தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. 40 சதவீத மின்வெட்டை 10 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 28ம்தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று வீசுகிறது. இதன்மூலம், காற்றாலை மின்உற்பத்தி கணிசமாக உயர துவங்கியுள்ளது. முதல் நாள் 1,100 மெகாவாட்டும், 2வது நாள் 1,570 மெகாவாட்டும், நேற்று 2,300 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட்டது. விரைவில் தினமும் 3,500 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்ய முடியும் என தெரிகிறது.
நாளுக்கு நாள் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக கோவை மற்றும் தென்மாவட்டங்களில் மின்வெட்டு அளவு குறைந்துள்ளது. கோவையில் தினமும் காலை 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
நிலைமை இவ்வாறிருக்க பேரழிவை ஏற்படுத்தும் அணு உலைகளை இந்திய அதிகாரவர்க்கம் மக்கள் மீது திணிப்பதன் பின்னணியில் இதனால் இலாபமடையும் பல்தேசிய நிறுவனங்களே செயற்படுகின்றன.








This is very interesting and definitely better than nuclear power.