கியூபா ஆதரவு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள்:

இலங்கையில் நடைபெறும் கியூபா ஆதரவு மாநாட்டில் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியூபாவிற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையில், 4-வது ஆசிய -பசிபிக் பிராந்திய மாநாடு கொழும்பில் எதிர்வரும் ஜூன் 14, 15 திகதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், தனி சட்டப் பேரவை உறுப்பினர் டி. ராமச்சந்திரன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எழுத்தாளர் அமரந்தா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.