இந்தியாவில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. அன்றாடம் பல்லாயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் குறைபாடு, தடுப்பூசி பற்றாக்குறை என இந்தியா தடுமாறி வரும் நிலையில் கொரோனா தொற்றின் இன்னொரு விளைவாக ‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை வகை நோய் தொற்று பரவி வருகிறது. பல்லாயிரம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு பார்வையிழப்பு, உயிரிழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இதற்கு தேவையான மருந்தும் பற்றாக்குறையாக இருக்கிறது.கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே இந்த நோய் தாக்கி வருகிறது. இதனால் கருப்புப் பூஞ்சையை பரவும் நோயாக டெல்லி அரசு அறிவித்தது. இப்போது இந்திய அரசும் அறிவித்துள்ளது.