இலங்கையில் உயர்கல்வி திட்டமிட்ட வகையில் தனியார்மயப்படுத்தப்படுகிறது. தெற்காசியாவில் தரமான துறைசார் கல்வியை வழங்கி வந்த நாடான இலங்கைன் கல்வியை மகிந்த ராஜபக்ச அரசு தனியார் மயப்படுத்துகிறது. தமிழ் நாட்டில் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சி நிறுவனத்கை நடத்தும் கல்வி வியாபாரக் குழுமம் எஸ்.ஆர்.எம் இலங்கையில் கல்வி வியாபாராம் தொடர்பான ஒப்பந்ததை 2011 ஆம் ஆண்டு மகிந்த பாசிச அரசுடன் செய்துகொண்டது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்குச் சென்று இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்ட பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் 120 ஏக்கரில் தொடங்கப்படவிருக்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இப்போது கல்வி தனியார்மயப்படுத்தப்படுவதை தாம் ஆதரிப்பதாக பொதுபல சேனா என்ற பௌத்த பாசிச அமைப்புத் தெரிவித்துள்ளது. கல்வி தனியார் மயப்பட்டால் மாணவர்கள் வெளிநாடு செல்லமாட்டார்கள் என்று தனது அடிப்படைவாதக் கருத்தை முன்வைத்து கல்வி அழிக்கப்படுவதை ஆதரிக்கிறது. ஆக, அடிப்படையில் தமிழ் நாட்டின் எஸ்.ஆர்.எம் குழுமம், பிரித்தானிய அரசு, மகிந்த பாசிஸ்டுக்கள், பொதுபல சேனா ஆகியவற்றின் நோக்கம் ஒன்றானதே.
Bodu Bala Sena is for the Rajapakse Family to interact with the people directly. That is all to it. Otherwise, Sri Lanka is advancing in everything including education.