போன நான். கடவுளுக்கும் உண்மையான பக்தனுக்கும் இடையில் இருக்கும் பாதிரிமார்கள் சில கன்னியாஸ்திரிகளின் அணுகுமுறையால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். பதினேழு வயதில் துறவியாக நான் வீட்டைத் துறந்து சென்ற போது இருந்த ஆன்மீக நாட்டம் இன்று என்னிடம் இல்லாமல் போனதற்கு காரணம். கிறிஸ்துவின் பெயரால் மதம் நடத்தும் ஏஜெண்டுகள்தான். ஆரம்ப காலத்தில் ஒரு பாதிரியார் வருவார் என்னைப் போலவே துறவு வாழ்க்கைக்கு வந்திருக்கும் இளம் பெண்களைத் தொட்டு அவர்களை முத்தமிடுவார். அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் விவிலியத்தில் புனித முத்தம் என்ற ஒன்று இருக்கிறது அது இதுதான் என்பார். பலவீனமான மனிதர்கள் தங்களின் பாலியல் உணர்வுகளுக்கு பைபிளில் இருந்து புதிய அர்த்தங்களையும் விளக்கங்களையும் சொன்ன போது அதை எதிர்ப்பதற்கான சூழல் அங்கு இல்லை. செயிண்ட் மரியாக் கல்லூரியில் (கேரளாவில் பள்ளிகளை கல்லூரிகள் என்று அழைப்பது வழக்கம்) பளஸ் டூ மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக என்னை அனுப்பினார்கள். அதே கல்லூரியில் மலையாள பாடம் நடத்துவதற்காக ஒரு சிஸ்டர் புதிதாக வந்தார். இரவு எனது அறைக்கு நான் தூங்கச் சென்ற பிறகு அவர் என் அறைக்கு வருவார். அந்த மலையாள ஆசிரியையான அந்த சிஸ்டர் ஒரு லெஸ்பியன் நாட்டமுள்ள பெண். அவர் அன்னை லெஸ்பியன் உறவுக்காக நிர்பந்தித்தார். எனக்கும் வேறு வழியில்லை. நான் அவரின் ஆசைக்கு இறையாவதைத் தவிற ஒரு பெண் துறவியாகவோ பெண்ணாகவோ என்னால் எதிர்த்துப் போராட முடியவில்லை. போராடுவதற்கான சூழலோ பேசுவதற்கான சுதந்திரமோ எங்களின் சபைக்குள் இல்லை. ஆங்கில மொழிப் பயிர்ச்சிக்காக நான் பெங்களூருவுக்குச் சென்றேன் அங்கே ரயில்நிலையத்துக்கே வந்த பாதிரியார் என்னை கட்டியணைத்து அழைத்துச் சென்றார். பின்னர் ஒரு நாள் காதலர்கள் கூடும் லால்பாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள காதலர்களைக் காட்டி அவரது ஆசைக்கு இறையாக்க என்னை தயார்படுத்தினார். நான் மறுத்து திமிறிய போது ஒவ்வொரு பாதிரியார்களுக்கும் உடல்ரீதியான பாலியல் தேவைகள் இருப்பதையும் அதை மீற முடியாத சூழலையும் சொல்லி என்னை அவரது இச்சைக்கு இணங்க நிர்பந்தித்தார். இதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் என்றால் சிஸ்டர் அபயா 1992& மார்ச்சில் மர்மமான முறையில் பிணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். தற்கொலை என்று வழக்கை மூடியது காவல்துறை. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ அபயாவின் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று இரண்டு பாதிரியார்களையும் ஒரு கன்னியாஸ்த்ரியையும் கைது செய்தது சி.பி.ஐ. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சில கன்னியாஸ்த்ரீகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அனுபமா மேரி, அல்பீனா, லிஷா என மிக மர்மமான முறையில் கன்னியாஸ்த்ரிகள் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த தற்கொலைகள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலியல் ரீதியான சீண்டல்கள் துன்புறுத்தல்கள் எல்லாம் கடந்து பெண்துறவிகளின் சபைக்குள் என்ன பிரச்சனை இதற்கு என்ன தீர்வு இதை எப்படி வெளியுலகுக்கு கொண்டு வரலாம் என யோசித்த போது நான் என் சுயசரிதையை எழுதலாம் என தீர்மானித்தேன். அதுதான் இந்த நூலும் அதன் எதிர்வினைகளும்’’
என்கிற சிஸ்டர் ஜெஸ்மி 33 ஆண்டுகாலம் கிறிஸ்தவ பெண் துறவியாக சேவை செய்திருக்கிறார். ஜெஸ்மி கிறிஸ்தவத்துக்குள் நடைபெறும் ஆதிக்க உணர்வுகளுக்குள் வதைபடும் பெண் துறவிகளின் வாழ்வு குறித்து பேசத்துவங்கிய பிறகு நெருக்கடி காரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கார்மல் மாதா சபையில் இருந்து வெளியேறி விட்டார்.
‘‘ஏசு கிறிஸ்துவின் போதைனைகளை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதும் அதன் பால் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு கல்வி, மருத்துவம். மனித விடுதலை என மக்களுக்காக சேவை செய்வதும்தான் என்னைப் பொறுத்த வரை துறவரம் அப்படி நினைத்துத்தான் நானும் சபைக்கு வந்தேன். ஆனால் இங்கே இயேசு என்கிற ஒரு மனிதரை, மீட்பரை காட்சிப் பொருளாக்கி இவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உணர்வுகளையும் வெல்ல முடியாமல் அது குறித்த திறந்த விவாதமும் நடத்தாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து அதை அங்குள்ள பெண்களிடம் காட்டுகிறார்கள். என் தந்தையின் வழிபாட்டுக் கூடத்தை வியாபாரத் தலமாக்காதீர்கள் என்று சாட்டையால் விளாசினார் இயேசு ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து திருச்சபையே அதை வியாபாரமாக மாற்றி விட்டது. பல வியாபாரிகள் பாதிரிமார்கள், கன்னியாஸ்திரிகள் என்னும் போர்வையில் கிறிஸ்தவத்துக்குள் நுழைந்து விட்டார்கள். இன்று சாட்டையோடு ஒரு இயேசு தேவைப்படுகிறார். அப்படி ஒரு தேவபிதா இவர்களைத் திருத்த இன்று வரவேண்டும் என்பதுதான் என் ஆசை. இப்படி எல்லாம் நான் பேசினால் என்னை பேசாதே என்கிறார்கள். எங்கள் கார்மல் மாதா சபையின் மதர் ஜெனரல் கூட என்னை அழைத்துப் பேசினார். ‘‘எனக்குத் தெரியும் நீ மிகவும் நல்லவள். ஆனால் நீ பேசுவது இங்கு பிரச்சனையாகிறது. ஆகவே நீ அமைதியாக இருக்க வேண்டும்.’’ என்றார் எனது இளம்பிராயத்திலிருந்தே நான் அவரை நேசித்தேன் இன்றும் நேசிக்கிறேன். ஆனால் இந்த மீறல்களை எல்லாம் எப்படி நான் சகித்துக் கொண்டிருக்க முடியும். செயிண்ட் மேரீஸ் கல்லூரியில் நான் முதல்வராக இருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி முதல்வராக இருப்பதா? என்று என்னை டிஸ்மிஸ் செய்ய முயர்ச்சித்தார்கள். ஆனால் இந்திய அளவிலான உயர்கல்விக்கான அமைப்பு எனக்கு
‘‘புதுமையான கல்லூயிர் முதல்வர்’’ என்ற விருதை 2007, 2008 ஆண்டிற்கான விருதாக எனக்குக் கொடுத்தது. இவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் வேலையை விட்டுச் செல்லும் படியான புறச்சூழல்களை என்னைச் சுற்றி உருவாக்கினார்கள் வெறுத்துப் போன நான் இரண்டு வருடம் எனக்கு விடுமுறை கேட்டேன் உடனே கொடுத்தாகள். இரண்டு வருடம் கழித்து மீண்டும் வந்த போது என்னால் பணிசெய்ய முடியாத சூழல் நான் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையை ராஜிநாமா செய்தேன் அப்படியே சபையில் இருந்தும் வெளியேறினேன். என்னைப் போலவே பேச முடியாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கிற சகோதரிகளுக்காக நாம் பேச வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் நான் செப்டம்பர் மாதம் என் சுயசரிதையை எழுதத் துவங்கினேன். இரண்டே மாதத்தில் எழுதி முடித்தேன். இப்போது மூன்றாவது பதிப்பு வருகிறது’’ என்கிறார் ஜெஸ்மி.
ஜெஸ்மி உருவாக்கிய கலத்தின் விளைவாய் இன்று பல தரப்பினரும் கிறிஸ்தவ பெண் துறவரம் பற்றி கேள்வி எழுப்பத் துவங்கியிருக்கிறார்கள். கிறிஸ்தவத்துக்குள்ளேயே உள்ள சில முற்போக்கு எண்ணம் கொண்ட பாதிரியார்களும் கன்னியாஸ்த்ரிகளும் துறவத்தில் ஜனநாயகம் பேணுதல் குறித்த விவாதத்தை சபைக்குள் கிளப்பியிருக்கிறார்கள். ஆனால் இந்த சர்ச்சைகள் எல்லை தாண்டி எல்லா மாநிலங்களுக்கும் பரவி விடும் என்றும் பதறுகிறார்கள் சிலர்.
‘‘ இப்போது எனக்கு சபைக்குள் இருக்கும் சகோதரிகள் பலரும் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். ‘‘நீங்கள் உங்கள் கதையை எழுத வில்லை எங்கள் கதையை எழுதியிருக்கிறீர்கள்’’ என்று ஆறுதல் தேடுகிறார்கள். அதே நேரம் இனி கேரளாவில் இருந்து பெண் துறவிகள் சபைக்கு வருவது வெகுவாக குறைந்து விடும் அதற்கு ஜெஸ்மிதான் காரணம் என்கிறார்கள். ஆமாம் குறையட்டுமே நூறு கௌரவமான சமையல்காரிகளை கன்னியாஸ்திரிகள் வேடத்தில் உருவாக்குவதை விட பத்து புத்திசாலிகள் கன்னியாஸ்திரிகளாக வந்தால் அதுதானே உண்மையான இறைப்பணி. துறவிகளாக வரும் பெண்களை சுயமாக சிந்திப்பதற்கு கிறிஸ்தவம் அனுமதிக்க வேண்டும். உண்மையான இறைப்பணி என்பது தேவாலயத்தில் மட்டுமல்ல சேரிகள் ,குடிசைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்குதான் இறைப்பணி அவசியம். உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, நீதி மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்டு எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அங்குதான் இயேசுவும் இருக்கிறார். அலங்காரப் பொருட்களாக நீங்கள் மாற்றி வைத்திருக்கும் தேவலாயத்தை விட்டு இயேசு வெளியேறி எவளவோ காலமாகிவிட்டது. நான் இயேசுவை இவர்களிடமிருந்து மீட்கவும் உண்மையான இறைப்பணிக்காவும் போராடுகிறேன்’’ என்கிறார் இந்த முன்னாள் பெண் துறவி ஜெஸ்மி.
இப்படி எல்லாம் நடப்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். மக்களுக்கும் இந்த செய்தி போய்ச் சேர வேண்டும். இதனை அறிமுகப்படுத்திய அருள் எழிலனுக்கு நன்றி.
Yes,it may happened to her.But we cant say that it applies to all. In all the institution things like this is happening and it will happen.But still there are thousands and thousands of devoted Sisters and Priests are doing their work of Preaching and Social welfare.
//Yes,it may happened to her.But we cant say that it applies to all. In all the institution things like this is happening and it will happen.But still there are thousands and thousands of devoted Sisters and Priests are doing their work of Preaching and Social welfare.//
Dear Sasi, you try to project this issue as an exception. How can you say that it doesn’t apply to all? You can hardly get any information out of the secrative institutions. Do you know that churches were running brothels in middle ages? Then it was normal in every European country.
கன்னியாஸ்திரியாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த பெண்ணிய நாவலாசிரியை ‘கருக்கு’ பாமா ஏற்கெனவே கிறிஸ்தவமிஷன்களிலுள்ள பாலியல்பேதங்கள், ஜாதியபாகுபாடுபோன்றவற்றை வெளிச்சமாக்கியுள்ளார்.
அவர் வரிசையில் சகோதரி அருள் எழிலன் வரவேற்கப்படவேண்டியவர்
அன்னை த்ரசவை வலம் வந்த நாட்டில், மட்ரொரு அன்னை வராமல் பொனடர்க்கு இதத்வும் ஒரு காரனம்!
மிகவும் அதிர்ச்சியாக இருக்கிரது.