காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாகவுள்ளது.
காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே அந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் போரின் பின்னரும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள், சிங்கள பௌத்த மயமாக்கம் போன்ற பல அரசியல் நடவடிக்கைகளால் தொடர்ச்சியாகக் காணமல் போவோரின் தொகை அதிகரித்துள்ளது. தவிர, விடுதலைப் புலிகளின் அறியப்பட்ட உறுப்பினர்கள் உட்பட பல சிறைக்கைதிகள் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போனோரின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பல ஊடகவியலாளர்கள், அரசியலாளர்கள் போன்றோர் காணாமல் போகின்றனர்.
இன்று லண்டனின் நடைபெறும் காணாமல் போனோர் குறித்த சர்வர்தேச மாநாட்டில் இலங்கையிலிருந்து தோழர் தம்பையா கலந்துகொள்கிறார். காலை பதினொரு மணிக்கு நடைபெறும் அவரின் உரையில் பேரினவாத அடக்குமுறையின் கோரத்துள் காணமல் போனோர் குறித்து பல தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி மத்திய குழு உறுப்பினரான தோழர் தம்பையா தலைமையில் சமகால நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட உள்ளது.







