முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவது இனவாதம் எனத் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அது இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பொறிமுறை அல்ல எனவும் தெரிவித்த அவர் இனவாதிகள் காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவதாகவும் இனவாதிகள் அதனை மறுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்களை சூறையாடும் ஒரு நாட்டில் தன்னுரிமைக்கான அடிப்படைகளைக் கோருவதக் கூட இனவாதம் என நிராகரிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இனவாதிகளின் இருப்பு இலங்கை இடதுசாரியத்தின் சாபக்கேடு. இவர்களைப் போன்ற அரசியல் பிழைப்புவாதிகள் ஆயிரம் மைல்கள் தொலைவில் பால்ஸ்தீனியர்களுக்கு சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளை தமது தேசத்தின் எல்லைக்குள் அதனை இனவாதம் என்கின்றனர்.
இதுதான் இவர்களது அடிப்படைப் ;பிரச்சனை முரண்பாடு…. இதை; தீர்க்காமல் இவர்களுடன் ஐக்கிய முன்னணி என்பது ஏதற்காக என்பது பெரும் கேள்விக்குறி?
ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமைக்கா….?
http://meerabharathy.wordpress.com/2013/05/13/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/