கிரேக்கத்தின் முழு அளவிலான பஞ்சத்தையும் பட்டினிச் சாவையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சில பொது இடங்களில் உதவி நிறுவனங்கள் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றன. புற நகர்ப் பகுதிகளில் மக்கள் குப்பைகளில் உணவைத் தேடுகின்றனர். பணம் வழங்கப்படாத காரணத்தால் மருத்துவ மனைகளில் மருந்துப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அடிப்படை மருந்து வசதிகள் கூட இன்றி மக்கள் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஸ்பெயினில் நிலைமை கிரேக்கத்தை விட அதிகமான தாக்கதை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகிறது. தொடர்ந்து இத்தாலி போத்துக்கல் மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்த நிலைமை ஏற்படலாம் என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஸ்பானியாவில் மே மாத இறுதியில் ஆரம்பித்த சுரங்கத் தொழிலாளர் போராட்டம் அங்கு சிறிய அளவிலான சிவில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான சூழல் காணப்படுவதாகக் கூறுகின்றனர். ஐரோப்பிய அரசுகள் மக்கள் எதிர்கொள்ளப்போகும் அவலங்கள் குறித்து தகவல்களை மறைத்து வருகின்றன.
There are 17 countries in the Eurozone. This is directly related to the survival of the Euro.