மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் இருந்து மாற்ற வேண்டும் என காமன்வெல்த் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை. மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டதற்கும், மக்கள் மீதான அச்சுறுத்தலுக்கும், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கும் இலங்கை அரசுதான் காரணம். இது போன்ற சூழ்நிலையில், அங்கு மாநாட்டை நடத்தினால், காமன்வெல்த் அமைப்பு சர்வதேச நாடுகளின் கேலிக்கிடமானதாகிவிடும் என தெரிவித்துள்ளார்.
பொதுனலவாய நாடுகள் எனப்படும் காமன்வெல்த் நாடுகளின் செயற்குழுக்கூட்டம் லண்டனில் நாளை நடைபெறுகிறது. செயற்குழு கூட்டம் நடைபெறும் கட்டடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நாளை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.