கல்வியை தீர்மானிப்பதில் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வியை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் தான் இருந்தது. மிசா காலத்தின் பின்னர் அதை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. ஆனாலும் அத்து மீறி மாநில உரிமைகளில் தலையிட்டதில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி என்ற கட்டமைப்பையே அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் அந்தச் சட்டத்திற்கு இதுவரை மத்தியில் ஆளும் மோடி அரசு சட்ட அங்கீகாரம் வழங்கவில்லை.
இதனிடையே இந்தியாவின் 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கல்வி உரிமையில் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாகவும், கல்வி உரிமை மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும் என்றும். மாநில அரசுகளின் உரிமை தொடர்ந்து மீறப்படுவதால் அரசியன் சாசன சம நிலை குலைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நீட் தேர்வின் ஆபத்தை குறிப்பிட்டு எழுதியுள்ள அவர்.
நீட் தேர்வு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் ஆங்கில மொழியாக்கத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார். நீட் தேர்வு, கல்வி உரிமையை மீட்டெடுக்க இக்கடிதம் 12 மாநில முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளம், மேற்குவங்கும், மகாராஷ்டிரம்,பஞ்சாப், மத்தியபிரதேசம் உட்பட பல மாநில முதல்வர்களும் இதில் அடக்கம்.