Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காவத்தை மண்ணில் இருந்து உதயமாகும் காலம் மாறுது நாட்டார் பாடல்கள் இறு வெட்டு தொடர்பான பகிர்வு : சை.கிங்ஸ்லி கோமஸ்

இனியொரு... by இனியொரு...
12/14/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா, கவிதைகள்
0 0
3
Home பிரதான பதிவுகள் | Principle posts

மலையக மண்ணில் இருந்து தோற்றம் பெற்றுள்ள நாட்டார் பாடல்கள் தொடர்பாக பலர் பல ஆய்வுகளை செய்திருப்பது மலையகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. மலையக நாட்டார் பாடல்களைப் பொருத்த மட்டில் முதல் தடவையாக மக்களுக்காய் மக்கள் பாடல்கள் இறு வெட்டாக காவத்தை மண்ணில் இருந்து வெளிவந்துள்ளது இதற்கு முன் தேசிய கலை இலக்கியப் பேரவை குன்றத்து குமுறல் கவிதை நூலில் இருந்து தேர்ந்தெடுத்த சில கவிதைகள் பாடல்களாக ஒலிநாடாவாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய மலையகம் அமைப்பினரும் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து வெளியிட்டுள்ள காலம் மாறுது நாட்டார் பாடல் இறுவெட்டு மக்களால் பேசப்பட போகும் பாடல்களை தாங்கி வந்துள்ளமை குறிப்பிடப் பட வேண்டிய விடயமாகும்.

நாட்டார் இலக்கியம் என்பது உழைக்கும் மக்களின் இலக்கியமாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியங்களாகவும் காணப்பட்டது வரலாற்று உண்மைகளாகும் இதற்கமைய புதிய மலையகம் அமைப்பினரும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஒடுக்கப்படும் மலையக மக்களின் இலக்கிய வெளிப்பாடுகளாக கொண்டுவந்துள்ள காலம் மாறுது இறுவெட்டில் முதலாவது பாடலான ‘இந்த மலை நாட்டினிலே உழகை;கும் மக்கள் நாங்க’ என்னும் பாடலின் வரிகள் மலையக மக்கள் ஐக்கியப்பட வேண்டிய காலம் வந்துள்ளது என்பதனையும் வெறும் சலுகைகள் அல்ல எமக்கும் இந்த நாட்டிலே உரிமையுண்டு என்பதனால்!

இந்த மலை நாட்டினிலே உழகைகும் மக்கள் நாங்க
உயர்வே இல்லாம வீழ்ந்து கிடக்கிறோங்க
பாட்டன் பூட்டன் காலம் தொட்டே இதே நிலைமை தாங்க
பாட்டாளி வர்க்கம் இணைந்து போராடுவோங்க தேயிலையும் ரப்பரும் எங்க ஒழைப்பு தாங்க
இந்த நாட்டின் பொருளாதாரத்தின்முதுகெலும்பு நாங்க
நம்ம வீட்டு அடுப்பில் எல்லாம் பூன தூங்குதுங்க இந்த பூமியையே புரட்டிப் போட எழுந்து வாங்க நீங்க
இங்கு உழைப்பவர்க்கே நிலங்கள் சொந்தம் எழுதி கேட்போம் வாங்க
என்று பாடப்பட்டுள்ளது இந்தவரிகளை கேட்கும் போது மலையக மக்கள் ஐக்கியப்பட வேண்டிய காலம் வந்துள்ளது என்பதனை மட்டும் அல்ல மலையக மக்களின் உரிமைகளை இது வரைக்கும் எவரும் பெற்று கொடுக்க முயற்சிக்கவே இல்லை முயற்சிக்கவும் மாட்டார்கள் எனவே மக்கள் விடியலை நோக்கி பயணிகக் ஒன்று சேர வேண்டும் என்பதனை அடையாளப்படுத்தி நிற்கின்றது

இரண்டாவது பாடலை கேட்கும் அணைவருக்கும் கண்களில் நீர் ஊற்றெடுக்க செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

அம்மா வெளிநாட்டு வேல தேடி போனீங்களே எங்க மனசெல்லாம் நெனவாக நெறஞ்சனீங்களே.

என்னும் பாடல் வரிகள் மலையக கலாச்சாரப் பண்பாடுகள் மோசமாக சிதைவடைந்து போவதற்கு பிரதானமான காரணங்களாக பல இருந்தபோதும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப் பெண்களாக வேலைக்கு போன பெண்களின் சிதைவடைந்து போன குடும்பங்கள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டுவதாக காணப்படுகின்றது பாடசாலை மாணவி ஒருவர் தனது ஆசிரியரை சந்தித்து உங்களின் இந்த பாடலை போட்டு காட்டியே எனது தாயின் வெளிநாட்டு பயணத்தினைத் தடுத்து நிறுத்தியுள்ளேன் என்று கூறியதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார் இவர்களின் இந்த கடுமையான உழைப்பற்கு கிடைத்த முதலாவது விருது இதுவே என்று மகிழ்வதனைக் காணும் போது மக்கள் இலக்கியங்கள் மக்களை சென்றடைந்துள்ளமையை காணமுடிகின்றது

மூன்றாவது பாடல் காலத்தின் தேவை கருதி படைக்கப்பட்ட ஒரு பாடலாகும் சமய சாதி நிற கட்சி இன பேதங்களை சாதாரண மக்களின் மனங்களில் பதியச் செய்து பெரும் யுத்தங்களையும் சண்டைகளையும் ஏற்படுத்துபவர்கள் ஏற்படுத்தியவர்கள் ஒன்றாக சேர்நது ஒரே குடையின் கீழ் சல்லாபித்துக் கொண்டிருக்கின்றனர.; ஆனால் பாதிக்கப் பட்டவர்கள் தொழிலாளர்களும் விவசாயிகளுமே. பணக்கரர்கள் சொகுசாய் வாழ்வதற்காய் மூட்டி விடும் பிரிவினைவாதம் எமக்கு தேவையில்லை அவற்றை மறந்து ஏழைகள் நாங்கள் ஐக்கியப்படுவோம் என்னும் செய்தியினைத் தாங்கி வருகின்றது இந்தப் பாடல்.

தமிழன் என்னடா சிங்களவன் என்னடா
துணிந்து சொல்லுவோம் நாங்க தொழிலாளியடா
முருகன் கூட புத்தரோட வாழுராரடா கதிர்காமம் போய் பாரடா
பெரும்பான்மை சிறுபான்மைபெருத்த நோயடா தேசத்த எறிச்சத் தீயடா.

என்னும் பாடலை கேட்கும் பொழுது நாங்களும் எவ்வளவு மூடர்களாக இனவாதிகளாக வாழ்ந்துள்ளோம் என்பது வெட்கி தலைக் குனிய வைக்கின்றது

மலை நாடு முன்னேறுதுங்குரான் அட மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா ஜர்மன் அமேரிக்கா ஜப்பானுக் கணக்கா
டயகம அண்ணணுக்கு நாய் கடிச்சாலும் நாவல பிட்டிப் போயித்தான் நல்ல ஊசி போடனும்.

இந்த வரிகள் பல உண்மைகளை பேசியிருப்பது பாடலைக் கேட்கும் அனைவருக்கும் புலப்படும்.

இது நான்காவது பாடலாகும்.

ஐந்தாவது பாடல் தேயிலைத் தோட்ட தளிர்களே என்னும் பாடலும்-ஆறாவது பாடல் வருகுதடா தேர்தல் வருகுதடா வரும் திருடர்களைத் தெரிந்துக் கொள்ளடா என்னும் பாடலும் ஏழாவதுப்பாடல் எங்க நாடு போகுது மேல என்னும் பாடலும் காணப்படுகின்றது.

கடைசிப் பாடலாக மக்கள் சக்தி சேருகின்றது மாற்று வழித் தேடுகின்றது காலம் காலமாக சிந்திய கண்ணீறின்று ஓயுது என்னும் பாடல் நம்பிக்கையின் தேசிய கீதமாக காணப் படுகின்றது
மக்கள் இலக்கியங்கள் நச்சு இலக்கியங்களையும் நசிவுற்ற இலக்கியங்களையும் வேறோடு பிடுங்கி எறிந்து விடும் என்பதற்கு சான்றாக இந்த எட்டு பாடல்களும் காணப் படுகின்றது. மக்களுக்கு புரியாத இலக்கியங்களைப் படைத்து புலமை பேசும் பின்நவீன படைப்புக்களும் தனக்கு பெருமை சேர்த்துக் கொள்வதற்காக தான் எழுதியதை தானே வாசிக்காத பல படைப்பாளிகளின் படைப்புகளும் தனக்கு பிடிக்காதவர்களை வசைப்பாடுவதற்காய் படைக்கப் படும் மட்டரகமான படைப்புக்களும் தூக்கிப் பிடிக்கப் பட்டு புகழப் பட்டு காணப் படும் இந்தக் காலக் கட்டத்திலே முழுக்க முழுக்க பாமர மக்கள் அனுபவிப்பதற்காய் படைக்கப் பட்டுள்ள இந்த இலக்கியப் படைப்பு போற்றத் தக்கது.

இந்த படைப்பிற்காக பலரும் தங்களின் மேலான பங்களிப்பினை செய்துள்ள விதத்தைக் என்று கேள்விப் பட்ட பொழுது ஆச்சரியமாக இருந்தது. எந்த மக்களுக்காய் இவை படைக்கப் பட்டனவோ அந்த மக்களிடம் சென்று இந்த பாடல்களைப் பாடிக் காட்டி இதற்காய் நிதி சேர்த்துள்ளார்கள். கூட்டு உழைப்பாய் வெளி வந்துள்ள காலம் மாறுது பாடல்கள் மலையகத்தின் பட்டித் தொட்டி எங்கும் தற்பொழுது கேட்கத் துவங்கி விட்டது எனவே காலம் மாறுவது உறுதி.

மலையகத்தில் இருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சிந்தனைக்கு சென்றிருந்தால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் விலாசம் அற்றவர்களாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு இருக்காது என்பதன் காரணத்தினால் தான் இன்று காலம் மாறுது இறு வெட்டு அறிமுக நிகழ்வுகள் தோட்டங்களிளும் தொழிலாளர் குடியிருப்புக்களிளும் வெளியிடப் பட்டு வருகின்றது என்று புதிய மலையகம் அமைப்பினர் கூறுகின்றனர் காவத்தையில் முதலாவது இவ் இறு வெட்டு வெளியீட்டு விழாவின் போது 2011.11.13 ஆம் திகதி இதனை வெளியிட்டு வைத்த இலங்கையின் பிரபல இசையமைப்பளரான கருப்பைய்யப் பிள்ளைப் பிரபாகரன் தனது உரையின் போது தான் பல வெளியீட்டு நிகழ்வுகளுக்கு சென்றிருப்பதாகவும் அவை மிகப் பிரமாண்டமாக பெரும் பொருள் செலவில் ஆடம்பரமான வெளியீடுகளாகக் காணப்பட்ட போதும் அவற்றில்; மக்கள் வாழ்வியலைப் பேசும் எவையும் இல்லை என்றும் இன்று இங்கு மலையகத்தை நேசிப்பவர்கள் மிக சாதாரண நிகழ்வில் மிகப் பிரமண்டமான உள்ளடக்கத்தைக் கொண்ட வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளனர் எனக் கூறியது இங்கு சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

தேசியக் கலை இலக்கியப் பேரவையின் சப்ரகமுவக் கிளையும் புதிய மலையகம் அமைப்பும் இணைந்து தந்துள்ள பாடல் இருவெட்டு எல்லோராலும் கேட்கப் பட வேண்டும்;. காலம் மாறுது என்ற தலைப்பிறகேட்ப மலையகம் புதிய மாற்றத்திற்கான பாதையில் பயணிக் வேண்டிய சிந்தனையை ஏற்படுத்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பெரும் கூட்டு உழைப்பில் வெளிவந்துள்ள இந்தப் படைப்பு வெற்றி பெற மக்களை நேசிப்பவர்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ்ப்பாணத்தில் கடத்தல் : பிரித்தானியாவில் மகிந்த அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

Comments 3

  1. sevarajendran says:
    14 years ago

    மிகச் சிறந்த முயற்சி மலையகத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கப்படட வேண்டிய பாடல்கள் கடந்த மாதம் இடம்பெற்ற மலையக மக்கள்  வாழ்வு பற்றிய கண்காட்சியின் போது இப்பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கப்பட்டன இளைஞர்கள் அனைவரும் இப்பாடல்களை முனுமுனுத்தனர். இந்திய
     து}சனங்கள் திரைப்பட பாடல்களாக வந்து நாசப்படத்தும் இவ்வேளையில் இந்த மு யற்சி சாத்தியமாக்கப்பட்டள்ளது இத்தகைய பாடல்கள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும் அதுதான்  இம்முயற்சியின் வெற்றியாக அமையும்  

  2. mohanarajan says:
    14 years ago

    these are for people and own to people.

  3. pidungi says:
    14 years ago

    நல்லது .எத்தனைகாலமாக கதிர்காமத்தில் முருகனும் புத்தனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றாக முடியவில்லையே??
    “மீனாட்சி நீ மரமாய் மிகுந்த நாள் தானுளைத்துக் கூனாச்சு உன் முதுகு குளிர்ந்ததுவா உன் மனது

    .
    நீ பறித்த தேயிலையால் நிலைமாற உண்பவர்கள் தான்சிரித்து வாழுகின்றார் நீ இன்னும் கலங்குகின்றாய் ” எனும் புரட்சிக்குரலோசைகள் இன்றைத்தான் எழுந்தவையல்ல.மக்கள் கட்டுமானம் என்பது எதனை? அதைத்தான் புதிது புதிதாக முளைக்கும் தலைமைப்பேய்கள் காவு கொண்டுபோகின்றனவே????

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...