இந்தியா டுடே இதழ் திருமணத்திற்கு முந்தைய பாலியல் நட்பு தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது அதில் குஷ்பு தமிழ் பெண்களை இழிவு படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களிலும் குஷ்புவுக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் கால ஓட்டத்தில் திருமா திமுக கூட்டணியில் ஐக்கியமானார். குஷ்புவும் திமுக தலைமைக்கு நெருக்கமானார். குஷ்புவுக்கு விரைவில் மேலவையில் பதவி வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி,பாலகிருஷ்ணன் குஷ்பு மீது தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். குஷ்பு கற்பு பற்றி தவறான எந்தக் கருத்துக்களையும் சொல்லாத நிலையில் அன்றைக்கு குஷ்புவுக்கு எதிராக வரிந்து கட்டி களமிரங்கியவர்களே இன்று ஏதோ ஒருவகையில் குஷ்புவை பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் உங்களின் கடந்த கால எதிர்ப்புகள் அர்த்தமற்றவை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இத்தீர்ப்பு குறித்து குஷ்பு கூறும் போது. ‘’இத்தீர்ப்பு
எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. ஒரு பெண் வெற்றிகரமாக போராடுவது என்பது மிக லேசானதல்ல. நான் வெற்றி பெற்றுள்ளேன். உண்மையில் நான் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை ” என்றார் குஷ்பு.
“நான் வெற்றி பெற்றுள்ளேன். உண்மையில் நான் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை ”
கருத்துத் தெரிவிக்கவே இல்லையானால் இவ்வளவு காலமும் இவ்வளவு கலாட்டாவும் எதைப் பற்றியது?
கருத்து நியாயமானது என்று “காலச்சுவடு” உட்பப் பலர் வாதித்திருந்தது ஏன்?
குஷ்பு போன்ற பெண்கள் நீதிமன்றத்தில் “வெல்லுவது” எளிது.
நளினி போன்ற பெண்களும் தொழிலாளி வர்க்கப் பெண்களும் நீதிமன்றத்தில் வென்றால் சொல்லுங்கள். அது சாதனையாகவே இருக்கும்.
திருமதி சுந்தர்.C இந்தியா டொடை இத்ழுக்கு கொடுத்த பெட்டியில் தவறன கருதுக்கள் இல்லை என்பதை பெரிய கோர்ட்டில் த்ள்ளுபடி ஆகியுள்ளது இது அவர் மேதுள்ள் மதிப்பை குடுதல் ஆக்கியுள்ளது. பாராட்டுக்ள்
குரு இராதாகிருஷ்ணன் – ‘அவர் மேலுள்ள மதிப்பை கூடுதல் ஆக்கியுள்ளது’ – அப்படியா? அப்படியா? அப்படியா?
திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளாதவர்கள் யாரும் கிடையாது, அதில் எந்த தவறும் இல்லை. – இது உங்கள் திருமதி சுந்தர் ச்சி சொன்னது. உங்கள் வீட்டில் போஸ்டர் அடித்து மாட்டி வையுங்கள். உங்கள் சந்ததியினருக்குப் பயன்படும். (மன்னிக்கவும்)
சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் கற்பியல், களவியல் என்று இருவகைப் பலியல் ஒழுக்கங்கள் பற்றிப் பேசப் படுகிறது. களவியல் என்றால் என்ன?
திருமணத்துக்கு முந்திய பாலுறவு எல்லாச் சமூகங்களிலும் இருந்து வந்தது தான். அதைக் குற்றமாக்க என்ன தேவை, ஏன், எப்போது என்று விசாரிப்பது தகும்.
முன்பெல்லாம் பருவம் வந்ததுமே மணமுடித்தனர்.
இப்போது அதற்குப் 10-15 ஆண்டுகளாவது கழித்தே மணமுடிக்கும் படி, பொருளாதார குடும்பச் சூழல் நிர்ப்பந்த்தங்கள் உள்ளன.
மனித சமூகம் விதித்த படி மனித மனமும் உடலும் எப்போதும் இயங்க முடியுமா?
பண்பாட்டின் பேரால் சமூகங்கள் தம்மை வதைத்துக் கொள்ள ஒரு எல்லை உண்டு.