இந்தியா சுதந்திரமடைந்த போது சில நிபந்தனைகளோடு இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரேதசமாக இருந்து வந்தது. இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு காஷ்மீரை சில பிரத்தியேகமான உரிமைகளோடு பாதுகாத்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370-வது பிரிவை மோடி அரசு ரத்து செய்தது. முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் அதிரடியாக செய்யப்பட்ட இந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டு இணயம் துண்டிக்கப்பட்டு அந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். காஷ்மீர் தலைவர்கள் அனைவரும் மாதக் கணக்கில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்கள்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்த பாஜக விரும்புவதால் மோடி காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதனை ஏற்ற முக்கிய தலைவர்கள் ஷேக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முக்தி,
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கேற்றன.குலாம் நபி ஆசாத் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். பல மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது , முன்னால் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் மட்டுமல்ல காஷ்மீர் மக்கள் உட்பட எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.மாநிலமாக இருந்த ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக சுருக்கியதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் எங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டும். இப்போது காஷ்மீர் மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு முழுமையாக அறுந்து விட்டது. அதை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் உள்ளது.எங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கிய பின்னரே அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார். இதே கருத்தைத்தான் அனைத்து தலைவர்களுமே பிரதமர் மோடியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.