வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதி தமிழ் கிராமங்களில் ஒன்றான கொக்கச்சான்குளம் ´கலா போகஸ்வல´ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு 3500க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.
வடபகுதியில் குடிப்பரம்பலை மாற்றம்செய்யும் வகையில் சிங்கள பௌத்த குடியேற்றங்களும் இராணுவக் குடியேற்றங்களும் நடைபெறுகின்றன.
இந்த காணிகள் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய காணிகளாகும். இந்த காணிகளுக்கு பரம்பரை வழித்தோன்றலாக உரித்துடையவர்கள் தமக்கே உரித்தான சொந்தக்காணிகளை பராமரிக்க சென்ற போதெல்லாம் இராணுவத்தால் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அக்காணிகளுக்குள் மக்கள் உட்பிரவேசிக்கவும் இராணுவத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதி குறித்த தகவல் மட்டுமே. புலம்பெயர் மற்றும் புலத்திலுள்ள பிழைப்பு வாதிகள் தமிழ்ப் பேசும் மக்களை ஏகபோக அரசுகளுக்குக் காட்டிகொடுப்பதற்காகப் இத்தகவல்களைப் பயன்படுத்திகொள்கின்றனர். வன்னி இனப்படுகொலைகளின் பின்னர் தமிழர் அரசியல் தலைமையைக் கையெலெடுத்த புலம்பெயர் புலிசார் வியாபாரிகள் கடந்த ஐந்து வருடங்களில் அழிவுகளை மட்டுமே எச்சமாக விட்டுவைத்துள்ளனர். இன்னும் சில வருடங்களில் வடக்க்கும் கிழக்க்கும் சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட பின்னர் இவர்கள் இலங்கை அரச பாசிஸ்ட்டுகளோடு வெளிப்படையாகவே இணைந்துகொள்வார்கள்.