Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

காஷ்மீரில் அமைதிக்கு உள்ளூர் போலீசை வலுப்படுத்த வேண்டுமாம் -மன்மோகன் வேண்டுகோள்.

இனியொரு... by இனியொரு...
08/11/2010
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

காஷ்மீரில் அமைதி திரும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: ஜம்மு– காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. கலவரத்தில் மகன், மகளை இழந்து வாடும் ஒவ்வொரு தாய், தந்தை மற்றும் குடும்பங்களின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் இப்போது கல்வி கற்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், மாநிலத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதை பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படை சிறப்புச் சட்ட விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டம், ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்க மாநில போலீஸôருக்கு இப்போதைக்கு போதிய ஆள்பலம் இல்லை. முதலாவதாக மாநில போலீஸ் படையை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களால் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்பட முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினரும், மாநில போலீஸôரும் மிகப் பெரிய சவால்களை சந்தித்துள்ளனர். அவர்களில் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது வேதனையானது. இனிமேலும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காஷ்மீர் இளைஞர்களுக்கு தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்க பொருளாதார நிபுணர் சி. ரங்கராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இளைஞர் அணிகள் மூலமாக மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக வரம்புகளுக்கு உள்பட்டு எல்லா பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. அதற்கு மாநிலத்தில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பை காஷ்மீர் மக்கள் உருவாக்கித் தரவேண்டும் என்றார். பிரதமரின் பேச்சு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத் மற்றும் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி, சுயேச்சை எம்எல்ஏ குலாம் ஹசன் மிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதா பிரதிநிதிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொழிலாளர்கள் அரசை மிரட்டிப் பார்க்கிறார்கள் - கருணாநிதி பகிரங்க மிரட்டல்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...