08.01.2008.
காசா மீது இஸ்ரேல் படையெடுத்ததை எதிர்த்து வெனிசுலா இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது. இஸ்ரேலின் காசா தாக்குதலை கொலைக்குவியல் என்று சாவேஸ் கண்டனம் செய்த சில மணிகளில் இஸ்ரேல் தூதர் வெளியேற்றப்பட்டார்.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் சர்வதேசச் சட்டங்களின் அப்பட்டமான மீறல் என்றும் அரசு பயங்கரவாதம் என்றும் வெனிசுலா அயல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இக் காரணங்களின் அடிப்படையில் இஸ்ரேல் தூதரையும் தூதரகத்தின் ஊழி யர்களில் ஒரு பகுதியினரையும் வெளியேற்ற வெனிசுலா முடிவு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இஸ்ரேல் தூதரகம் இது பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டது.
சென்ற திங்களன்று சாவேஸ் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்திருந்தார். மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மையை உருவாக்க அமெரிக்கா யாசர் அராபத்தை விஷம் வைத்து கொல்ல முயன்றது என்று சாவேஸ் கூறினார்.
மேலும், அரபு நாடுகள் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அமெரிக்கா நியாயப்படுத்தி வந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.