காணமல் போன உறவினர்களைத் தேடுமாறு நேற்றுக் கொழும்பு லிப்டன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட இப் போராட்டங்களை நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி ஏனைய தமிழ்த் தலைமைகளோ இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்பது தவிர அவற்றிற்காக குறைந்தபட்ச ஆதரவைக் கூட வழங்குவதில்லை.
புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசிற்கு அழுத்தம் வழங்குவதாகக் கூறும் அமைப்புக்கள் கூட இவ்வாறான போராட்டங்களை ஆதரிப்பதோ அறிக்கை வெளியிடுவதோ இல்லை.
தமிழ் நாட்டின் உணர்ச்சி பொங்கும் தமிழினவாதத் வாதிகள் வாழ்வதற்காகப் போராடும் இம் மக்களைக் கண்டுகொள்வதில்லை.
இனப்படுகொலைக்கு முன்னரும் பின்னரும் தமிழ்ப் பேசும் மக்கள் பகுதியினரைச் சார்ந்தோர் காணமல் போதல் வழமையான நிகழ்வாகிவிட்டது. இலங்கை அரச பாசிசம் நாடு தழுவிய இராணுவ ஆட்சியை நடத்திவரும் நிலையில் இவ்வாறான போராட்டங்களை மேலும் ஊக்கப்படுத்தல் அவசியமானது.
தமிழினவரிகளும் தமிழ் தேசியவாதிகளும் எங்கே என்று தேடுவதற்கு முதல் நாம் இலங்கையர் என்ற அமைப்பினரிடம் யார் இலங்கையர் என்ற கேள்வியை எழுப்புவது நல்லது என்று நினைக்கிறேன். நாடு பல தேசங்களாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. நாம் இலங்கையர் என்று சொல்வோர் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தமிழர்களையும் இலங்கையர் என்று கருதியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு பேரும் காணாமல் போன போரைத் தூண்டியவர்களும், போரை நடாத்தியவர்களும் அவர்கள் தான். மஹிந்த நடைமுறைப்படுத்தியது அவர்கள் முன்மொழிந்த கோட்பாட்டைத் தான். இது பற்றிய புரிதல் ஏதுமின்றி சும்மா விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதும் தமிழ் தேசியவாதிகளையும் தமிழினவாதிகளையும் கேள்வி கேட்பதும் இப்போது இடதுசாரியப் பாஷனாகி விட்டது. இதற்காக தமிழ் தேசியவாதிகளும் தமிழினவாதிகளும் தவறு எதுவுமே செய்வில்லை என்றோ எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் போலி இடதுசாரியம் அதைவிட ஆபத்தானதாகவும் உண்மைகளைத் தேடாததாகவும் மூடி மறைப்பதாகவும் அல்லவா ஆகி விட்டிருக்கிறது.
(நாம் இலங்கையர் என்ற அமைப்பு ஜேவிபியினுடைய ஒரு வெகுஜன அமைப்பு என்பது பரகசியமான ஒன்று)
தமிழினவரிகளும் தமிழ் தேசியவாதிகளும் எங்கே என்று தேடுவதற்கு முதல் நாம் இலங்கையர் என்ற அமைப்பினரிடம் யார் இலங்கையர் என்ற கேள்வியை எழுப்புவது நல்லது என்று நினைக்கிறேன். நாடு பல தேசங்களாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. நாம் இலங்கையர் என்று சொல்வோர் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தமிழர்களையும் இலங்கையர் என்று கருதியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவ்வளவு பேரும் காணாமல் போன போரைத் தூண்டியவர்களும், போரை நடாத்தியவர்களும் அவர்கள் தான். மஹிந்த நடைமுறைப்படுத்தியது அவர்கள் முன்மொழிந்த கோட்பாட்டைத் தான். இது பற்றிய புரிதல் ஏதுமின்றி சும்மா விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதும் தமிழ் தேசியவாதிகளையும் தமிழினவாதிகளையும் கேள்வி கேட்பதும் இப்போது இடதுசாரியப் பாஷனாகி விட்டது. இதற்காக தமிழ் தேசியவாதிகளும் தமிழினவாதிகளும் தவறு எதுவுமே செய்வில்லை என்றோ எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் போலி இடதுசாரியம் அதைவிட ஆபத்தானதாகவும் உண்மைகளைத் தேடாததாகவும் மூடி மறைப்பதாகவும் அல்லவா ஆகி விட்டிருக்கிறது. (நாம் இலங்கையர் என்ற அமைப்பு ஜேவிபியினுடைய ஒரு வெகுஜன அமைப்பு என்பது பரகசியமான ஒன்று)
ஒருத்தருக்கும் சொல்லாம ரகசியமாய் கதச்சுப் போட்டு,ரோட்டில கூடிக் கத்துறதால விசர்கூட்ட்ம் ம்கிந்தாவுக்கு விளங்கவே போகுது.