கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை.
பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.. தமிழ் பெண்களின் கவிதை வெளிப்பாடுகள் என்பது தமிழ் இலக்கிய பரப்பில் சமீப காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று. சமூகத்தின் பிரச்சனைகளை ஏதோ ஒரு இடத்தில் தன்னுடையதாக கவிஞர் உணரும் போது படைப்பின் வீரியம் வலுப்பெறுகின்றது. இந்த உணர்வுகளை பெண்கள் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் தமது படைப்புகளில் கையாள்வதை காணக்கூடியதாகவே இருக்கிறது. பெண் கவிஞர்களது எழுச்சி என்பது இன்றைய தினங்களில் மகத்தான ஒரு விடயம்.
இத்தனை காலங்களும் கவிதை மரபுக்குள் சேர்க்கப்படாத பெண்சார்ந்த விடயங்கள், நிதர்சனங்கள், சாதாரண நடைமுறை வாழ்கையின் நிஜங்கள், ரணங்கள், காலகாலமாய் சேர்ந்து குவிந்த கோபங்கள் அனைத்தும் போர்வீரர்கள் போல எழுந்து வரும் காலத்தில் இன்று இருக்கின்றோம்.
பெண் எழுத்து என்றும் பெண்மொழி என்றும் பெண்களின் கவிதைகள் பற்றிய விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. பெண்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக மொழி என்ற விவாதமும் பெண்மொழி என்ற வார்த்தைப் பிரயோகமும் ஆண்களின் உருவாக்கமே என்ற எதிர்ப்புக் குரல்கள் பெண் கவிஞர்கள் மத்தியில் எழுந்து இவை பற்றிய விவாதங்களும் தொடர்கின்றன. சமீபத்தில் கவிஞர் கனிமொழியின் கவிதைத் தொகுதி அகத்திணை என் கைசேர்ந்தது. இத்தொகுதியில் என்னை கவர்ந்த சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஓவ்வொரு பெண் வாழ்விலும் நடக்கக்கூடிய சின்ன சின்ன விசயங்கள் என்று நாம் கடந்து செல்லக்கூடிய சம்பவங்கள் கூட எத்தனை ரணங்களை கொண்டது என்பதை காட்டும் ஒரு கவிதையோடு கனிமொழியின் கவிதைகளுக்குள் நுழைவோம்.
புருவம் செப்பனிடப்பட்டது
ஊடலின்
ஊபரி மயிர்
நீக்கப்பட்டது
முகம் பொலிவூட்டப்பட்டது
கைகளில் கோலம் போட்டார்கள்
குடியேறப் போகுமுன்
சீர் செய்யப்படும் வீடுபோல
வேலைகள்
நடந்து கொண்டிருந்தன
தம்மைப் பாதித்த விசயங்களையும் தான் சொல்ல நினைத்த விசயங்களையும் நேரடியாகவும் எளிமையாகவும் சொல்லிவிடுவதால்தான் கவிதைகள் வாசகர்களுக்கு நெருக்கமான கவிதைகளாகிப் போய்ச் சேரக்கூடியதான படைப்பாக வெளிவருகிறது. கனிமொழியின் கவிதைகளிலும் இப்படியான அலங்காரமறுத்து வரும் கவிதைநடையை நாம் காணக்கூடியதா இருக்கிறது.
அப்பா பற்றிய சில வரிகளில்…
சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா
உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது
இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த உன் நேசத்தை
ஏன் ஒளித்துவைத்திருந்தாய்
என்ற வரிகளிள் எம் சமூகத்தில் அப்பாக்காளுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் இடைவெளியையும் நேசத்தையும் மொழி நயத்துடன் சொல்லியிருக்கிறார் கவிஞர்.
பாவ விமோசனத்திற்கு
ராமனுக்காக காத்திருக்காதே…
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்
…
இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு
கற்பென்று வந்தாலே அது பெண் என்ற ஜீவனுக்குள் அடங்கிவிடுவதாகவும், பெண்ணக்கே உரிய ஒரு தமிழ் சொற்பதமாகவும் மாறிவிட்டிருக்கும் சமூகத்திற்கு வேறு எப்படி சொல்ல முடியும்.
சமூகத்தின் அவலங்களை தாண்டிச் செல்வது என்பது படைப்பாளிகளுக்கு இலகுவானதல்ல. அவஸ்த்தையின் குடைச்சலில் உருண்டு பிரண்டு வெடிக்கத்தயாரான நிலையில் கவிதைகள் வந்து விழுவதுண்டு. அதன் கனத்தை மேற் கண்ட கவிதையில் காணமுடிகிறது.
மரபுவழிப் பழக்கமாக பெண்கள் தெய்வமாகவோ அல்லது அரக்க குணமுள்ள பூதமாகவோ பார்க்கப்படும் காலத்தை நாம் இன்னும் கடக்கவில்லை. ஒரு பெண்ணுக்குரிய சாதாரண மனித இயல்புகள் என்பது மரபு வழிப் போர்வையிலிருந்து இன்னும் கலைக்கப்படாமலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த கவிதை வரிகளைப் படிக்கும் போது சிந்தையில், எமது இலக்கியங்களில் எதிலும் ஒரு பெண்ணால் ஒரு ஆண் பாவவிமோசனம் பெற்றதாக புகழ் பெற்ற கதைகளே இல்லையே என்ற கேள்விதான் எனக்குள் எழுகிறது.
இப்படியாக மரபுவழிப் போர்வைகளை விலக்கி எழுந்து வர முயற்சிபவர்கள்கூட பலர் தெய்வம் போன்ற தோன்றந்தரும் தன் பெண்தன்மைக்கு இழுக்கு வருவானேன் என்று பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மரபுவழிப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்வதை தொடர்ந்து வரும்
கவிஞரின் வரிகள் சித்தரிக்கின்றன.
புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கோடி பிடிப்போம்
கோஷம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்
பெண்ணியச் சிந்தனைகளும், எழுத்துக்களும், கூச்சல்களும் கூர்மையான வீச்சுடன் வெளிவந்தாலும் அதன் செயல்பாடுகள் என்பது பல நேரங்களில் வெறும் சொல் வடிவிலும் கூச்சலிலும் காணமல் போய்விடுகின்றதே என்ற ஆதங்கம் பெண் மீதான குற்றச்சாட்டாய் கவிதையில் வெளிப்படுகிறது. பெண் தன்மையென்பது சிக்குண்ட சுயம் என்ற சமூகத்தில் அதன் நிஜத்தன்மையை வெளிப்படையாப் பேச தயங்கும் பெண் படைப்பாளிகளுக்கான கேலி நிறைந்த வரிகள் இவை.
தனது ஆற்றாமையை இப்படி கவிதை செய்கிறார்.
என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு
கருத்தரிப்பதற்காக உடல் உருவாக்கும் குருதி, பிறப்பு நிகழ்வதற்கான உனதும் எனதுமான வாய்ப்பு தூமையிடம் கிடக்கும் போது, தூமை என்பது ஒரு இழிவுச்சொல்லாகவும், தீட்டின் பொருளாகவும் மாறிக் கிடக்கும் தன்மை கலைந்தால் நாம் சில தூரம் போகலாம் என்பதை எம் சமூகம் புரிந்து கொள்ளும் என்ற என் எண்ணம் எப்போதோ கலைந்துபொய்விட்டது. இன்னும் பல ஆண்டுகள் கடந்த பின்னும் இதே கோபத்தை வேறு வரிகளில் வேறு பெயரில் காணநேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திருப்பதிக்கு போக முடியாவிட்டால்
தி நகர் கிளையில் காணிக்கை செலுத்தலாம்
மூன்று நாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
ஹரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனீசியக் கோயிலில்
செருப்புப் போட்டுக்கொள்ளலாம்
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை
சங்ககாலப் பெண்கவிஞர்களின் படைப்புகள் சுதந்திரம் காணப்பட்டாலும் சமகால பெண்கவிகளின் கவிதைகளே துணிவையும், சீற்றத்தையும் கனமாகத் தாங்கி வருகிறது. பெண்மையின் தனித்துவ அடையாளமே தூமை. இத்துமையை அடையும் பெண்னைக் நீராட்டுவிழா என்ற பெயரில் கொண்டாடுவது என்பதுகூட ஒரு ஆணுக்கு அறிவிப்பதற்காகவே என்றால் மிகையல்ல. பின் மாதங்களில் மூன்று நாட்கள் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவதும், தீட்டு என்ற பெயரில் முடக்கி வைக்கப்படுவதும் பல இடங்களில் மருவிப்போயிருந்தாலும், கோயில்களில் இன்னும் இந்தத் தீண்டாமை சற்றும் மாறாமலேயே இருப்பதையிட்டு மேற்கண்ட வரிகளில் அதற்கான தனது எதிர்குரலையும் நேரடியாகவே வைக்கிறார் கவிஞர்.
அகன்றுகொண்டே போகிறது
எப்போதும் போல் இடைவெளி
கோடான கோடிக் கோளங்கள் ஒன்றில்
என்றேனும் ஒரு கணப்பொழுதில்
நம் கனவுகள் உரசக்கூடும்
நம்பிக்கையில்
வீசியெறியாமல் வைத்திருக்கிறேன்
இவ்விருட்சத்தின் விதையை
நம்பிக்கையை மீறி இந்த கவிதையில் நான் தெரிந்து கொண்டது காதலைத்தான். ஐம்பூதங்களில் ஒன்று விடுபட்டுவிட்டது என்றால் அது காதல்தான். நம்பிக்கையோடு காத்திருக்கும் கண்களுக்கான ஒத்தடம் போல கவிதை மனவெளியை நிரப்புகிறது.
திடுக்கிட்டு எழுந்து அலைகிறது கை
முனங்குகிறாய்
கதகதப்பான அணைப்பில்
உறங்கிப்போகிறாய் நிம்மதியாக..-
வாழ்வதற்கான பட்டியல்
நீள்கிறது
என்று சின்ன சின்ன வாழ்க்கைக் குறிப்புகளால் உணர்வுகள் புகுத்திக் கவிதை நெய்கிறார் கவிஞர்.
கனிமொழியின் கவிதைகள் பிரபலமாக இருப்பதற்கும் அவருடைய படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புகளுக்கும் தனது பின்புலமும் ஒரு காரணம் என்பதை ஒரு அசௌகரியமாகவே உணருவதாக செவ்விகளில் கவிஞர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். யாரும் நிமிர்ந்து பார்க்கவைக்க்கூடிய பின்புலத்தைக் கொண்டிருப்பதால் மட்டும் இவரது சமூகப்பார்ரவகளையும் படைப்புகளையும் நாம் கடந்து போய்விட முடியாது. தனக்கென ஒரு இடத்தை படைப்புலகத்தில் கவிஞர் கனிமொழி பதித்திருப்பது திண்ணம் என்றாலும் திடமான சமூகப்பார்வையைக் கொண்ட கவிஞர் என்பதை இவர் நடைமுறையிலும் சாதித்துக்காட்டவேண்டிய எதிர்பார்ப்பு இருப்பது சாதரணமானவையே.
ஒரு பெண் இராமனுக்காக பாவவிமோசனத்துக்காகக் காத்திக்க வேண்டாம். /பாவ விமோசனத்திற்கு
ராமனுக்காக காத்திருக்காதே…
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்/ அக்கினிப் பிரவேசம் அகலியை விமோசனத்துக்குப் பிந்தியதே. அக்கினிப்பிரவேசம் செய்த சீதை ஒரு வண்ணானின் சந்தேகத்தால் இராமனால் மீண்டும் சந்தேகிக்கப்பட்டு காடேகினாள் என்பது கதை. ஏகபத்தினி விரதன் இராமனாக இருப்பதை விட விரும்பாத ஒருத்தியைத் தொடாத இராவணனாகவே இருப்பது மேல். இது சந்தேகத்தீயில் எரிந்து அன்றாடம் சாவதை விட மேலானது தானே.
கவிதா,
நீங்கள் கனிமொழி பற்றி எழுதிய முன்னுரையும் கவிதை குறித்த விமர்சனமும் நெஞ்சைத் தொடுகிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள்..
கவிதைகள் நன்றாக இருந்தால் மட்டும் போதுமா ? பதவியில் இருக்கும்போது எம் உறவுகள் மடிவதை பார்த்து கொண்டு இருந்த உனக்கு மணம் இருக்காது.மணம் இருப்பவனே மனிதன்,அப்போ நீ ? நீயே உணர்ந்து கொள்.
குடமுழுக்கு கோலாகலமாக
கூட்ட நெரிசலில்
வியர்வைக்குளியல்
நா வறண்டு
கண்களில் கனல் தட்டுகிறது
அர்ச்சகரின்
அடிப்பொடிக்கு,
புதிய திசையில் பயணீக்க நினைக்கையில் பழகிய நண்பனே பள்ளத்தைக் கிண்டுகிறானே இந்த நூற்றாண்டிலும். சீதையும் ராமனும் நேற்றய மானிடர் அன்றூ இருந்த மானுட நேசம் இன்றூ இல்லையே.கவிதைகள் வெறூம் அலங்காரப் பொருளாகி குடிக்கும் போது வரும் போதையாயிற்றூ.கனிமொழியும் பெண்தானே சமூக விதிகள் தாண்டிக் குதிப்பது சாத்தியமா?
/தனக்கென ஒரு இடத்தை படைப்புலகத்தில் கவிஞர் கனிமொழி பதித்திருப்பது திண்ணம் என்றாலும் திடமான சமூகப்பார்வையைக் கொண்ட கவிஞர் என்பதை இவர் நடைமுறையிலும் சாதித்துக்காட்டவேண்டிய எதிர்பார்ப்பு இருப்பது சாதரணமானவையே./- இது உண்மை!.கவிஞர் கனிமொழி ஒரு சிறந்த கவிஞர்,சிறந்த பெண்நிலைவாதி!,சிறந்த அறிவாளி!.
சொந்த சகோதரர்களே இரத்தம் படிந்த கைகளுடன்,ஹாய்யாக அலையும் போது,மனித பிணங்களின் மேல் களிப்புடன் இறைச்சி விருந்து உண்ணும் போது,கவிஞர் கனிமொழி இவைகளை செய்தது? தப்பில்லை என்ற கவிஞர் கவிதாவின் கூற்று தப்பில்லை என்றே தோன்றுகிறது!.வாழ்க வளமுடன் கவிஞர் கனிமொழி அவர்கள்!.
கூலிக்கு சொற்களைக் கோர்த்து,சுகமாக வாழும் சோற்றுக் கவிஞர்களிடம்,’நடைமுறையிலும் சாதித்து காட்ட’ எதிர்பார்ப்பது ஏமாளித்தனமானது;எள்ளிநகையாட வேண்டியது.
வசனங்கள் ஒருவனை மனிதனாக்காது. அதுவும் அரசியலுக்காக தனது சொந்த மக்கலுக்கே பொய் சொன்ன ஒரு அற்ப ஜீவன்.
//இராவணன் கற்புக்கும் இவளே பொறுப்பு. கற்பென்று வந்தாலே அது பெண் என்ற ஜீவனுக்குள் அடங்கிவிடுவதாகவும், பெண்ணக்கே உரிய ஒரு தமிழ் சொற்பதமாகவும் மாறிவிட்டிருக்கும் சமூகத்திற்கு வேறு எப்படி சொல்ல முடியும்.//
ஒரு பெண்ணால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்…
பொன்மானைக் கொண்டு வரச்சொல்லி சீதை அழுதிருக்காவிட்டால்… இராவணனாவது இராமனிடமிருந்து சீதையைத் தூக்குவதாவது… இராமனை ஆக்கினாளோ இல்லையோ… இராவணனை அழித்தாள் சீதை…
அன்று இராவணன் சீதை முன் மண்டியிட முன்னரே, சீதை தன் முந்தானையை விலக விட்டு இராவணனை அணைத்திருந்தால் இராமாயணத்தில் ஒரு பெரும் ஓட்டையே விழுந்திருக்கும். சந்தர்ப்பத்தை இராவணன் பயனபடுத்தியிருப்பானல்லவா…
நல்ல மனம் கொண்ட இராவணன் சீதையின் மனமாற்றத்திற்காக காத்திருந்தான். சீதை அவனை மயக்கும் வகையில் நடக்காததையே அங்கே “இராவணன் கற்பிற்கும் சீதையே பொறுப்பு” என்றிருக்கலாம்.
இராமன் சீதையின் கற்பில் சந்தேகிக்கவில்லை, சீதையை மீட்டவுடனேயே சீதையைத் தீக்குளிக்க வைக்க எண்ணவில்லை. அயோத்தி வரும் வழியில் காட்டில் வேடுவனொருவன் தன் மனைவியை வையும் போது “நான் இராமனைப் போலல்ல வெளியே போடி” என்று வேறொருவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவியை துரத்தியபோது; உலகம் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்கிறது, என்பதாலேயே சீதை தீக்குளிக்க இராமன் சம்மதித்தான்.
இன்றைய பெண்கள் clubs, disco, pub என செல்லும் போது தங்களது திருமண மோதிரங்களை களைந்து வைத்துவிட்டுப் பொவதை கம்பன் அன்றே உணர்ந்திருக்கிறான் போலும்… அதனாலேயே சீதையைப் பார்த்து வந்த ஹனுமான் “சீதை கையில் உன் மோதிரம் கண்டேன்” என்கிறான் என்றான் கம்பன். அதாவது சீதை கற்புடனேயே இருக்கிறாள் என்பது அர்த்தமாகும் அதாவது இன்றைய பெண்களைப் போல நீ போட்ட மோதிரத்தை கழற்றி எறியவில்லை என்பதாகும்…
//பின் மாதங்களில் மூன்று நாட்கள் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவதும், தீட்டு என்ற பெயரில் முடக்கி வைக்கப்படுவதும் பல இடங்களில் மருவிப்போயிருந்தாலும்…//
இது பற்றி ஒரு நோர்வேஜிய பெண் என்னிடம் கேட்டாள்… “உங்கள் தமிழ் ஆண்கள்; பெண்களை மூன்று நாட்கள் அறையில்ப்பூட்டி வைப்பார்களாம்… அது கொடுமையல்லவா..?” எனக் கேட்டாள்.
அந்த நோர்வேஜிய இளம்பெண்ணுக்கு பண்பில் சிறந்த பண்டைய தமிழ்ப் பண்பை விரிவாக சொல்லவேண்டியது எனது கடமையானது…
இவ்விதம் தமிழ்ப் பெண்களே தமிழ்ப் பண்பாட்டை தவறாக உணர்ந்து கொண்டிருப்பது மிகவும் வருத்ததக்கதாக இருக்கிறது…
பின்னர் நாம் தமிழர் நாம் இந்துக்கள் என்று ஏன் பீற்றிக் கொள்ள வேண்டும்?
பெண்களுக்கு அந்த மூன்றோ, ஐந்தோ அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய்க் காலமாகும். இந்த நாட்களில் ஆண்களுக்கு நடக்காத ஒரு நிகழ்வு பெண்களுக்கு நிழ்ந்து கொண்டிருக்கும். அதாவது கருப்பையில் கரு உருவாவதற்காக ஆயத்தமாயிருந்த அத்தனை கலங்களும் கரு உருவாகாததால், பெண்ணின் உடலிலிருந்து வெளியேறும், அவ்வேளை இரத்தமும் வெளியே வந்து கொண்டிருக்கும்.
இந்த நாட்களில் பெண்கள் மிகவும் ஓய்வு பெற வேண்டியது அவசியமாகும். இல்லையேல் தலைச்சுற்று, தலையிடி, போன்றவை வந்து பெண்ணை நிலைகுலைய வைத்துவிடும்…
உதாரணமாக ஒரு பெண் மாதவிடாய் நேரத்தில் உணவு சமைக்கிறாளென வைத்துக் கொள்வோம்… அந்தக்காலத்தில் மட்டுமல்ல இந்தக்காலத்திலும் சமையல் என்பது கடினமான விடயம். அங்கே இங்கே ஆடி அசைந்து, ஓடி அலைந்து, வெந்தது கருகாகமல், பொரிந்தது எரியாமல் அடுப்புடனோ நெருப்புடனோ, Gas cookerஇலோ Electric cookerஇலோ போராடும் போது, தலைச்சுற்றால் அடுப்பின் மேலோ எதின் மேலோ விழுந்துவிட்டால் அதனால் வரும் இரணம் வலி இவையெல்லாம் சேர்ந்து மூன்று நாட்களுக்குப் பதில் முப்பது நாட்கள்… இல்லை முந்நூறு நாட்கள் படுக்கையில் படுக்க வைத்துவிடும்.
மேலைநாட்டவர் அப்படியில்லையே என விதண்டாவாதம் செய்வோரும் உள்ளனர்… மேலைநாட்டு உணவு வழக்கம் நம் நாட்டு உணவு வழக்கத்திலும் வெகுவாக மாறுபட்டுள்ளது. அதைவிட மேலைநாட்டுப் பெண் தன்னால் முடியவில்லையென்றால் உணவகம் சென்று உண்பர் அல்லது pizza வை வரவழைத்துண்பர்… நம் நாட்டிலோ அல்லது நம் நாட்டவர் வெளிநாடுகளிலோ அப்படியல்ல… ஊரரிசிச் சோறும் வறுத்த பயத்தம் பருப்புக் கறியும், கோழிக்கறியும் நண்டுக் கறியும் மீனோடு தடிப்பான குழம்பும் மீன் பொரியலும் இல்லையென்றால் நம் நாட்டவருக்கு உணவருந்திய திருப்தியே இருக்காது… இதை நம் நாட்டு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுடன் உணவருந்திருக்கிறேன்… தமிழர் குடியிருக்கும் அந்த மாடி வீடுகளின் படிகளிலேயே தமிழர் சாப்பாட்டு மணம் குடியிருக்கும்…
இதைவிட மாதவிடாய் வந்திருக்கும் பெண்கள் பழுவான வேலைகளில் ஈடுபடும் போது இரத்தப் போக்கும் பெருகும்…
வடநோர்வேயில் நானிருந்த போது என்னுடன் ஒரு தமிழ்ப் பெண் நான் வேலை செய்த உணவகத்தில் வேலைசெய்தாள். இந்த மூன்று நாட்கள் வரும் போகும் அதைப் பற்றி இங்கே அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை…
ஒருநாள் அவள் ஏறத்தாழ இருபது கிலோ நிறையுள்ள ஒரு உருளைக்கிழங்குச் சாக்கை தூக்கிக் கொண்டு சமையலறைக்கு வர முற்பட்டபோது அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள்… நாமெல்லாம் ஓடிச்சென்று அவளைத் தூக்கியபோது அவளது அங்கி முழுவதும் இரத்தமாக இருந்தது.
உடனேயே நோர்வே நாட்டு உணவக முதலாளி தனது பிரத்தியேக அறையில் அவளைப் படுக்க வைத்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யச் சொன்னான். அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும்; நடந்ததைச் சொன்னேன்…
அவள் நான் கேட்காமலேயே சொன்னாள் “இண்டைக்கு என்னவோ நிறையவே வந்துட்டுத்து…” என்றவள் முதலாளி ஏதும் பேசினவனே” எனக் கேட்டாள்… நான் “அவன் நல்லவன் ஒன்றும் உன்னை பேசேல்லை இண்டைக்கு உன்னை வேலை செய்ய வேண்டாம் எண்டிருக்கிறான்” என்றேன். தொடர்ந்து “மடைச்சி தீட்டு வந்த நேரத்தில நீ ஏன் அந்தப்பாரத்தைத் தூக்கினனீ… என்னட்டச் சொல்லியிருந்த நான் இழுத்து வந்திருப்பனே” என்றேன் வெட்கம், வேதனை கலந்த சிரிப்புடன் “thanks” என்றவள் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்…
அதன் பின்னர் அந்த நோர்வேஜிய உணவக முதலாளி அவளை மாதவிடாய்க் காலங்களில் கடினமான வேலை செய்யவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்தான்… இது அவளுக்கு மட்டுமல்ல எல்லாப் பெண்களுக்கும்…
இன்றும் அந்தத் தமிழ்ப் பெண் இங்கேதான் இருக்கிறாள்…
இதை என்னிடம் கேட்ட அந்த நோர்வேஜிய இளம் பெண்ணுக்குச் சொல்லி, இதனால்த்தான் நம் முன்னோர் இந்த மாதவிடாய்க் காலங்களில் பெண்களை ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் என்றேன்.
அந்த நோர்வேஜிய இளம் பெண் “அது நல்லதுதானே” என்றுவிட்டு “யாராவது தமிழன் உனக்குத் தெரிந்தால் கூறு நான் அவனைத் திருமணம் செய்கிறேன்” என்றாள். நகைச்சுவையாகத்தான் சொல்கிறாள் என நினைத்தேன் ஆனால் அந்த நோர்வேஜியப் பெண் ஒரு தமிழனையே திருமணம் செய்து கொண்டு “இந்த மூன்று நாட்களும் ஓய்வெடுக்கிறேன்” என்றாள் அண்மையில் சந்தித்தபோது…
‘மாதவிடய் வந்திருக்கும் பெண்ணை கோவிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்யத் தடை’ என்றிருக்கிறார்கள் இந்த இரு பெண்களும்…
அன்றைய காலத்திலும் சரி இன்றும் சரி கோவில் செல்வது shopping centre parkingல் வாகனத்தைத் தரித்து விட்டு பொருட்கள் கொள்வனவு செய்து கொணர்வது போலல்ல…
அன்று கோவிலுக்கு நடந்தே செல்வர்… இன்று காரில்ச் செல்வர்… காரில்ச் சென்றால்க் கூட வெளி வீதியிலிருந்து ஏறத்தாழ ஓரிரு கிலோமீற்றர் தூரத்தில் வாகனம் தரிக்க வேண்டும். மிகுதித்தூரம் நடந்தே செல்ல வேண்டும்.
–
இலங்கையிலல் நல்லூரில் நான் பார்த்தது – பக்த்தர்களின் இடிசல் நெரிசலிலேயே இரத்தம் பெருக ஆரம்பித்துவிடும். இதை விட நடந்தே வரவும் வேண்டும்…
உங்களது சேலையில் இரத்தத்தோடு நீங்கள் ஒரு கடைக்குக் கூடச் செல்ல மாட்டீர்கள்.
கோவிலுக்குச் சென்று அங்கிருந்து இரத்தம் தோய்ந்த உடையோடு வர நேர்ந்தால் உங்களுக்கே அது அவமானமாக இருக்காதா சொல்லுங்கள்…
அவசர உலகில், பண நெருக்கடியான சூழ்நிலையில் கணவனுக்கு உதவ எண்ணும் தமிழ்ப் பெண்கள் உரிய முறையில் இரத்தம் உறிஞ்சிகளை அணிந்து கொண்டு மேலதிகமாக சிலவற்றை தமது கைப்பையில் எடுத்துக் கொண்டு பழுவில்லாத அலுவலக வேலைகளுக்கு இன்றைய நாளில் போவது வழமை; அலுவலக மலசல கூடம் மிகவும் சுத்தமாக இருக்கும். – இலங்கையிலும் -…
ஒருநாள் ஒரு கோவிலடியில் சலம் கழிக்குமிடம் எங்கே எனக் கேட்டபோது ஏறத்தாழ அரைக் கிலோ மீற்றர் செல்ல வேண்டுமென்றனர். மலசல கழிவறைக்கு வந்த போது; கோவிலுக்கு வந்து இந்த அசுத்தமான கக்கூசுக் காற்றைச் சுவாசிக்க வேண்டுமா என நினைத்தேன், சத்தியும் வரும் போல இருந்தது. ஒரே ஓட்டமாக வீடு வந்து சேர்ந்தேன்… அப்படிப்பட்ட மலசல கூடத்தில் நின்று இரத்தம் உறிஞ்சிகளை மாற்ற உங்களுக்கு மனம் வருமா…? இல்லவே இல்லை…
எத்தனை புரட்சிக் கவிதைகள் கதைகளை எழுதினாலும் இது ஆண்கள் போட்ட சட்டம் என தண்டவக் கூத்தாடினாலும் இயற்கை நமக்குத் தந்ததை எவராலும் மாற்ற முடியுமா…? அப்படி மாற்றிவிட்டால்; அப்படி மாற்றிக் கொண்டவள் பெண்ணே அல்ல… அவள் ஒரு ஆண்…
ஆக யாரும் இயற்கையை மாற்றியதாகச் சரித்திரமில்லை… இயற்கை போட்ட கோடுகளுக்குள் நாம் நமது வாழ்வை சந்தோசமாக நோய் நொடியில்லாமல் புரிந்துணர்வுடன் வாழ்வதற்குத்தான் நம் தமிழ்ப் பண்பாடு நெறிமுறைகளை வகுத்துள்ளது…
தமிழ்ப் பண்பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாது கனிமொழியும் கவிதாவும் தமிழராகப் பிறந்திருக்கவே தேவையில்லை…
தயவுசெய்து இராமாயணத்தையும் தமிழ்ப் பணபாட்டையும் தமிழ்ப் பண்பாடுகள் ஏன் வரையறுக்கப் பட்டிருக்கின்றன என்பதையும் சரிவரப்புரிந்து கொண்டு வாழப் பழகுங்கள்.
பிள்ளை பிறக்கவில்லை என்றால் அரசமரத்தைச் சுற்று…
பெண்கள்தான் வாசலில் கோலம் போட வெண்டும்…
வினாயகரைக் கண்டால் மாறு காது பிடித்து தோப்புக் கரணம் போடு…
என்ன மோட்டுக் கோட்பாடுகள்… என்றுதானே நினைக்கிறீர்கள். இன்றுதானே இணையம் இருக்கிறது தேடிப்பாருங்கள் இவற்றில் ஏதாவது பொருளிருக்கிறாதா என…
அரசமரக்காற்று; கர்ப்பப்பையின் சில கோழாறுகளை போக்கும் என மேலை நாட்டு மருத்துவர் கூறியுள்ளனர்…
குனிந்து நிற்பது யோகாசனம் போல ஒரு பயிற்சி… அது கர்ப்பப்பையிற்கு உகந்ததெனச் சொல்லியிருக்கிறார்கள்… இயற்கை ஆண்களுக்கு கர்ப்பப்பையை வைக்கவில்லையே… ஆக கர்ப்பப்பையுள்ளவர்தான் கோலம் போடவேண்டும்…
இடது காதுச் சோணையில் வலது கண் நரம்புகளும் வலது காதுச்சோணையில் இடது கண் நரம்புகளும் முடிகிறது. இந்தச் சோணைகளை அமுக்கி விட்டால் கண் பார்வை கெடாது ஒளி பெறும் என ஜேர்மானிய மருத்துவர் வியந்து கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதில்; மாறுகாது பிடிப்பதால் சீரான அமுக்கம் உண்டாகிறது எனவும் இருந்து எழுவதன் மூலம் அந்த அமுக்கம் மிகைப்படுகிறது எனவும் கூறியிருக்கிறார்…
சொல்லுங்கள் யார் மூடர் என… கண்ணை மூடிக் கொண்டு கன்னா பின்னா என எழுதிய நீங்களா அல்லது இவற்றைச் செய் நீ நலமுடன் வாழ்வாய் என சீரான வாழ்வுக்கு வழி வகுத்த நம் முன்னோரா…
ஒரு கணனியும் அதில் எழுதுவதற்கு உகந்த மென் பொருளும் இணைய இணைப்பும் கிடைத்துவிட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் எழுதித் தள்ளுவீர்கள்…
நன்றி
சுஜி நோர்வே.
சுஜி உங்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்! அறிந்த விடயமானாலும் சரியான சந்தற்பத்தில் சரியான இடத்தில் சமையோசிதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ,பாராட்டுக்குரியது,
நன்றி.
நல்ல மனம் கொண்டவனல்ல இராவணன் அவனுக்கு விதிக்கப்பட்ட சாபம் சீதையைத் தொட்டாள் செத்திருப்பான் இராவணன் அதனால்தான் சீதைக்காகக் காத்திருந்தான்.சீதை இராமனுக்காகவே வனவாசத்தை ஏற்றூக் கொண்டவள் அவன் வசமாகவே வாழ்ந்தவள்.
நன்றி தமிழ்மாறன்… மன்னிக்கவும் இராவணனுக்கிருந்த சாபம் ஞாபகத்திற்கு வர மறுத்துவிட்டது அப்போது… ஆனால் 1. சீதைதான் இராமனுடன் செல்ல அடம்பிடித்தாளே தவிர இராமனுக்காக அதைச் செய்யவில்லை…
இராமனிருக்குமிடம்தான் சீதைக்கு அயோத்தி என்றாள்..
2. சீதைதான் இராமனிடம் பொன்மானை பிடித்துத் தரும்படி அடம்பிடித்தவள். வெகுதூரம் இராமனைக் காட்டில் அலைய வைத்தவள்… 3. சுக்ரீவன் இராமனைப் போல குரல் கொடுத்த போது; சீதைதான் தான் தற்கொலை செய்வதாகக் கூறி இலக்குவனை இராமனைத் தேடிப் போகும்படி பணித்தவள்… சீதை தனித்திருக்கும் போதுதான் இராவணன் சீதையை கவர்ந்தான்… ஆக, சீதை தான் இருப்பது காடு எதுவும் நடக்கலாம் என நினைத்து தனது ஆசையை அடக்கியிருந்தால்… இராவணன் சீதையைத் தூக்கிச் செல்ல முடியாதிருந்திருக்குமல்லவா… ஆகவேதான் சீதை இராவணனை அழித்தாள என எழுதினேன்…
நன்றி
சுஜி நோர்வே…
மன்னிக்கவும் முன்னைய பதிவில் ‘சுக்ரீவன் இராமனைப்போல் குரல் கொடுத்தபோது…’ எனத் தவறாக எழுதிவிட்டேன்…
அது மாரீசன்தான் இராமனைப் போல குரல் கொடுத்தவன்…
தவறுக்கு மன்னிக்கவும்
இந்தத் தளத்தில் எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இடமளித்த இணையத்தருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்…
சுஜி நோர்வே…
சீதையை ராவணன் அவளது விருப்பத்தின் பெயரிலேயே கடத்தி சென்றான்.அதனால் தான் ராமன் காவலுக்கு விட்டு சென்ற சகோதரனை அவள் கலைத்து விடுகிறாள்.
நீங்கள் அதிர்ச்சி அடையும் பல தகவல்கல் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.ராமனுஜ ஐயங்கார் மொழி பெயர்த்த ராமாயணத்தை படிக்கவும் .அதை மேற்கோள் காட்டி பெரியார் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்.
தயவு செய்து அதையும் படிக்கவும் .
சுஜி
உங்கள் கருத்துக்களைப் பகிர்நது கொண்டமைக்கு மிக்க நன்றி. ஏதோ ஒரு வகையில் அனைத்தையும் நியாயப்படுத்த முயற்ச்சிக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக ஒருவரை தீக்குளிக்க வைப்பதை நிச்சயமாக என்னால் ஏற்றுக்ககொள்ள முடியாது. சுயசிந்தை, நம்பிக்கையில்லா தன்மை, மட்டுமல்ல தாழ்வுமனப்பான்மையையும் காட்டும் செயல் அது என்பது என் தாழ்மையான கருத்து. ஒரு வண்ணானின் மனைவி நேர்மை தவறினாள் என்பதற்காகவும், சீதையையும் அப்படிக் குறிப்பிட்டான் என்பதற்காகவும் தண்டனை என்பது எங்க போய்ச் சேர்ந்தது? ஆந்த இடத்தில் ஒரு கணவன் ”என் மனைவியைப் பற்றி எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை” என்று வண்ணானைத் தண்டித்திருந்தாள் அவதான் வாழ்க்கைத் தோழன். என்னைப் பொறுத்தவரையில் இராவணனோ இராமனோ பெண் பற்றிய பார்வையில் ஒன்றுதான். இருவருக்கும் பெண்கள் பற்றி கருத்து வேறுபாடு இருக்கவில்லை. நடத்தைதான் வேறுபட்டிருந்தது. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விசயம் என்பதால் மற்றவர்களின் இனத்தை மறத்தளிக்கும்; உரிமையை யார் கொடுத்தது உங்களுக்கு? ஒருவர்; எப்படியான கருத்துக்கள் கொண்டவராயினும் அவர்கள் தமிழர் என்பதோ நோர்வேஜியர் என்பதோ அவர்களடைய பிறப்புரிமை.
அடுத்து, தூமை பற்றிப் பேசும் போது நான் பெண்கள் ஓய்வெடுப்பதைப் பற்றியோ, அல்லது அவர்களது உடல்நிலமை பற்றியோ பேச முற்றபடவில்லை. ஓய்வெடுப்பது என்பது அவர் அவர் உடல்வாகையும் உடல்நிலையையும் பொறுத்தது. கனிமொழி பேச வந்த விடயம் கோயில்களில் பெண்களின் தீட்டுநிலை இன்னும் தொடருவதைப் பற்றித்தான். அன்றைய காலத்தில் அதன் தேவை இருந்தருக்கலாம். அதை கனிமொழி மறுத்து கவிதையில் குறிப்படவில்லை. நீங்கள் சொல்வது போல் அன்றைய தினங்களில் கடைவீதிகளுக்குக் கூட போய் வரமுடியாத நிலையில் பெண்கள் இருந்திருக்கலாம். அதற்காக இப்போதும் அப்படி இருந்தால்தான் தமிழர்களா என்ன? தமிழ்பெண்கள் எல்லோரும் மாதவிலக்கின் போது எங்கும் போகமலா இருக்கிறார்கள். அது அவரது உடல் நிலமையைப் பொறுத்து. அந்த நேரங்களில் எங்கும் போவதா இல்லையா என்பதை அந்த பெண்தான் அந்த நேரதில் முடிவு எடுக்க முடியும். நீங்களோ நானோ சமூகமோ அல்ல. அதன் படி பார்த்தால் நிச்சயமாக கனிமொழி கூறிய கவிதை என்னை கவர்ந்திருக்கிறது என்பதை நான் மறுப்பதற்கில்லை.
மற்றபடி நீங்கள் கூறிய எமது பழக்கவழக்கங்கள் மூடநம்பிக்கையா இல்லையா என்பது பற்றி விவாதமும் இதில் இல்லை. அதை எல்லாம் ஏன் குறிப்பிட்டீர்கள் என்பது புரியவில்லை. அதைப் பற்றிய விவாதங்களை நாம் வேறு ஒரு முறை பகிர்ந்து கொள்வோம்.
எமது சம்பிரதாயங்கள் என்றில்லை மனிதர்களது (தமிழர்களது மட்டுமல்ல) பழக்கவழக்கங்கள் சிலருக்குத் தேவையானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கலாம், அதே விடயங்கள் சிலருக்கு அசௌகரியமாகவும், வலியுள்ளதாகவும் இருக்கலாம். இதில் யார் தீர்மானிப்பது சரி பிழையை?
நீங்கள் கூறியது போல் நான் தமிழச்சியா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படு முன் ஒரு மனிதான வாழவே ஆசைப்படுகிறேன். தமிழர் என்றால் இவைகளை ஆமோதிப்பதுதானா என்பதே ஒரு கேள்வி? நிச்சயமாக அதற்குரிய பதில்களை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.
எனது கருத்துக்களோடு உங்களுக்கு உடன்பாடுவரப்போவதில்லை என்று தெரிந்த பின்னும் எனது ஒரு கவிதையைப் இங்கு பகிர முயல்கிறேன்.
உங்கள் இலக்கியப் புலமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுஜி.
வரலாற்றில் பெண்கள்
பெண்ணின் கருவறை
பற்றிய கேள்விகள்
மாயையாகிக் கிடந்த
பொழுதொன்றில்…
அது நடந்தது
பெண்
பிரம்மனாயிருந்தாள்!
பெண்ணே அனைத்துமாயிருந்தாள்.
அவள் வாழ்வின் காற்தடங்கள்
கவனத்துடன் துடைத்தெறிந்து
ஆண் உருவில்
ஆண்டவன் பிறந்தான்
தீக்குச்சியிலிருந்து
தீப்பந்தமாய்
ஆண்கள்
கடவுள்கள் ஆக்கினர்.
தாமே ஆகினர்.
இன்றெல்லாம்
இடி மின்னலிலோ
மலைப்பனி மேகத்திலோ
அரசனிலோ
குருகளிலில் இருந்தோ
ஆண்டவர்கள் ஆள்வதில்லை
தந்தையில்
சகோதரனில்
மாமனில், மைத்துனனில்
கணவனில் என்று
அதையும் கடந்து
உணவு மேடையையும்
படுக்கை விரிப்பையும்
போர்த்திவிட்ட உடைகளையும்
வீடென்ற சிறைகளையும்
தாண்டி
முக்கியமாய் ஆண்டவரே
பெண்களின் தலைக்குள்ளே
கூடுபாய்ந்தீரே…
ஆண் உருவில் பிறந்த
ஆண்டவரே!
எம்; சிந்தை முடிவுகள்
எமக்கே சுமையாய்
இருப்பதில்
ஏது விந்தை?
கவிதா அவர்களே, மதி அவர்களே,
எனது கணவருக்கு, எனது அப்பாவுக்கு, எனது Sweet அம்மப்பாவிற்கு, எனது அப்பப்பாவுக்கு, அவர்கள் நூறு வருடங்களாக வாழ்ந்த மண் கரவெட்டிக்கு நான் துரோகம் செய்ய விரும்பவில்லை. இந்தக் கவிதையை ஆமோதிப்பது அவர்களுக்குத் துரோகம் செய்வது போலவே…
மன்னிக்கவும். நன்றி சுஜி. நோர்வே.
உங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் கவிதைகளை எடைபோடுவீர்கள் போல இருக்கிறது. போகட்டும் இந்தக் கவிதையில் யாரை குற்றம் சொல்கிறார் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் எழுதும் உங்களுக்கு என்ன சொல்ல. கவிதையை இன்னொரு முறை படியுங்களேன். புரியாவிட்டால் எனக்குத் புரிந்ததை எழுதுகிறேன்.
கனம் மதி அவர்களே,
கற்றலும் அதன் வழி நிற்றலும் வாழ்வே;
நற்றமிழ், நற்பொருள்,
உற்றதை நாளும்;
கற்றலும், காத்தலும்,
கொற்றவன் வாழ்வு.
மதி அவர்களே, நிறையவே எழுத ஆசை ஆனால்
1. வாசிப்போர்க்கு (எல்லோரையும் அல்ல.) எனது மொழி புரியவில்லை.
2. சினமும் கோபமும் நலத்தின் கேடு.
3. மற்றவர் நலம் நினைப்பது பண்பு.
4. இணையத்தாருடன் பகைப்பது நல்லதல்ல.
5. ஆகவே என் கைக்கு இங்கு நான் விலங்கு போட்டுவிட்டேன்.
6. தமிழின் சிறப்பெழுதியது இங்கு வந்து அதைப் பார்ப்போர் யாவரும் அறிந்து கொள்ளட்டும் என. நன்றி,
வணக்கம்,
சுஜி நோர்வே.
சினம் கோபம் எனும் தத்துவங்கள விடுத்து கோபத்தில் வரும் கேள்விக்கும் பதில் தர முயலும் போதே ஆளூமை வளர்கிறது.
கரவெட்டி எனும் கரைவேட்டியை உங்கள் மனவெட்டியால் நகர்த்தி யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் வழியில் வாருங்கள் வரலாறூ நெடுக பெண் சுமக்கும் பாரங்கள் குறயட்டும்.
கனம் தமிழ் மாறன் அவர்களே,
உங்களது குறிப்பு என்னை மனம் விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது… நன்றிகள். உண்மையில் எனது ஊரும் ஊரின் பெயரும் கரவெட்டிதான். Googleல் கிடைக்கும் பூகோளப் படத்தில் காட்டவில்லை கரவெட்டியை. நெல்லியடிக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய ஊர். நன்றிகள்.
சுஜி. நோர்வே.
கனம் என்பது பாரம் ,பாரம் சுமையானது.நெளீவதும்,குழைவதும் போலித்தனமானது ஏனெனில் விருப்பிற்கு மாறாக மாறூம் போது வெளீப்படும் குணம் கண்டதும் சுயரூபம் என்பதில்லையா/ஆக இயல்பாய் இருப்பதும் சத்தியமும் ஒன்றூ.
சுஜிக்கு கரவெட்டி தெரியாது. கரவெட்டி ஒரு பெரிய கிராமம். இதன் சிறப்பம்சமே இலங்கையில் அதிகளவு சாதிக் கொடுமைகள் இடம் பெற்ற பகுதி. சாதிக் கொலைகளும் இங்கே தான் அதிகளவு இடம் பெற்றது.
கவிதா அவர்கள
நான் யார் எதையும் நியாயப்படுத்த அல்லது அநியாயப்படுத்த…
தமிழர் பண்பாடுகளின் சிறப்புகளை யாரும் நியாயப் படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
உங்களுக்கே நீங்கள் சொல்வதில் ஆழமான கருத்து இல்லை என்பது புரிகிறது…
இப்படி நான் சொல்வதற்கு காரணம் இராமன் அவதார புருஷன் உங்களுக்கோ எனக்கோ இல்லாத சக்தி, ஞானம் இராமனுக்கு இருந்தது. அவனுக்குத் தெரியும் சீதை கற்பில் பிறழவில்லை என்பது…
சாதாரண ஒரு கேள்வி உங்களைக் கேட்கிறேன்…
ஒருவனின் மனைவியை இன்னொருவன் ‘வேசை’ என்று பலருக்கு முன்னால் சொன்னால் “என் மனைவியை எனக்குத் தெரியும்” என்றுவிட்டு வாருவான் என நினைக்கிறீர்களா… இதனால்த்தான் நான் சொன்னேன் உங்களுக்கே உங்களது கருத்தில் ஆழமில்லை என தெரிகிறது என…
அதைவிட. அந்த ஒருவனின் மனைவி; தன் கணவன். தன்னை வேசை என்றவனை வெட்டிப் போடாமல் கோழை போல வீடு வந்திருக்கிறானே என ஆத்திரப்பட்டு சண்டையிட மாட்டாளா என்ன… அல்லது தன் கணவனின் செயலைப் பாராட்டி விருந்து வைப்பாளா… நீங்களே சொல்லுங்கள்…
கணவன் சும்மா இருந்தாலும் மனைவி -அந்தப் பெண்- சும்மா விடமாட்டாள்… தானே தன்னை இழிவு சொன்னவனிடம் சென்று அவனைக் கூறுபோட்டுவிட்டுத்தான் வருவாள்.
ஒரு பெண் தன் கணவனை கள்வன் என்றதற்காக அந்த நகரத்தையே தன் கற்பினால் எரித்துவிட்டாளல்லவா… கண்ணகி கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்…
அப்படியே விட்டு விடுவோம் என வைத்துக் கொள்ளுங்கள்; அங்கே இருந்தவர்களில் யாராவது ஒருவன் அந்தக் கணவன் இல்லாத போது அவர்கள் வீடு வந்து இந்தப் பெண்ணை தாக்க மாட்டான், பெண்டாழ முயலமாட்டான் என்கிறீர்களா… அந்தக் கதைக்கு அந்த இடத்திலேயே தக்க பதிலடி கொடுக்கவில்லையானால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் அத்தோடு அந்தக் குடும்பமும் சிதறிவிடும்…
ஆக, இராமன் சீதையை தீக்குளிக்க வைக்கவில்லையென்றாலும்; சீதை அதை தானே செய்திருப்பாள். நான் இதை இராமாயணத்திலிருந்து சொல்லவில்லை.
சாதாரண நமது வாழ்க்கையையும் நமது நடத்தையையும் வைத்துத்தான் இதை சொல்கிறேன்… வடநோர்வேயில் வழியில்ப்போன இரு தமிழ்ப்பெண்களைப் பார்த்து ஒரு தமிழன் விசிலடித்து ஏதோ நோர்வே மொழியில் சொல்ல; அந்த இரு தமிழ்ப் பெண்களும் அவனைப் பிடித்து காலில்ப் போடும் சப்பாத்தினால் மங்கு மங்கு என்று மங்கிவிட்டார்களாம்… அதன் பின் அந்த தமிழன் தமிழ்ப் பெண்களுடன் வெகு மரியாதையோடு நடந்துகொண்டான் என சொன்னார்கள்… இப்படியான சம்பவங்கள் உலகில் எல்லா இடங்களிலும் நடக்கிறது.
தமிழ்ப்பண்பாடு பெண்களை எப்போதும் மென்மையானவர்களாகவும் போற்றப்பட வேண்டியவர்களாகவுமே சித்தரிக்கிறது என்பது யாவரும் ஒப்புக் கொண்ட விடயம்.
ஓய்வு பெறுவதை நீங்கள் வரவேற்றிருக்கிறீர்கள் அது சந்தோஷமே… ஆனால் அவரவர் உடல்நிலைக்கேற்றாற் போல ஓய்வு பெறலாம் என்றிருக்கிறீர்கள். உங்கள் உடலை வேறொருவன் பார்த்துத்தான் சொல்ல வேண்டும், உங்களுக்கு உங்கள் உடலில் என்ன இருக்கிறதென்று… ஆம் வைத்தியரைத்தான் சொல்கிறேன். ஆக, உங்கள் உடலைப்பற்றி உங்களுக்கே தெரியாத நிலையில் நீங்கள் செய்யக் கூடியது ஓய்வெடுப்பதுதான்.
ஓய்வெடுப்பதை அவரவர் உடல் வலிமைக்கேற்றவாறு நீங்கள் செய்யலாம் என்று அன்றும் இன்றும் சொல்ல இயலாத நிலை இருக்கிறது… ஆக, பொதுவில் தமிழ்ப்பண்பாடு தமிழ்ப்பெண்களை இந்த மூன்றோ ஐந்தோ நாட்களில் எல்லோரையுமே ஓய்வெடுக்கும் படி வலியுறுத்தியுள்ளது…
கனிமொழியின் கவிதையில் – நீங்கள் எடுத்துக் கொண்ட கவிதையில் – பிழைகள் இருக்கிறன.
இங்கே நீங்கள் உங்களது கருத்தில் சொன்னது // கனிமொழி பேச வந்த விடயம் கோயில்களில் பெண்களின் தீட்டுநிலை இன்னும் தொடருவதைப் பற்றித்தான். அன்றைய காலத்தில் அதன் தேவை இருந்தருக்கலாம்..//
நான் முன்னைய கருத்துப் பதிவில் சொன்னது: இன்றைய அவசர உலகில், பொருளாதார நெருக்கடியில் கணவனுக்கு உதவ எண்ணும் தமிழ்ப் பெண்கள் பழுவில்லாத அலுவலக வேலைகளை செய்கிறார்கள் என்றேன்.
ஆலயம் செல்வதும் ஒரு வேலையே! அது ஓய்வோ அல்லது ஓய்வில் ஒரு பகுதியோ அல்ல!! உடல் இளைப்பதற்காக நடக்கச் சொல்கிறார்கள். நீங்கள் ஆலயத்திற்கு காரில்ச் சென்றாற் கூட ஆலயத்திற்குள் காரைக் கொண்டு செல்ல முடியாது. நடந்தேயாக வேண்டும்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்கிறது தமிழ்ப் பழமொழி…
அந்தத் தெய்வம் எழுந்தருளும் கோவில் வேலைத்தலம். அங்கே எட்டு மணிநேர ஆராதனை முடித்தால் அது போதும். என்னைப் பொறுத்தளவில் இன்னொரு கோவில் அன்றைய தினம் தேவையில்லை…
24 மணிகள் 7 நாட்கள் ஒரு ஓய்வில்லாமல் வீட்டிலும் வெளியிலும் ஓடியோடி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில் ஒரு மூன்று நாளேனும் ஓய்வு தேவையில்லை என வாதிக்கும் நீங்கள் எல்லாம் எந்த ஊர் பெண்களோ தெரியவில்லை.
மேலை நாட்டவன் தம் பெண்களுக்காக வருடத்தில் ஒரு நாள்தான் ஒதுக்குகிறான் – Mother’s day -; ஆனால் தமிழ்ப் பண்பாடோ மாதத்தில் மூன்று நாட்கள் ஓய்வெடுக்கும்படி சொல்கிறது என நான் பெருமிதமடைகிறேன்.
எனது அம்மா தீட்டு வந்து வெளியில் இருக்கும்போது; (எங்களை தீட்டு என்றே சொல்ல வேண்டாம் என அம்மா சொல்லுவாள்… இங்கே அனேகமான சொற்பிரயோகம் பார்க்கிறேன். அதனால்த்தான் எழுதுகிறேன் எனது அம்மா பார்த்தால் மிகவும் மனம் வருந்துவாள். நாம் அம்மா ‘வெளியில’ என்றுதான் வருவோருக்குச் சொல்லுவோம்) நானும் எனது அப்பாவுமே எல்லா வீட்டு வேலைகளும் செய்வோம். சமையலிலிருந்து வீடு சுத்தப்படுத்துவது என வீட்டு வேலை எல்லாமே. உணவு அப்பா சமைப்பார். அம்மாவோடு வெளியே இருந்து உணவு உண்ணுவோம். அந்த நேரத்தில் அம்மா அப்பாவை பாராட்டுவாள் “நன்றாகச் சமைத்திருக்கிறீர்கள்” என. “எல்லாம் நீ சொல்லித் தந்ததுதான்” என்பார் அப்பா பதிலுக்கு. அதில் இருக்கும் சந்தோஷம் வேறெங்கே கிடைக்கும். பின்னர் அம்மா சொல்வாள் அப்பா களைத்துப்போய்விட்டார் என. அப்போதெல்லாம் நான் நினைப்பேன் ‘அம்மாவுக்கு களைப்பே வருவதில்லையா அம்மா ஒரு நாளுமே அப்படிச் சொன்னதில்லையே அல்லது அப்பா அம்மாவைப் பார்த்து சொன்னதில்லையே‘ என அங்கலாய்ப்பேன். இரவுச் சாப்பாடும் நிலவில் இருந்து சாப்பிடுவோம்.
இந்த சந்தோஷத்தையெல்லாம் தூக்கியெறிந்து விட்டது இன்றைய அவசரமான உலகம்.
‘அன்று தேவையிருந்திருக்கலாம்’ என்ற பதக் கோர்வையின் தொக்கு நிற்கும் அர்த்தம்: அன்று தேவையிருந்திருக்கலாம் ஆனால் இன்று அது தேவையில்லை என்பதே…
அன்றைய பெண்களுக்கும் இன்றைய பெண்களுக்கும் என்னால் வித்தியாசம் காணமுடியவில்லை. அன்றிருந்தது தமிழ்ப் பெண்கள்; இன்று இருப்பது தமிழ் இயந்திரங்களா?
ஆனால் அப்போதும் இப்போதும் நாம் தமிழ்பண்பு காக்கும் தமிழர் என்பதை மறந்துவிடவேண்டாம்!
மாறாக அன்றிருந்தவர்கள் உள உடல் ரீதியாக திடகாத்திரமாக இருந்தார்கள்; இன்றிருப்பவர்கள் அப்படியில்லை என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஒட்டு மொத்தமாக உலகிலுள்ளோர் அனைவருக்கும் இது பொருந்தும்.
காரணம் அதீதமான இயந்திரப் பாவனை உடலையும் மூளையையும் பாதிப்பதாக கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு மனிதன் ஒரு சமூகத்தின் அங்கம். அந்த மனிதன் அந்த சமூகத்தின் ஒழுங்கு முறைகளை அனுசரித்தேயாக வேண்டும். என்னைக் கட்டுப்படுத்த எவனுக்கோ எந்த சமூகத்திற்கோ உரிமையில்லை என நீங்கள் கூறுவது அப்பட்டமான தவறு.
வீதியில் நடக்கும் போது அந்த வீதி வழிமுறைகளின ஆணை: ஓரமாகச் செல்ல வேண்டுமென்பது; அது நடப்பவரின் பாதுகாப்புக் கருதியே சொல்லப்படுகிறது. ‘எனக்கென்ன இந்த வழிமுறை சொல்வது’ என நீங்கள் வீதியின் நடுவே நடந்தால்; யாருக்கு அதனால் பாதிப்பு? எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் அந்த இடத்தின் அந்த சமூகத்தின் விதிமுறைகளை அனுசரித்தே யாரும் வாழ வேண்டும்.
ஆலயத்தில் தோப்புக் கரணம் போடுவதும், அரசமரத்தை சுற்றுவதும், ஆலயத்து முன்றலில் ஆரம்பிக்கிறது. அது ஆலயத் தொழுகைகளில் முக்கிய பகுதியே…
ஆலயம் சென்ற நீங்கள் பிள்ளையார் வாசலில் தலையில் குட்டு வைத்து, மாறு காது பிடித்து தோப்புக்கரணம் இடுவதில்லையா…
ஆம் நீங்களெல்லாம் நவீன தமிழ்ப் பெண்கள் அல்லவா தீட்டுடன் ஆலயம் செல்ல வேண்டும் என வாதிடுவீர்கள். ஆனால் ஆலயத் தொழுகையை கற்றுக் கொள்ளவில்லை.
குறிப்பு: அட்டாங்க நமஸ்காரம் ஆண்களுக்கு; பஞ்சாங்க நமஸ்காரம் பெண்களுக்கு. சில வெளிநாட்டுத் தமிழ்ப் பெண்கள் அட்டாங்க நமஸ்காரம் போடுவதை நான் பார்த்திருக்கிறேன் இலங்கையில்.
தமிழர்க்கு இல்லமும் ஒரு ஆலயமே… இல்லத்தில் வாசலில்க் கோலமிடுவது ஆலய முன்றலை அலங்கரிப்பது போலாகும். இது தமிழர் பண்பாடு. ஆலயம் தொழுவதும் மனித பழக்கவழக்கங்களில் ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழர் பண்பாடு பல்லாயிரம் ஆண்டு காலமாக தமிழர்களால் மட்டுமல்ல மேலைத்தேயத்தவராலும் போற்றப்பட்டு பாராட்டப்பட்டுவரும் சிறந்த வாழ்க்கை வழிமுறையாகும். மற்றைய நாட்டு, மற்றைய மனிதர்களது பழக்க வழக்கங்கள் பண்பாடுகளைப் பற்றி இங்கே தேவையில்லை. தமிழர் பண்பாடு பழக்கவழக்கங்கள்; உன்னதமானதெனவும் உலகில் முதன்மையானதெனவும் மூத்த பண்பாடுகள் எனவும் சொல்லப் படுகிறது.
தமிழர் பண்பாடுகளை பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் உங்களுக்கு வலியாக இருக்கிறது என சொன்ன முதல்த்தமிழ்ப் பெண் நீங்கள்தான்.
எந்தப்பழக்கவழக்கமானாலும் பண்பாடானாலும் அதில் சரி பிழை யார் கூறுவது எனக் கேட்டிருக்கிறீர்கள். என்னையல்ல – குறிப்புக்கு நன்றி-
என்னைக் கேட்டால் எனது பதில்: உங்கள் உடலும் உள்ளமும்தான் பண்பாடுகள் பழக்க வழக்கங்களிலுள்ள சரி பிழையைக் கூறும். யாரும் உங்களுக்கு விளக்கத்தேவையில்லை.
நாம் தமிழர், தமிழ்மண்ணில் தமிழ்த்தாயின் வயிற்றில்த்தான் கருவானோம். தமிழ்ப்பண்பாட்டை மதித்து வாழப் பழகுங்கள். அதுவே போதும்.
மூட நம்பிக்கை என எதையும் தூக்கியெறிவதற்குமுன் சிந்திக்கத் தெரிந்த நாம் சற்று சிந்தித்தோமானால்; இவற்றை ஏன் இப்படி வரையறுத்தார்கள் நம் முன்னோர் என எமக்குள் நாமே கேள்விகளைக் கேட்டு பதில் தேடினால் எல்லாமே நாம் நம் வாழ்வை வாழ்வாங்கு வாழ்வதற்கே என அறிவோம்…
கவிதைகளை நான் வெறுப்பதேயில்லை. கவிதைகள் எழுதுவதும் இரசிப்பதும் எனக்கு பிடித்தவை.
தமிழைப் பற்றியோ தமிழ்ப் பண்புகளைப் பற்றியோ யாராவது அவதூறு சொன்னால் அதை பொறுத்துப்போகும் மனம் எனக்கில்லை.
பாடசாலை செல்லும் போது தமிழைச் சுவைத்து எழுதியது இது:
தமிழ் தமிழ் என்றிட, தானே அதை
அமிழ்தமிழ் எனச் சுவைக்கும் – நா
அமிழ் தமிழ் எனறிட, அது தானே
தமிழ் தமிழ என்றிடும்…
இந்தக் கவிதைக்கு அர்த்தமும் சொல்லி விடுகிறேன்…
தமிழ் தமிழ் என்று சொல்லிப்பாருங்கள் அது அமிழ்தமிழ் என மாறி வருவதை உணர்வீர்கள்.
அதேபோல, அமிழ்தமிழ் என்று சொல்லிப் பாருங்கள் அது தமிழ் தமிழ் என மாறி வருவதை நீங்கள் உணர்வீர்கள்.
இந்த சிறப்பு நானறிந்த எந்த மொழிகளிலும் இல்லை…
நான் கவிதைகளை காகம் கரைவதைப் போல படித்துவிட்டு போவதில்லை. அதனால் உங்கள் கவிதைக் இங்கே நன்றியை மட்டும் தெரிவிக்கிறேன்.
திரும்பத் திரும்ப ஆற அமர கனிமொழியின் கவிதையை வாசித்தபோது, சில வரிகள் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது…
திரும்பத்திரும்ப நானே கருத்துப்பதிவிடுவது நன்றல்ல என அமைதி காத்தேன். ஆனால் கவிதா எழுத வைத்துவிட்டார். ஆகவே சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
முதலில் கவிதை வரிகள்:
//சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா…//
//என்ற வரிகளிள் எம் சமூகத்தில் அப்பாக்காளுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் இடைவெளியையும் நேசத்தையும் மொழி நயத்துடன் சொல்லியிருக்கிறார் கவிஞர்.//
ஒன்றில் கனிமொழியின் வரிகள் தவறானவை அல்லது கவிதா சொன்ன விளக்கம் தவறு! எல்லாத் தமிழ்த்தாய்மாரும் தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையில் ஆப்பு வைப்பதில்லை. அல்லது தந்தையைச் சொல்லி பயமுறுத்துவதில்லை.
தனக்கு நடந்தால் அது எல்லோருக்கும் பொது என நினைப்பது தவறு!!
//புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கோடி பிடிப்போம்
கோஷம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு
கீழ்ப்படிவோம்//
இங்கே நான் கேட்பது என்னவென்றால்…
யாரும் யாரிடமும் கீழ்படிந்து போக வேண்டிய அவசியமில்லையே. தமிழ்ப் பண்பாடு தமிழ்ப் பெண்களை ஒரு இல்லத்தில் இல்லத்தை ஆழும் அரசியாய், தக்க ஆலோசனை வழங்கும் மந்திரியாய், பாடங்கள் சொல்லும் ஆசானாய்,
இன்னும் சிறப்புறத்தான் சொல்கிறது. யாரும் இல்லத்தரசன் என எவனையும் சொன்னது கிடையாது.
இறுதியில் பெண்புத்தியை கனமொழி காட்டிவிட்டாரே…
நியாயமான கோரிக்கைகளுக்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை! அடிபணியவும் தேவையில்லை…
முதலில் ஆர்ப்பாட்டமெதற்கு பின்னர் கீழ்படிவதென்றால்… ‘குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது‘ என்பார்களே அதுபோலுள்ளது.
//திருப்பதிக்கு போக முடியாவிட்டால்
தி நகர் கிளையில் காணிக்கை செலுத்தலாம்//
மனம்தான் முக்கியம். திருக்களத்தியப்பனைத் தரிசிப்பதற்கு போவதற்கு உடல் வலுகுன்றிய திருநாவுக்கரசரின் மனமுருகிய வேண்டுதலுக்கு இணங்கி திருக்களத்தியப்பனே சக்தியுடன் மனக்கண்ணில் காட்சியளித்து நாவுக்கரசருக்கு அருள்புரிந்தனர். என்கிறது நாயன்மார் வரலாறு…
தியாகராய நகரில் காணிக்கை செலுத்திவிட்டு அப்படியே திரும்பி நெடுஞ்சாலைகளையும் வாகன நெரிசல்களையும் சன நெரிசலையும் பார்க்குமுகமாக நின்று; கண்களை மூடி, திருப்பதியானை மனமுருக நினைத்துப் பாருங்கள் திருப்பதி வெங்கடேசர் கண்முன் காட்சியளிப்பார்.
அது உங்களுக்கு பிடிக்காத ஒன்றென்றால் அந்தக் காணிக்கையை ஒரு அனாதையில்லத்தில் வழங்கிப்பாருங்கள். அந்தக் குழந்தைகள் உங்களை “அம்மா” என வாயார வாஞ்சையுடன் அழைக்கும். அதில் வரும் மகிழ்ச்சியை எந்தத் தெய்வமும் தர முடியாது…
உலகில் எவ்வளவோ நல்லவை செய்யக் கிடக்கிறது, அவற்றில் மன நிறைவும் ஆனந்தமும் கிடைக்கிறது…
ஆர்ப்பாட்டத்திலும் கூச்சலிலும் குழப்பத்திலும் நம் சக்திதான் விரையமாகும். மனதில் அமைதியும் போய்விடும் சிந்தனையில் தெளிவும் இருக்காது.
சில காலம் முன்னர் ஒரு திரைப்படம் பார்த்தேன். என்ன படம் என்றதை மறந்து விட்டேன் மன்னிக்கவும். அந்தப் படத்தை எடுத்தவர்கள் அந்தப் படத்தை எடுத்த கிராமத்தை மேம்படுத்துவதற்கே அந்தப் படத்தை விற்றதனால் வந்த பணத்தை கொடுத்துவிட்டார்களாம். அது மட்டுமல்ல அந்தப் படத்தை எடுத்த குழு தங்கள் உழைப்பில ஒரு சத விகிதத்தை அந்தக் கிரமாத்துக்கே தருவதாகவும் கூறினர். என்ன அற்புதமான செயல். அந்தப் படக்குழுவுக்கு இந்த இடத்தில் நான் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறுமனெ புதுயுகப் பெண்கள் என கூவுவதை விட அவர்களைப் போல நாலு குழந்தைகளுக்கு நல்லது செய்து பாருங்கள். அதில் ஒரு நிறைவு கிடைக்கும்.
நன்றி
சுஜி நோர்வே…
“வெறுமனெ புதுயுகப் பெண்கள் என கூவுவதை விட அவர்களைப் போல நாலு குழந்தைகளுக்கு நல்லது செய்து பாருங்கள். அதில் ஒரு நிறைவு கிடைக்கும்.”
ஒருவன் கவிதை எழுதுவதும் இதை விமர்சிப்பதும் சிறப்பான விடயம்தானே. ஏன் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள். குழந்தைகளுக்கு உதவுவது என்பதற்கும் இலக்கியப் படைப்பிற்கும் என்ன தொடர்பு. சமூகத்திற்கு நிதி உதவி செய்வோர் எழுதக்கூடாதா? அல்லது எழுதுபவர்கள் சமூக நலன் விரும்பிகளாக இருக்கக்கூடாதா? உங்கள் கோபம் மட்டும்தான் புரிகிறது. வாதத்தில் தாக்குதல்தான் தெரிகிறது.
பெண்களின் வளர்ச்சி என்பதை ஏன் கொச்சைபடுத்த வேண்டும்?
நன்றி
Vasee அவர்களே,
உங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் பதிலெழுதவே யோசித்தேன. ஆனால் எனது எழுத்துக்கள், கருத்துக்கள் ஒருவரையும் சிந்திக்க வைக்கவில்லை மாறாக சினங்கொள்ள வைக்கிறது. இணைத்தாரே இனி இங்கு வராதே எனச் சொல்லுமுன் நானாக விலகிக் கொள்வது சிறப்பல்லவா… மன்னிக்கவும்.
சுஜி நோர்வே.
சுஜி.
ஒன்றை மட்டும் கூறி விடைபெற விரும்புகிறேன். பெண்கள் வாழ்க்கையில் மற்றவர்களுடைய சந்தேகங்களுக்காகத் தீக்குளிக்கத் தொடங்கினால் அவள் வாழ்க்கை முழுக்க தீயில் வாழவேண்டிய நிலை வரலாம். அல்லது பேசியவனை வெட்டுவது என்று கோசம் போட்டாலும் எத்தனை பேரை என்று போய் வெட்டிக் கொண்டிருப்பது.
அடிப்பது, வெட்டுவது தீக்குளிப்பது என்ற சமூகம் மாறியாயிற்று. ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை, மனோதிடமும் அவசியம். தன்னம்பிக்கை இருக்குமிடத்தில் இந்தப் பேச்செல்லாம் ஒரு தூசி எனத் தட்டிவிடலாம். என் வாழ்க்கைத் துணைவன் யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக அவனை வெட்ட நிச்சயமாக நான் கூவ மாட்டேன். என் மீதான அவனது நம்பிக்கை மட்டும் எனக்கு முக்கியம்.
மற்றபடி நீங்கள் கனிமொழியின் கவிதைகளுக்கு வைக்கும் பதில்கள் என்பது உங்களது கருத்துக்கள். அதில் எனக்கு உடன்பாடில்லாவிடினும் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்கள் மனதில் இத்தனை கோபத்தை எற்படுத்தியது கூட ஒருவிதத்தில் கனிமொழிக்கு வெற்றியே. தொடர்ந்து எழுதுங்கள் 🙂
“இந்த சிறப்பு நானறிந்த எந்த மொழிகளிலும் இல்லை…
”
எமது மொழியை நாம் எவ்வளவு துராமும் புகழ்ந்து கொள்ளலாம். தவறில்லை. ஆனால் அதே போல் பிறமொழிகளை எந்த வகையிலும் நாம் குறைத்தும் மதிப்பிடக்கூடாது. பிறமொழிகளைப் பற்றி பேசு முதல் குறைந்த பட்சம் அனைத்து மொழிகளையும் அக்குவேறு ஆணிவேறாக படித்திருக்க வேண்டும் இல்லையா?
கனம் மதி அவர்களே,
நான் சொன்ன தமிழின் ஒரு சிறப்பு இதுதான்; அந்தக் கவிதையும் அதுதான். ‘தமிழ் தமிழ்’ என்று இடைவிடாது சொல்லிப்பார்க்கவும் கூச்சப்படாமல் உரக்கவே சொல்லிப்பார்க்கவும். உங்களுக்கு மட்டுமல்ல அருகிலிருந்து கேட்பவர்க்கும் அது ‘அமிழ்தமிழ்’தென்றே ஒலிக்கும். அமிழதென்றால் மிகவும் உருசியான ஒரு உணவு. தமிழர் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல அமிழ்தமிழ்தென்று சொல்லிப்பார்க்கவும் அது ‘தமிழ் தமிழ்’ என்றே ஒலிக்கும். இதைத்தான் எழுதினேன்.
இந்தச்சிறப்பு என்றால்; ஒரு மொழியின் பெயரை திரும்பத்திரும்ப; அதாவது ‘தமிழ்தமிழ்‘ என்பதைப் போல சொல்லிப்ப்பார்த்தால்; நிட்சயமாக இன்னொரு சொல் கிடைக்கும்; ஆனால் அந்தச் சொல்லின் அர்த்தம் சிறப்பானதாகவே இருக்கவேண்டும். அதாவது அந்த மொழியில் அந்த வார்த்தை, ஒரு தூஷண அல்லது அவதூறான அர்த்தமுடையதாக இருக்கக் கூடாது. ‘அமிழ்தை‘ போல இருக்கவேண்டும். தேடிப் பாருங்கள். எந்த மொழியிலாவது அப்படி ஒரு இன்பம் இருக்கிறதா என்று; இருந்தால் என்க்கும் அறியத்தாருங்கள். Please!
மற்றையது நான்தான் எழுதினேனே ‘நானறிந்த மொழிகளில்’ என்று. அதன் சாமர்த்தியம் விழங்கவில்லையா…
எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும் என்றிருந்தால் “Oh… Sorry Mathie, I made a spelling mistake. It should be singular not plural…”. என்று மரியாதையாகத் தந்திரமாகச் சொல்லித் தப்பியிருப்பேன.
ஆனால் நான் பிறந்தது இலங்கை, எனது பெற்றோர் அதிகமான காலம் வசித்து வந்தது தென்னிலங்கை, அங்கே
சிங்களம் ஒரு கட்டாய பாடம். சிங்களம் இந்திய மொழி வழித் தோன்றலாக இருந்தாலும் தமிழிலிருந்து நிறைவே வேறுபட்டது. அந்தச் சிங்கள மொழியில் நான் பண்டிதானக இல்லாவிட்டாலும், சிங்கள மொழி நிறையவே படிக்க வேண்டியிருந்தது. இந்தச் சின்ன விடயத்தை அறிந்து கொள்ள மொழிப் பாண்டித்தியம் தேவையில்லை. ஒரு நொடிப்பொழுது போதும். (எந்த இடத்திலும் நான் என்னை தமிழ்ப்பண்டிதனெறோ அல்லது வேறெந்த மொழியிலும் பண்டிதனென்றோ கூறியது கிடையாது அப்படிக் கூறவும் விரும்பவில்லை.)
மேலும் ஆங்கிலமும் அதே… – இலங்கையில் ஆங்கிலம் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடம்.-
நான் இப்போது பல வருடங்களாக இருப்பது, பொறியியல் படித்தது, வரைபாளனாகக் கடைமை புரிவது எல்லாம் நோர்வேயில். இங்கேயும் முதலிரண்டு வருடங்களும் மொழிக்கல்விதான். வேறுவழியில்லை. நிறையவே நோர்வே நாட்டு மொழி, பண்பாடுகள், கலாச்சாரம் எல்லாம் படித்திருக்கிறேன்.
(பண்பாடுகள் என்னும் போது, ஒரு விடையம் சொல்கிறேன். நோர்வையில் ஞாயிற்றுக் கிழமைகளில் உடைகள் துவைக்கக் கூடாது. இது பண்பாடு, காரணம் ஞாயிறு விடுமுறை நாள் அனைவரும் சில மணி நேரம் அதிகமாகவே படுக்கையில் இருக்க யோசிக்கும் நாள். சத்தம் போடுவது அழகல்ல)
இன்னொரு விடயம் உங்களுக்குத் தெரியுமா நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் இந்த மூன்று நாட்டு மொழிகளும் ஏறத்தாழ ஒன்று. இதை விட பொறியியல் படித்த போது ஸ்வீடன், டெனமார்க் போன்ற நாடுகளிலிருந்து பெருமளவு புத்தகங்ளையும் பாவித்தோம்.
இதைக் கண்டுபிடிக்க மொழியில் பாண்டித்தியம் தேவையில்லை எனச் சொன்னேனே.
எத்தனை மொழிகள் சொல்லிவிட்டேன்…?
ஓ… கிளிங்ஓன் அதை நீங்கள் மொழி என எடுத்துக்கொள்வதில்லையா… Oh shoot… ஒரு மொழியைக் கூடுதாலாகச் சொல்லாமெனப்பார்த்தேன்…
ஆங்கிலத்தை ‘English’ என்று சொல்லிப் பார்த்தால் ஷிங்லி என வரக் கண்டேன். இனி உங்கள் வீட்டிலுள்ளோருக்கு இது ஒரு வேலை என நினைக்கிறேன்…
எந்த மொழியிலாவது மெல்லினம், இடையினம், வல்லினம் என ஒலி வகைகளை பிரித்திருக்கிறார்களா… அப்படி உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள். நானும் அறிந்து கொள்கிறேன்.
த – வல்லினம்
மி – மெல்லினம்
ழ் – இடையினம்.
விளங்கியதா நான் சொல்ல வரும் சிறப்பு… இனத்துக் கொரு எழுத்தாக எடுத்து ‘தமிழ்‘ என்று தமிழ் பெயரைக் கொண்டிருக்கிறது…
முன்னையது ஒரு மொழியில் இருந்தால் பின்னையதை ஆராயலாம்
தமிழுக்கு ‘ழ‘ அழகு என்று வைரமுத்து சொன்னாரே
‘ கண்ணுக்கு மை அழகு…‘ என்றாரம்பிக்கும் பாடலில்… (எனது கவலை; அந்தப் பாடலில் கவிஞர் ‘தரணியில் தாஜ் அழகு என்றெழுதவில்லை என்பது.)
அப்படி ஏன் சொன்னார்?
‘ழ‘ ஒலிவடிவம் பெரும்பாலான மொழிகளில் இல்லை – சீன மொழியில் இருப்பதாக அறிகிறேன-. அதுவும் தமிழுக்கு ஒரு சிறப்பு. அப்படி இருந்தால் அடுத்து சொல்லப் போகும் தமிழின் சிறப்பை அந்த மொழியில் ஆராய்ந்து பார்க்கலாம் இல்லையா..?
OK, சொல்லாவா சிறப்பை…
தமிழ்… தமிழ் தனது பெயரிலேயே எந்த (பெரும்பாலான) மொழியிலும் இல்லாத சிறப்பு ஒலி வடிவை கொண்டிருக்கிறது.
இது எப்படியிருக்குத் தெரியுமா? தமிழ்ப் பெண் அழகாக சரசரக்கப் பட்டுடுத்தி மல்லிகை தலையில் வைத்து இறுதியாக அழகுக்கு அழகு சேர்ப்பது போல திலகமிடுவோமே; அது போல இருக்கிறது…
என்ன சொல்கிறீர்கள்…
சரி சரி தமிழில பித்துப் பிடிச்சலையிறன் திட்டாதிக விட்டுடுக…
வணக்கம்
சுஜி நோர்வே…
வணக்கம் சுஜி
நீங்கள் நிறைய எழுதுகின்றீர்கள். ஆனால் ஒரு ஆண்ணாகப் பிறந்த எனக்கே உங்கள் வாதங்களில் உடன்பாடில்லை. கவிதாவின் கருத்துக்களில் பிழையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் என்னதான் சொல்ல வருகிறீர்கள். வாசிக்க மூச்சு வாங்குகிறது.
கவிதாவின் கவிதைகளையும் அவரின் பல செயல்களையும் அறிந்தவன் என்ற பெயரில் இது வீண் குற்றச்சாட்கள் போலவே தோற்றமளிக்கிறது.
சமீபத்தில் கவிதாவுடைய கண்ணகியும் கண்ணமாவும் என்ற நாட்டிய நாடகத்தைப் பார்த்து பிரமித்திருந்தேன். அவருடைய துணிவும் ஆற்றலும் ஒவ்வொரு தமிழ்பெண்களுக்கும் இருக்க வேண்டிய ஒன்று.
ஒரு ஆண்மகன் பெண்னை கிண்டல் அடித்தான் என்பதற்கு அவனை செருப்பைக் கழட்டி அடிப்படிதன்பதும் அவன் செய்ததைப் போல அனாகரீகமானதுதான். அதை வரவேற்க்கும் உங்களிடம் நல்ல கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது.
எதிலும் ஒரு விவாதத்தை முன் வைப்பது சமூகத்தை மேம்படுத்தும் அல்லாவா? உங்கள் விவாதத்தைப் பார்த்தால் எதற்கும் ஒரு காரணம் இருப்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்பதைப் போலல்லவா இருக்கிறர்.
ஆதவன் அவர்களே, உங்களுக்கும் சுருக்கமான தெழிவான பதில் எழுதத்தான் மனம் துடிக்கிறது. ஆனால் எழுத கை வரவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். நன்றி சுஜி
இராமன் சராசரிக் கணவனல்லன் அவன் அயோத்திக்கு மன்னன்.மன்னன் எவ்வழி குடிகளூம் அவ்வழி.என்றூ ஒருவன் தலைவன் ஆகிறானோ அன்றே அன்றே அவன் வாழ்வு அவன் மற்றயோருக்கு உதாரணமாகி விடுகிறான்.அவன் செயற்பாடுகள்,சிந்தனைகள் மற்றவர் வாழ்வுக்கி மேற்கோளாகின்றன.அவ்வாறாயின் அவர்கள் தமது பொதுவாழ்வின் தூய்மையையும்,தனிவாழ்வின் தூய்மையையும்,தமைச்சார்ந்தார் தூய்மையாயும் சமூக முன்னிலையில் உறூதி செய்தல் அவசியம்.சீதையது தூய்மை இராமனுக்குத் தெரியும் அது உலகிற்கு தெரியுமா?சமுதாயம் எனும் விரிந்த பரப்பில் இராமன் நன்மை நோக்கி இராமன் செய்தது சரியே.
அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி
ஆம்… அரசன்… எவ்வழி மக்களும்… அவ்வழி…
தப்பு செய்த அரசன் தற்கொலை செய்தான் – அதுவும் வெறும் சொற்பிழை – தட்டிக் கேட்டிக்கேட்டவள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்தவள்..
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF
விவாதம் எங்கே போகிறது? எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் என்றே புரியவில்லை. எப்போதுமே சமூகம் பெண்ணின் விடயங்களில்தான் கவனமாக இருந்திருக்கிறது. முழுமையாகப் பார்த்தால் ராமாயணமே பெண்ணுக்கு இளைத்த ஒரு கொடுமைதான்.
தீக்குளித்த பின்னும் சீதை தன் மகனுடன் காட்டில்தான் வாழ்ந்தாள்? ஏன். அதற்கும் நிச்சயமாக ஏதாவது ஒரு காரணம் நியாயப்படுத்த இருக்குமே. அவளும் ஒரு நாட்டின் இளவரசி தானே.
எனக்கு மாதவிலக்கு சம்மந்தமாக கேள்விகள் இருக்கிறது. கிருஸ்தவர்கள் கோவிலுக்கு மாதவிலக்குடன் செல்வதை யாரூம் தீட்டென்று கருதுவதில்லையே ஏன். ஆனால் முஸ்லீம் மக்களின் மசூதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதே பாவம் என்ற கோட்பாடுகளும் இருக்கிறது.
பெண்கள் மீதான புறக்கணிப்பென்பது மதங்களில் வீதவித்தியாசங்களில் இருப்பது என்பதை யாரும் மறுத்தளிக் முடியாது.
அந்த வகையில் கனிமொழியினதும் கவிதாவினதும் எழுத்துக்கள் எமது சமூகத்தை சிந்திக்வைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்
சுஜி அவர்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியவில்லை இன்றய நாகரீக உலகில் இவ்வளவு வசதிகளுக்குள் இவரின் மாதவிடாய் பற்றிய கருத்துக்கள் ஆச்சரியமாய் இருக்கிறது இப்பொழுது எவ்வளவு பாதுகாப்பான முறைகள் வந்தபின்னும் ஏன் இந்தப் பழமைவாதம் பெண்களுக்கு பெண்களேதான் எதிரிகள் ஆண்களின் அடக்குமுறைக்குள் வாழ நீங்களே ஆசைப்படும்போது பெண்விடுதலை எல்லாம் பழமை பேசிக் காலம் கழிய வேண்டுமா தற்போது 2010 இனியாவது விழித்துப்பாருங்கள் கனிமொழியின் கவிதைகழைவிட கவிதாவின் பகிர்வு அல்லது ஆய்வு அழகு வாழ்த்துக்கள்
}சுஜி உங்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்! அறிந்த விடயமானாலும் சரியான சந்தற்பத்தில் சரியான இடத்தில் சமையோசிதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ,பாராட்டுக்குரியது],
என்று பாராட்டியிருந்தேன் ,நானும் ஓரளவு கவிதை எழுதவும் ரசிக்கவும் ஈடுபாடுடையவன், தனிப்பட்டமுறையில் கனிமொழியை நான் கவிஞராக அல்லாமல் அரசியல்வாதியாகவே பார்ப்பதுண்டு, கனிமொழிமீது மிகுந்த வருத்தமும் எனக்குண்டு , அவையெல்லாவற்றையும் அந்த அந்த அரங்கத்தில்த்தான் விவாதிக்கமுடியும், உங்களது இரண்டாவது பின்னூட்டம் உங்களை மீறிய ஒரு கோபாவேசமாகவே காணப்பட்டது, முற்றுமுழுவதும் தாக்குதலாகவே ஆகிவிடக்கூடாது,,உங்கள் கருத்துக்களிலும் நியாயம் இருக்கிறது, மற்றவர்களின் நியாயத்தையும் ஏற்றாகவேண்டும்,,,,, மீண்டும் சொல்லுகிறேன், எதையும் “சரியான சந்தற்பத்தில் சரியான இடத்தில் சமையோசிதமாக வெளிப்படுத்தினால் மட்டுமே எங்கள் நியாயம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்,மீறினால் அது விதண்டாவாதம் என்றாகிவிடும் , நன்றி,,
அன்புடன் பாரதிக் குஞ்சு,
உங்கள் பல கருத்தாக்கங்களை இனியொருவில் படித்துள்ளேன். சுஜி என்ற அப்பட்டமான ஆணாதிக்க வாதியை சரி என்று வாதித்தீர்களே, அது என்னை தூக்கி வாரிப் போட்டது. கீழ்த் தரமாக இருக்கிறது. இனிமேல் நீங்கள் எழுதுவதை படிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். இப்போதெல்லாம் நான் ராணி, மங்கையர் மஞ்சரி போன்றவற்றைப் படிப்பதில்லை. உங்களை போன்றவர்கள் எழுதாமல் இருந்தாலே எழுத்துலகம் சீரழிவில் இருந்து தப்பிவிடும்!
மிக அன்புடன் bharathi, நான் எழுதுவதை நீங்கள் கண்டிப்பாக படிக்கத்தான் வேண்டுமென்று சட்டமா என்ன! (நான்குபேர் படிக்க முடியாதபடி எனது வார்த்தைப்பிரயோகம் இருந்திருந்தால் நான் கவலைப்படுவதற்கு நியாயம் இருக்கிறது) உங்களுடைய புரிதல் அவ்வளவுதான் என்றால் நான் மட்டுமல்ல எவரும் எதுவும் செய்ய முடியாது. எனது கருத்துக்கள் கீழ்த்தரமாக இருந்தால் மேல்த்தரமாக நீங்கள் சொல்லித்தந்தால்” உலகத்துக்குநீங்கள் மற்றொரு பெரியாராக” பேருதவியாக இருக்கும், பெண்ணடிமையை உடைத்த பெருமாள் என்ற பட்டம் உங்களுக்குரித்தாகட்டும், ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் எவரும் இங்கு வரவேற்கவில்லை, கருத்து பிறழ்வு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் பிழையிருப்பின் திருத்திக்கொள்ளமுடியும். அதைத்தான் பெருந்தன்மையாக நான் கருதுகின்றேன், அதை விடுத்து மட்டம் தட்ட நினைப்பது முழு இயலாமையின் வெளிப்பாடு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம், ஒருவரது கருத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று தடுக்கும் அளவுக்கு உளவியல் ரீதியாக நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதுவும் நன்கு புலனாகிறது நன்றி,,
கவிதா அவர்களே,
எனது கோபத்தை பல வருடங்களாக கிழறிப்பார்த்திருக்கிறார்கள். எங்கே நான் கோபங்கொண்டு முட்டாள்தனமான முடிவெடுப்பேன் எனப் பார்த்துக் களைத்துப் போய் ஓய்ந்திருக்கிறார்கள் இங்கே உள்ள தமிழர்கள்… இதில் கனிமொழி என்ன அந்தக் கடவுளே வந்தாலும் அது முடியாது… நான் கோபமடைந்திருந்தால் எனது தமிழைப்பற்றிய தமிழ் மரபுக் கவிதையை இங்கே சொல்லியிருக்க மாட்டேன். எந்தக் கவிஞனும் சொல்லாதது அந்தக் கவிதை…
இவ்வளவு தூரம் உங்களையும் என்னையும் பிணைத்து வைத்திருந்தது கனிமொழியின் கவிதையும் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும்தான் என்பது என்னவோ உண்மை. அதை கனிமொழியின் வெற்றியெனக்கொண்டால் அதில் எனக்கும் மகிழ்ச்சியே.
தீக்குளிப்பதையோ எவரையும் சித்திரவதை செய்வதையோ நான் வன்மையாக எதிர்க்கிறேன்.. அந்த இடத்தில் சீதையை அவதூறாகக் கதைத்தவனை வெட்டிப் போட்டிருந்தால்; சீதையின் கறை துடைபட்டிருக்கப் போவதில்லை. கம்பனுக்கு அந்த இடத்தில் வேறெரு வழியும் கிடைக்கவில்லை. இந்துக் கோவில்களில் நடப்பதை சிறிது மிகைப்படுத்தியிருக்கலாம். -தீ மிதிப்பதைச் சொல்கிறேன்- ஆனால் அதையே இன்றும் யாரும் செய்யச் சொல்லவில்லையே!
அப்படியில்லை ஒரு பெண் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றால் விஞ்ஞானத்தில் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. இதை அமெரிக்கத் தொலைக்காட்சியில் oprah winfrey தனது தொலைக் காட்சித் தொடரில் செய்து பெண்களை நிரபராதி என நிரூத்துக் காட்டினார்.
கனிமொழிதானே தீக்குளிப்பதைப் பற்றி இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார். நானா இதை இங்கு கொண்டு வந்தேன். அன்று படித்ததோடு நிறுத்திவிட்டேன்.
விமான நிலயத்தில் எவனோ ஒருவன் எங்கள் ஆடைகளைக் களைந்து சோதிக்க வேண்டுமானால் சோதிக்கலாம். ஆனால் இந்து ஆலயங்களிலோ வேறெந்த ஆலயங்களிலோ பெண்ணைத் துகிலுரிந்து பார்ப்பதில்லையே…
எங்கள் மனச்சாட்சி எங்களைத் தடுக்கிறது, என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கும் நாம் எவர் மீதோ பழியைச் சுமத்துகிறோம்.
இங்கே கனிமொழி தனது மனச்சாட்சியுடன்தான் போராடியிருக்கிறார்.
சிநேகன் இதுவும் நீங்கள் சொல்வதும் ஒன்று… மற்றப்படி மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பது எனது கருத்தல்ல. அது மருத்துவர்கள் சொல்வது…
கிறிஸ்தவ ஆலயங்களில்; இந்து ஆலயங்கள் போல நெரிசல் இல்லை… கொழும்பு கொட்டாஞ்சேனை அந்தோனியார் கோவிலுக்கு ஒரு நத்தார் இரவு கிறிஸ்தவ சினேகித சினேகிதியரோடு சென்றேன். அங்கே தேவாலயம் நிறைந்து காணப்பட்டது, நெரிசல் இல்லை. முண்டியடிப்பு இல்லை. ஆனால் இந்து ஆலயங்களில் அப்படியில்லை உங்களுக்கே தெரியும்.
மேலும், இங்கேயும் மேலே கூறியதை பாருங்கள். இது உங்கள் மனச்சாட்சியைப் பொறுத்தது…
கனிமொழியின் இந்தக் கவிதை வரிகளிலிருந்த தவறுகளை முன்னைய பதிவில் கூறியிருக்கிறேனே. அதைவிட நாங்கள் எங்களது மனச்சாட்சியை வெல்ல முடியாத நிலையிலிருக்கிறோம்.
கனிமொழியின் இந்தக் கவிதையை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவரவரைப் பொறுத்தது.
எனக்கென்னவோ கனிமொழியின் இந்தக் கவிதை வரிகள் நடைமுறைக்கு புறம்பாகவே காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் அர்ச்சனை எதிர்பார்க்கும் பக்தகளுக்கு ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்தால் அதிலென்ன தவறு.
தமிழிலா எல்லாக் கோவில்களிலும் அர்ச்சனை செய்கிறார்கள்? அதையும் நான் அன்றோடு விட்டுவிட்டேன்.
இன்னும் பல…
நான் பழமைவாதியல்ல! தமிழ்ப்பண்பாட்டில் புதைந்து கிடக்கும் உண்மைகளை விஞ்ஞானத்தின் உதவியோடு ஆராய்ந்து பார்க்க நினைத்தால் அது பழமைவாதி என்றா அர்த்தம்?
மேலைநாட்டவன் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடுகளையும் கண்டு வியந்து போகிறான். ஆனால் நாங்களோ எமது பண்பாடுகளை அவதூறு சொல்கிறோம்.
வீரமாமுனிவரை அறிந்திருப்பீர்கள் படித்திருப்பீர்கள். அவர் தமிழரா…? இல்லை! இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார். Costanzo Giuseppe Beschi என்ற இயற்பெயரைக் கொண்டவர். தமிழிடத்திலும் தமிழ்ப் பண்பிலும் ஆழ்ந்த காதல் கொண்டு தன் பெயரையே வீரமா முனிவர் என மாற்றி தமிழுக்குத் தொணடு செய்தவர்.
Rev. G.U. Pope என்ற ஆங்கிலேயப் பாதிரியார் மதம் பரப்ப இந்தியா வந்து தமிழுக்கும் தமிழ்ப்பண்புகளுக்கும் தன்னை அர்ப்பணித்தவர். இவர் தனது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று பொறிக்கும்படி வேண்டிக்கொண்டாராம். அந்த வாசகம் அவரது கல்லறையில் இன்றும் காணமுடிகிறதாம்.
தமிழ் கற்றோம் என்றால் தமிழ்பண்பையும் சேர்த்துத்தான் கற்பதாகும்.
“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்றார் ஒரு பழம் பெரும் கவிஞர். அதுபோலத்தான் தமிழும் தமிழ்ப்பண்பும்…
இன்னும் பல வெளிநாட்டவர் தமிழுக்கும் தமிழ்ப்பண்புக்கும் தம்மை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
ஆனால் எங்களுக்கு மட்டும் அதிலொரு கசப்பு, வெறுப்பு ஏன்?
என்னுடன் எனது கருத்துகளுக்கு விமர்சனம் செய்து என்னையும் பங்கேற்க வைத்த எல்லோருக்கும் எனது நன்றிகள்.
பொறுமையுடன் எனது கருத்துக்களை பிரசுரித்த இணைத்தாருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்
எனது தங்க மீன்களுக்கு இதனால் இரண்டு மூன்று நாட்களாக நீர் மாற்றவில்லை… நானும் எனது இல்லத்தைக் இல்லத்தில் உள்ளோரைக் கவனிக்க வேண்டுமல்லவா…
விடைபெறுகிறேன். வணக்கம்
பாரதிக்குஞ்சு அவர்களே,
என்னால் உங்களது இரசிகன் ஒருவன் உங்களைப் பிரிந்ததை நினைத்து; மனமுடைந்து, தாழா மனவேதனையுடன் தங்களிடம் மன்னிப்புக்கோருகிறேன். இப்படியொன்று இனிவரும் காலங்களில் நடவாத வண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.
மற்றப்படி எனது எழுத்துக்களை வைத்து நான் ஆத்திரமடைந்ததாக நீங்களும் கவிதாவும் கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது…
எனக்கு தமிழைக் கற்கவும் தமிழில் எழுதவும் ஊக்கமும் உற்சாகமும் தந்தவர் பெரு மதிப்பிற்குரிய மறைந்த கலாநிதி நயன்மார்கட்டு சொக்கலிங்கம் அவர்களே.
அடுத்து எனது எழுத்துக்களில் அப்படியொரு ஆவேசம் வர காரணம்; நான் யாழ்ப்பாணத்தில் ஓடியோடித் தேடித்தேடி வாசித்த சுதந்திரன் பத்திரிகையும் அதை வெளிட்டவரும் அதன் ஆசிரியருமான எனது மதிப்பிற்குரிய திரு. கோவை மகேசன் அவர்களே. திரு. கோவை மகேசன் அவர்களது எழுத்தை வாசித்தால் நாடித்துடிப்பு அதிகமாகும். அப்படி ஒரு தமிழ் எழுத்து அவரது.
இந்த இருவரையும் எனது வாழ்வில் மறக்க இயலாது.
அந்த இரு பெரும் தூண்களின் நிழலில் நான் வளர்ந்த காரணமோ, நானறியேன்.
அதேவேளை எனது கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காகவும் நான் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
பெண்ணுக்கு ஓய்வு வேண்டுமென்றால், ஆணாதிக்கவாதி.
பெண் மென்மையானவள் பூப்போன்றவள் என்றால், ஆணாதிக்கவாதி.
திருநாவுக்கரசர் மனக்கண்ணில் சிவனைத் தரிசித்தார், அப்படிச் செய்யலாம் என்றால் ஆணாதிக்கவாதி.
அதிகமானோர் ஆற அமர இருந்து முழுவதையும் வாசித்துப் பார்ப்பதில்லைப் போலும்.
இறுதியாக ஒரு சின்ன நகைச்சுவை:
சுஜிதா என்ற பெண் ஆணதிக்கவாதியாம்.
நன்றிகள்
வணக்கம்.
சுஜிதா…
நன்றி ,சுஜி, நான் இங்கு எவர்மீதும் கோபப்படவோ வருத்தப்படவோ இல்லை , ஒரு நண்பர் என்னை கடிந்தது, எதை எழுதுவதானாலும் இன்னும் சற்று சிந்தித்து எழுதவேண்டுமென்று ஒரு சந்தற்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, எல்லோருமே ஒரு வட்டத்துக்குள் நிற்பதால் தம்பக்கத்து நியாயத்தை மற்றவர் வழிமொழிய வேண்டுமென்ற அவா எதிர்பற்பாக வெளிவருவது இயல்பு, அது எல்லோருக்கும் பொது,
”நான் பல ஆணடிமைகளை கண்டிருக்கிறேன் ,அவர்களுக்கு உதவ அவனியில் எவரும் இல்லை,
பெண்ணடிமை என்பதெல்லாம் தொடருவதாகவும் நான் நினைக்கவில்லை,
என்ன சுஜி எங்களை யாரும் இங்கு ஆணாதிக்கவாதி என்று குறிப்பிடவில்லையே. எதற்காக அப்படி எழுதினீர்கள்?
”
பாடசாலை செல்லும் போது தமிழைச் சுவைத்து எழுதியது இது:
தமிழ் தமிழ் என்றிடஇ தானே அதை
அமிழ்தமிழ் எனச் சுவைக்கும் – நா
அமிழ் தமிழ் எனறிடஇ அது தானே
தமிழ் தமிழ என்றிடும்…
இந்தக் கவிதைக்கு அர்த்தமும் சொல்லி விடுகிறேன்…
தமிழ் தமிழ் என்று சொல்லிப்பாருங்கள் அது அமிழ்தமிழ் என மாறி வருவதை உணர்வீர்கள்.”
உங்கள் கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்மந்தம்? கனிமொழியும் கவிதாவும் தமிழைச் சுவைக்கத்தெரியாதவர்கள் என்று சொல்வது போல் தொனிக்கிறது.
”
நான் கவிதைகளை காகம் கரைவதைப் போல படித்துவிட்டு போவதில்லை. அதனால் உங்கள் கவிதைக் இங்கே நன்றியை மட்டும் தெரிவிக்கிறேன்.”
உணவு மேடையையும்
படுக்கை விரிப்பையும்
போர்த்திவிட்ட உடைகளையும்
வீடென்ற சிறைகளையும்
தாண்டி
முக்கியமாய் ஆண்டவரே
பெண்களின் தலைக்குள்ளே
கூடுபாய்ந்தீரே…
ஒருவேளை புதுக்கவிதையின் சுவையை நீங்கள் இன்னும் அறியமுயற்சிக்கவில்லைப் போல் இருக்கிறது.
மன்னிக்கவும் எழுத்துப்பிழை “உங்களை யாரும் இங்கு ஆணாதிக்கவாதி என்று குறிப்பிடவில்லையே. எதற்காக அப்படி எழுதினீர்கள்?”
மதி அவர்களே, உங்கள் கணனித்திரையில் அனைவரது கருத்துக்களும் கோர்வையாக இருக்கிறது. அங்கே உங்களது கேள்விகளுக்கும் விடை இருக்கிறது.
ஆற அமர இருந்து வாசித்துப் பாருங்கள். தயவுசெய்து இப்படி எழுதியதற்காக என் மீது கோபப்படவேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள். புதுக்கவிதைகள் இரசிப்பதில்லை நான் சொல்லவில்லையே. கவிதாவின் கவிதையை வாசித்து இரசித்துச் சுவைப்பதற்கு எனக்கு சில பல நிமிடங்கள் தேவை அதனால் அதைப்பற்றி அந்தப்பதிவில் எதையும் எழுத முடியாதிருக்கிறது என்றுதான் சொன்னேன்.
நன்றி வணக்கம் சுஜிதா நோர்வே.
கவிஞர் கனிமொழி அழிக்கிறார்!,
காரிருள் போக்க,கருத்தொருமித்திட,திரண்டெழும் இந்திய மீள்கட்டமைப்பு நிதியை நல்லுலகம் பகிர்ந்திட,அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர் சென்னைக்கு!,
“சிங்களத்தீவின் இராணுவம்” கொக்கரித்தாலும் கொண்டுவிட்டனர் வெற்றியை,அவர் மனம் நோகாமல் நம் காரியம்,ஆற்றலுடன் ஆளுமைக் கொள்ளுவோம்!.
“முடியுமா? முடியும்! என்று எண்ணுவோரின் தொகையையும், வகையையும், அவர்தம் உறுதியையும், உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும் காட்டுகிறேன் வாரீர், என்று அழைக்கிறார், அன்பில்!. லட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள்- லட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. சிங்களத் தீவிலிருந்தும், திருநெல்வேலிச் சீமையிலிருந்தும் சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய்மார்களும், அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும், அணி அணியாக வரப் போகிறார்கள்.
கடல் அலையை மிஞ்சிடும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப் போகிறார்கள்- குதூகலம் காணப் போகிறார்கள்.
குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம், என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க வகையில் திரண்டு வருகிறார்கள் திரு இடத்தவர்கள்! காண வாரீர், கடமையை உணர வாரீர்! கருத்தளிக்கவும், காரியமாற்றவும், கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரருமான திரு இடத்தினர் எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்திலே வந்து சேருமின்!.
பெற்றேனே இந்த மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக் கிடந்தனரே குனிந்த தலையுடந் என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம்; இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததே என் துக்கம்.
இனி என் தளை உடைபடும் என்ற நம்பிக்கை பிறந்ததடா” என்று வாழ்த்தி வரவேற்கிறது! அன்னையின் பணிக்காக அருமந்த மக்காள், அனைவரும் வருக!! என்றெல்லாம் கூறி அழைக்கிறார் அன்னையென வாஞ்சையில்,தவிதவிக்கும் தாய்மார்களின் தளர்ச்சியை போக்கிட,அன்னை கவிஞர் கனிமொழி அழைக்கிறார்! அனைவரும் வருக!.
இவர் என்ன சொல்ல வருகிறார் இவருக்கே புரிகிறதா.இவர் சொல்லுவது,,,,, முன்பொரு பின்னூட்டத்தில் தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் சரியில்லாமலிருக்க வேணும் என்பதுபோல எழுதினார், நல்லாத்தான் முத்திப்போச்சு கடவுள்தான் காப்பாற்றவேணும்,
ஐயா நாடோடி!,”JF” கூற வருவது இப்படியும் இருக்கலாம்!,உதாரணமாக, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்” தொல்.திருமாவளவனின் மிகப்பெரிய ஆயுதமே “பரிதாபத்தை ஏற்ப்படுத்துவதுதான்”,அவரைப் பார்த்தாலே அவர் ஒரு “பறையன்” பாவம்,அவருக்குறிய சலுகைகளை (பணம்) கொடுத்து விடவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் போன்ற வெளி மாநிலத்தவரும்,வெளிநாட்டு மத மற்றும் தொண்டு நிறுவனங்களும் கருதும்படியான,தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் ஏற்ப்படுத்துகிறார்!. அதேபோல்,கவிஞர் கனிமொழியும்,த இரத்தத்தில் ஊறிய “கலைத்துறையை” முழுமையாக வெளிப்படுத்தி,அவர் தந்தை செய்தது போல்,”முதுகு சில்லிட” தடவிக் கொடுத்து,உசுப்பேத்தி விட்டால், இப்படி ஒவ்வொருவரும்,கலைத்துறையினர் “உதட்டுக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமில்லாமல்”(ஒரு நாள் பிச்சைக்காரன்,ஒரு நாள் அரசன் வேடம்),”அரசியலையே ஒரு ஏமாற்று நாடகமாக மாற்றுதல் முறையா?,திருமாவளவன் இவ்வாறு பரிதாபத்தை ஏற்ப்படுத்துவது முறையா?,ஏமாற்று வித்தையல்லவா?.
இவ்வாறு ஒவ்வொருவரும் தன் இரத்தத்தில் ஊறியதையே செய்தால்,அதையே சந்தர்ப்ப வாதமாக பயன்படுத்தினால்,எப்படி ஐயா “ஜாதிகள் ஒழியும்?”!.தன் குணங்களை அடக்கி,மாற்றி நவீன வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி,”பொது இணக்கப்பாட்டுக்கு” வந்தவர்கள் அல்லவா பரிதவித்து காணாமல் போய் விட்டனர்!,ஐயகோ இந்தக் கொடுமை மாறாதா?.
//ஐயா நாடோடி!,”JF” கூற வருவது இப்படியும் இருக்கலாம்!// என்று யூக அடிப்படையில் “நடோடிமன்னன்” தன்பாட்டிற்கு யாரையோ பிணையெடுக்க புதுக்கருத்தை எடுத்துவிட்டு குளப்பியிருக்கிறார்,,கம்பர்சபையில் காதுவெட்டி புலவரும் ,சீழ்த்தலைச்சாத்தனாரும் ,தாங்கள் புலம்புவதை, செய்யுள் களாகவும் கருத்தாழம் மிக்க பாடல்களாகவும் சுற்றியிருக்கும் அடிப்பொடிகள் ஏற்கவில்லையென்றால் |”இந்தப்பாவலவர்கள்” மற்றவர்களின் காதை வெட்டுவதும் ,தலையில் எழுத்தாணியால் தானே குத்தி சீழ்வடித்து சூழலை அசிங்கப்படுத்துவதும்,அன்று நடந்தது, இன்றும் தொடருவதுதான் பெருத்த நகைச்சுவை, சாதிகளில்லையடி பாப்பா என்றார் பாரதி, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்றார் ஔவை , இங்கு நாடோடிமன்னன் பச்சையாக திருமாவளவனை சாதிகொண்டு வைகிறார், இரண்டுநாட்களாக மேலேயுள்ள வசனத்துக்கும் பொளிப்புரைக்கும் ஏதாவது சம்பந்தமிருக்குமா என்று தலை கிறுகிறுத்து நிற்கிறேன்
முதல்ல இந்தப் பெண்ணியம் பெண்ணடிமை என்று கூச்சல்போடுவதை நிறுத்தமாட்டீங்களா வலி எல்லா மனிதருக்கும் பொதுவானதுதானே இதில் ஏன் பெணு ஆண்? ஆண்கள் யாரும் தங்களுடைய வலியை கூச்சல்போட்டு வெளிப்படுத்துவதில்லையே அப்படியிருக்க பெண்கள் மட்டும் ஏன் இப்படி இப்படி கூச்சல்போடுற அளவிற்கு பெண் அடிமைத்தனம் இருக்கிறமாதிரி தெரியவில்லை எனக்கு இதெல்லாம் கவிதைக்கு அழகு சேர்க்க அல்லது அனுதாபம் தேட கனிமொழி மாதிரி ஆட்கள் எழுதுறது என்பதுதான் என் கருத்து ஒரு வியாபார நோக்கம்
சினேகன்
வலி என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். நீங்கள் வெளிநாட்டில் இருப்பவர் போல பேசுகிறீர்கள். இங்கு (தமிழ்நாட்டில்) நாங்கள் படும் அவஸ்த்தை எங்களுத்தான் தெரியும். தலையடியும் தனக்கு தனக்கு வந்தாதான் தெரியும் என்பர்.
இங்கெல்லாம் வளர்ப்பு முறையிலேயே ஆண் பெண் பேதம் ஆராம்பித்து விடுகிறது. அது சுடுகாடுவரை தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு விதிவிலக்கும் இருக்கிறது. அந்த விதிவிலக்குகளை மட்டும் பொறுக்கிப்வைத்து பேசுவது சரியா என்ன?
எதையும் மேலோட்டமாப் பார்த்தால் அப்படித்தான். பெரும்பான்மையில் ஒரு குடும்பப் பெண் வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் ஞாயிற்றுக்கழமை வரை கணவரின் விடுமுறைக்காக காத்திருக்கிறாள்.
அவள் எவ்வளவுதான் படித்திருந்தாலும் அவளுடைய திறமைகள் பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதிலும் வீட்டை பராமரிப்பதற்கு மட்டும் தான் செலவிடப்படுகிறது. இங்கே உள்ள ஆண்களை வீட்டில் ஒரு நாள் இருத்தி வைத்துப் பாருங்கள்.
நீங்கள் சொல்வதுபோல நான் வெளிநாட்டில்தான் வாழுகிறேன்(நோர்வே) இங்கு நிலமை தலைகீழ் இங்கு பெண்களுக்குத்தான் உரிமை அதிகம் அப்படியிருக்க இங்கும் பெண்விடுதலை என்று கூச்சல் போட்டால் கோபம் வராதா சொல்லுங்கள் ?
ஒரு இணையத்தளம் என்பது பொதுவானது. அதில் வரும் கருத்துக்கள் பொதுவான அடைப்படையில் பார்ப்பதுதானே சரியாகும். இந்தக் கட்டுரை வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கானவை போன்று தெரியவில்லை. எழுதியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்றது அதில்ச் சொன்ன கருத்துக்கள்பல வெளிநாடு சூழ்நிலைக்கும் பொருந்துபவன தான் என்று நினைக்கிறேன். கவிதைகளை ;ஆய்வு செய்தவர் நோர்வேயைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் இப்படிக்கூற முடியுமா என்ன?
வெளிநாடுகளிலும் சில விதிவில்க்கானவர்களைவிட எல்லாம் மாறிவிட்டது என்று சொல்ல முடியுமா? நம்பமுடியவில்லை. ஒரு சமூகம் தானே தீர்மானிக்கறது. பெண்களுக்கான ஒரு நற்சமூகம் இங்கு இன்னும் வரவில்லை சினேகன்.
சினேகன் அவர்களே நீங்கள் சொல்லவது நூற்றுக்கு நூறு விகிதம் உண்மைதான். வேலைத்தலங்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்குச் சரி சமனாக இருக்கவேண்டும் என சட்டமே இயற்றியிருக்கும் நாடு நோர்வே.
என்ன யோசிக்கிறீர்களா… இவளும் ஒரு பெண்ணா என… உண்மையை ஒழுங்காக ஒத்துக் கொள்வதுதானே மனித பண்பு.
நன்றி வணக்கம் சுஜி நோர்வே.
அஹா… கிளம்பீடங்கய்யா. வேலை தளத்தில் சரிக்குச் சமன் பெண்களுக்கான இடத்தைக் கொடுத்துவிட்டால் சரியா? இங்கேயும் கட்டாயத் திருமணங்களில் இருந்து எல்லாமே நடைபெறுகிறது. இனி வரும் சந்ததிகளிடம் தான் நாம் மாற்றங்களை எதிர்பார்க்கலாமே ஒழிய தற்போதய சமூகத்தில் பெரிய மாற்றங்கள் உள்ளதாக இங்கும் சொல்ல முடியாது.
தமிழ்ச் சினிமா உலகம், இலக்கிய வட்டம், வீட்டின் வெளியே உள்ள எமது சமூகம் எங்குமே பெண் பின் தங்கியிருப்பது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால். இந்த விசயத்தில் பெரும்பான்மையான குற்றச்சாட்டை நாங்கள் ஆண்கள் மீது போட்டு தப்பிக்கொள்ளமுடியாது. பெண்களும் பெரும்பான்மை பொறுப்பை ஏற்றாக வேண்டும். வீடும் வேலையுமாக இருப்பவர்களுக்கு சமூகத்தினை பற்றி கவலை இல்லை. சமூகத்தில் உள்ளே ஒரு அங்கமாக வேலை செய்பவர்களுக்குத்தான் பிரச்சனைகளை அறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் எல்லாரும் தமது சுயத்தை அடைந்விட்டதாக கூற முடியாது. பெண்களுக்கான அனைத்தும் வெளிநாட்டில் கிட்டிவிட்டாதாக சொல்லும் உங்களை நான் வாழ்த்துகிறேன். தனிப்பட்ட முறையில் நீங்கள் திருப்தியுடன் வாழ்வதையே இது காட்டுகிறது.
கனம் Neethi அவர்களே,
நீங்கள் எந்த நாட்டைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள் எனப் புரியவில்லை. இருந்தாலும் அறிவை வளர்த்துக்கொள்வது நல்லதில்லையா… நோர்வே கட்டாயத்திருமணத்திற்கு எதிரான சட்டத்தையும் 95ம் ஆண்டு இயற்றி 98ம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது. அதே வேளை இங்கிலாந்தும் அப்படியொரு சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது. கீழே இருக்கும் இணைப்புகளை சொடுக்கவும். மற்றப்படி நீங்கள் சொல்வதெல்லாற்றிற்கும் விரிவான விளக்கம் கொடுக்க முடியாத நிலையிலுள்ளேன்.
http://www.udi.no/Norwegian-Directorate-of-Immigration/Central-topics/Forced-marriage-/
http://news.bbc.co.uk/2/hi/7747267.stm
Germany:
France போன்ற நாடுகளிலும் இந்தச் சட்டம் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
நான் சொல்ல வந்த விடயம் நோர்வே மண்ணில் வசிக்கும் ஆசிய ஆப்பிக்க மக்கள் பற்றி. தமிழர்கள் மத்தியிலும் கட்டாயத் திருமணம் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. விரும்பியவனோடு வாழுதல் என்பது இன்னும் யாதார்த்த நிலையில் இங்கு இல்லை. நானே தேவைக்கு மேற்ப்பட்ட உதாரணங்களை நேரில் அறிந்தவள். நோர்வே நாட்டு மக்களைப்பற்றி நான் பேசவில்லை. ஆண் பெண் இருபாலருக்கும் தன் துணையைத் தெரிவு செய்யும் உரிமையைக் கொடுக்க வேண்டும். காதல் என்பது கள்ளத்தனமாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்ற நிலைக்கு எம் சந்ததிகளை வைக்கக் கூடாது. பிள்ளைகள் தவறான வழியில் செல்லாமல் சரியான துணை கண்டறிய வைப்பது என்பது சிறிய வயதில் இருந்து வளர்ப்பு முறையில் வரவேண்டும். இது விவாதிக்கப்பட வேண்டிய பெரிய விடயம். எனது அபிப்பிராயத்தை மட்டும் சொன்னேன்.
/சாதிகளில்லையடி பாப்பா என்றார் பாரதி, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்றார் ஔவை /- திரு.நாடோடி,சாதிகளை ஒழிக்க “சமூக நீதி” தேடிய ஆர்வளர்கள் அந்தக்காலம்,இன்று “இந்தியாவில் சாதிவாரியாக ஜனத்தொகை கணக்கெடுப்பு நடக்கப் போகும் செய்தியை அறியவில்லையா”?.இது யாரால்.”பறையன்” என்று சொல்லுவது தற்போது இழுக்கல்ல,என்னையும் பறையனாக பதிவு செய்தால் மகிழ்வேன்.சில பறையர்கள் ஜமீந்தார்களை விட கொடுமையான அதிகாரம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளதுதான் சமூக நீதியா?.திராவிட இயக்கங்கள் வரலாறில் சமூக நீதிக்காக வந்த பல்லாயிரம் இளைஞர்கள்,விடுதலைப்புலிகள்? வரலாற்றைவிட அதிக தியாகங்கள் செய்து மண்ணுக்குள் நாசமாய்ப் போனது,”கம்பன் கழகம்” நடத்தும் உங்களைப் போன்றோருக்குப் புரியாது.ஜமீந்தார்களை எதிர்த்து ஆதரவு பெற்றவர்கள் இன்று ஜமீந்தார்களை விடகொடுமையான ஏகாதிபத்தியவாதிகளாக மாறி உள்ளனர்!.மகிழ்ச்சியான நடுத்தரவர்கம் துடைத்தழிக்கப்படுகிறது!.கவிஞர் கவிதா,கவிஞர் கனிமொழி,கவிஞர் சுஜி,ஆகியோரின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை ஆனால்,சமுதாய நீரோட்டத்தில் தரைத் தட்டியிருக்கிறார்கள்.மேலே உள்ள வசனமும்,அடுத்த வசவும்,இந்த நீரோட்டத்தின் தன்மையை எடுத்தியம்ப எடுத்தாளப்பட்டன!,நன்றி!..
நீங்கள் எடுத்தியம்பிய உவமைக்கு உதவியதுதான் கம்பன்சபை ,நிங்கள் சொல்லும் நியாயங்கள் எல்லாம் “எனக்கு” ஏற்புடயதல்ல என்றாலும் சில நியாயங்களில் ஒதுக்கக்கூடியவையுமல்ல ஏற்புடயவைதான் , இருந்தும் எம்மவர்களிடமிருக்கும் திணிப்பும் கோபப்படும் தன்மையையும் குறைப்போமானால் கருத்தை இலகுவாக கொண்டுசேர்க்க வழிவகுக்கும் ஆத்திரப்படுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, நீங்கள் எழுதிய கருத்தை திரும்பவும் வாசித்துப்பாருங்கள் இன்னும் மென்மையாக எழுதியிருக்கலாம் என உங்களுக்கே தொன்றும்,நன்றி உங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும்,
//பறையன்” என்று சொல்லுவது தற்போது இழுக்கல்ல,என்னையும் பறையனாக பதிவு செய்தால் மகிழ்வேன்// இந்த வசனம் எனக்கு கடுமையாகத்தெரிகிருது ,உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம், இத்துடன் இதை முடித்துக்கொள்ளலாமென விரும்புகிறேன் நன்றி,
உண்மைதான் இன்றய யதார்த்த வாழ்வில் முகத்தில் அறைகிற உண்மைகளை எதிர் கொள்ள துணிவில்லாமல் இன்னமும் பழைய புராணங்களைப் பாடி காலம் கடத்துவதை என்ன சொல்ல ?இன்று முகத்தில் அறைகிற உண்மைகளை எதிர்கொள்ள உங்கள் படைப்புகளை பயன்படுத்துங்கள் புராணங்களை பாடிப் பெருமை தேடவேண்டாமே
யார் சுஜியை சொல்லுகிறீர்களா? யார் புராணத்தைப் பாடினார்கள்? புரியவில்லையே. கனிமொழி கவிதையிலோ அல்லது கவிதாவின் பகிர்வினிலோ புராணத்தைப் பற்றிய பெருமை ஏதுவும் இல்லையே. யாருக்கு எழுதுகிறீர்கள்?
கொஞ்சம் கம்பன் கழக அரட்டை கும்பலை பற்றி யாராவது எழுதுங்களேன். பிளீஸ் !!
நாடொடிமன்னனின்;;; இடுகைகலெல்லாம் ஒன்ருக்கொன்று கனல் கொப்பளிக்கிரது அவர் எந்த யுகத்திலிரிக்கிருக்கிறார் என்பது அவருக்கும் தெரியல்ல அவரை உசுப்பேதிதினவருக்கும் தெரியல்ல கம்பனல்ல காத்தவராயனை கொண்டு வந்தாலும் ”JF” பொன்றவர்களையும் \நாடோடிமன்னன்களையும் \ ஒண்ணும் பண்ணமுடியாது கண்ணுக்கு முன நடந்த இன அழிப்பு சூத்திரதாரி கருணாநிதியின் மகள் கனிமொழியை காப்பாத்த திருமாவளவனை ‘பறையன் ; பள்ளன் என்று அடுக்கு மொழிஅளக்கும் அடலேறுகளின் கழிப்பிடமாக இனியொரு இருப்பது என்னவென்று சொல்ல
எனக்கு திருமாவளவன் யாரென்று தெரியாது.இந்த தகவல் உண்மையா என்று பாருங்கள் உண்மை இல்லையென்றால் பிரசுரிக்க வேண்டாம்!.
“உமா?”,நீங்கள் எத்தனையோ தலித் இளைஞர்கள் “சமுதாய நீதி சிந்தனையுடன்” இருக்கும் போது,விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனை மட்டும் “காப்பாற்றும்” “புலம் பெயர்ந்த புலி வியாபாரியாக” இருப்பதை என்னவென்று சொல்லுவது,முள்ளிய வாய்க்காலை முடித்து “சுருட்டிய பில்லியன் டாலர்களை” எங்கே சொல்லி அழுவது.பங்காளிகள் சண்டை என்றால் உங்களுக்கு ஊட்டச்சத்து டானிக் ஆயிற்றே!.
அன்புடன் தமிழ் மாறனுக்கு,
‘கனம்’ என்ற சொல் பல பொருள் தரும். இங்கு பெருமை என்பது பொருளாகும். ‘கனம்’ என்ற மரியாதைச் சொல் ‘கனம் பொருந்திய – பெருமைக்குரிய’ என்பதிலிருந்து காலவோட்டத்தில் ‘பொருந்திய’ விட்டுப் போக ‘கனம்’ என்பது மரியதைக்குரிய சொல்லாக நிலைத்துவிட்டது. சொல்லுக்கு இடமறிந்து பொருள் கொள்ளல் மொழிகளில் பொது.
யாருக்கு கடிதம் எழுதுகிறோமென அறியாத நிலையில் அவர்களை மரியாதைச் சொற்களால் அழைப்பது கடிதமெழுதுதலின் மரபு.
ஆங்கிலத்தில் தெரிந்தவரானால் Dear Sir or Dear Madam, தெரியாதவரானால் Sir/Madam.
ஆக, யாரை அழைக்கிறோம் எனத் தெரியாத நிலையில மரியாதைச் சொற்றொடராக ‘கனம் X அவர்களே’ என்பது வழமை. இது வளைவதோ குழைவதோ என்ற பொருளல்ல. உள்ளடக்கம் ஒருமையாக, உண்மையாக, ஆணித்தரமாக இருந்தால்ப்போதும்.
இறுதியாக ஒரு சின்ன உதாரணம். ஒரு கடிதம் கலாநிதி, கவிஞர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதும் போது… Mr. Karunanithi. என எழுதமுடியுமா..? ஆங்கிலத்திலேயே அது சரிப்பட்டு வராத விடயம்.
ஏதாவது தவறாக எனது எழுத்துக்கள் இருந்திருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
நன்றி, வணக்கம்.
சுஜி நோர்வே.
சுஜி என அழைப்பதிலான நெருக்கம் மேடம்,சார் என வரும்போது ஒருவித ஒவ்விசியலை எற்படுத்தி விடுகிறது அதிகளவில் போலித்தனமாகவே மேற்கில் உணரப்படுவதை உணர்ந்துள்ளேன் ஆனால் இது தவறூ அல்ல.
“அப்பா பற்றிய சில வரிகளில்…
சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா”
கருணாநிதி பற்றி தாய் நன்றாகவேயறிந்துள்ளார்.
“யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்….”
என்னைப் போல் மூன்று பெண்டாட்டிக் காரனாகி விடுவான் என்ற நடுக்கம்
“புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கோடி பிடிப்போம்
கோஷம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்”
தந்தையின் பலதார திருமணங்களையும் பெண்ணடிமைத்தனத்துக்கும் எதிராக கனிமொழி மெளனமே சாதித்துள்ளார்.
கற்பென்று ஒன்றுமேயில்லை எனும் பொழுது இராவணனின் கற்பைப் பற்றி கூறி தந்தை வழியில் சங்க கால கற்பை நிரூபிக்க கனிமொழி முயல்கின்றார்
கனிக்கே இப்போ நடைமுறையில் இருப்பது வெளிப்படையாக இரண்டாவது தாரம் , அப்படியிருக்கும்போது அந்த ஓடையை தாண்டி கவிதை எழுதி கரி பூசிக்கொள்ள கனிமொழி என்ன விட்டில்ப்பூச்சியா வண்ணத்துப்பூச்சியா என்பதை கவிதையில் நறுக்காக அப்பாவையும் திரைப்படநடிகையாக இருந்து பல களங்கண்டு கருணாநிதியால் கவரப்பட்ட ராசாத்தியம்மாவயும் காப்பாற்றவேண்டியது கனியின் தலையாய கடமையில்லையா,
வணக்கம்
நோர்வேயில் நடாத்தப்பட்ட நாட்டிய நாடகம். “ராமாயணம் (கேட்கப்படாத கேள்விகள், முன்றாவது பார்வையில்)
http://www.youtube.com/watch?v=cRVO969mI1A
. இறுதிப்பாகம்
முழு நடனநாடகத்தையம் காண
http://www.niruthya.com/index.php?option=com_content&view=article&id=34&Itemid=11
விரைவில் கண்ணகி பாரதி கண்ணம்மாவைச் சந்தித்தால் என்ற கற்பனை நாடகம் வலைபின்னலில் ஏற்றப்பட்டதும். இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.
நன்றி
கவிதா.
தங்களது வீடியோ இணப்புக்களூக்கு எமது இதயம் நிறந்த நன்றீகள்.