கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான் நினைத்த உயரத்தின் அருகிற்கூட நிற்க முடியாமல் போனது யாருடைய பிழை என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே எனது கற்பித்தற் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
எப்போதும் ஆசிரியர்கள் நாம் சரியாகக் கற்பிக்கின்றோம், மாணவர்கள்தான் புரிந்து கொள்கின்றனர் இல்லை, ஆர்வம் இல்லை, அவர்களுக்கு நேரமில்லை, அதற்குரிய சூழல் இங்கில்லை, பாடசாலைப் படிப்புகள் அதிகமாக இருக்கின்றன என்ற காரணங்களைத் தேடிக்கண்டுபிடித்து எம்மை நாமே சமாதானப்படுத்தி வைத்திருக்கின்றோமே தவிர, ஆசிரியராக எம்மை நாம்; சுயவிமர்சனம் செய்துகொண்டதில்லை. ஒரு ஆசிரியராக நான் செய்த தவறுகளை சுயவிமர்சனம் செய்வதுடன், இந்த கட்டுரை உங்களுக்கும் பயன் தரும் என்றே நம்புகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு இணையத்தளங்களிற் கண்ட சில மாணவியரின் கலை வெளிப்பாட்டினை, திறனை, அவர்களுடைய நேர்த்தியை கண்டபின்; எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
புலம் பெயர் தேசங்களில் பலர் கலைகளை கற்றுக் கொண்டாலும், பரீட்ச்சைகளில் சித்தி பெற்று தமக்கென பல பட்டங்களைப் பெற்றுக்கொண்டாலும் அவர்களில் ஒருவருடைய கலைவெளிப்பாடிற்கூட கலைநுணுக்கங்களையோ, ஆர்வத்தினையோ காணமுடிவதில்லை. பரீட்சை முடிந்து தேர்ச்சி பெற்றவுடன் அவர்களுடைய கலையார்வத்திற்கு என்னவாகிறது? ஓடி ஓடி மூச்சுமுட்டி படித்து சித்திபெற்று இவர்கள் கண்டது என்ன? பல நூறு மாணவர்களும் கலைஞராகிவிடுவர் என்ற எதிர்பார்ப்பில்லை என்றாலும் ஒருவர் கூடவா இல்லாமற் போகின்றனர்? கலையை கற்பித்தல் எனும் போது கலையை ஒரு பாடப் பொருளாக்கிக் கற்பிக்கின்றோம். கலையைக் கற்பித்தலென்பது வெறுமனே அதன் இலக்கண விதிகளையும், அமைப்புகளையும் கற்பித்தலன்று, சமூகத்திற்கும் கலைஞர்களுக்கும் மத்தியில் ஏற்படக்கூடய தொடர்பாடல் மொழியை கற்றுக்கொடுத்தலும், இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் கற்பித்தலுமாகும். நாம் கலை இலக்கண விதிகளாலான கலையின் அமைப்பைக் கற்றுக்கொண்டு, கலையின் உள்ளிருந்து இயங்கும் இனத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்களுடன் இணைந்து எம்மை அடையாளப்படுத்தல் என்பதே வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும் கற்பித்தல் முறையெனலாம்.
சில வருடங்கள் முன்புவரை எனது மாணவர்களும் இப்படித்தான் தேர்வை நோக்கியே தமது கலைப் படிப்பினை மேற்கொண்டு வந்தனர். அனைவருமே மிகச்
சிறந்த மதிப்பெண்களுடன் சித்தியெய்தினர். சிலர் அரங்கேற்றங்களை ஆர்வத்துடன் செய்து முடித்தனர். அவை முடிந்த கையுடன் அவர்களுள் பெரும்பான்மையினர் காணமற் போயினர். அதுவரை ஆர்வத்துடன் தமது குழந்தைகளை இழுத்து வந்து கற்பித்தலை மேற்கொண்ட பெற்றோர்களும் தமது கடமை முடிந்தது என்றும் பிள்ளைகள் கலையிற் புலமை பெற்றுவிட்டனர் என்ற மனத்திருப்தியுடனும் சென்றுவிடுகின்றனர். இந்த நிலைக்கு எமது கலை வாழ்க்கை தள்ளப்படுவதன் காரணம் என்ன, யார், என்ற கேள்விக்குக் கற்பித்தலை மேற்க்கொள்ளும் குருவே முதற்காரணி என்பேன் நான்.
குழந்தைகள் ஒரு கலையை கற்க வரும்போது ஆர்வத்தின் பெயரில், ஒரு தேடுதலில் தான் தன் குருவை நோக்கிச் வருகின்றனர். தம் குழந்தைகைள் ஒரு காலத்திற் இக்கலையினால் பயன் பெறுவர் என்பதைத் தாண்டி தம் குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள் சிந்திப்பதில்லை. யாரும் ஒரு அரங்கேற்றத்தை மனதிற் கொண்டோ பரீட்சைகளை நினைத்துக்கொண்டோ வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களைச் சரியான வழியிற் கொண்டு வழிநடத்திச் செல்வது என்பது கற்பித்தல் தொழிலைக் கொண்ட ஆசிரியர்களிடமே உள்ளது.
ஒரு கலைஞன் தன் துறையில் வெற்றி காண்பவனாயிருக்கிறான் என்றால் அவன் கற்ற கலையின் அத்திவாரம் சரியாக, நேர்த்தியாகப் போடப்பட்டிருக்கின்றது என்பதே முதல் படியாகும். திடமான அத்திவாரம் என்பதே மாணவர்களிடத்தில் தன்நம்பிக்கையையும் அதைத் தொடர்ந்த கலையின்பத்தையும் கொடுக்கும் என்பதை நாம் அறிதல் முக்கியம். அதை எத்தனை ஆசிரியர்கள் சரிவரக் கற்றுகொடுத்திருக்கின்றோம்? அரங்கேற்றம் கண்டு பரீட்சைகளில் சித்தி கண்டு பட்டங்களைக் காவிக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூட அவர்கள் கற்ற முதல் அடியைக் கேட்டால் சரிவரத் தெரியாத நிலையே புலம் பெயர் தேசங்களிற் காணக்கூடியதாக இருக்கிறது. அதற்கான காரணம் ஒவ்வொரு ஆண்டும் பரீட்சையில் சித்தியடைவதற்கான பாடங்களைக் கற்று முதல் வருடத்திற் கற்றவைகளை கைவிடுவதுதான் என்று சொன்னால் இங்கு வாழும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் முரண்பாடின்றி தலையசைப்பாரகள். சின்ன வட்டத்திற்குள் தாமே தம் கலைகளை இரசித்து இதுதான் கலையென்ற முடிவுடனும், தேடலின்மையுடனும், இதுவே உச்சம் என்று இருக்கும் புலம் பெயர்வாழ் கலைஞர்கள் ஒரு தேர்ந்த கலைஞராக வெற்றி பெற்று வெளிவரமுடியாதவர்களாகவே இருக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியெத்துவதற்காகவே ஓடிஓடி தம்கலைவாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இது இப்படியே தொடரும் பட்சத்தில் நாம் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைப் போல அல்ல சிறு கற்குவியல் அளவுகூட உயரமுடியாதென்ற எனது கருத்து தற்போது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.
இதில் இருந்து சிறு மாற்றமாவது வேண்டும் என எண்ணி சில வருடங்களுக்குமுன் வரை இருந்த பரீட்சைமுறைக் கலைக்கல்வியை நான் முதலில் உறுதியுடன் கைவிட்டபோது பல திசைகளில் இருந்து அதிருப்தியான பேச்சுகளையும், கேள்விகளையும்;, கேலிகளையும்;, புறக்கணிப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. எப்போதும் புதியமுயற்சியின் போதும் மாற்றங்களின் போதும் இத்தகைய பேச்சுக்கள், புறக்கணிப்புகளை சந்திக்க நாம் தயாராக இருத்தல் வேண்டும். கடந்த ஆண்டுகளாக பரீட்சையின் மோகத்தில் இருந்த என் வகுப்பறைக்கு அதற்குப் பதிலாக கற்பித்தல் முறையில் திறமைவாய்ந்த நடன ஆசிரியை மட்டுமல்ல தன்னிடமுள்ள அத்தனை மாணவர்களையும் மிகச்சிறந்த கலைஞராக உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியை ஒருவரை அழைத்து, அவர் மூலம் எனது மாணவர்களுக்குக் கற்பித்து பார்த்த பின்புதான் இத்தனை வருடங்களாக என் கற்ப்பித்தல் முறையில் இருந்த தவறுகள் பலவும் புரியத்தொடங்கியது.
இந்தப் பட்டறை மூலம் நான் முதலில் தெரிந்துகொண்ட விடயம், ஒரு கலையைக் கற்க மாணவர்களுக்கு இருக்கும் பொறுமையைவிட நூறு மடங்கு பொறுமை ஆசிரியருக்கு அமைந்திருக்க வேண்டும் என்பதுதான். தனது மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் முதற் பாடம் நேர்த்தியாகும் வரை இரண்டாவது படிக்கு நாம் தாவக்கூடாது. நூறு தரம் ஆயிரம் தரம் அல்ல அதற்கு மேலும் அவன் பழகும் முதற் பாடத்தை மீண்டும் மீண்டும் சகிப்புத்தன்மையோடு பார்க்கும், திருத்தும் பொறுமை எமக்கு வருமானால் அதுவே ஒரு ஆசிரியனுக்கு இருக்கக்கூடிய முதல் குரு லட்சணமாகும். இத்தனை நாளாக இதைத்தானா கற்றுக்கொண்டிருப்பது என்று பொறுமைவிட்டுப் போன பெற்றோர்க்கும், குழந்தையின் பொறுமை எல்லைகடந்து விடாத அளவில் சுவாரிசியத்துடனும் நாம் கலையில் போடப்பட வேண்டிய அத்திவாரத்தைப்பற்றிய விபரத்தை அவர்கள் அறிந்து கொள்ளும் படி பேசிப் புரியவைக்குமளவு பொறுமையும், சாமர்த்தியமும் நமக்கு வேண்டும். இந்த அத்திவாரமென்பது ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடங்களோ தன்னும் ஆகலாம் என்பதை நாம் ஆரம்பிக்கும் குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் அறிவிக்கலாம். இருந்தும் தான் கற்கும் கலையில் ஆர்வமில்லாத குழந்தைகளை இனம்கண்டு, அவர்களுடைய ஆர்வம் வேறு எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தல் நல்ல வழிநடத்தல் ஆகும்.
இப்படியான கற்பித்தல் முறையைக் கடைபிடித்தால் யாரும் கலையைக்கற்க நம்மிடம் வரமாட்டார்கள், வேறு குருவைத் தேடிப்போய்விடுவர் என்ற பயம் இருக்கும்வரை நாம் சிறந்த கற்பித்தலை தரும் குருவாக திகழமுடியாது. புலம் பெயர் தேசங்களில் கலைகளைக் கற்கவரும் மாணவர்களின் தொகையைப் போலவே, கலையைக் கற்று, அதன் பின் ஆசிரியர்களாகி கற்றுக்கொடுப்பவர்களின் தொகையும் பெருகி வருகிறதே தவிர தரமான கலைஞர்களின் எண்ணிக்கை கூடிவிடவில்லை. ஏன்? ஒரு கலைஞனாக இருக்கும் மனத்திருப்தியை இந்த சமூகம் கொடுக்கவில்லைiயா? கலைஞனாக இருக்கக்கூடியவனுக்குக் கிடைக்கக்கூடிய யாவும் மறந்த இன்பஉணரவில் யாருக்கும் விருப்பில்லையா? அல்லது ஆசிரியர்களாகிய நாம் அந்த உணர்வை ஒரு பொழுது கூட ஒரு மாணவனிடம் ஏற்படுத்தவில்லையா?
கற்றபித்தல் என்பது ஒரு கலை. அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கையேடோ விதிமுறையோ இந்த உலகில் யாரிடமும் இல்லை. கற்பித்தல் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய செய்நேர்த்தி. ஆரம்பத்தில் ஏதோ ஒரு வகையில் தன் கற்பித்தல்முறையைக் கொண்டிருந்தாலும் அனுபவ முதிர்வால் ஆசிரியர்கள் தமக்கென தரமான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.
ஒரு கலைஞனாக ஒருவன் அரங்கத்தில் மக்கள் முன் நிற்கிறான் என்றால் அது பெருமைக்குரிய விடயம். இப்போதெல்லாம் ஒரு மருத்துவனாகவோ, ஒரு வக்கீலாகவோ, பொறியியலானகவோ வருவதென்றால் பணம் கொடுத்துக்கூடப் படித்து முடித்துவிடலாம். ஆனால் எத்தனை பணம் கொடுத்தும் ஒரு நல்ல கலைஞனாக முடியாது. கலையை ஒருவன் இன்னொருவனிடம் இருந்து கற்றுக்கொள்ளும் போது அக்கலையின் மாணவனாக இருந்தாலும், தனது தேடுதல் மூலமும் படைப்பாற்றல் மூலமும்தான் ஒரு முழுமையான கலைஞனாகின்றான். அவன் தனக்குள்ளிருந்து தானே சுயம்புவாய் பிறப்பெடுக்கின்றான். தான் கற்பிக்கும் கலையில் ஆத்மார்த்தமான தேடுதலோ, படைப்பாற்றலோ அல்லாத குருவினால் தேடுதற்கலையை தன் மாணவனிடம் உருவாக்க முடியாது. ஒரு ஆசிரியரின் கடமை தான் கற்றதை அப்படியே கற்பிப்பதல்ல, மணவர்களுள் இருக்கும் திறமையை, சிந்தனையை வெளிக்கொணர்வதுதான். ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான கருத்தாடல் வெளி உருவாகின்ற போதுதான் உண்மையான கலைதிறனும் அதனூடு நம்பிக்கையும் வெளிப்படும். குருபக்தியைப் போதிக்குமளவு நாம் எமது கலைகளிற் தன்நம்பிக்கையை விதைப்பதில்லை. தன்நம்பிக்கையும் வெற்றியும் கண்ட ஒரு மாணவனிடத்தில் சுயேட்சையாக ஏற்படும் குருபக்தியை பெறும் ஒரு ஆசிரியராக இருப்பதே கற்பித்தற் தொழிலுக்குக் கிடைக்கும் பெரும் வெற்றி. தன்நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், தேடலையும் ஒரு மாணவனிடத்தில் உருவாக்குவதில் வெற்றி கண்டவர்களே முழமைபெற்ற குருவாகமுடியும்.
இன்றைய உலகமயச் சூழலில் பிரபஞ்பமெங்கும் பரந்து நாம் வாழ்வதும், மொழி, கலை, கலாச்சார நிகழ்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதும் காணக்கூடியாதாக இருக்கின்றது. ஒரு இனம் அழியாமற் காப்பதில் மொழி மற்றும் கலை முக்கிய பங்குவகிக்கின்றன. மொழியையும், கலையையும் வெறுமனே கற்றுக்கொள்ளல் மூலம் நாம் எம் அடையாளங்களை வெகுதொலைவிற்கு எடுத்து செல்ல முடியாது. நம் கலையையும் மொழியையும் தொடர்பாடல் கருவியாக்கி அதனூடு தன்நம்பிக்கையை ஏற்படுத்தி மாணவனை கலையில் ஈடுபாடு உள்ளவனாக்குவதே ஒரு ஆசிரியரின் வெற்றியாகும்.
சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.
கவிதா,
நீங்கள் தொட்டிருப்பது புலம்பெயர் நாடுகளில் இதுவரை பேசாப் பொருள். பொதுவாக புலம் பெயர் தமிழர்கள் பேச வேண்டிய ஒன்று.
அண்மையில் புலம் பெயர் தமிழர்களின் குழந்தைகள் விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். முதலாவது நாடகம் முற்றத்தில் கோலம் போட்டு பொங்குவதாக வருகின்றது. இரண்டாவதாக இலங்கையில் நடக்கும் ஒரு நகைச்சுவை நாடகம். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பின்னர் ஒரு குழந்தை பாட்டி வடை சுட்டு விற்ற கதை சொன்னது.
பிறகு ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி என்ற பாட்டை ஒரு குழந்தை பாடியது. பெற்றோர் குதூகலித்தனர். நிகழ்ச்சி முழுவதும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குழந்தைகளுக்கு எதுவும் விளங்கியதாகத் தெரியவில்லை. இங்கு பெற்றோரின் மகிழ்ச்சிக்காக குழந்தைகள் சுரண்டப்படுகிறார்கள்.
இவ்வாறான ஒரு சுரண்டலையே பரத நாட்டியம், கர்னாடக சங்கீதம் போன்ற புரியாத புதிர்களை ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் பிறந்த குழந்தைகளில் திணிக்க முற்படுகிறவர்களும் மேற்கொள்கிறார்கள்.
நீங்கள் உங்களது கலைக் கண்ணிற்கு அழகாகத் தெரியும் முத்திரைகளோடு ஆயிரம் தில்லானாக்களுக்கு நடனமாடினாலும் இங்கு யாருக்கும் புரியப் போவதில்லை. இடக்கையைத் தலையில் ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு வலது கையை அகல விரித்து நடந்தால் மன்னர் வருகிறார் என்பீர்கள். யாருக்குத் தேவை இது?
பெற்றோரின் மகிழ்ச்சிக்காக குழந்தைகள் மீதான உங்கள் சுரண்டல் வேதனையானது.
பல நூறு வருடங்களின் முன்னர் மன்னர்கள் சார்ந்த மேட்டுக்குடி சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட பரத நாடியம், முதலில் மக்கள் சார்ந்த கலைவடிமா என்பது கேள்விக்குரியது. நடனம் குறித்த சில ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களைக் கற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால் ஒரு எல்லை வரை இது பயன்படலாம்.
புலம் பெயர் சமூகத்தில் 70 வீதமானவர்கள் தொழிலாளர்கள் என்ற உண்மையைப் பலர் ஒத்துக்கொள்வதில்லை. எஞ்சிய முப்பது வீதத்தில் ஒரு பகுதி, ஐரோப்பிய மேட்டுகுடிகளோடு இணைந்துகொள்ளும். ஏற்கனவே எல்.சுப்பிரமணியத்தின் கச்சேரிக்கு பெருமைக்காகச் சென்று புரியாமல் கைதட்டும் வெள்ளையர் கூட்டத்தோடு இவர்கள் இணைந்து ஐரோப்பியர்கள் ஆகிவிடுவார்கள்.
புறக்கணிக்கத்தக்க இவர்களைத் தவிர, மிகுதிப்பேருக்கு உங்கள் நடனம் அப்பட்டமான சுரண்டல். இதை நீங்கள் உங்களை அறியாமலே மேற்கொள்கிறீர்கள்.
இலங்கையில் வடமோடி, தென்மோடி கூத்து முறைகள் பிரபலமானவை. நோர்வேயில் ரூட்ல் போன்ற உழைக்கும் மக்களின் நடனவடிவங்கள் காணப்படுகின்றன. இவைகளை பரத நாட்டியத்தின் அமைப்புச் சார்ந்த அறிவோடு உழைக்கும் வெளினாட்டவருக்கான நடனமாக ஏன் மாற்றக் கூடாது. பாட்டி வடை சுட்டதற்குப் பதிலால அகதிகளின் அவலத்தை ஏன் கற்பிக்கக்கூடாது?
எட்டு வருடங்களின் முன்னரே இதை நீங்கள் ஆரம்பித்திருந்தால் இன்று புதிய கலை வடிவத்தையே உருவாக்கியிருக்கலாம். அது அமரிக்கக் கறுப்பர்களின் இசைவடிவங்கள் போன்று உலகைத் தொட்டிருக்கும். புலம் பெயர் நாடுகளிலிருந்து விஜை ரிவிக்குப் போய் சினிமாக் கூத்தாடிகளின் அழுக்குப்படிந்த கால்களைத் தொட்டுக் கும்பிடுவதற்கா இத்தனை இழப்புக்களும்?
எனக்குக் கலைக்கண் கிடையாது. எழுதியவற்றில் மனதைப் புண்படுத்தியிருந்தாலோ, தவறுகள் காணப்பட்டாலோ மன்னித்துக்கொள்ளுங்கள்.
Wonderful feedback, i totally agree with you and i have the same feelings. Now the srilankan refugees are slowly loosing their identity. The next generation is already not speaking tamil. They are most addicited to the western culture etc. Now the big question i have, Who is going to fight for Tamil Eelam? the next generation who are growing in London, Canada,France,Swiss? they cant speak tamil then how?
Dear Murugan,
to fight something, I do not thing we need knowledge of language. You must need to learn about how the Jews state created in the middle east and what the Jews diaspora doing to prevent from enemies.
The Jews diaspora have been for more than 500 years,they are integrated perfectly where they living but they never give up the words,WHO WE ARE,they have written this at deep of theirs hearts.
Wonderful article and as usual very good Mr Navalan’s feedback.
Thanks.
தொலைவது எல்லாமே
மீண்டும் கிடைத்திடதான்
கிடைப்பது எல்லாமே நாம்
மீண்டும் தொலைத்திடத்தான்
வணக்கத் நாவலன் அண்ணா.
உங்கள் ஆதங்கம் மிகச் சரியானதே.
பரதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுடையது. அதை அவ்வளவு சீக்கிரம் வெளிக் கொண்டு வர முடியாது என்றாலும் அதற்குரிய முயற்சிகளை நாம் கைவிடக் கூடாது.
பரதநாட்டியம் என்பதும் ஒரு பெண்ணின் நிலையைப் போல புனித சாயங்களால் பூசப்பட்டது. இந்து மதத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. பாடுபொருள் என்பது கடவுளரின் லீலைகளே பேசப்படுகின்றன. புதிய பாடல்களை உருவாக்குவதே இதில் ஏற்புடையதாக இல்லை.
நாம் ஒரு கலைவடிவத்தில் கைவைக்கு முன் அதன் அடிப்படை மற்றும் இந்தக் கலையில் தேர்ந்தவர்களாக வேண்டும். இந்தக் கலைவடிவத்தை முழுமையுறக் கற்காமல் நாம் எந்த வடிவத்திலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவருதல் இயலாத காரியம். ஆழ்ந்த, முழுமையான அறிவு இங்கு புலம் பெயர் தேசங்களில் ஊட்டப்படுவதாக நாம் கருத மூடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் எப்பேற்பட்ட மாற்றத்தையும் இங்கு எதிர்பார்க்க முடியாது.
மேற்கொண்டு இப்சனின் நாடகத்தை எம் ஈழத்து பண்பாடு கலாச்சாரத்தோடு எமது மக்கள் பிரச்சனைகளை பேசும் விதமாக ஒரு கலைவடிவத்தைக் கொடுக்கும முயற்சி ஆரம்பித்திருக்கிறோம். அந்த முயற்சி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து நம்மால் முடிந்ததை செய்து பார்ப்போம். எந்தக் காலத்தில் என்று சொல்லாவிடினும் மாற்றங்கள் நிகழும். 🙂
இதைப்பற்றிய கட்டுரை ஒன்றை எனது அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நான் அண்மையில் ஒரு பழமொழியை கண்டேன் !
” கற்றலுக்கு ஆர்வமுட்டுவதே கற்பித்தலின் கலை
கவிதா அவர்கள் ஒருநடன ஆசிரியை என்பதும் அவரே இவ்வாக்குமூலத்தை தந்துள்ளார் என்பதும் மகிழ்ச்சி.வட அமெரிகாவில் இருக்கிற மற்றும் ஐரோப்பாவில் இருக்கிற அரங்க மேடைகள் பெரும்பாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நடன அரங்கேற்றத்தைச் சந்தித்தக் கொண்டிருக்கின்றன. ஒரு அரங்கேற்றத்திற்கு சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவிடப்படுகின்றது. வருமான வரி கட்டாத பணமாக நடன ஆசிரியர்கள்தான் புலம் பெயர்நிலத்தில் ஒரு பிரதம மந்திரியை விடவும் அதிகமாகச் சமபாதித்துக் கொண்டிருப்பவர்கள். அண்மித்த காலத்தில் இவ்வாறான அரங்கேற்றம் ஒன்றிற்குப் போன வேளை மகளின் அரங்கேற்றத்திற்காகவென ஓடாய்த் தேய்ந்த அந்த மகளின் தந்தையார் மண்டபத்தினுள்ளேயே மூர்ச்சையாகி மரணித்துப் போனார். உண்மையில் பயிற்றுவிக்கப்படும் நடனக் கலையால் தமிழர்தம் மாண்பு வளர்கின்றதா ?கலாசாரம் கொடிநாட்டுகின்றதா ? மொழி வளர்கின்றதா?? இராகம்: ஹம்சாந்தம் தாளம்: ஆதி
இயற்றியவர்: தியாகராஜர்
பல்லவி தொடங்குகிறது
பண்டு ரேட்டி கொலு விய வைய ராமா
அனுபல்லவி
துண்ட விந்தி வானி மொதலென்ன மதா
டுல கோடி நெல குல ஜேயு நிய இப்படியே சரணமுமாகி பரதம் தொடர்கின்றது. இதையே பரதமாகி நாம் பார்த்துப் பரவசமுறுகின்றோம்.தெலுங்குப் பாடல் என்றே இதை மட்டிட முடியாதவர்கள் தான் நடன ஆசிரியைகளாயிருகின்றார்கள் என்பது மிக மிக விசனத்திற்குரியது. மாற்று மொழிகளில் எழுதி வாசிக்கின்ற குழந்தைகள் எதை மொழி என்று அறியாதவர்களாய் இருக்கின்றார்கள். இப்போதுள்ள கேள்வி என்னவெனில் பரதம் என்பது தமிழ்க் கலை சார்ந்ததா??
எல்லோரும் அப்படி செய்வதில்லை. சிலர் தமிழ் பாடல்களை மட்டுமே தெரிவு செய்து, அதுவும் அவிர்களது இலங்கை பூர்விகமான கோயில் தலங்களை சேர்த்து நன்றாக செய்கிறார்கள். அவர்கள் பணத்தை அவர்கள் செலவிடுவதில் மற்றவருக்கு என்ன வயிற்றெரிச்சல். ஆசிரியர் வரி செலுத்தாவிட்டால் நம்ம நாட்டார் சும்மா விடுவினமோ, காட்டிக்கொடுத்திருவோமில்ல. உங்க கலை மட்டுமுன்னா மாரியாத்தவுக்கு சாமியாடுறதத்தான் ஆடிக்காட்டலாம். இது காட்டுக்கூத்துன்னிட்டு கேலிதான் பண்ணுவா மத்தவா.
கவிதாவின் கலை குறித்த மனம் திறந்த பகிர்வு வரவேற்கத்தக்கது.
பாராட்டுகள். தொடரட்டும் கவிதாவின் கலைத் தொண்டு.
கலைக்கு எந்த பேதமும் இல்லை.
இயற்கையை யாரும் பேதத்தோடு பார்ப்பதில்லை.
அதேபோல கலையையும் நாம் காண வேண்டும்.
http://www.ajeevan.com
அதனால்தான் ‘இயற்க்கை கடன்கள்’ என்பதோ?
இங்கு பேசப்ப்ட்டிருக்கிற கலை பொதுவானது என்பது தப்பிப்பதற்கான சந்தர்ப்பவாதம்.இங்கு பேசப்படுகின்ற பரதக்கலை பரத முனிவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பரதக்கலை பற்றியது.இந்துத்துவத்தால் கட்டப்பட சாம்ராட்சியத்துள் ஆடல் மகளிரை அணி செய்வதற்கான விசேட வேள்வி இது. இந்த ஆடற்கலையின் ஆடல் அரங்கை அமைப்பதற்கே சட்டதிட்டங்களும் விதி முறைகோவைகளும் பரதமுனிவரால் பலபாகங்களாக எழுதப்பட்டுள்ளன. அப்படியான விதி முறையுள்ள ஆடலரங்குகளை புலம் பெயர் தேசங்களில் அமைத்து விட முடியாது. கலையின் நுணுக்கங்கள் காலமாற்றத்தால் சிதைப்புறுகின்றன என்பதரகு இதுநல்ல உதாரணம்.நீங்கள் பேசுகிற எழுதுகிற அல்லது கற்பிக்கிற கலைமுறை என்ன? எது? என்பதை அறியாதிருப்பது மிகமிக வருந்ததக்கதாகும்.அதனைதான் இங்கு பலரும் செய்து கொண்டிருகின்றார்கள். சபாநாவலன் சொல்வதைப்போல் இது பேசப்படாத பொருள் அல்ல பேசிப்பேசியே அலுத்த கதை.ஆனால் புலம்பெயர்நிலத்தில் இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கிற வியாபாரம் இது என்பதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை. பல அரங்கேற்றத்தின் விருந்தினர்கள் அரசியல்வாதிகளாக வெள்ளயர்களாக,மற்றும் ஆடல் அறிவு அறவே அற்றவர்களாகவே இருக்கின்றார்கள் யார் கண்டார்கள் சபாநவலன் கூட கவிதா அவர்களின் அடுத்த அரங்கேற்றத்தின் பிரதம விருந்தினராக அழைக்கப்படலாம்.
புடுங்கி புடுங்கினதெல்லாம் நூற்றுக்கு நூறுவீதம் உண்மை,நாங்கள் செத்துப்போனபின் பன்னாட்டு நிறுவனங்கள் நம்ம பிள்ளைகளுக்குப் பரதம் பயிற்று(விக்கும்).
அவுங்கதானே உங்களுக்கு கஞசியே உன்ந்த்திறாங்கோ !
பிடுங்கியின் குற்றச்சாட்டுக்கள் குழப்பம் தருவதாயினும் உண்மை.
இதனைதான் புலம் பெயர் தேசத்தில் தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.இதனைவிட இந்தநடன ஆசிரியைகளின் பிள்ளைகள்தான் எல்லா வானொலி தொலைகாட்சிகளில் இடம் பிடித்து ஆடுகின்றார்கள். ஊர் காசில் தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆட்டி மகிழ்கின்றோம் என்று குறைந்த பட்ச ஞானம் கூட அற்றவர்களாயிருக்கின்றார்கள் அவர்கள் என்று புலம்புகின்றார்கள் பெற்றவர்கள்.
கவிதாவின் கூற்றானது எல்லாவித கலைகளையும் கற்பிப்பவர்களையும் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.
கலை வியாபாரமாகும் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்பது எனது கருத்து.
தன்னைத்தானே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் ஆசிரியர்கள் எத்தனை பேர்? கலையின்பால் உண்மையான விருப்புடையவர்களே சுயவிமர்சனம் மூலம் தம்மை வளர்த்துக்கொள்கிறார்கள். அவ்வாறன ஆசிரியர்கள் மிக அருமையாகவே இருக்கிறார்கள்.
வேதனை என்னவெனில் கலையைக் கற்பிக்கிறோம் என்னும் பெயரில் சுயவிமர்சனமின்றி கலையை கலப்படமாக்கி விற்பனை செய்பவர்களே பேரும் புகழுடன் உலாவருகிறார்கள். அவர்களினால் ஒரு சிறந்த மாணவர்னைக் கூட உருவாக்கமுடியவில்லை என்னும் யதார்த்தைக்கூட அவர்களால் புரியமுடியாதுள்ளது என்பதானது அவர்களது கலை மீதான ஞானத்தினை காட்டுகிறது.
இது புலம் பெயர்ந்தவர்களுக்காக பிரச்சனை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் ஆர்வமும் தேடலும் உள்ள ஆசிரியர்களே தாமும் வளர்ந்து தம் மாணவர்களையும் வளர்கிறார்கள். ஆனால் ஏனைய நாடுகளை விட புலம்பெயர் தேசங்களில் கலையானது விற்பனைப் பொருளாகவும் போலிக் கௌரவங்களை மற்றும் அங்கீகாரங்களைக் கொடுக்கும் பொருளாகவும் உருமாறியுள்ளது வருந்தத்தக்கதே
ஐயா, நாங்கள் புகையிலையே பிழை என்கிறோம் அனால் நீங்கள் பீடி சுத்துவதைப்பற்றி பாடம் நடத்துறீங்க
பீடி வேண்டாம் என்பது சரிதான். கலை என்பதை பீடியுடன் ஒப்பிடுவது சரியானதா? இது இந்தியக் கலை என்பதால் வேண்டாம் என்பதா? பார்பனியத்தின் கைகளுள் இருப்பதால் வேண்டாம் என்பதா? அல்லது பணக்கார வர்க்கத்தின் கையில் இருப்பதால் மறுத்தளிப்பதா?
ஏதோரு வகையில் மாற்றங்களை கொண்டுவர நினைக்கும் சில கலைஞர்களை வரவேற்கவேண்டும். எந்த ஒரு கலையையும் நாம் மீள்பரிசீலளை செய்யலாம். ஏதோ ஒரு வகையில் இந்த நடனக்கலை பல ஆண்டுகளாக நம்மிடம் வேறூன்றிவிட்டது.
உங்களுக்கு தெரிந்த நல்ல கலையொன்றினைப் பற்றி சொல்வதுதானே. அப்படியானால் கலையே வேண்டாம் என்று சொல்கிறீர் போல் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது சொல்வதற்கு இங்கு நிறையவே ஆட்கள் இருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் படிப்பித்தற் கலையைப் பற்றி பேசுகிறார். இது நடனமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஈழத்தமிழருக்கான பாரம்பரியகலை பரதம் இல்லை என்பது பெங்களூரில் நடந்த பல்தேசியத்திர்க்கான கலை நிகழ்ச்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஈழத்தமிழரின் தனித்துவமான கலை எனப்படுவது கூத்துக்கலையே இனியாவது நம் சிகாமணிகள் நமக்கான வடமோடி,தென்மோடி,இன்னும் பல இடம்மோடி தெரிந்துகொள்வது நன்று.
http://balasugumar.blogspot.co.uk/
பரதக் கலையில் பெரிதான எந்த மாற்றத்தையும் செய்யமுடியதென்று தெரிந்துதான் தன் ஆதங்கத்தை கவிதா தெரியப்படுத்தியிருக்கிறார் என்றால் பரதக் கலை சரியானது அதன் கற்பித்தல் வடிவம்தான் தவறு என்பது அவரது கருத்தாக் இருக்கிறது. மேலே குறிப்பிட்டதுபோல போயிலையே வேண்டாம் என்றபிறகு அதை சுற்றுவதற்கு விளக்கம் எதற்கு. கலை என்பது ஒரு சமூகத்தோடு சேர்ந்த வாழ்வியலோடு ஒன்றித்துபோகிற விடயமாகினால்தான் அதை ரசித்தபின்பும் மனதில் நிற்கும் சும்மா ஒட்டாமல் தூர விலகிநின்று பார்க்கிற விடயமாக இருந்தால் அது மனசுக்குள் வராது பரதமும் அதைப்போலத்தான். இன்றைக்கு நடக்கின்ற சூழலுக்கு இதை மாற்றி அமைக்க யாரும் தயாரில்லை வெறுமே கடவுள்களையும் பழைய புராணங்களையும் பாடுறதிற்கே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் .இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இந்திய கலைகளையே பழகிக்கொண்டிருப்பது.எமக்கென்று ஒரு கலை பாரம்பரியம் இல்லையா? அதை பழக பாட ஆட விருப்பம் இல்லையா?முதல்ல பரதக் கலையிலிருந்து கடவுள்களை வெளியிலை எடுத்துப் போடமாட்டாங்களா. எவ்வளவுகாலத்திற்குத்தான் சிவனும் பிட்டுக்கு மண் சுமக்கிறது.
மாற்றம் ஒன்றுதான் மாறக்கூடியது அதற்கு ஆசிரியர்கள் யாரும் தயாரில்லை கவிதா உட்பட
வணக்கம்.
இந்தப் பதிவில் நான் கற்பித்தல் கலையைப் பற்றித்தான் பேசியிருக்கின்றேன். பரதநாட்டிக்கலையா, கூத்தா ஈழத்தமிழர்கலை என்பதை பற்றியல்ல.
அல்லது பரதக்கலையில் உள்ள பாடுபொருள் பற்றியுமல்ல.
பரதம் மக்கள்கலையாக இல்லை என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை மக்கள் கலையாக மாற்றும் ஆசை எண்ணம் உங்களைப் போல் எனக்கும் உண்டு. யுகயுகமாக ஒரு குறிபிட்ட சமூகத்துள் முடங்கிக் கிடக்கும் கலையை உங்கள் அவசரங்களிற்கு ஏற்ப வெளிக்கொணர்வது என்பது சாத்தியமற்றது. அதற்கான ஆரம்பத்தை நாம் மேற்கொள்ளலாம்.
நாம் ஈழத்தழிழர்களாக இருப்பதனால் வேறு ஒரு கலையை கற்றுக் கொள்ளக்கூடாதென ஏதும் வரைமுறை இருக்கிறதா என்ன? ஒரு தமிழன் பலே கற்றுக்கொள்ளக்கூடாதா? மேற்கத்தேய break, hippop கற்றுக்கொள்ளக்கூடாத? அல்லது ஒரு ஆப்பிரிக்க நடனத்திற்தான் தனது கலையார்வத்தை மேம்படுத்திக் கொள்ளக் கூடாதா? உலகமயமாதல் என்பதன் தாக்கத்தை எல்லா பக்கங்களிலிருந்தும் நாம் காண வேண்டும்.
என்னதான் நாம் கூத்துதான் நமது கலையென்று கத்தினாலும் ஏன் கூத்தை மக்கள் விரும்பிப் கற்றவில்லை என்று ஆராய்ந்திருக்கிறோமா? கூத்துக்கலையை மக்கள் விரும்பும்படி ஏன் மாற்ற முடியவில்லை. என்னதான் சொன்னாலும் பரதக்கலை என்பது நமது சமூகத்திடம் பல யுகமாக வேரூன்றிவிட்ட கலையாக இருக்கின்றது. சிறியவர்களிடமும் பெரியவர்களிடமும் ஏற்பட்டிருக்கும் பரதக்கலையில் தாக்கத்தை நாம் ஏன் தவறென்று காணவேண்டும்.
அப்படியானால் கர்நாடக இசையின் துவக்கம் என்ன? கூத்து எனும் கலை தென்இந்தியாவிலும் ஆடப்பட்டு வரும் ஒரு கலையாகத்தான் இருக்கிறது. கூத்தில் உள்ள பாடுபொருள் என்ன? ஆதில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதன் ஆரம்பம் எங்கே இருக்கின்றது? ஒரு கலையை கலையாகப் பார்க்க வேண்டுமே ஒழிய யார் ஆடுகிறார்கள், மற்ற இனத்தின் கலையை நாம் ஆடக்கூடாது என்ற எதிர்பபுவாதம் உலகமயமாதலை எதிர்த்தல் என்பதாகும்.
எமது அடுத்த சந்ததியினர் பலர் பலே நடனத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அவர்கள் அந்தக் கலைவடிம்பற்றி தமது கருத்துக்களை கூற விரும்பினால் இதே போலதான் நாம் அவர்களுடனும் மல்லுகட்டப் போகின்றோமா?
கனவுகள் கருத்துக்கள் வேறு அதை நடைமுறைப்படுத்துவது வேறு. கனவின் வேகத்திற்கும், நம் மாற்றியமைக்கக்கூடிய கருத்தின் வேகத்திற்கும் நடைமுறை சாத்தியக்கூறுகள் ஈடுகொடுப்பது அத்தனை இலகுவானதல்லவே.
மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும். அதற்கும் கற்பிதற்கலைபோல பொறுமை அவசியம். இதுவரை கூத்துக் கலைமேல் எனக்கு அத்தனை ஆர்வம் ஏறப்பட்டதில்லை. உங்களால் முடிந்தால் கூத்துக்கலையை மக்கள் தேடிவரச் செய்யுங்களேன். நிச்சயம் நானும் அதைக் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
நடன நாட்டிய வடிவங்கள் பெரும் பாலும் பெண்கலாலேயே காக்கப்பட்டு வருகின்றன. ஓன்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும் கூத்துக்கலையை நாம் வளர்ந்துவரும் எமது சந்ததியினர் விரும்புபடி முதலில் எமது கூத்துகலைஞர்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும். அதன்வழிதான் கூத்துகலையை நாம் எமது இளம் சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல முடியும்.
சினேகன்: முடியாதது என்று ஒன்றும் இல்லை. ஆனால் உங்கள் அவசரத்திற்கு நான் எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. 🙂
பிறர் நாட்டுக்கலைகளை நாம் பேணிப்போற்றுதளிலும்,காப்பாற்றுதளிலும் எந்தத்தவறுமில்லை ஆனால் நம் பாரம்பரிய கலையாகிய ‘கூத்தையும்’கூடவே உங்கள் பரதத்துடன் கற்றுகொடுக்கும்படி உங்கள் பாதக்கமலம் தொட்டு கேட்கின்றேன்.
பல காலங்களாக நமது சமூகத்தில் அல்லது கலாச்சாரத்தில் கலந்து வேரூன்றிப்போன மற்றய இனங்களுடய கலைப்பயன்பாடோ அல்லது மொழிக்கலப்போ ஒன்றல்ல இரண்டல்ல அவைகள் யாவையும் களைந்துவிட்டு தமிழரின் மட்டும் என்று தொடங்கினால் அதில் எவ்வளவு மிஞ்சும் என்பதற்குமேல் எந்த அளவு நடைமுறைக்கு சாத்தியம் என்பதையும் உணரவேண்டும்.
இருந்தாலும்,தனிப்பட்ட முறையில் யாரும் எதையும் படிக்கலாம்,கேட்கலாம் அது அவரவரது சொந்த உரிமை ஆனால் அதை தமிழ் கலாச்சாரம் என்று வேறு இனங்களுக்கு அறிமுகப்படுத்தும் போது கொஞ்சம் யோசிக்கவேண்டியது அவசியம்.
இங்கே கவிதா அவா்கள் கூற முறிபட்டிருப்பது தமிழ் சமூகத்திற்கு புதுமையானது, ஏனெனில் வெறும் வரட்டுக்கவுரவத்தில் போலியாகவே வாழ்ந்து பழகிப்போனவா்கள் அல்லவா நாங்கள்.
லதா மங்கஷ்காரின் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் ஆனால் எனக்கு இந்தி புரியாது.
கவிதா—- ஈழத்துக்கலைஞர்கள் கலைகளில் பயங்கர வளர்ச்சியடைந்ததுபோலும் அதனால் அவர்கள் வேறுகலைகளையும் விரும்புகிறார்கள் என்பதுபோலவும் கருத்துரைத்திருக்கிறீர்கள் உண்மை என்ன நாங்கள் துளியாவது சாதித்தோமா?
நான் சொல்ல நினைப்பது பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவைகளை விட்டு இப்ப எங்கட வாழ்வியலை சொல்லுங்க ஒரு கலைஞனுக்கு அந்த வரலாற்றுக்கடமை இருக்கு இப்பவுமஇ அமது படைப்பாளிகள் திரைப்படங்களாகவும் பாடல்களாகவும் நாடகங்களாகவுமஇ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் இதில் உங்களைப்போன்றர்களின் கடமை என்ன?
பல இளைஞர்களை தன் பேச்சாலும் நகைச்சுவையாலும் வசப்படுத்தி பெரியாரின் கொள்கைகளால் கடவுள் இல்லை என்று சாதித்த பெரியார் தாசன் அண்மைக்காலத்தில் பல்டி அடித்து அல்லாவே என் கடவுள் என்று முஸ்லிம் மததிற்குத் தாவினார். அவ்வாறு இணைவது அவரது சுதந்திரம். ஆனால் அவர் பேச்சால் எடுப்புண்ட அந்த இளைஞர்களின் கதி?????சமூகத்தில் முன்னோடிகள் என்று கருதுபவர்கள்,அப்படிக்கருத்துச் சொல்பவர்கள் தங்களை நம்புவோருக்காக ஆவது தாங்கள் செய்கிற சேவைகளை தீர ஆராயவேண்டும். சொந்த லாபத்திற்காக சோரம் போகின்றவர்கள் அவர்களை நம்பிய சமூகத்தையே சோரம் போக வைக்கின்றார்கள்.நான் படிப்பித்த எட்டு வருடப் படிப்பிப்பும் சரியில்லை என்கின்ற கட்டுரையாளர் கவிதாவின் வாதமும் இதையொத்த வாதம் தான். கட்டுரையாளர் சாதாரணர் என்றால் விட்டுவிடலாம்.சமூகமுன்னோடியாக, தமிழின எழுச்சியின் விடிவெள்ளியாக “முடியாதது என்று ஒன்றும் இல்லை. ஆனால் உங்கள் அவசரத்திற்கு நான் எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. “என்று எகத்தாளாமாக பதில் சொல்லக்கூடியநிலையில் இருப்பவர் என்பதால் இதனை எழுதியாக வேண்டியிருக்கிறது.தமிழ்மொழியின் பண்பாட்டுக்கலையான கூத்துக்கலையைநான் அறிய முற்படவில்லை என்பது தமிழுணர்வாளரின் கருத்தாக இல்லையே?? சமூகத்திற்கு கற்பிக்க முயல்கிற தாங்கள் தமிழர்கலை எவை என்பதை முதலில் தேடியல்லவா இருக்க வேண்டும். அல்லது தாங்கள் பரத ஆசிரியை வருவாய் வரும் என்பதால் கண்டு கொள்ளாமல் விட்டீர்களா???
//என்னதான் நாம் கூத்துதான் நமது கலையென்று கத்தினாலும் ஏன் கூத்தை மக்கள் விரும்பிப் கற்றவில்லை என்று ஆராய்ந்திருக்கிறோமா?என்று ஆராய வேண்டிய தாங்களே கற்பிக்கிற தாங்களே கேள்வி எழுப்பினால் எப்படி???கலையை கற்றுக் கொள்ளக்கூடாதென ஏதும் வரைமுறை இருக்கிறதா என்ன? ஒரு தமிழன் பலே கற்றுக்கொள்ளக்கூடாதா? மேற்கத்தேய பிறேக்.ரெகே , கிப்பொப் கற்றுக்கொள்ளக்கூடாத? அல்லது ஒரு ஆப்பிரிக்க நடனத்திற்தான் தனது கலையார்வத்தை மேம்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்கின்ற தங்களது குழந்தைத்தனமான கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே ஆம் ஆபிரிக்க நடனம் மேற்கத்தைய நடனம் என்று அவைக்கு வகையிருகின்றது. ஆனால் எங்களின் நடனம் எந்த வகையிலிருக்கின்றது. எப்பொழுதாவது ஆராய்ந்ததுண்டா??எல்லாம் கற்கலாம் சகோதரி ஆனால் இது தான் எங்களின் கலை என்றுசொல்லிவேற்று நாட்டுக்கலவைகளை கற்பிக்க முயல்வதுதான் தப்பு என்கின்றேன்.
“வருவாய் தரும் தொழிலை பழக்குங்கள். அதை அந்த நாட்டு நடனமாகவே பழக்குங்கள். பரதத்தில் எங்கள் பண்பாட்டை கொண்டுவந்து உருமாறி ஆடப் போகின்றேன் என்று காதில் பூ வைக்க வேண்டாம்.”
பிடுங்கி அவா்களே,
கலையின் அடிப்படை தத்துவம் வெறும் அடையாளமாக மட்டும் இருந்து விடக்கூடாது அது மனிதா்களை மகிழ்விக்கவும் வேண்டுமல்லவா அத்தோடு ரசிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.வெறும் இனத்தின் அடையாளம் என்று பித்தலாட்டங்களை நாம் யாருக்கும் அறிமுகம் செய்யமுடியாதென்றே நம்புகிறேன்.
உங்கள் கோபம் நடனக்கலையில் பணம் சோ்ப்பவா்கள் மேல் என்பது புரிகிறது, ஆனால் நடனம் பயிற்றுவிப்பவா்கள் யாரையும் சட்டையில் பிடித்து இழுத்தா படிப்பிங்கின்றார்கள் இல்லையல்லவா.
இங்கே கவிதா அவா்கள் கூறவந்தது: ஒன்றை சிறப்பாக கற்றுக்கொடுக்கவேண்டும், அதற்கு ஒருவருக்கு இமாலய பொறுமை வேண்டும், அது தன்னிடம் இருக்கவில்லை என்பதாகும்,அவரின் இந்த சிறந்த சுயவிமா்சனத்தை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிருந்தால் சில வேளை நமது 30 வருட சரித்திரம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
திரும்பவும் சொல்கிறேன் நான் எழுதியிருப்பது படிப்பிதற் கலை பற்றி. இருக்கட்டும். சின்ன வயதில் ஒரு கலையைக் கற்கப் புறப்படும் ஒரு குழந்தையிடம் நீங்கள் சமூக அக்கறையை ஏற்படுத்த முடியாது.
இப்போதும் சொல்கிறேன் கூத்துக்கலை நான் பார்த்திருக்கிறேன். கூத்துக் கலையின் பட்டறைகளின் கலந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த கலையில் எவ்வித ஆர்வமும் ஏற்படவில்லை. எனது மாணவர்களையும் கைதேர்ந்த கூத்துக்கலைஞர்களிடம் பட்டறைக்கு அனுப்பியிருக்கிறேன். ஆவர்களும் இந்தக் கலையினால் ஈர்க்கப்படவில்லை. நீங்கள் கூத்துக் கலைஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை இடம் மாறிக் கேட்கிறீர்கள்.
பலகலைகளைக் கற்று எல்லாவற்றையும் நான் புலமைபெற்று நீங்கள் நினைப்பவை அனைத்தையும் நான் சாதிக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும். ஏன் நீங்களே, அல்லது உங்கள் பிள்ளைகளை கூத்துக்கலையை கற்று அதை எமது சமூகத்திடம் பிரபலப்படுத்த முயற்சிப்பதும் சாத்தியம் தானே.
என்னிடம் எந்த எகத்தாளமும் இல்லை. மாற்றம் நிகழும் என்று சொல்லியிருக்கின்றேன். அதை மற்றவர்களுடைய அவசரத்திற்கு யாராலும் எதையும் மாற்ற முடியாது என்பது நிதர்சனம். நான் உட்பட இப்படித்தான் என்று சொல்லுமளவு ஒருத்தருக்கு எகத்தாளம் இருக்குமாயின் உண்மையைச் சொல்வதில் நாம் ஏன் பின்னிற்க வேண்டும்.
ஆம் உண்மைதான் 8 வருடங்களுக்குபிறகே நான் எனது கற்பித்தற்பணியின் முறையை இந்த சமூகத்திலிருந்து மாற்றி அமைத்திருக்கிறேன் என்ற உண்மையை நான் ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அதை சுயவிமர்சனம் செய்யுமளவு நான் வளர்ந்திருக்கிறேன் என்பதில் பெருமையே. எனது உண்மையான சுயவமர்சனத்தையே கேலியாக பார்க்கும் உங்களிடம் காத்திரமான எதையும் எதிர்பார்க்க முடியாது. அதனால் இந்த எட்டு வருடத்தையும் கடைசி வருடங்களில் என்னால் திருத்திக் கொண்டு நகர முடிந்திருக்கிறது.
எனது இந்த முயற்ச்சியில் சில படிகளை நான் கடந்திருப்பதாகவே நான் நம்புகிறேன். நாம் ஏற வேண்டிய படிகள் இன்னும் ஆயிரம் இருக்கின்றன. இதற்கு பொறுமை அவசியம்.
யாரும் யார் காதிலும் பூவைக்கத் தேவையில்லை. யாரும் யாருடைய கலைகளையும் மாற்றியமைக்கத் தேவையில்லை. அவர்அவர்களுடைய படைப்பாற்றல் திறன் மூலமும் மாற்றுச் சித்தனைமுலமும் கலைகள் தனது பாதையை காலங்களின் பாதை முழுதும் தன்னை மாற்றிக் கொண்டே தான் பயணித்திருக்கிறது. இனியும் பயணிக்கும்.
சினேகன். ஒரு கலையில் வளர்ச்சியடையந்த சமூகத்தில் இருந்துதான் ஒருவன் மற்றக் கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதி ஏதும் இருக்கிறதா? வாழ்வியலைக் கலைகள் சொல்வேண்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் சொல்லவில்லையே. தமிழ்ச்சினிமாக்கள் காலம் காலமாக (கற்பனை கலந்தும்) வாழ்வியலைத்தான் பேசிக்ககொண்டிருக்கின்றன. இதில் இப்போது ஈழத்தமிழர்களாகிள புதிதாக நாம் எதையும் மாற்றியமைத்துவிட்டதாக நான் கருதவில்லை. பரதம் என்பது அப்படியால்ல. சினிமாக்கு யாரும் புனிதச் சாயங்களை பூசிவைக்கவில்லை. பரதம் சில சமூகங்களால் பொதிக் பாதுகாக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
நான் எதிர்பார்த்த கற்பித்தற் கலைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.
கலையை மக்கள் இரண்டு நோக்கங்களிற்காக கற்கிறார்கள். ஒன்று தன்னுடைய இனத்தின் மீது இருக்கும் பற்றுதலாலும் ,காலம்காலமாய் தங்கள் மூத்தோர் கட்டிக்காத்த தங்கள் மண்ணின் கலை கலாச்சாரங்கள் அழிந்துபோகக்கூடாது என்ற ஆதங்கத்தினாலும் இயற்கையாகவே மனவுமந்து விரும்பிக் கற்கிறார்கள்: இரண்டாவது ;,,, கலையை வியாபார நோக்கத்திற்காகக் கற்றுக்கொள்கிறார்கள்: வியாபாரநோக்கத்திற்காகக் கற்கும் கலையை னாம் எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் தப்பில்லை. ஆனால் காலம் காலமாய் பல ஆயிரம் வழி வந்த பரதக் கலையில் மாற்றுவது அல்லது மாற்றம் கொன்றுவர முயற்சிப்பது என்பது வர வேற்கத்தக்கது அல்ல.கதக்களியை மாற்றி ஆடிவிட்டு அதை எப்படி கதக்களிநடனம் என்பது. பரத்க் கலையை மாற்றி விட்டு அதை எப்படி பரதக் கலை என்பது. உங்களால் திருக்குறளில் மாற்றம் கொன்று வரமுடியுமா?? அப்படி மாற்றம் கொன்று வந்தால் அதை திருகுறள் என்றுதான் அழைக்க முடியுமா, அல்லது அது திருக்குறளின் கருத்தை அல்லது திருக்குறளின் உட் கருத்தை கொள்ளுமா?கவிதா அவர்கள் எத்தனை வருடங்களாக பரதக்கலையை பயிற்று விற்குறார் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த 8 வருடங்களிற்கு முன்னர்தான் தான் விழிப்புற்றதாக சொல்லுகிறார்.அப்படியானால் அவரும் அதற்கு முன்னர் கலையை வியாபார நோக்கத்திற்க்காகவா பயன் படுத்தினார். முதலில் எல்லாரும் ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்: வீடு இல்லாத ஒரு வீதி ஓரத்து மனிதன் தான் ( வீட்டுக்கு) சொத்து சேர்த்த கதை போல் தானிதுவும்.நாடு இல்லாதநாம் இந்தக் கலைகளை கற்று எங்கு சேர்த்து சேமித்து வைப்பது சொல்லுங்கள்: கலை என்ன காசா வங்கியில் போட்டு வைத்திருக்க , அல்லது கலை என்ன சொத்தா , விற்றுவிட்டு பத்திரமாய் லாக்கரில் வைக்க.நமக்கு என்று ஒரு சொந்த வீடும் ,நாடும் வரும்வரை , இங்கு புலம்பெயர்ந்த னாட்டில் கலையை தன் இனத்தின் வளர்சிக்காக அல்ல வியாபாரத்திற்காகவே பயன் படுத்த முடியும். அதை கவிதாவே தன் கட்டுரையின் ஒரு இடத்தில் சொல்லி இருந்தார். தன்னிடம் பரதம் பயின்ர பிள்ளைகளரங்கேற்றம் நடத்திய பின் , காணாமல் போய் விடுகிறார்கள் என்று.நமக்கு என்று ஒரு நாடுஇல்லாத போது .நம்மால் கலையையும் வளர்க்க முடியாது , மொழியையும் வளர்க்க முடியாது. ஆனால் வியாபாரநோக்கத்திற்க்க இவை இரண்டையும் கற்பிற்க முடியும்
ஒரு இனத்தின் அடையாளம் என்பதையும், வியாபாரம் என்பதையும், மேவி கலையென்பது மனிதனுக்கு ஆத்மதிருப்தியையும், அமைதியையும், ஆற்றல்திறனையும், ஒருமைப்பாட்டையும் அளிக்க வல்லாதாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
காலங்கலாமாக மாற்றமடையாமல் இங்கே எந்த ஒரு கலையையும் நாம் சொல்லிவிட முடியாது.
பரதக்கலை இன்றைய நிலையை அடைய எத்தனையோ மாற்றங்கசை; கண்டிருக்கிறது. தேவதாசிகளால் கோவில்களிலும், அரண்மனை வளாகங்களிலும் அரச புகழ் பாடிய காலங்களும் உண்டு. கோவிலில் ஆடப்பட்ட கலையை இன்று நாம் அரங்கங்களுக்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல் கோவிலில் இருந்த நடராஜரையும் எமது வசதிக்கேற்ப அரங்கத்திற்கு அழைத்து வந்திருக்கின்றோம். இன்று நாட்டியக் கச்சேரிக்கு இன்றியமையாததாக இருக்கும் பிடில் வாத்தியம் (வயலின்) தஞ்சை நால்வர்கள் காலத்தில் சேர்க்கப்பட்டது. இது ஒரு மேலத்தேய வாத்தியம் என்பது குறிபிடத்தக்கது.
தேவதாசிகளிடம் இருந்து எடுத்துக் கொள்ப்பட்ட கலை பின் பிராமணர்கள் கையில் பூஜைப்பொருள் போல புனிதத் தமையுடன் பாதுகாக்கப்பட்டது. இன்று உலகம் முழவதிலும் இருக்கும் தமிழர்கள் யாவரும் ஆர்வம்மிக்க கலையாக இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. மாற்றம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
பரதநாட்டியத்தில் மாற்றம் என்பது மேலத்தேய கலைவடிவத்தைப் போலாக்குவதோ, வேறு நடன வடிவங்களை உட்புத்துவதோ அல்ல. அது பரதத்தின் தனித்தன்மையை அழித்துவிடும். பரதநாட்டியத்தின் பாடுபொருள்கள் புதிதாக வேண்டும். புதிய சிந்தனைகள், புதிய வார்த்தைகள் என்பனவும், நிகழ்காலத்தையும் பேசுதல் என்பவை பரதத்தின் தனித்தன்மையை எந்த வகையிலும் மாற்றிவிடாது என்பது எனது கருத்து.
திருக்குறள் என்பது ஒரு தனிமனிதனின் கவிதைச்சொத்து. திருக்குறளை யாரும் திருப்பித் திருப்பி எழுதவில்லை. ஆனால் அதற்குரிய விளக்கங்களை பலரும் பலவிதமாக எழுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். எந்த ஒரு எழுத்தாளனுடைய எழுத்தையும் நாம் மாற்றிவிட முடியாது. ஆனால் மரப்புக்கவிதை என்பது புதுக்கவிதையாகி, கைக்கூக்கள், ஜென்கவிதைகள் என்ற மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. கவிதை என்பதை மாற்ற முடியாது. அதன் வடிவங்கள் மாறும்.
நான் இங்கு பேசியிருக்கும் விடயம் கற்பித்தல் முறையில் என்னுள் ஏற்ப்பட்ட மாற்றத்தை பற்றித்தான்.. வியாபாரத்திலோ எனது பணவரவிலோ எற்பட்ட மாற்றத்தையல்ல என்பதை எனது பதிவை சரியாகப் படித்திருந்தால் புரிந்திருக்கும்.
அதுசரி கலைமூலம் பணம் சம்பாதித்தல் என்ன தவறாகுமா? இன்றைக்கும் எனக்கு இந்தக் கவலை இருக்கிறது. வாழ்வின் அடைப்படைத் தேவைக்க ஈடுபாடின்றி ஒரு தொழிலையும், ஆத்மாவின் தேவைக்காக ஓய்வு நேரங்களில் பரதத்தை கற்பிக்கும் எனக்கு முழுநேர வேலையாக எனது அடிப்படை தேவைகளை பூர்த்தியும் ஒரு தொழிலாக (முழுநேர வேலையாக) பரதம் இருப்பின் அது எனது வாழ்வை இன்னும் மகிழ்ச்சியடையச் செய்யும். இன்னும் எத்தனையோ விடயங்களை செய்வதற்கும் வசதியிருந்திருக்கும். இது தவறென்று யார் சொன்னார்? இளையராஜாவிலிருந்து, ஏஅர்.ரகுமான், பத்மா சுப்ரமணியம், மற்றும் இன்றைய பெரும் கலைஞர்கள் எல்லாம் பணம் பெற்றுக்கொள்ளாமலா கலை செய்கின்றனர். இல்லை இவர்கள் கலைஞர்கள் இல்லையா. எந்த ஒன்றுக்கும் பணம் என்பது அத்தியாவசியமான காலத்தில் இருக்கின்றோம், இது பண்டைமாற்றுக் காலமல்ல. ஆனால் வியாபாரமாய் மட்டும் கலையை விற்பவர்கள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை.
கட்டுரைக்கு சம்மந்தமில்லாமல் என்னை வியாபாரி ஆக்கிப் பேசுபவர்களுக்கு, இதை சொல்வதற்கு மன்னிக்கவும்: எனது முழுநேரவேலையில் இன்னும் இரண்டுமணிநேரம் அதிகமாய் தினமும் செய்தால் என்னால் இந்த பரதக்கலையில் வரும் பணத்தைவிட இரட்டிப்பாக சம்பாதிக்க முடியும் என்பதை என்னை அறிந்தவர்கள் அறிவர்.
கவிதா அவர்கள் எட்டுவருடமாக தான் பாதையைச் சற்று மாற்றியமைத்திருப்பதாகவும், அதன்படி தான் பல வழிகளில் வளர்ச்சி கண்டிருப்பதையும் பிறருக்கு இது பயன்பயடக்கூடும் என்ற நோக்கில் எழுதிய மிக முக்கியமான இந்த கட்டுரையை பலரும் திசை திருப்பிகொண்டும், எழுதிய நபர்தான் ஏதோ இந்த கலையை மாற்றியமைத்து கட்டிக்காப்பவர் போலவும் பேசும் ஈடுகையிடுபவர்களை என்ன சொல்வது.
ஏனக்குத் தெரிந்து முழு ஐரோப்பாவிலும் சேர்த்துப் பார்த்தாலும் கூத்துக் கலைஞர்களையோ கூத்து ஆசிரியர்களையோ விரல் விட்டுத்தான் எண்ணலாம். எமது நாட்டில் கூட கூத்துக் கலையை கற்க்கு சமூகம் மிகக்குறைவானதுதானே. முதலில் இந்தக் கூத்தின் வளர்ச்சி நமது நாட்டில் வளர்ந்து அது நமது கலையென பலரும் விரும்பும் நிலையில் இருந்தாற்தான் ஐரோப்பிய நாடுகிளல் வாழும் நம் குழந்தைகளுக்கு நாம் அதைக் காட்டி ஆர்வம் வரச்செய்யலாம். முதலில் அதைக் கூத்துக் கலைஞர்கள் செய்யட்டும்.
நாம் வேண்டுhனால் கவிதா பேசியிருக்கும் ஐரோப்பியநாடுகளில் பரீட்டைமுறை படிப்பின் தாக்கங்களையும் அதனன் பயன்களையும் விவாதிப்போம். அதுதான் அவரது நோக்கம் என்று எனக்குப் படுகிறது.
யார் என்ன சொன்னாலும் எமது குழந்தைகள் பரதநாட்யத்தை விரும்பிப்படிக்கும் ஒரு கலையாக ஏற்றுக்கnhண்டதை நாம் தடுக்கவேண்டிய அவசியமில்லை. அதுகூட ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு மாற்றம் எனவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படியான ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கும் கவிதாவிற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனது இரண்டு குழந்தைகளும் பரதம் கற்றுவருகின்றனர். நாங்கள் இருக்கும் இடத்தில் கூத்து என்ற ஒரு சொல்லையே என் மகள் அறிந்திருக்கவில்லை. (மனவருத்தத்திற்குரியது). ஆனால் இந்த பரீட்சைமுறையால் படும் அவஸ்தை சொல்லி மாயாது.
எனது மகள் ஏதோ இரண்டு பட்டக்கங்களுக்குச் சொந்தக்காரியான நிலையில் தற்போது பரதநாட்டியத்தை நிறுத்திவிட்டாள். அவளுக்கு அதன் மேல் கடைசிவரை ஆர்வம் வந்ததில்லை. ஏன் என்ற கேள்விகளுக்கு சில பதில்கள் இந்த கட்டுரையில் நான் கண்டுகொண்டேன்.
சிலர் பட்டங்களை பெறுவதற்காகவே இந்த பரீட்சையை எடுக்கின்றனர். கலையில் குழந்தைகளுக்கு ஆர்வமூட்டிவிட செய்ய வேண்டும் கல்விமுறையாக்கி பரீட்சைக்காக படிப்பிக்கக்கூடாது என்ற வாதத்துடன் நான் உடன் படுகிறேன்.
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரவில்லை என்பதை சாதிபதர்க்காக நடாத்தும் இராவணகூத்துதான் இவர்களின் கூத்து ஆகவே கவிதா நீங்கள் தேடும் ‘படிப்பிதற் கலை’ சத்தியமாக இவர்களிடம் கிடைக்காது.ஆனால் இவர்களிடமுள்ள உண்மையான ஆதங்கத்தையும் நாம் மறுக்கமுடியாது அதாவது சிங்கள சமூகம் தமக்கான பாரம்பரிய கலையென தேர்ந்தெடுத்து கற்பித்தும்,காப்பாற்றியும் வருவது ‘கண்டியன் நடனம்’ அதேபோல் முன்பு தமிழராய் இருந்த மலையாளிகள் தங்களுக்கென்ற கலையாகா ‘கதைகழி’யை பெரும் பொக்கிசமாக கற்கிறார்கள் கற்ப்பிக்கிறார்கள் கூடவே ‘கலறியையும்’ ஆனால் ஆண்ட பரம்பரை மிதப்பில் இருக்கும் நாம் ஒவ்வொரு அடையாளங்களையும் இழந்துகொண்டு எம்மைப்போல் எம் கலைகளையும் அகதியாக்கிவிட்டு ஏங்குகின்றோம் அல்லது திருப்பிபிடிக்க எண்ணுகின்றோம்… (உங்களைபோல்லுள்ள கலையன்ற்களை விடுத்து வேறு யாரிடம் தாயே இவர்களால் வின்னப்பிகமுடியும்?)
ஒரு இனம் வாழ்ந்த அந்தந்த காலங்களையும் அதன் விழுமியங்களையும் பதிவுசெய்து வைக்கவேண்டியது அந்தந்த காலங்களில் வாழும் கலைஞர்களின் அல்லது படைப்பாளிகளின் கடமையாகிறது.அந்தவகையில் மற்றய படைப்பாளிகளைப்போல் பரதமும் அதன் ஆசிரியர்களும் இதுவரை எந்தப் பதிவுகளையும் செய்யவில்லை என்பது எனது தனிப்பட்ட குற்றச்சாட்டு.கூத்துக்கலையை விடுங்கள். எங்களுடைய வெற்றிகள் தோல்விகள் சந்தோசம் வலி தியாகம் துரோகம் எதுவுமே உங்களுக்கு தெரியவில்லையா ஏதொ சீதையை இராவணன் கடத்தினதை மாய்ந்து மாய்ந்து ஆடுறீங்க இங்கு எமது எத்தனை சீதைகளை எத்தனை இராவணன்கள் சிதைத்து தீயிட்டதை எப்படி நினையாது போனீங்க.இப்படி எதையுபேதிவுசெய்யமுடியாத வெறும் வியாபாரமயப்படுத்தப்பட்ட கலையைப்பற்றி ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்?
பொதுவாக ஈழத் தமிழர்களது குணாதிசயம்; வளரும் கலைஞர்களை அல்லது திறமைசாலிகளை அழிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது. இந்த குணாதிசயத்தால்தான் இலங்கையில் தமிழர்களது கலைகள் வளரவில்லை. உதாரணமாக இலங்கையின் தமிழ் சினிமாவை எடுத்துக் கொள்ளலாம். இலங்கை தமிழர்களது அனைத்து கலைகளையும் யதார்த்த வாழ்வையும் பிரதிபலிக்க வேண்டிய இலங்கை தமிழ் சினிமா குறித்து யாரும் பெருமை பேச முடியவில்லை. அழிந்தே போனது. அதே தமிழ் சமுதாயத்தினர் உருவாக்கிய சிங்கள சினிமா தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது. இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் ; அதற்கு முக்கிய காரணம் பொருளாதார தோல்விகளேயாகும். இதே நிலைதான் புலம் பெயர் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. பல படைப்பாளிகள் தமது ஆர்வக் கோளாறு காரணமாக கலை தொண்டு செய்து ; தம்மை அழித்துக் கொண்டு காணமல் போயுள்ளார்கள். இதுவே யதார்த்தம். பேசுவது இலகுவானது. செயல்படுத்துவது மிக மிகக் கடினமானது. புலம் பெயர் வானோலிக் கலைஞர்கள் – எழுத்தாளர்கள்- கலைஞர்கள் எல்லோருமே அபினை தொட்டவர்கள் போல ஆனவர்களே! பலர் தொட்டதை விட முடியாது ஆர்வக் கோளாறால் இலவச சேவை அல்லது தன் பணத்தை கரியாக்குவோரே அதிகம். விரல் விட்டு எண்ண முடிந்தோர் மட்டுமே கொஞ்சம் பொருளாதாரத்தோடு தமது கலைகளை தொடர்கிறார்கள். இவர்களில் வியாபார நோக்கோடு அதிகமானாலும் ; எல்லோரும் அப்படியில்லை.
புலிகளது காலத்தில் ஈழப் பகுதிகளில் உருவான கலைஞர்களால் ; பொதுப் படையான கலைப் படைப்புகளை கொண்டு வர முடியவில்லை. அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி எதையும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள். எனவே வன்னிப் போர் அழிவுக்குப் பின்னர் ; புலிகளோடு இருந்த ஏகப்பட்ட கலைஞர்கள் காணாமல் போய் விட்டனர் அல்லது அழிந்து போயினர். புலத்திலும் புலிகளது கலை நிகழ்வுகளில் ; புலிகளின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் உண்மையான ஏகப்பட்ட கலைஞர்கள் வளரும் வாய்ப்பை இழந்தனர். வன்னி போர் முடிவு ; புலிகளுக்கு ஆதரவான புலத்துக் கலைஞர்களையும் மந்தமடைய வைத்துவிட்டது. ஏகப்பட்டவர்கள் வழி தெரியாது தவிக்கிறார்கள்.
அண்மையில் புலிகளது நிகழ்வுகளுக்கு ஒலியமைப்பு செய்யும் ஒரு நண்பர் மிக வேதனையோடு ” முன்னர் வாரா வாரம் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும். இப்போது வருசத்தில் ஒன்று நடக்கிறதும் கேள்விக் குறி! எடுத்த ஒலி அமைப்பு பொருட்கள் எல்லாத்துக்கும் போட்ட காசு அநியாயம்” என்றார். இது நம்மால் உணர முடிந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே நாம் அனைத்த கலைகளையும் வளர்க்க ; தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் கவிதா போன்றவர்களுக்கு உட்சாகம் கொடுக்க வேண்டுமே தவிர ; அவர் போன்றவர்களையும் அழித்து விடலாகாது.
எம் நாடுகளிலிருந்து கற்றுக் கொண்டு மேன்மைப்படுத்தப்பட்ட சண்டைக்கலை – யோகா – ஆயுர்வேதம் போன்றவை வேறுநாட்டு மக்களால் நவீனப்படுத்தப்பட்டு ; நம்மவரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதை நம்மவர்கள் அதுவரை கரிசனை கொண்டவர்களில்லை. கூத்துக்கலையும் அப்படி வரலாம். பரதக் கலை மேலத் தேசங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது அறியப்பட்ட ஒரு கலையாக இருக்கிறது. எனவே பரதக்கலைஞர்கள் கூத்துக்கலையை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதில்லை. தற்காலத்தில் இருக்கும் கூத்துக்கலைஞர்களை தேடிப்பிடித்து ; அவர்களை ஊக்கப்படுத்தினால் கூத்துக்கலையும் வளரும். அலோபதி வைத்தியருக்கு ; ஆயுர்வேதம் படி என்பதை விட ; ஆயுர்வேத வைத்தியர்களை அங்கீகரித்தால் அல்லது அவர்களைத் தேடிப் பிடித்து உங்கள் குழந்தைகளுக்கு கூத்துக்கலையை கற்பித்தால் அதுவே சிறப்பான செயலாக இருக்கும்.
http://www.ajeevan.com
I completely agree with you Ajeevan. She is clever and has done a lot in dancing. She has published poetry books. She is active. As usual, our society will annoy her so much they can. Maybe Ajeevan and Kavitha can work with new things. Kavitha,do not be irritated by the silly comments, get ready to do whatever that you think is right. We will support you.
ராஜு மாமா நீங்கள் வாசித்து விளங்குவது தமிழாக இருந்தாலும் ஆங்கிலத்தில் கருத்து சொல்லும் நுணுக்கம் வெறி வெறி சூப்பர்.
கவிதா ரீச்சர் அவர்கள் நடனக்கலை பற்றியோ பரதத்தைப், பற்றியோ பேசவில்லை. கற்பித்தலின் மகத்துவத்தைப் பற்றி மட்டும் தான் கதைத்தவா. கற்பித்தலின் மகத்துவதைப் பற்றி அவவைவிட யாருக்கு இங்கு என்னா தெரியும். வெளினாட்டில் எத்தனை தலைசிறந்த பல்கலைகூடங்கள் இருந்தென்ன அவையெல்லாம் கவிதாரீச்சர் மாதிரி சுயவிமர்சன முறையில கற்கை நெறியை விமர்சிக்கவோ விளங்கப்டுத்தவோ முடியுமா?? ரீச்சர்நடன ஆசிரியை எண்ட படியாலநடனத்தை பற்ரிக் கதைசவவாக்கும் எண்டு நினைச்சு சில விளங்காததுகள் பின்னோட்டம் விடுகுதுகள்.உது வேண்டாத வேலை எண்டு ரீச்சரும், ரீச்சரின்ர கலைரசிகர்களும் விளங்கப் படுத்திப் போட்டினம். பட்டுச்சேலை பட்டுவேட்டி சலசலக்க ராஜாக்களும் ராணிகளுமாய் இருக்க பரதநாடியத்தில் வழியிருக்கு பஞ்சைப்பட்ட கூத்தில என்ன இருக்கு. கூழ் தான் குடிக்கலாம். மேல்சாதிக்கார ஆளுக விரும்புறது நம்ப பரதம் தானுங்களே?கீழ்சாதிப் பயலுங்க கூத்தும் கும்மியடிப்பும் யாருக்கு வேணுமிங்கோ?? யார் என்ன சொன்னாலும் எமது குழந்தைகள் பரதநாட்யத்தை விரும்பிப்படிக்கும் ஒரு கலையாக ஏற்றுக்கங்ண்டதை நாம் தடுக்கவேண்டிய அவசியமில்லை. அது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு மாற்றம் எனவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.எண்டு ராஜு அண்ணா சொல்லுராருங்கோ ஈழத்தமிழர் எண்டு ஏனண்ணா சொல்லுறீயள் உலகத்தமிழர் எண்டு சொன்னா எல்லாரும் வருவினம்
பரதநாட்டியமே எங்களின்நாட்டியம் அதுக்கு மேலநமக்கு எதுவும் கிடையாது ராஜு அண்ணா !!!இளையராஜாவிலிருந்து, ஏஅர்.ரகுமான், பத்மா சுப்ரமணியம்,இவர்கள் தான் உலக மகா கலஞர்கள். இவர்களைப் போலவேநாமும்பணமும் புகழும் சேர்த்துப் போடணுமிங்கோ?? அதனாலே பரதத்தை எல்லாருக்கும் பழக்கிப் போடாலாமுங்கோ??????
ஐயா கதிரேசு…
«ராஜாக்களும் ராணிகளுமாய் இருக்க பரதநாட்டியத்தில் வழியுண்டு» கூத்துக்கலையில ராஜா ராணி வேசம் கட்டுறதில்லையா என்ன? ஒருத்தர் ஏற்றுக் கொள்வதுக்காக மாற்றம் நடக்கிறதா என்ன. அது தானாக நடக்கும். நாங்கள் ஏற்றுக் கொள்வதைப் பற்றி எதிர்காலத்தில் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கப் போறதில்லை. புலம் பெயர் தமிழர்கள் செய்யும்( செலவழிக்குடம்) வேறு கூத்துக்கள் இருக்கின்றன. சாமத்தியசடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், அரங்கேற்றம் இதுக்கெல்லாம் செலவிக்க பணம் இருப்பவர்கள்தான் புலம்பெயர் தமிழர். ராஜா ராணி வேசம் கட்டவா பணம் இல்லாமல் போகப் போகிறது. நடன ஆசிரியர்கள் நினைத்தால் கொட்டன் உடுப்போட ஆட ஏலாதா? ஆடலாம். எந்த உடுப்போட ஆடுகினம் என்றது இல்லை பிரச்சனை. எப்படி ஆடுகினம் என்னத்தை ஆடுகினம் என்றதுதான். உந்த தரம் கெட்ட சினிமா பாட்டுக்கு தேவையில்லாமல் நேரத்தை செலவிச்சுக்கொண்டு ஆடித்திரியிறத விட பிள்ளைகளுக்க கலைகளை சொல்லி கொடுத்தா ஒரு காலத்தில நல்ல விசயங்களை செய்ய வாய்ப்புண்டு.
ஏன் பட்டுப் பீதாம்பரமும் உடுப்புப் போட்டுதான் ஆட வேணும் என்டு ஏதாவது சட்டம் இருக்கோ. இருக்கிறவ போட்டும். திறமை இருந்தா சாதாரண உடுப்போட யாரும் ஆடிக்காட்டலாம். உடுப்பைக் காட்டி கலை கிண்டல் பண்ணுறவர்களுக்கு அதுக்கு மேல சிந்திக்க முடியாது. வேட்டிதான் எங்கட கலாச்சாரம் கூத்தைபோல, கும்மிய போல. நீர் அதோடையோ தினமும் திரியுறீங்கள்? ஏன் ஏழைகள் வேட்டிதான் கட்டினம் என்று நீங்களும் கட்டிகொண்டு திரியுறது தானே.
ஒருத்தன் ஏழை. சுhப்பிட வழியில்லை. உடுக்க வழியில்லை என்றால் அவன் அதை பெற்றுக் கொள்றது வழி சொல்ல வேண்டுமே ஒழிய. அவனுக்கு இல்லை அதால மற்ற ஆட்கள் சாப்பிடமல் கிழிசல் உடுப்போட இருங்கோ என்று சொல்லுறது முட்டாள் தனம்.
கும்மியடிச்சாலும், கூத்தாடினாலும் மேடையேற துட்டு வேணும் ஐயா. அதுக்கு என்ன செய்யலாம் என்ற வழியை நீரும் நானும் யோசிப்போம். அதைவிட்டு போட்ட நடன ஆசிரியர்தான் அதையும் செய்ய வேணும் என்று எல்லாதையும் மற்ற ஆட்கள் தலையில போடுற தமிழராய் நாங்க இருக்க வேண்டாம்.
இந்த பிடுங்கி வாதத்தினால் ஒண்டுமே ஆகபோவதில்லை. இலங்கையில் கூட கூத்துக்கோ அல்லது நாடகத்துக்கோ தனியாக பட்டதாரி படிப்புகள் இல்லை ஆனால் நுண் கலைகளுக்கு உண்டு அதில் ஒன்று தான் பரதம். எல்லாம் தெரிந்த இந்த பிடுங்கி ஏன் தானாக கூத்து படிப்பிக்க கூடாது?
ஒரு நடன ஆசிரியரும் பிள்ளைகளை கடத்தி வைத்து படிப்பித்து பணம் சம்பாதிக்க இல்லை. பிடிக்காவிட்டால் புடுங்கி போன்றவர்கள் பிள்ளைகளை இந்த வகுப்புகளுக்கு அனுபாமல் இருக்கலாம்.இது பெற்றவரின் விருப்பு. இதில் ஆசிரியரை குறை சொல்லி குத்தம் இல்லை.
கவிதா ரீச்சருக்கு தெரியாதது யாருக்குத் தெரியுமா யோவ் கதிரேசு தெரியாவிட்டா பொத்திக்கொண்டிரு பெரியாக்கள் கதைக்கினம் .
உங்களை மாதிரி சனம் இருக்கிறதாலதான் இவையளும் பிழக்கினம்
கைதட்டி தட்டியே நாசமாப்போங்கோ
உண்மை என்பது ஒன்றே ஒன்று தான் அதன் காரணமும் ஒன்றே ஒன்றுதான்.கவிதா அவர்களை கேலி செய்வது எனது பதிவின் நோக்கல்ல எனது பதிவு சக மானிடன் படுகிற துன்பம் தொடர்பானது. எனது பதிவால் தங்களை நோகடிக்கச் செய்வது எனது நோக்கல்ல.கடந்த அறுபது வருட இன விடுதலைக்கான கோசங்களும் முப்பது வருட கால முனைப்பான ஆயுதப் போராட்டமும் நிகழ்த்தி முடிந்திருக்கிற இந்த கணத்தில் எது தமிழ்க்கலை எனற கேள்விக்கு ஒருவரிடமும் தக்க விடையில்லை என்பது மிகப்பெரு அவமானம். ஆசியாவின் மிகப்பெரு வல்லமை சார் அதி புத்திசாலிகள் என்று பட்டங்களூடு வலம்வந்தவர்கள்.கலா நிதிகள், உலகின் மிக வல்லமை படைத்த இன விடுதலை இயக்கங்களும் அவற்றின் மாட்சிமை பொருந்திய தலைமைகளும், பல்கலை இலக்கிய ஜாம்பவான்கள் பல்கலைகழகங்கள் அரசியல் சாணக்கியர்கள் என்று இருந்தவர்களெல்லாம் தமிழ்கலை வடிவங்கள் பற்றிய தகுதியான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை என்பது துயரமானது. துன்பம் தருவது இந்த ஆய்வு ஆளுக்காள் அடிபடுகின்ற ஆய்வாக இல்லமால் தமிழர் கலைவடிவங்களை ஆய்கின்ற களமாக விரிவது கண்டு மகிழ்ச்சி.இவ்வாறான ஆய்வின் மூலம் ஒருவேளை நாம் தொலைத்து விட்டிருக்கின்ற பல ஆரோக்கியமான விடயங்கள் தேடப்படுமானால் அது இவ்வாய்வின் வெற்றி.. முடிவாக பரதக்கலை எமது கலை வடிவம் இல்லை என்பதை இதி வந்துள்ள பலருமே ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். பரதக் கலை காலம்காலமாக எம்மிடையே இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்பதை இதி வந்துள்ள பலருமே ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.. காலம்காலமாக எம்முடன் இருந்த சிங்கள மனிதர்களை முஸ்லிம் மாந்தரை அவர்களின் பண்பாடுகளை பின்பற்றாத,ஏற்றுக் கொள்ளாத நாம் ஏற்றுக் கொள்வது என்கின்ற சொல் பதத்திற்கு ஏதோ விசேட அடையாளத்தை கொண்டுள்ளோம்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக பேசப்படும் பெயர் தெரிந்த தலைக்கோலி எனும் மன்னரால் விருது அளிக்கப்பட்டவள் மாதவி என்னும் தாசி. ஐந்தாம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் பேசப்படுபவள். அவளும் சங்க கால இலக்கியங்களில் பேசப்படும் விரலியரும் ஆடிய நடனங்கள் எதைப் பற்றியனவாக இருந்தன? பொதுமக்கள் ஆடிய நாட்டுப் புற நடனங்கள் பற்றி, அவர்கள் நடனங்கள் எவவாறு ஆடப்பட்டன என்றும், எப்பொருளைப் பற்றியனவாக அந்த நடனஙகள் இருந்தன என்பதைப் பற்றியும் சிலப்பதிகாரம் விவரமாக பதிவு செய்துள்ளது. அவர்கள் சதிர் என்ற பெயரில் ஆடிய நாட்டிய நடனங்களின் நுணுக்கங்களைப் பற்றியும் விவரமாக சிலப்பதிகாரம் சொல்கிறது. ஆனால் மாதவி ஆடிய நடனம் எதைப் பற்றி? அந்த நடனத்தின் ஆட்ட நுணுக்கங்கள் என்ன? அது செவ்விய மரபைச் சார்ந்ததா, அல்லது பொது மக்கள் ஆடும் நாட்டுப்புற மரபில் வந்ததா? இவைக்கு எம்மிடம் விடையில்லை .சிலப்பதிகாரத்தின் கானல்வரி, வேனிற்காதை பகுதிகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அவை காதலைப் பற்றிய்தாக அதன் பல்வேறு வகை மெய்ப்பாடுகளைச் சொல்வதாக, இருந்தது எனத் தெரிகிறது. அது பரதமே என்கின்றார் வேங்கட சுவாமிநாதன். குடக்கூத்து பற்றியும் மேலும் சிலப்பதிகாரம் பேசும் சாக்கியார் கூத்தும் நாடகபாணியாகும். பந்தாட்டம் பற்றியும் அது பேசுகிறது. அவ்வாறெனில் உண்மையில் பரதம் தமிழர்கலையா??? ஆராய வேண்டிய அவசியமும் தேவையும் நமக்குண்டு ???? கவிதா அவர்கள் சொல்கின்ற படி வயலின் எப்போ, எங்கு உருவாக்கபட்டது என்கின்ற கேள்விக்கும் அது மேற்கத்தைய வாத்தியமே என்று அடித்துக் கூறுவதற்கும் எந்த ஆதாரங்களையும் முன்னிறுத்தி விடமுடியாது. ஆனாலும்
வட இத்தாலியில், பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிடில் வாத்தியம் கண்டு பிடித்ததாக கருதப்படுகிறது. எங்களைப் போலவே ,நாடு தீப்பற்றி எரிகையில் இத்தாலி மன்னன் மகிழ்வாக பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்பது வரலாறு, பிடில் தான் வயலின் என்பதற்கும், பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக சிலர் சொல்கிற வாத்தியம் வயலின் தான் எனபதற்கு ஆதாரங்களில்லை. இதற்கிடையே அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற அரங்கேற்றம் ஒன்றில் கல்வியல் சிந்தனையாளர் பேராசிரியர். சபா ஜெயராசா உரை நிகழ்த்துகையில்,
ஆடல் உயர்ந்த கௌரவத்துடன் உணரப்பட்ட சோழர்காலத்தில் இக்கலையை திருச்சதிர் என்றும் ஆடியவர்கள் தேவரடியார்கள் என்றும் அழைக்கும் வரலாற்றை அறிவீர்கள். தொல்காப்பியத்தில் இக்கலை பற்றி கூறப்படும் மெய்ப்பாடுகள் யாவரும் அறிந்த தொன்மை.
சிலப்பதிகாரத்தில் பரதநாட்டியத்தின் எழிற்கை, தொழிற்கை எல்லாம் இன்று சமஸ்கிரத ஆடையுடுத்து அதுவே அதன் தொன்மை இலட்சணம் என தொடர்கிறது.
எம் தொல்கலையான இந்த பரதநாட்டியம் நாட்டிய சாஸ்திரத்தை வகுத்த பரதமுனிவர் வழிவந்தது என பலர் தவறாக உணர்ந்திருக்கிறார்கள்.கற்றும் வருகிறார்கள்.
என்கின்றார் .
எது உண்மை? எது பொய்? கலையை யாரிடம் இருந்து யார் திருடினார்கள். ஆராயுங்கள் நம்பிக்கையான சமூக ஆரோக்கியத்திற்கு உழையுங்கள்.
நீங்களாகவே கொண்டு வந்து மண்டபங்களில் கடவுள்களை வைத்து விட்டு அதனை கோவில் தான் என்றால் கும்பிட ஆட்களிருகின்றார்கள். கோவில் அமைக்கவும் கும்பாவிசேகம் செய்யவும் விசேட முறை உள்ளதென்பவர்களும் உள்ளார்கள்.பரதக் கலையும் அப்படித்தான் எல்லாவற்றிற்கும் நாம் காரணம் சொல்லமுடியும். ஆனால் உண்மை என்பது ஒன்றே ஒன்று தான் அதன் காரணமும் ஒன்றே ஒன்றுதான்
ரோமாபுரி எரிகின்றபோது பிடில் வாசித்தவா் நீரோ மன்னன்.
Emperor Nero Claudius Caesar. AD 37-AD 68
பதினாறாம் நூற்றாண்டு என்பதுடன் முரண்படுகின்றது.
இந்த நடனம் என்ன என்பதை ஒழுங்காக அறியாமல் படிப்பிக்க ஏன் வெளிக்க்டுகினம்.உணர்வுகளை எல்லாம் அபிநயத்தாலும் , முத்திரிகளாலும் காட்டவேண்டும் என்று பரதரே சொல்லிவிட்டார். ஆகா இந்த எடுப்பு, சாயப்புக்கள் கலர் கலரா சேலைகளை மாற்றுவது ,ஆடம்பரமாய் செலவழிப்பது எல்லாம் வீண் வேலை.எல்லாம் தெரிந்து தான் நடக்கிறது.இதற்க்கெல்லாம் பின்னான் இருந்து ஆட்டுவது பணம் , புகழ் தான் . வேறில்லை.
இந்த நடம் இப்போது நாசமாகிவிட்டது.அரைகுறை யாழ்ப்பாணத்து படிப்பும் ஒரு காரணம்.
அடா அண்ணை எப்பிடியெல்லாம் அறின்சு வெச்சிருக்காரு, உமக்கு புரில்ல இல்ல அதுக்கு பணமில்லை எண்டா மூடிக்கிட்டு இரும்.
ஈழத்தமிழர்கள் பிழைப்புவாதிகள் அடிவருடிகள் இது இயல்பானது இதை மாற்றுவது சுலபமானது அல்ல.தமிழகத்தின் தாக்கம்தான் ஈழத்தமிழரின் கலையின் வடிவம் சிங்களவருக்கு இலங்கை தான் எல்லாம். ஈழத்தமிழர்களுக்கு எதில் தனித்துவம் உள்ளது நாம் கலையைப் பற்றி கவலைப்பட கவிதா இந்த விமர்சன களத்தின் கருவி மட்டுமே..
நல்ல கட்டுரை. வாழ்த்துகள்