26.02.2009.
அண்மையில் நடைபெற்ற காசா போரில் இஸ்ரேல் வீசிய வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டவை என்று சர்வதேச பொது மன்னிப்புக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது.
இஸ்ரேலுக்கு என்ன ஆயுதங்களை அனுப்புகிறோம் என்பதைக் கண்காணிக்க அமெரிக்கா தவறி விட்டது. அமெரிக்கச் சட்டத்தை அமெரிக்க அரசே மீறியுள்ளது. ஆயுதங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என்று அமெரிக்கச் சட்டம் கூறுகிறது. காசாவில் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய முறை போர்க் குற்றமாகும் என்று இந்த மனித உரிமை அமைப்பு கூறுகிறது.
காசா கடற்கரைப் பகுதி முழுவதும் அமெரிக்காவில் தயாரான வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ஆயுத நிபுணர்கள் கண்டனர். இஸ்ரேல் பயன்படுத்திய எம் 825 ஏ1 ரக அமெரிக்க வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளின் படங்களை ஜனவரி 8 தேதியிட்ட டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இதை மறுத்து வந்தனர் என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் காசா போர் ஓய்வுக்குப் பின் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஜனவரி 15ம் தேதியன்று இஸ்ரேல் வீசிய பாஸ்பரஸ் பீரங்கி குண்டுகள் ஐ.நா. கட்டிடத்தை தாக்கி பல டன் உதவிப் பொருட் களை அழித்தன என்று அந்த அறிக்கை கூறுவதுடன் ஏராளமான ஆதாரங்களையும் அளித்துள்ளது.
இந்த அறிக்கை அடிப்படைத் தவறுகளுடன் ஹமாஸ் சாய்மானம் கொண்டதாக உள்ளது என்று இஸ்ரேல் கூறுகிறது. அறிக்கையில் நேர்மை இல்லை என்றும், பிற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கவில்லை என்றும் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் பாஜி பர்ஹும் சொல் கிறார்.
இந்தச் செய்தி வெளியிடப்படட்ட நாளின் பின்பாக வன்னியில் 70 பாலகர்கள் கொல்லப்பட்டார்கள்.
உங்களுக்கு ஏன் கண்ணில் படுவதில்லை?
களுவாஞ்சிக்குடியில் அதிரடிப்படையினர் 14 வயது சிறுமி உட்பட பலரை வன்பாலுறவு செய்திருக்கின்றனர்.
உங்கள் வெளியீட்டு கொள்கைதான் என்ன?
மதலில் நீங்கள் என்ன கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகிறீர்கள் என்பதை எம்மைப்பற்றி என்று தொடர்ந்து இருக்கும பக்கமாக போடுங்கள்.
உங்களளுடைய அடிப்படை தெரியாமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உய்த்துணர முடியவில்லை.