காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது.
ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. வீடுகள் மற்றும் அலுவலகங்கள் லேலாக குலுங்கின. பொதுமக்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.
இந்துகுஷ் மலைப்பகுயில் ஏற்பட்ட நில அதிர்வின் தாக்கம் தான் இது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன, இருப்பினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.