Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காசின் கலை : சேனன்

இனியொரு... by இனியொரு...
03/25/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

காலச்சுவடு கண்ணனை பேசக்கூப்பிட்டு லன்டனில் ஒரு கூட்டம் போடுகிறார்களாம். ஆயிரக்கணக்கான மக்கள் வேட்டையாடப்பட்டபோது – (குஜாராத்தில் மற்றும் இலங்கையில்) சும்மா வேடிக்கை பார்த்திருந்தவர்களுக்கு திடீரென ஏனிந்த கரிசனை. அதனாற்தான் காலச்சுவடு பற்றி இந்த சிறு பதிவை செய்யவேண்டியதாயிற்று.

பாம்பு என்ற விலங்குக்கு முதுகெலும்பு கிடையாது.

சின்ன உருண்டையான இந்த விலங்கு தன்னிலும் பலமடங்கு பெரிய விலங்குகளை அப்படியே முழுமையாக விழுங்கக்கூடியது. தனது கடும் விசத்தால் மற்ற விலங்குகளை கணத்திற் கொல்லக்கூடியது. தனது தோலைக் கழட்டிப் புதுவடிவம் எடுக்கக்கூடியது. மனித விலங்கு இன்று மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருந்தாலும் அவர்களுக்கு முள்ளந்தண்டில் குளிர்ச்சி ஏற்படுத்தும் பயக்கெடுதியை ஏற்படுத்த வல்லது முள்ளந்தண்டே இல்லாத பாம்பு.

ஆனால் இந்த மனித விலங்குகளிற் சிலருக்கு பாம்பின் பழக்கவழக்கங்கள் உண்டு. இவர்கள் அரசியலில் எந்தப்பக்கம் நிற்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது வலு கஸ்டம். போதாக்குறைக்கு அவர்கள் தமது அரசியல்-இலக்கிய சட்டைகளையும் அவ்வப்போது மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் தமது ‘இலக்கியப்’ பத்திரிகையால் கக்கும் விசம் எம்மை சிறுக சிறுகக் கொல்லத்தக்கது. அப்படி ஒரு பாம்புப்போக்கை வரலாறாகக்கொண்டதுதான் ‘இந்தியாவில்’ இருந்து வரும் காலச்சுவடும் அவர்தம் பதிப்பகமும்.

பல்லைக்கடித்துக்கொண்டு பதிப்பாளர்கள் பின்னால் திரிய வேண்டிய நிலை பல எழுத்தாளர்களின் தலைவிதியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது எல்லா நாட்டுக்கும் பொதுவான விதியாகவும் இருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் பல முற்போக்கு எழுத்தாளர்கள் தாமாகவே முன்வந்து எழுத மறுக்கும் ஒரு பத்திரிகையாக இருக்கிறது காலச்சுவடு. இதற்கு காலச்சுவட்டின் ‘வியாபாரப்’ புத்தி மட்டும் காரனமல்ல. வியாபார இதழ்களில் எழுத பலரும் தயாராகத்ததான் இருக்கிறார்கள். அந்த இதழ்கள் ஏராளமான வாசகர்களுக்குப் போய்ச் சேர்வதால் தமது அரசியலை சமரசம் செய்யாது அந்த இதழ்களுடன் இயங்க அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் காலச்சுவட்டின் கதை வேறு. அதிகாரத்துக்குக் குறுக்கு வழியில் எப்படியெல்லாம் சேவகம் செய்யலாம் என்பதைக் ‘கலையாக’ செய்கிறார்கள் அவர்கள். அது மட்டுமின்றி அதிகாரத்துக்கு எதிராக வேலை செய்பவர்களைக் குறிவைத்து தாக்குவது –விலை கொடுத்து வாங்குவது போன்ற வேலைகளை திறம்படச் செய்கிறார்கள் அவர்கள். தினமலர் போன்ற பத்திரிகைகள் பச்சையாகச் செய்யும் அரசியலை இவர்கள் இலக்கிய மூலாம் பூசிச் செய்கிறார்கள். இவர்கள் தலித்துகளின் புத்தகத்தைப் போடுகிறார்கள் – ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகத்தைப் போடுகிறார்கள் – பரந்த பதிப்பகமாக வளர்ந்துள்ளார்கள் என்று சிலர் வாதிக்கிறார்கள். உண்மைதான் இன்று இதுபோன்ற விளிம்பு எழுத்தாளர்களைப் ‘பாவித்து’ கொழுத்த பணம்நிரம்பிய பதிப்பகமாக அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள். ஆர்வக்கோளாறு காரனமாகவா இந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர்கள் போடுகிறார்கள? எதை வைத்து எப்படி காசு பார்ப்பது என்பது அவர்களுக்கு கை வந்த ‘கலை’. பதிப்பிக்க வழியற்ற எழுத்தாளர்கள் இந்த வலையிற் சிக்குகிறார்கள் என்பதற்காக பதிப்பகம் திருந்திவிட்டது என்று வாதிடுவது தவறல்லவா?

இந்திய அரசை கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராயின் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அன்மையில் இவர்கள் வெளியிட்டிருந்தது தெரியும். இதென்ன கேவலம் இவர்களிடம் போய் எப்படி அருந்ததி மாட்டிக்கொண்டார் என்ற ஏக்கத்தில் குழம்பியவர்கள் பலர். மே17 இயக்கத்தினர் அக்கூட்டத்துக்குச் சென்று தமது எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். பாவம் தமிழறியா அருந்ததிக்கு இவர்கள் அநியாயம் தெரிந்திருக்க நியாயமில்லை. இதற்குள் அருந்ததியை கொண்டுபோய் தள்ளிவிட்ட பெருமை காலச்சுவட்டின் சிலீப்பிங் ஆசிரியர் சேரனையே சாரும். இதை அருந்ததியே காட்டிக்கொடுத்துள்ளார். அப்படியிருக்க அவர்கள் அச்சம்பவத்தை எப்படித் திரித்தார்கள் என்று பாருங்கள்.

கோல்டன் வைசின் புத்தகத்தையும் காலச்சுவடு அன்று வெளியிட்டிருந்தது. அப்புத்தகத்தில் புலிகளுக்கு எதிரான கருத்திருப்பதால் கடும்புலி ஆதரவாளர்களான மே 17 இயக்கத்தினர் கூட்டத்தைக் குழப்பினார்கள் என அவர்கள் கூறினர். தன்னை புத்திஜீவி என்று நம்பிக்கொண்டிருக்கும் நமது ராஜன்குறை கூட இதை நம்பி அப்படியே ஒப்புவிக்கிறார். காலச்சுவட்டார் எப்படி சட்டையைக் கழட்டிப் போட்டார்கள் – கதையைப் பிரட்டிப்போட்டார்கள் பாருங்கள். மே17 இயக்கத்தினர் கோல்டன் வைசின் புத்தகத்தை இந்த சம்பவத்துக்கு முன்போ பின்போ எங்காவது தாக்கியிருக்கிறார்களா? அல்லது அப்புத்தகத்தை அவர்களுக்கு காலச்சுவடுதான் அறிமுகப்படுத்தியது என்று தெனாவட்டுக் கதை எடுபடுமா?

இவ்வாறு தாம் ‘புலிக்கு கடும் எதிர்ப்பு’ என்று கத்திய சட்டையை கழட்டி வைத்துவிட்டு தாம் ‘புலிக்கு ஆதரவு’ என்ற சட்டையையும் அவர்கள் போட்டுக்கொள்வார்கள். இது மட்டுமின்றி தாம் இந்தியாவில் அடுத்ததாக அரசமைக்கவிருக்கும் ‘சக்திகளுக்கு’ தொடர்புகளை ஏற்படுத்தித் தரக்கூடியவர்கள் என்று ஜரோப்பிய தேசிய மட்டங்களில் கூவி வித்ததாகவும் நமக்கொரு கதை கிடைத்தது. அது கதையா நிசமா என்பதை விட இவர்கள் மோடிக்கும் – அத்வானிக்கும் ஆட்சேர்த்து குடுப்பதில் தீவிரவாதிகள் என்பது தெரிந்ததே. ‘பச்சை பிராமனத்தனம்’; என்று இதனாற்தான் அவர்களை நோக்கி பலர் திட்டுகிறார்கள் போலிருக்கிறது.

பாம்பையும் பிராமணனையும் கண்டால் பாபை விட்டு விட்டுப் பிராமணனை அடி என்று பெரியார் கோபப்பட்ட காலம் தாண்டி எங்கயோ வந்துவிட்டோம் இன்று! பிராமணன் என்று சாதிய அடிப்படையில் இன்று முன் தீர்மானங்களுக்கு தாவுவது மகா பிழை. அதுவும் ஒருவகை சாதிவெறியாகப் பார்க்கப்படக்கூடிய நிலையுண்டு. ஆனால் பெரியார் கோவப்பட்ட அக்காலத்து அடிதடி பிராமனர்கள் சிலர் இன்று பாம்பாகவே மாறிவிட்டார்கள். பெரியார் பாவம் – அனைத்துப் பாம்புகளையும் அழி என்றா இனி சொல்வது!

சாதியம் இன்று சிக்கலான முறையில் பல தளங்களிலும் மறைந்து இயங்குகிறது. பிராமணியம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அது அரசியல் மயப்பட்டு- அமைப்பு மயப்பட்டு- வியாபார மயப்பட்டு பலமடைந்துள்ளது. அதற்கு மேற்குலக முதலாளிகளின் -அதிகாரங்களின் ஆதரவும் கிடைக்கிறது. மோடி என்றால் பிசினஸ் என்று டைம்ஸ் தலையங்கம் எழுதி அவரை அன்மையில் அட்டைப்படமாக்கியிருந்தது நாமறிவோம். இந்நிலையில் காலச்சுவடு போன்ற பத்திரிகைகள் இந்த சாதிய வியாபாரத்தைக் கெட்டித்தனமாக செய்ய முயற்சிக்கின்றன. இவர்களின் பாம்புத்தனத்தை அதனாற்தான் கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. அதிகாரத்தை எதிர்ப்பதும் இவர்களை எதிர்ப்பதும் ஒன்றுதான்.

‘ஏதோ எப்போதோ அக்கட்டுரை வந்தது – இந்த எழுத்தாளர்களுடன் அவர்கள் புத்தகம் போடுகிறார்கள்’ – என்று உதாரனங்களைக் காட்டி காலச்சுவட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. காலச்சுவட்டுக் கண்ணனுக்கு பேச இடமா கிடையாது? ஏன் வரிந்து கட்டி தளம் வழங்கவேண்டும். காலச்சுவட்டுக் கண்ணனை வைத்து லன்டனில் கூட்டம் போட்டுத்தான் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வறுமைக்கு எப்படித் தள்ளப்பட்டீர்கள் ?

வியாபாரத்தை முக்கியப்படுத்தாத – அதே சமயம் பெரும்பானமை மக்களைச் சென்றடையக்கூடிய ஒரு பதிப்பகம் இன்று அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப சேர்ந்து முன்வாருங்கள். அதைவிட்டு மோடியின் வால்களை மோர்ந்துகொண்டு எழுதிப்பிழைக்க என மோசம்போகாதீர்கள்.

குறிப்பு
1. மோடி – குஜாராத்திய பாரதிய ஜனதா கட்சி –ஆயிரக்ககணக்காண முஸ்லிம் மக்களின் உயிரைக்குடித்த ரத்த வெறியன். 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஜெனிவா தீர்மானம் : மன்மோகன் ராஜபக்சவிற்கு கடிதம்

Comments 2

  1. தில்லைநாதன் says:
    14 years ago

    “பாம்பை அடியாதே பிராமணனை அடி ” என்று சொன்ன பெரியார் கீழ் வெண்மணியில் ” உயர் சாதி திராவிடர்கள் ” , “கீழ் சாதி திராவிடர்களை ” கொலை செய்த போது ஏதாவது பேசினாரா.? அண்ணாத்துரையையும் , கருணாநிதியையும் வாழ்தியவரே பெரியார். பெரியார் தனக்கு வசதியானதை எல்லாம் பேசினார்.அதை எல்லாம் தலையில் சுமக்க வேண்டுமா ?நமக்கு சுமக்க நிறைய நிறைய இருக்கிறது.இடம் கண்டவனை என்னவும் செய்யலாம் என்பதே நமது கலாச்சாராம். யாழ்ப்பணத்தில் வெள்ளாளன் என்னவும் செய்யலாம்.முதலில் அதை பற்றி எழுதுங்கள்.இதைத் தான் சிங்களவனும் செகிறான்.
    காலச்சுவடு ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனம்.காசுக்காக புத்தகம் வெளியிடுகிறார்கள்.சும்மா யாரிங்கே புத்தகம் வெளியிடுவார்கள்.?? இலக்கியம் பற்றி வாய் கிழிய பேசு இலங்கை எழுத்தாள பெருமக்கள் நடாத்தும் புத்தக வெளியீடு நிறுவனங்கள் ” புத்தக வியாபாரம் ” செய்யவில்லையா ??அவர்களை சுட்டிகாட்டி எழுதுவீர்களா.? ஏன் ஐயா இந்த காழ்ப்புணர்ச்சி.
    நீங்கள் தான் பிராமணனை கொண்டு வந்து கும்பாபிசேகம் செயவிக்கிரீர்கள். முதலில் கோயில்களில் இந்த பிரசாரத்தை தொடங்குங்கள்.முடியுமா ????

  2. tholar.balan says:
    14 years ago

    சேனன் அவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ரொக்சியவாதியான சேனன் அவர்கள் காலச்சுவடு கண்ணன் ஒரு பிழையான சக்தி என்பதை தனது தலைவன் ரொக்சியின் கருத்துக்கள் மூலம் நிரூபிக்காமல் தந்தை பெரியாரை துணைக்கு அழைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.மேலும் இங்கு சேனன் அவர்கள் காலச்சுவடு கண்ணனை நிராகரிக்கிறாரா அல்லது அவரை அழைத்து கூட்டம் நடத்திய பெளசரை விமர்சிக்கிறாரா? ஆனாலும் ஒரு உண்மையை இங்கு ஒத்துக்கொள்ள வேண்டும். சேனன் சோபாசக்தி போன்றவர்களின் எதிர்ப்பு அறிக்கைகளால் மண்டபம் நிரம்பிய கூட்டம். பெளசர் முகத்தில் மிக்க மகிழ்ச்சி. இவர்களுக்கு நன்றி தெரிவிக்க பெளசர் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...