காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழா! ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து தொல். திருமாவளவன் புறக்கணிப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டுகோள்!
புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுவிழா வரும் 16102010 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி லட்சக் கணக்கில் கொன்றுகுவித்த ராஜபக்சேவை புதுதில்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் இந்திய அரசின் அணுகுமுறையானது சுமார் பத்து கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர வன்மம் நிறைந்த வக்கிரபுத்தியை இதன்மூலம் இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. ராஜபக்சேவும் சிங்கள அரசும் போர் மரபுகளை மீறி மாந்தநேயமற்ற முறையில் போர்க் குற்றம் இழைத்துள்ளனர் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள சர்வதேச நாடுகள் கண்டித்து வருகிற இந்த நிலையில் இந்திய அரசு அதற்கு நேர்மாறாக ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் இந்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜபக்சேவை அழைக்கும் இந்த முடிவை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஓர்மையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(தொல். திருமாவளவன்)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
ஆர் 62, இரண்டாம் நிழற் சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு,
வேளச்சேரி, சென்னை 600 042.
தொல். திருமாவளவன் நாள் : 12-10-2010
தலைவர்
நமது எதிர்ப்பைக் காட்ட இதிலாவது ஒன்றுபடுங்கள் தமிழர்களே!
கடிதம் எழுதுபவன் எல்லாம் திருட்டு பசங்க
தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.சமயத்தில் முதுகில் குத்துபவர்கள்.இந்தச் சந்தர்ப்பவாதிகள் சாதியைச் சொல்லியே தமிழரை ஆள்கிறார்கள்.சாதியை விட்டால் வேறூ வார்த்தை தெரியாதவர்கள் தமது சாதிக்காவது திருமா எதையாவது செய்துள்ளாரா?ஈழத் தமிழன்.—————-தமிழ் ஈழம் என்றூ ஈழத் தமிழனுக்குத்தானும் எதையாவது செய்துள்ளார்களா?……………..
அமெரிக்கா போய் ஓபாமாவை சந்தித்து வந்திருக்கிறார் ராஜபக்ஸ்,அய்.நா வும் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றீருக்கிறது.இந்தியா கொமன்வெல்த் இற்கு கூப்பிடுவதை திருமா எதிர்க்கிறார்?…………..கொமன்வெல்த் கேம்ஸ்ஸீல் ஒரு வெண்கலமாவது தமிழ் நாட்டுக்காக யாராவது பெற்றீருக்கிறார்களா?ராஜராஜன் பெரிய கோயிலுக்கு வெளீயே நிற்கிறார் அவரை உள்ளே வைத்தால் தீட்டுப்படும் என் கிறது பார்ப்பணீயம் திருமாவுக்கு இதில் ஆர்வம் இல்லையா?……………..கற்பனைக் குதிரையில் தொடர்ந்தும் சவாரி செய்யாது தீண்டத்தகாத ஆதி திராவிடர்களூக்கு பணீயாற்ற எம்.எல்.ஏ ஆக்கிய மக்களூக்கு ஏது செய்யும்?
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டுகோள் என்று தெரு நாவளவர் கூறுவது ஒன்றிற்க்கும் ஒத்துப்போவதுபோல் தெரியவில்லையே, யாரிடம் அண்ணன் கோரிக்கை வைக்கிறார்,இவர் சார்ந்து நக்கிப்பிழைக்கும் கட்சிகள்தான் ராஜபக்க்ஷவை வரவேண்டுமென்று வரவேற்கின்றனர்,கூட்டுக்கட்சிகள் முரண்பாடாக நடப்பதாக கூறிக்கொள்ளும் இவர் அவர்களின் காலடியில் கிடந்துகொண்டு அறிக்கை விடுவது இவருக்கே வேடிக்கையாக இன்னும் இவர் உணர்ந்துகொள்ளவில்லையா,
சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது//ரோசவானாக இருந்தால் வெளியேறி வெளியில் நின்று குரல் கொடுப்பதல்லவா அழகு,தகவல் அறிஞ்சு அதிர்ச்சிக்குள்ளாகியிட்டாராம் கருணாநிதியை விஞ்சிய நடிகரா வருவதற்கு நிறையச்சந்தற்பமுண்ண்டு,
ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி லட்சக் கணக்கில் கொன்றுகுவித்த ராஜபக்சேவை புதுதில்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் இந்திய அரசின் அணுகுமுறையானது சுமார் பத்து கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.//பத்துக்கோடி தமிழர்களில் நீங்கள் ஒருத்தன் தானே, ஒருகட்சியின் தலைவன் என்று குசுவிக்கொள்ளுகிறீர்கள் மானமிருந்தால் கருணாவையும் சோனியாவையும் விட்டு விலகி உன்னுடைய எதிர்ப்பை மனிதனாக காட்டையா,
அத்துடன் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர வன்மம் நிறைந்த வக்கிரபுத்தியை இதன்மூலம் இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.//இதைதானே நாங்களும் பல மனிதர்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர், இப்பவாவது புரிந்திருந்தால் அறிக்கையைவிட்டுவிட்டு நடைமுறையில் காட்டையா,
ராஜபக்சேவும் சிங்கள அரசும் போர் மரபுகளை மீறி மாந்தநேயமற்ற முறையில் போர்க் குற்றம் இழைத்துள்ளனர் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள சர்வதேச நாடுகள் கண்டித்து வருகிற இந்த நிலையில் இந்திய அரசு அதற்கு நேர்மாறாக ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் இந்திய அரசின் பங்களிப்பு எத்தகையது//இப்பதான் அறிஞ்சியாய்யா நீயுந்தான் கொலைக்கட்சியில் பங்கு காங்கிரஸ் கட்சியில் பங்குவகிக்கிறாய் கருணாநிதியின் காலடியே கதியென்று கிடக்கிறாய் ,எத்தனை காலந்தான் இப்படியே மான ரோசம் இழந்து நக்கிப்பிழைக்கும் உத்தேசம் உங்களைப்பொன்றவர்களால்த்தான் நாடு விளங்குகிறது,தலைவிதி,
Thiruma, first you serve your own people. We never expect your cheap politics.You’re one of the good comedian….