”ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை” என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அருந்ததி ராய் பேசிய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கியின் சத்தங்கள் அடங்கியபோது வீழ்ந்து கிடந்தனர் மக்கள் அவர்கள வேட்டையாடியது இந்திய இராணூவம் என செய்தி வந்தது.அப்படியானால் இந்தியாவில் காஸ்மீர் இல்லை என கண்டுபிடித்துச் சொல்கிறார் அருணந்திராய்.அவருக்கு இராமரின் ஆசீர்வாதம்.
காஷ்மிர் இந்தியாவின் ஒருங்கினைந்த பகுதி இல்லை தான். 1950-ல் தான் அது இந்தியாவில் சேர்க்கப்பட்டது, மக்களின் விருப்பத்துக்கு மாறாக…. கண்டிப்பாக கஸ்மிர் பாகிஸ்தானீன் பகுதியும் இல்லை. சீனாவின் பகுதியும் இல்லை. இப்போது ஒரே சாய்ஸ் கஸ்மீரின் மூன்று பகுதிகளையும் மூன்றாம் தரப்பு நாட்ட்ன் மேள்பார்வையில் கருத்துக் கணிப்பு வைப்போம், மக்கள் கூறட்டும் யாருடன் இருக்க வேண்டும் என்பதை. அதே போல் திபெத்திலும் ஒருக் கருத்துக் கணிப்பு வைப்போம், மக்கள் கூறட்டும் யாருடன் இருக்க வேண்டும் என்பதை… சரியா…