கவிஞர் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரது சகோதரியார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்தார்.
புதுவை இரத்தினதுரை அவர்களின் சகோதரியார் தனது கணவனுடன் நேற்று (26) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது மனைவி குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தனர். இதன் போது புதுவை இரத்தினதுரை தவிர்ந்த அவரது மனைவியும் பிள்ளைகளும் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டு திருமலையில் வசித்து வருகின்றனர்.
இத்தகவலை புதுவை இரத்தினதுரையின் சகோதரியார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்திருந்ததோடு தனது சகோதரனான புதுவை இரத்தினதுரை அவர்களை விடுவித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரின் சகோதரியும் இவ்வாறு தம்மிடம் உதவி கேட்டு வந்ததாகவும் தாம் அதற்கான உதவிகளைச் செய்திருந்ததாகவும் அந்த நிலையில் தயா மாஸ்டர் அவர்கள் இன்று வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் தெரிவித்திருந்ததோடு புதுவை இரத்தினதுரை அவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அவரது விடுதலைக்காகவும் தம்மால் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கைது செய்யப்பட்டோர் சரணடைந்தோர் என படையினரிடம் இருக்கும் அனைத்து புலிகள் இயக்க உறுப்பினர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தாம் ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பின் போது ஈ.பி.டி.பி.யின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன் அவர்களும் புதுவை இரத்தினதுரை அவர்களின் உறவினரும் இலங்கை மக்கள் ஜனநாயகப் பேரவை (சுவிஸ்)யின் செயலாளருமான கே. ராஜ்மோகன் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
அட!.அட!.. அட!… உங்கள் தலைவனின் வாலுகளை எடுத்துவிடுவதற்கு மட்டும் எங்கள் தலைவன் வேண்டுமோ? வானரங்களே வாங்கோ!.. வந்து உங்களது மேதாவித்தனங்கள் எதையாவது எடுத்துவிடுங்கோ?…
டக்ளஸ் என்கின்ற ……………… உமது தலைவனா. அப்ப நீயும்?
இதே தட்டினதுரைதானே மாற்று இயக்கத்தவர்களை
எட்டப்பர் தேசதுரோகிகள் என்று பாட்டும் கவிதையும்
பாடி நரமாமிச தேசிய தலைவனிடம் பொன்னும் பொருளும்
பொட்குவியும் வாங்கி அகமகிழ்ந்தவர் வெளியே
எடுத்து விட்ட இனி மகிந்தவையும் தலைவர்
தேவானந்தவையும் போற்றி பாட ஆரம்பித்து
விடுவார் டமிழீழ கவி பேரரசு ஊரன் வீட்டு
பிள்ளைக்கு சைனைட் கடித்து செத்து போ என்று
பாட்டு எழுதிய கபோதி தான் மட்டும் வந்து உயிர்
பிச்சை கேட்டு நிற்கிறான் தூ
தேடிக் கண்டு பிடிக்கும் பட்சத்தில் என்றால் என்ன?
எவரையும் வழக்கு விசாரணை இல்லாமல் மறித்து வைப்பது தவறு. அதை நாம் சட்டத்தின் அடிப்படையிலும் சமூகநீதியின் அடிப்படையிலும் தான் நோக்க முடியும்.
அவ்வாறு மறித்து வைத்திருக்கப் பட்டோரை விடுவிக்கும் முயற்சிகளை நாம் இழிவு செய்வது பண்பல்ல.
புதுவையின் அரசியலுடன் எவ்வித உடன்பாடும் இல்லாமலே இதைச் சொல்லுகிறேன்.
புதுவை மீதான சட்டநடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சட்ட விரோதமகத் தடுத்து வைத்திருப்பது சரியல்ல. அவருக்கு நடந்தது போல நாளை எவருக்கும் நடக்கலாம். அது பற்றி இன்று சிரிப்போர் நாளை அழ நேரலாம்.
நாம் எல்லாரும் கோர வேன்டியது எல்லா அரசியற் கைதிகளதும் நிபந்தனையற்ற விடுதலையையே.
“எவரையும் வழக்கு விசாரணை இல்லாமல் மறித்து வைப்பது தவறு. அதை நாம் சட்டத்தின் அடிப்படையிலும் சமூகநீதியின் அடிப்படையிலும் தான் நோக்க முடியும்.
அவ்வாறு மறித்து வைத்திருக்கப் பட்டோரை விடுவிக்கும் முயற்சிகளை நாம் இழிவு செய்வது பண்பல்ல.
புதுவையின் அரசியலுடன் எவ்வித உடன்பாடும் இல்லாமலே இதைச் சொல்லுகிறேன்.
புதுவை மீதான சட்டநடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சட்ட விரோதமகத் தடுத்து வைத்திருப்பது சரியல்ல. அவருக்கு நடந்தது போல நாளை எவருக்கும் நடக்கலாம். அது பற்றி இன்று சிரிப்போர் நாளை அழ நேரலாம்.
நாம் எல்லாரும் கோர வேன்டியது எல்லா அரசியற் கைதிகளதும் நிபந்தனையற்ற விடுதலையையே”
நியாயமான சரியான வார்த்தைகள்….மீராபாரதி
புதுவை என்ற வெற்றிலைப்பெட்டிக் கவிஞ்ஞர் எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி விடுதலைசெய்யப்படவேண்டும். அவர்விடுதலை செய்யப்பட்டாலும் மானம்/ ரோசம்/ சூடு சொரணையுள்ள இந்த கவி-வித்தகன், ……………………………………………………………………………………..தலைவனின் பரம்பரையில் வந்ந கவரிமான் இனத்தைச் சேர்ந்தவன்.
எம் முன்னாலுள்ள கேள்வி யார் என்பதைப் பற்றியதல்ல.
குற்றச்சாட்டிருந்தால் கூண்டில்நிறுத்தி விசரிக்கட்டும். இல்லாவிடில் விடுதலை செய்யட்டும்.
இது குற்றச்சாட்டின்றி எவரையும் மறித்து வைத்திருப்பதைப் பற்றியது. மறியலில் உள்ள எல்லாரையும் பற்றியது.
இதை விளங்கிக் கொள்ளாமல் நாம் நீதி நியாயம் பற்றி எவரையும் பழி பேச உரிமையற்றவராகிறோம்.
-ஏ.கே. க்கு பயந்து யு.கே. க்கு போனவர்கள்..நயிலும் கீழவர் நக்கி பிழைக்கட்டும்.- சொன்னது நாங்கள் இல்லை சார் புதுவைரத்தினதுரை- எதிரியிடம் மண்டியிடபவன் கோழை தூங்கிச்சாகலாம்- சொன்னது நாங்கள் இல்லை சார் உங்கள் புதுவையர்தான்.- தன்னுடைய உணச்சிக்கவிகளால் எத்தனையாயிரம் இளைஞர்களை சாகடித்து ஒன்றுமறியா அப்பாவி இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் துன்பங்கள் அனுபவிக்கும் போது இவர் மட்டும் எதிரியின் காலில் விழுகின்றார் தனக்கு விடுதலை கோரி வெட்கம் கெட்டவர்கள் நக்கிப் பிழைக்கட்டும். இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனியும் தங்கள் மக்கள் முன் தோன்றப்போகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை. எங்கே -அன்ஜ்- என்ற புலிவாலே வாரும் வந்து உங்க பங்குக்கும் ஏதாவது நொங்குங்ங்கோ.
சோ மாதிரியா நாமெல்லாம் பேசுவது? சுப்பிரமணீயம் என்ற கிறூக்கன் போலா சிந்திப்பது? புதுவை உணர்ச்சி வசப்படும் கவிஜன் மானுடம் பாடி மனிதம் நேசித்து தமிழ் தேச விடுதலைக்கான குரலாய் ஒலித்தான், சுதந்திர உண்ர்வை பிரதிபலித்தான் இறூதிவரைக்கும் அகதியாய் மேற்கிற்கு ஓடாமல் தெற்கின் சூரியனாய் பிரகாசித்தான் இன்ரைய் இருள் சூழ்ந்த தமிழ்ர் வாழ்க்கையில் புதுவை இருக்கிறாரா இல்லையா என்ற ஏக்கத்தோடு இருக்கிறோம் எம்மீது ஈட்டிகள் வீசாதீர்.
எல்லாமே வினோதமாகவிருக்கின்றது. தமிழர் விடுதலைப்போராட்டத்தின் இறுதி நிகழ்வுகளும் அவற்றுக்கு பிற்பாடான அரசியல் தலமைகளின் செயற்பாடுகள் கொள்கைகள் எல்லாமே விலைபோய்விட்டன. இவையாவும் அற்பநொடியில் நிகழ்ந்த சம்பவங்களாகவே தெரிகின்றது. எனினும் இதற்காகத்தானா ஆயிரம் தலைமுறையினர்க்கும் தேவையான எமது எதிர்காலச் சந்ததிகளையும் இளம்பிராயத்தினரையும் பறிகொடுத்தோம். ஒருவேளை எங்களது மேதகு தலைவர் அவர்களும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தால் அவரும் புதுவை இரத்தினதுரை அவர்களைப்போன்றே தனது பரமவிரோதியான டக்கிளஸ் தேவானந்தாவிடம் கையேந்தியிருப்பாரோ என்னமோ?. அப்படியானால் இவர்களால் துரோகிகள் என பெயர்சசூட்டப்பட்டவர்களும் கொலைசெய்யப்பட்டவர்களும்?………….. நாதாரிகள்
என்ன புதுவை இரத்தினதுரை தன்னை விடுவிக்க டக்ளசின் காலில் விழும்படி கேட்டாரா? புதுவை குற்றம் செய்யாத புண்ணியவான்களின் காலில் ஏற்கனேவே விழுந்திருந்தால் தயா மாஸ்டர், யோர்ச் போன்று எப்போதே வெளியே வந்திருக்க முடியுமே!குற்றம் செய்தால் கொன்று போடு என்று இங்கு கத்துவார்கள் தம்மை யாரோடு ஒப்பிட விரும்புகிறார்கள்?
அந்த கவரிமானை விடச்சொல்லி கேட்ட அவரது சகோதரி அவரது (புதுவை) மொழியில் துரோகி.
புலியை மீட்க சுவிஸ் எலிகள் சில முயற்சி எடுக்கின்றன…விந்தன், ராஜ்மோகன் எல்லாம் பதுங்கிய எலிகள்!!!
ஈ.பி.டி.பி.யின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன் அவர்களும் புதுவை இரத்தினதுரை அவர்களின் உறவினரும் இலங்கை மக்கள் ஜனநாயகப் பேரவை (சுவிஸ்)யின் செயலாளருமான கே. ராஜ்மோகன் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
புதுவையின் சகோதரி தானே டக்ளஸ் உடன் பேசுகிறார்.புதுவை இருக்குமிடம் தெரியாததாகவே மேற்படி தகவல் தெரிவிக்கிறது.
ஆனால் புதுவை காலில் விழுவது போல எழுதுகிறார்கள் இந்த பின்னூட்டக்காரர்கள்.
புதுவை காலில் விழுந்த பின்னர் விமர்சியுங்கள்.
ஒரு செய்தியை வாசித்து விளங்காமலேயே பின்னூட்டமிடுமளவுக்கு நக்கிக்கொண்டிருப்பவறர்களின் நக்கும் வேகம் பிரமிக்கவைக்கிறது.
நாங்கள் புறநானூற்று வீரம் பற்றிப் பட்டிமன்றம் நடத்த இது தான் நேரமா?
பல ஆயிரம் பேர் சிங்களவர் முஸ்லிம்கள் மலையகத் தமிழர் உட்படச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
அதைப் பற்றி நமக்கு ஒரு கவலையும் இல்லை.
நமக்குள்ள பிரச்சினையெல்லாம் புதுவையை நமக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதைப் பொறுத்து அவரை அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான்!
நீதி நியாயம் சட்டம் ஒழுங்கு என்று ஒன்றுமே விளங்காத எங்களால் எப்படி ஒரு சுயாட்சியைக் கொண்டுநடத்த இயலும்?
உங்களுக்கு விளங்கவில்லை என்றால் மற்றவர்களையும் உங்கள் கிணற்றுக்குள் போடாதீர்கள். பல ஆயிரம் சிங்களவர்என்ன அரசியல் கைதியாகவா இருக்கிறார்கள்? புலிகளின் ஆட்சியில் வாழ்த்த குற்றதிற்காக சிறையில் உள்ள தமிழருடன் கொலை, கொள்ளை காடயரை ஒப்பிடாதீர்கள்!
தமிழருக்காகப் பேசியதற்காக சிங்களப்புலிகள் என்று அடைத்து வைக்கப் பட்டிருப்பவர்களைப் பற்றி அறியக் கூட அக்கறை இல்லதவர்களா நாங்கள்?
சட்ட விரோதமாக அடைக்கப் பட்டோர் தெளிவாகவே என்று எழுதியிருந்தேன்.
அது போக.
சிங்களக் காடையனாகட்டும், தமிழ்க் காடையனாகட்டும், முஸ்லிம் காடையனாகட்டும் — யாரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதை நாங்கள் ஏற்க முடியுமா?
“விசாரி அல்லது விடுதலை செய்!”
இது இன மத மொழி சாதி பால் வேறுபாடுகட்கப்பாற்பட்ட நீதிக்கான கோஷம்.
-கவிஞ்ஞன் என்பவன் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவன்.- கவிஞ்ஞரின் ஆரம்பகாலக் கவிதைகளான -ஏ.கே.- க்கு பயந்து யு.கே. க்கு சென்றவர்கள் பற்றி தங்களது கவிதை பற்றி இப்போது என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள் என யுத்த நிறுத்த காலுத்தில் புதுவையரின் ஐரோப்பிய பயணத்தின் போது வானொலியூடாக ஐரோப்பிய நேயர் ஒருவர் கேட்ட கேள்விக்கே மேற்படி பதிலை புதுவையார் வழங்கியிருந்தார். உங்களுடைய காலச்சூழல் மாற்றங்களுக்கேற்ப நீங்கள் வழங்கிய உணர்ச்சிக் கவிதைகளினால் உசுப்பேற்றப்பட்ட இளைஞர்கள் எத்தனையாயிரம்பேர் சாகடிக்கப்பட்டுள்ளனர் இந்த இழப்புக்களுக்கு நீங்கள் கூறும் பதில் எங்கள் தலைவர் டக்கிளஸ் தேவானந்தா அவர்களின் கால்களில் விழுவதுதானா?… வெட்கம் கெட்டவர்களே ஒன்றுமே அறியாத வன்னி அப்பாவிகள் முள்வேலிக்குப்பின்னாலும் அரச சித்திரவதைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவிக்கும் போது உங்களுக்கு மட்டும் விடுதலை கேட்கின்றதோ.?
நமது பெருமையை நாமே பினூட்டங்களீல் பறயை சாற்றீக் கொண்டிருக்கிறோம்.உலகமெங்கும் நாம் மிதிபடவும் உதைபடவும் இதுதான் காரணம்.இன்னும் இத்தனை அழிவுகளூக்குப் பிறகும் நமது தனித்துவக் குணம் போகவில்லையே ஏன்?
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து பொதுமகன் ஒருவர் ஈ.பி.டி.பி. குண்டர்படையால் தாக்குதலிற்கு உள்ளாகி மரணித்துள்ளார். கடந்த இரவு ஈ.பி.டி.யின் ஜூராட், துன்பம் போன்ற குண்டர் படையினரால் வவுனியா திருநாவற்குளம் பகுதியை சேர்ந்த மேற்படி இளைஞன் கத்திகள், பொல்லுகள் கொண்டு கடந்த இரவு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அவ்வ+ர் மக்களால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் மரணத்தை தழுவிக்கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்படையை சேர்ந்த மேற்படி குழவை சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிந்திய தகவல்கள்:
உயிரிழந்தவர் கிருஸ்ணா எனப்படும் தங்கராஜா கிருஸ்ணகோபல் என இனம்காணப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் , அவர்களில் கடந்த வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான தேர்தலில் ஈபிடிபி சார்பாக போட்டியிட்ட ஜெயராஜ் எனப்படும் குருவும் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தெரிவிக்கின்றது.
EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவன் நானே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். இன்று பிற்பகல் லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் (TBC) இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டுபேசிய அமைச்சர், EPRLF இன் தலைவர் என பலராலும் அறியப்பட்ட தோழர் பத்மநாபா அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ தலைவரே எனவும், அக்கட்சியின் செயற்பாட்டு தலைவராக தானே செயல்பட்டுவந்ததாகவும் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் தான் EPRLF கட்சியை தலைமை தாங்கியபோது புலிகளின் முக்கிய தலைவர்களான கிட்டு போன்றவர்களுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்தாக, EPRLF(சுரேஸ் அணியின்) தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் போன்றோர் தன்மீது குற்றஞ்சுமத்தியிருந்தாகவும் தெரிவித்தார். தான் வெளித்தோற்றத்தில் புலிகளுக்கு எதிர்ப்பானவனாக தெரிந்தாலும், புலிகளின் தலைமையுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்துவந்துள்ளேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முனைவதாக அமைச்சரின் மேற்படி கருத்து தோன்றுகின்றது.
அதே நேரம் யாழ்பாணத்தில் ஈபிடிபியினர் ஏனைய அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, வெளிநாடுகளிலிருந்து வந்து யாழ்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களே கொழும்பிலிருந்து குண்டர்களைக் கொண்டுவந்து இச்செயற்பாடுகளைச் செய்வதாக டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போட்டியிடும் வெற்றிலைச் சின்னத்திலேயே வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் வேட்பாளர்களாகவுள்ளனர். தனது சகவேட்பாளர்கள் குண்டர்களை கொண்டுவந்துள்ளார்கள் என அமைச்சர் தெரிவிப்பது விருப்பு வாக்குகளை இலக்கு வைத்தா என்ற கேள்வி எழுகின்றது.
அதே நிகழ்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் முக்கியஸ்தரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராஜா அவர்கள் கூறுகையில், யாழ்பாணத்தில் பன்நெடுங்காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வங்கிக்கணக்குகளில் உள்ள (வெளிநாடுகளில் வசிக்கும் மக்களது) பணத்தை எடுத்து யாழ் அபிவிருத்திக்கு செலவிடுவதற்கான அமைச்சரின் முயற்சி கட்சியின் நற்பெயருக்கும் பெரும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் தான் அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் ஆரம்ப நாடக்களில் வேலை செய்த அனுபவத்தை வைத்து அவ்விடயத்தினை நடைமுறைப்படுத்தக் கூடியவிதத்தினை அவருக்கு எடுத்துரைத்ததாகவும் அதனடிப்படையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஆவனங்களை ஆங்கிலத்தில் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டதற்கிணங்க செய்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறிய விடயங்களில் இருந்து யாழ்பாணத்தில் உரிமை கோரப்படாத வெளிநாடுவாழ் மக்களின் பணத்தினை எடுப்பதற்கான அமைச்சரவை (கபினட்) அங்கீகாரம் டக்கிளசினால் கோரப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. ஆனால் அதற்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக என்பது தெளிவில்லை. எதுவாக இருந்தாலும் இதற்கான அங்கீகாரம் தேர்தல் முடிவடைந்தபின்னர் கிடைக்கப்பெறும் என நம்பப்படுகின்றது என்று இலங்கை நெட் தெரிவிக்கும் தகவலின்படி.
யாழ் அபிவிருத்திக்கு செலவிடுவதற்கான என்ற பெயரில் யாழ்பாணத்தில் உரிமை கோரப்படாமல் இருக்கும் வங்கிக்கணக்குகளில் உள்ள (வெளிநாடுகளில் வசிக்கும் மக்களது) பணத்தினை எடுப்பதற்கான அமைச்சரவை (கபினட்) அங்கீகாரம் டக்கிளசினால் கோரப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ள நிலையில் இதை சகல மக்களும் அவதானிக்கவேண்டும், இது பெரியதொரு மனித உருமை மீறலுக்கு மேலான கையாடலாகும்.
இதைப்பற்றி முன்பும் விரிவாகக் குறிப்பிடிருந்தேன். 1983 தொடக்கம் இன்று வரை வருடங்களாக எமது தமிழ்மக்கள் வெவ்வேறு காலங்களில், இலங்கை அரசாங்கத்தினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும், மாற்று இயக்கங்களான EPDP, Karuna போன்றவவற்றிலிருந்தும் தப்புவதற்காக 8 இலட்ச்ச்திர்க்கு மேற்ப்பட்டவர்கள் இந்தியாவிற்க்கும், மேற்கத்திய நாடுகளிற்கும் அகதியாக சென்றது மட்டுமல்லாமல், 4 இலட்ச்ச்திர்க்கு மேற்ப்பட்டவர்கள் தம் சொந்த நாட்டிளிலேயே இடம்பெயர்ந்தவர்களாக உள்ள இடத்தில் அவர்கள் தம் சொந்த இடங்களிற்கு திரும்ப சென்று குடியமர முன் இவ் வங்கி கணக்குகளில் கைவைப்பதோ, அவர்கள் அடகு வைத்த நகைகளில் கைவைப்பதோ சரியல்ல.
இதிலும் சிலர் இறந்து இருக்கலாம், அத்துடன் பணத்தேவைக்காகவே வங்கியில் நகைகளை அடகு வைத்திருப்பர். இதற்க்கு இந்தியாவில் உள்ள சகலரும், இடம்பெயர்ந்த சாகலாம் தம் சொந்த இடங்களிற்கு திரும்பிய பின் சில கால அவகாசம் கொடுத்து, “உரிமைகோராத இவ் வங்கி கணக்கு சம்பந்தப்பட்டவர்கள், நகை அடகு வைத்தவர்கள், வங்கியில் நகை வைத்தவர்கள் இவற்றை எடுக்கும்படியும் அல்லது மீள் பதிவு செய்து புதுப்பிக்கும் படியும்”, “உரிமைதாரகள் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவர்களின் வாரிசுகளோ சட்டப்படி உரிமையுள்ளவர்களோ உரிமை கோரலாம்” என்று வர்த்தமானி மூலம், சகல தினசரி பத்திரிகைகளிலும் அறிவித்து அதற்கும் ஓர் கால அவகாலம் கொடுத்து பின் அரசுடமையாக்கலாம். ஆனால் இதைப்பற்றி இந்த மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ்த் தலைமைகள் சிந்திக்கின்றனவா?
எல்லாவற்றிக்கும் மனித நேயமும்; மனிதாபிமானமும் வேண்டும்!
நன்றி!
– அலெக்ஸ் இரவி.
பிற்குறிப்பு:
நம் டக்கிளசு மாமா மாற்றான் எல்லாவற்றிகும் உரிமை கோருவார்….. எல்லாம் அவரின் கடந்த கால சுவடுகள்.