ஐரோப்பிய நாடுகள் மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. நாளை(30.06.2011) பிரித்தானியாவில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் ஏற்கனவே மூடப்படுவதாக அறிவித்துள்ளன. இதே வேளை நேற்று கிரேக்கத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் மோதலில் முடிவடைந்துள்ளது. பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதாகியுள்ளனர். ஒரு இராணுவத் தொடர்பாடல் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. கலகமடக்கும் படையினர் மீது பெற்றோல் குண்டுகளும் கற்களும் வீசபட்டன. கிரேக்கத்தின் போராட்டம் ஐரோப்பிய நாடுகளில் முதலாவது எழுச்சியாக உருவாகும் என எதிர்வுகூறப்படுகிறது.
போராட்டங்களின் போதான நிகழ்வுகளின் காணொளி கீழே தரப்படுகிறது.
Comments 1