சாட்சியின்றிச் சிதைக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் விளை பலன்களாக வன்முறைக் கலாச்சாரமும், மனோ வக்கிரமும் மட்டுமன்றி, பிழைப்பு வாதிகளும், அரசியல் வியாபாரிகளும் கூடத்தான் மனிதத்தை மிரட்டுகின்றனர். அறுபது நீண்ட வருடங்களின் ஒடுக்கு முறையும் முப்பது வருடம் தவறான வழிகளூடாக முடிவுற்ற போராட்டமும் சமூகத்தின் ஒரு பெரும் பகுதியை வக்கிரத்தனமான அறிவுசார் சிந்தனையற்றதாக மாற்றியிருக்கின்றது.
வெறும் உணர்ச்சி அரசியல் ஒரு புறத்திலும், அதனை மூலதனமாக்கும் தேசிய வியாபாரிகள் மறுபுறத்திலும் இவற்றையெல்லாம் தனது ஒடுக்குமுறைக்குச் சார்பாக மாற்றியமைக்கும் இலங்கை அரச பாசிசமும் ஒன்றை மற்றொன்று வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
இது வரைக்கும் புலிகள் முன்வைத்த அரசியல், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதமானது என்ற சிந்தனை நச்சு வேராகப் படர்ந்து சமூகத்தின் ஒரு பகுதியை இருளுக்குள் புதைத்து வைத்திருக்கிறது.
ஆணவத்தோடு நடத்தப்பட்ட போராட்டம் மனித அவலமாக முள்ளிவாய்க்கால் மூலையில் முடிவடைந்த பின்பும் கூட தவறுகளுக்கான காரணத்தைத் தேட வேண்டாம் என்று வன்முறைக் கலாச்சாரத்தின் அழிவு சக்திகள் தெரு முனையில் வைத்து ஒரு தேசியவாதியைத் தாக்கியிருக்கிறார்கள். புலிக் கொடி குறித்த விவாதம் ஒன்றி தீபம் தொலைக் காட்சியில் கருத்துக் கூறியதற்காக சஞ்சீவராஜ் என்ற தேசிய வாதி தாக்கப்பட்டதன் பின்னர் அதனை நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாகப் பெருமிதம் அடைந்தார்களோ இல்லையோ இலங்கை அரச பாசிசமும் அதன் கூறுகளும் உற்சாகமடைந்துவிட்டன.
இலங்கை அரசோடு அதாவது அப்பவி மக்களின் பிணங்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவிக்கொண்ட கொலைகாரர்களோடு, மக்களின் அழுகுரல்களை அரசியலாக்கிக் கொள்ளும் சமூக விரோதிகளோடு இணைந்து கொள்ள வேண்டும் என்று குறைந்தபட்சக் குற்ற உணர்வுமின்றித் தம்மை இனம்காட்டிக்கொள்ளும் பலர் சஞ்சீவராஜின் மீதான இத் தாக்குதலைப் பயன்படுத்தி தமது அரசியல் வியாபாரத்தை நடத்த முயல்கின்றனர்.
தேசம் நெட் என்ற இணைய வலைத் தளத்தில் கொன்ஸ்டன்டைன் என்ற இலங்கை அரச ஆதரவாளர் இப்படி எழுதுகிறார்: “விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், வி சிவலிங்கம், என் கங்காதரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர்…”
இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் பாதிப்பிற்கு உள்ளான சஞ்ஜீவராஜ் தனக்கு இந்தக் கருத்தோடு கிஞ்சித்தும் உடன்பாடு கிடையாது என்றும், இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது எமது விடுதலைக்கான முன்நிபனதனை என்றும். இலங்கை அரசாங்கத்தோடு இணக்கப்பாட்டிற்குச் செல்வது என்பது மக்கள் விரோத அரசியல் என்றும் எமக்குத் தெரிவித்தார்.
இங்கே சஞ்சீவ்ராஜின் மீது தாக்குதல் நடத்திய புலி அமைப்புக்களில் செயற்படும், அவற்றின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட ராம் சஞ்சீவராஜ் என்பவரை தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து பிளவுபடுத்த அந்தப் பிரிவினையை இலங்கை அரச ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆக, இரு பகுதியினரும் தேசிய விடுதலைக்கு எதிராகவும் மகிந்த ராஜபச்க அரசிற்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர்.
இதன் உச்சபட்ச நிலையாக இன்று 26.06.2011 அன்று இலங்கை அரச ஆதரவுப் போக்குடையோர் சஞ்சீவராஜை ஆதரித்து வன்னியன் பூட் என்ற பலசரக்குக் கடையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதாகவும் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்துப் சஞ்சீவராஜிடம் கேட்ட போது, அந்தப் போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார். ஆக, நாளைய போராட்டத்தின் உள்நோக்கு சஞ்சீவராஜிற்கு நீதி கிடைப்பதோ அன்றி வன்முறைக் கலாச்சாரத்தை எதிர்பதோ என்பதற்கு அப்பால் இலங்கை அரசின் புலம் பெயர் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே கருதமுடியும்.
புலிகள் இதுவரை முன்வைத்த ஜனநாயக மறுப்புச் சிந்தனை முறைமையும் அரச பாசிசமும் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் பயன்படுத்தப் படுகின்றன என்பது மட்டுமன்றி, அவை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வை தடை செய்கின்றன. இவை குறித்து தேசிய இன ஒடுக்குமுறையால் தொலைந்து போய் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களும் ஈழத்தின் பேரின வாத அவலங்கள் மத்தியில் வாழ்வோரும் விழிப்பாயிருக்க வேண்டுகிறோம்.
புலிகள் முன்வைத்த இன வாதமும், இலங்கை அரசின் பேரினவாதமும் ஒன்றை ஒன்று ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்து அழிவுகளை அறுவடை செய்து கொள்கின்றன என்ற இலகுவான உண்மையை புலம்பெயர் அமைப்புக்கள் புரிந்துகொள்வதும், வன்முறைக் கலாச்சரத்தை நிறுத்தும் அனைத்து நடவடிக்கைகளில் ஆரம்பித்து புதிய அரசியல் வழிமுறைகள் குறித்து ஆராய்வதும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியிலுள்ள உடனடிக் கடமையாகும்.
ஊடகங்களுக்கான அறிக்கை – புதிய திசைகள் – 26.06.11
//தேசம் நெட் என்ற இணைய வலைத் தளத்தில் கொன்ஸ்டன்டைன் என்ற இலங்கை அரச ஆதரவாளர் இப்படி எழுதுகிறார்: “விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன்இ எஸ் வாசுதேவன் வி சிவலிங்கம் என் கங்காதரன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர்…”//
அம்பலமான புலிக்கொடி எதிர்ப்பாளர்களும் புதியதிசைகள்
பம்மாத்துக்காரர்களும்.
——————————————————————-
சஞ்சீவ்ராஜ் தனது சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவை மறுப்பதனால் தீபம் தொலைக்காட்சியில் அல்லது தேசம்நெற் இணையத்தில் செய்திருத்தல் வேண்டும். அதைவிடுத்து புதியதிசையில் புலுடாவிடுவது. பாம்பிற்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் தமிழ் இடதுசாரிகளின் பாரம்பரியமே!
கொன்ஸ்டன்டைன் என்பவர் வெகுதெளிவாக புலிக்கொடி எதிர்ப்பு பிரச்சாரகர்கள் யார்!. தங்களின் செயற்படுதளம் எதுவென அப்பட்டமாக்கியுள்ளார். சஞ்சீவ்ராஜ்ன் புலிக்கொடி எதிர்ப்பென்பது சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் வேலைத்திட்ட முன்னெடுப்பென்பது அப்பட்டமாகியபின்னரும் அவருக்கு வெள்ளையடிக்க முயற்சிக்கும் “புதியதிசை” பம்மாத்துக்காரர்கள் என்பதில் ஐயமில்லை! எனது இக்கருத்தை எதிர்க்க வருபவர்களிடம் முற்கூட்டியே கேட்கவிரும்புவது.
1) சஞ்சீவ்ராஜ் தனது நிலைப்பாட்டை (தானொரு சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவாளர் அல்ல) தீபம் தொலைக்காட்சியில் உடனடியாக தெரிவிப்பாரா!
2)கொன்ஸ்டன்டைன் கும்பலின் தகவல்கள் பொய்யானதென தீபம் தொலைக்காட்சியில் உடனடியாக தெரிவிப்பாரா!
3)கொன்ஸ்டன்டைன் கும்பலின் செயற்பாட்டின் பின்புலத்தை தெரியாத விரல்சூப்பும் பாப்பாவா சஞ்சீவ்ராஜ்? தெரிந்து கொண்டுதானே அவர்களுடன் சேர்ந்து இயங்கினார். இல்லையென்றால் சிங்ககொடி எதிர்ப்பை தீபம் தொலைக்காட்சியில் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.!
புலி தேசியத்தை பாவித்து பணம் சுருட்டியவர்களுள் நிர்மலன் முக்கிய புள்ளி. ராமை காடைத்தனதுக்கு தூண்டியவர்களில் இவரும் ஒருவர். இவர்களை எப்படி கையாளுவது. கருத்துக்களை விவாதிக்க இவர்கள் வரமாட்டார்கள். சட்டத்தை நாடலாம்.. சரிவராவிடால்?
புளீயொதரைக்காரர்கள் சஞ்ஜிவ் ராஜிற்கு பட்டாபிகேசம் கட்டி தமிழரை தொடர்ந்தும் வனவாசம் வைத்திருக்கலாம் என ஆசைப்படுகிறார்கள்.இது இராமருக்கு தெரிய வேண்டும்.அவரது விரம்தானே யுத்தமானது,இன்னொரு யுத்தம் தெவையா அன்பானர்ந்தவர்களே?
ராஜ் என்பவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்ற வகையில் உங்கள் 1), 2) கேள்விகளுக்கு ஆம் அப்படி செய்வார் என்பதை உறுதியாக கூற முடியும்.
மூன்றாவது கேள்விக்கு எப்போது அவர் கொன்ஸ்டன்டைன் கும்பலின் கீழ் இயங்கினார்?
பி.ரி.எவ் போன்ற முள்ளந்தண்டில்லாத கூட்டம் இதனை எதிர்க்க துணியாதவிடத்து மகிந்த காலைநக்கும் பிழைப்புவாத தேசம் இதனை கையிலெடுத்தமைக்கு ராஜ் எப்படி பொறுப்பாக முடியும்.
வன்முறையில் ஈடுபட்டவனை விடுத்து பலியாகியனை இத்தனை கேள்வி கேட்பதுடன் புலி கொடியை எதிர்பவனெல்லாம் தேசியத்தை எதிர்பனாக கற்பனை பண்ணும் அளவிற்கு உமக்கு மனநோய் முற்றிவிட்டதா?
வன்முறையில் ஈடுபட்டவரை காவல்துறையும் நீதிமன்றமும் நேரடியாக கேள்வி கேட்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால்! தண்டணையும் கொடுக்கும். புலியின் அரசியலை எதிர்ப்பது விமர்சிப்பது தனிமனித உரிமை. அதை யாரும் மறுக்கவில்லை சிங்கக்கொடியின் ஆதரவுடன் அதை செய்து கொண்டு தமிழ்தேசீயம் பேசுவது ஈபிடிபியின் கூலி கொலைப்படை அரசியல். நேரடியாய் அதை செய்யுங்கள்! தமிழ்தேசீய முகமூடி போட்டு அடுத்தவர்களை ஏமாற்றாதீர்கள்.கொன்ஸ்ரன்ரைன்
கும்பலில் ஒருவராயிருந்து தீபமூடாக புலிக்கொடி எதிர்ப்பிரச்சாரத்தை எடுத்துக்கொண்டு தமிழ்தேசீய ஆதரவா? பாம்பிற்கு தலையும் மீனுக்கு வாலுமெனும் விலாங்கின் மனிதவடிவம்தான் சஞ்சீவ்ராஜ்ம் அவரது சிஞ்சக்கூட்டமும்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தை உண்மையில் ஒழுங்கு செய்திருக்க வேண்டியவர்கள் தம்மை தேசிய சக்திகளாகக் காட்டிக் கொள்பவர்களே. ஆனால் நிர்மலன் போன்ற தேசியக் குழந்தைகளோ விரல் சூப்பிக் கொண்டு சொல்ல வருவதெல்லாம்; கருத்தை வன்முறையால் எதிர்கொள்ளும் நியாயப் பாட்டையே.
ஆமாம்! சிறிலங்கா ஊடகச்சிப்பாய்களிற்கு வக்கலாத்து வாங்குவதோ! தங்களின் தமிழ்தேசியத்திற்கான வரவிலக்கணம்? வன்முறையை யாரும் ஆதரிக்கவில்லை ஆனால் வன்முறை ஒன்றுதான் புலிக்கொடி எதிர்ப்பாளர்களினதும் புதியதிசைகளினதும் கோரமுகப் பின்னனியை சுயமாக ஓப்புக்கொள்ன வைத்துள்ளது.
கொடுமுடி சொல்லாதையுங்கோ அதை செய்யுங்கோ!
// சிறிலங்கா ஊடகச்சிப்பாய்களிற்கு வக்கலாத்து வாங்குவதோ//
யார் வக்காலத்து வாங்கியது?புரியவில்லை, தெளிவாக கூறவும்
// புதியதிசைகளினதும் கோரமுகப் பின்னனியை சுயமாக ஓப்புக்கொள்ன வைத்துள்ளது.//
புரியவில்லை, தெளிவாக கூறவும்
சரியான நேரரத்தில் புதிய திசைகளின் தலையீடு வாழ்த்துகள். பிரிஎப் போன்ற அமைப்புகள் பார்த்துக்கொண்டிருக்க புதிய திசைகள் உண்மையை அம்பலப்படுத்தி உள்ளன.
வன்முறையை யாரும் ஆதரிக்கவில்லை என்று சொல்லிக் கொள்ளும் தேசியக் குழந்தை நிர்மலன் இதுவரைக்கும் காடை ராம் இன் செயலைக் கண்டிக்கவில்லை. இசைப்பிரியா விடயத்தில் இலங்கை அரசு அவர் புலிகளின் சீருடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு என்ன செய்தியைச் சொல்ல வருகிறதோ அதைத் தான் இவரும் செய்ய முயற்சிக்கிறார். வன்முறையை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பவர்கள் இறுதியில் தாம் வளர்த்த வன்முறைக்கே பலியான வரலாறுகள் நிறைய உண்டு.
நிர்மலன்
Posted on 06/23/2011 at 10:05 am
போரில் போரிடும் வலு குறைந்த தரப்பு வீரர்கள் உயிருடன் பிடிபடுவதும் சரணடைவதும் சாதரணமான விடயம். இதில் எந்தக்கேவலமும் இல்லை. நிராதயுதபாணிகளான இவர்களை கொல்வதுதான் தப்பு. இதுதான் சாதரண உலகநடைமுறை. இதை மறுக்கும் நீங்கள் பொதுமக்களை திட்டுமிட்டு கொல்வதும் பிணத்தை புணர்வதும்தான் மேன்மை மகிமையென நம்புகிறீர்களா! பிரித்தானியாவில் பொலிஸ் நீதிமன்றம் எனும் பக்கச்சார்பற்ற கட்டமைப்பு இருக்குத்தானே அவர்கள் வன்முறையாளரை தண்டிப்பார்கள். அதுவும் போதிய கண்கண்ட சாட்சிகள் இருப்பது வன்முறையாளரின் தண்டனையை உறுதிப்படுத்தும்.
//பிரித்தானியாவில் பொலிஸ் நீதிமன்றம் எனும் பக்கச்சார்பற்ற கட்டமைப்பு இருக்குத்தானே அவர்கள் வன்முறையாளரை தண்டிப்பார்கள். அதுவும் போதிய கண்கண்ட சாட்சிகள் இருப்பது வன்முறையாளரின் தண்டனையை உறுதிப்படுத்தும்.
//
இலங்கை அரசு, புலிகள் என்ற இரண்டு சக்திகளுக்கப்பாலும் தேசிய அரசியல் இருந்தது அது தொடர்ந்தும் இருக்கும் என்ற யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் இங்கு பிரச்சனைக்கான அடித்தளம். சம்பிரதாயத்திற்காக ராமின் ரெளடித் தனத்தை விரும்பாதவர்கள் போல் தம்மைக் காட்டிக் கொண்டாலும் அவரின் காடைத்தனத்திற்கான நியாயப்பாட்டை வழங்க முனையும் செயலையே தேசியக் குழந்தைகள் செய்கிறார்கள்.
//இலங்கை அரசு, புலிகள் என்ற இரண்டு சக்திகளுக்கப்பாலும் தேசிய அரசியல் இருந்தது அது தொடர்ந்தும் இருக்கும் என்ற யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் இங்கு பிரச்சனைக்கான அடித்தளம்//
well said, ,Both the pro LTTE and pro GOSL tamil orgs want to have only two views/ forces in Diaspora. 1.PRO LTTE, and
2. pro GOSL.
we should not fall in that trap.
இந்த வன்செயல்
நிபந்தனையின்றி கண்டிகப்படவேண்டியது
/வன்முறையாளரின் தண்டனையை உறுதிப்படுத்தும்./
நிர்மலன்
தண்டனை தீர்ப்பு என்று திசை திருப்பாது, அவர் அது , இவர் இது என்று முத்திரை குத்தாது இந்த வன்செயலை நிபந்தனையின்றி கண்டிப்போமா ?
இங்கு நிர்மலன், ராம், தேசம்நெற் ஒரேநெற்றில் இயங்கும் கூட்டமாகவிருக்கலாம்.
//தண்டனை தீர்ப்பு என்று திசை திருப்பாதுஇ அவர் அது இ இவர் இது என்று முத்திரை குத்தாது இந்த வன்செயலை நிபந்தனையின்றி கண்டிப்போமா ?
// Thevan 2
ஒருவரின் கருத்திற்காக அவர்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதை நான் வன்மையாக கண்டிப்பேன். ஆனால் ராஜ்ன் விடயத்தில் தனது புலிக்கொடியெதிர்ப்புக்காக தன்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டதாக சொல்வது. ராஜ்ன் குற்றச்சாட்டு மட்டுமே! அதை முழு உண்மையென எடுத்துக்கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சிறிலங்கா அரசபயங்கரவாதம் தன்மீது சுமத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழின அழிப்பு குற்றச்சாட்டுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகளும் தமிழ் தேசீய உணர்வாளர்களுமே காரணம். புலிகளை ஆயுதரீதியில் தோற்கடித்தது போல் தமிழ் தேசீயத்திற்கெதிரான சர்வதேச பரப்புரை யுத்தத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதிதான் தீபத்தில் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் ஊடகச்சிப்பாய்கள் முன்னெடுக்கும் புலிக்கொடியெதிர்ப்பு பரப்புரை இதில் ராஜ்ம் ஒருபங்காளி.( கொன்ஸ்ரைனுக்கு அருகிலிருந்தபடியால் அல்ல சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் புலிக்கொடியெதிர்ப்பு பரப்புரையை முன்னெடுத்தபடியால்) இந்தவிடயத்தில் ராஜ்ன் வாக்குமூலத்தை காட்டிலும் கொன்ஸ்ரைனின் வாக்குமூலத்தில் உண்மையிருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம். எனெனில் தானொரு சிறிலங்கா அரசபயங்கரவாத ஆதரவாளன். அதன் மூலம் தன்னுடன் சேர்ந்த 5 வரினதும் பரப்புரை அரசபயங்கரவாத ஆதரவானது என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.அதை இன்றுவரை ராஜ் தவிர்ந்த எவருமே மறுக்கவில்லை. ராஜ் தனது தமிழ்தேசீய கபட முகம் அம்பலமாச்சே என்ற கையேறு நிலையில்தான் “இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால் நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. “என்று சொல்லி அடுத்தவரை முட்டாளாக்கிறார். இந்த விலாங்குத் தனம் நிரம்பிய ராஜ்ன் குற்றச்சாட்டில் உண்மையுள்ளதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.?
அடுத்ததாக “தமிழ் தாய்” எனும் இணையத்தில் உள்ள செய்தியின் படி சம்பவம் நடந்த இடத்தில் ராஜ் மாவீரர்களை படுகேவலமாக தூசித்துள்ளார்.அதாவது அடுத்தவரின் உணர்வை கொச்சைப்படுத்தி கோபப்படுத்தியுள்ளார். இதன் பின்னரே வாக்குவாதம் கைகலப்பா மாறியுள்ளது.
இப்படியாக ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட செய்தி வரும் போது தனியே ஒருவரின் குற்றச்சாட்டை மட்டும் நம்பி எழுந்தமானத்திற்கு கண்டிக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக காவல்துறையும் நீதிதுறையும் தீர விசாரித்த பின்னர்தான் என்ன நடந்தது என்ற உண்மை ஒரளவிற்காவது தெரியவரும். அதன் பின் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் ஆதரவிற்காகவின்றி ராஜ் தனது அரசியல் அபிலாசை அடிப்படையில் புலிக்கொடியெதிர்ப்பு கருத்திற்காகத்தான் வன்முறை நடந்ததாக இருந்தால்? கண்டிப்பேன்.
மீண்டும் சொல்கிறேன் தமிழ்தேசீய ஒற்றுமையை விரும்பும்! ஒருவர். தற்போதுள்ள நேரகாலம் தெரியாது! சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் அவசர அவசியத் தேவையான. பரப்புரையை முன்னெடுக்க முன்வரமாட்டார். “காற்று வீசும் போது மாவை விற்ப்பதும் மழையடிக்கும் போது உப்பு விற்பது யதார்த்தமான காரியமல்ல.” அதை அடுத்தவர் யதார்த்தமென நம்பவும்மாட்டார்.
நிர்மலன்!
நன்றி .
வன்முறையை கண்டிக்க இருக்க வேண்டிய நிபந்தனைகள் பற்றி தெளிவூடியதிட்கு,
இவர்கள் இல்லாததை இருப்பதாக கூறி பிழைப்பு நடத்தும் ஏமாளிக்கூட்டம் கோயில் உண்டியலில் கைவைக்கும் கபடதாரிகள். வன்முறையை கண்டித்தால் இவர்கள் திருகுதாளத்தை ராம் சந்தியில் போட்டு உடைத்துவிடுவார்.