காணமல் போவோருக்கு எதிரான சர்வதேச மாநாடு ( 6th International Conference Against Disappearances (ICAD)) 9ம் திகதி முதல் 12 திகதிவரை நடை பெறுகிறது. இலங்கையில் அரச அடக்குமுறையினால் காணாமல் போவோர் குறித்தும் முக்கிய நிகழ்வுகள் இங்கு இடம்பெறவுள்ளன. பல் வேறு நாடுகளைச் சேர்ந்த உரிமை அமைப்புக்களும், இயக்கங்களும், முற்போக்கு இடதுசாரிகளும் கலந்து கொள்ளும் இந்த மாநாடு வடக்கு லண்டனில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இறுதி நாளான 12ம் திகதி ஆர்பாட்டம் ஒன்றையும் ஏற்பாடுசெய்துள்ளனர்.
இன்றைய(10.12.201) நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்திருக்கும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் தோழர். தம்பையா கலந்துகொள்கிறார். இவரது உரை காலை 11 மணிக்கு இடம்பெறும்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Kurdish Community Centre, Fairfax Hall, 11 Portland Gardens, London N4.
எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் தோழர் தம்பையா கலந்துகொள்ளும் நிகழ்வொன்றை புதிய திசைகள் அமைப்பினர் ஏற்பாடுசெய்துள்ளனர். திகதி விபரங்கள் பின்னதாக அறிவிக்கப்படும்.








தீடீரென்றூ நீங்கள் இப்படி எந்த அவகாசமும் தராமலா அறீவிப்பது.
My Uncle told me …” we wept with our Sinhalese Friends, when Premawathi Manamperi was raped and killed, but nobody is there now to weep with us for Isaipriya and hundreds of others
Plesae check the Thamil translation of the topic .