தமிழகத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற வேறு பாடில்லாமல் எல்லோருக்குமே சாராய ஆலைகள் உள்ளது. இதற்கு ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல கருணாநிதியும் விதிவிலக்கல்ல ஆனால் நீண்டகாலமாக கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் தமிழகத்தில் போராடி வருகின்றனர். தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை விடவும் கள் பாதுகாப்பானது எளிய மக்களின் பானமாகவும் உள்ளது. தவிறவும் தென் மாவட்டங்களிலும் கொங்கு மாவட்டங்களிலும் சுமார் இருபது லட்சம் தென்னை, பனை விவாசாயிகள் தொடர்பான பிரச்சனை இது ஆனாலும் பன்னாட்டு, உள்நாட்டு மதுபானங்களை விற்பதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கொங்கு நாட்டு சங்கத்தினர் இன்று கள் இறக்கும் போராட்டத்தில் குதித்தனர். கோவையில் செம்மொழி மாநாட்டு நெருங்க நெருங்க கள் இறக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் கோவையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. கள் மீதான்
தடையை நீக்க வலியுறுத்தியும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கோவை நகரில் வெட்டப்படும் ஒரு மாரத்திற்கு பதிலாக ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்கு லோகநாதன், இ.எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.