Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கருத்துச் சுதந்திரம் -புலிகளிலிருந்து புலி எதிர்ப்பு ஜனநாகயம் வரை : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/01/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற சொல்லாடல்கள் மேற்கிலிருந்து காலனிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. ஏகாதிபத்திய அரசுகள் தமது மேலாதிக்க ஒடுக்குமுறை நலன்களை நிலை நாட்டுவதற்காக மூன்றாமுலக நாடுகளிலும் ஒரு அர்த்ததிலும் அதே வேளை தமது நாடுகளில் மற்றொரு அர்த்ததிலும் அறிமுகப்படுத்திய இவற்றின் உள்ளடக்கம் அபாயகரமானது.

கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது என்ற தலையங்கத்தில் அமரிக்க நலனுக்காக ஐக்கிய நாடுகள் ஈராக்கில் விதித்த பொருளாதாரத் தடை ஒரு மில்லியன் ஈராக்கியக் குழந்தைகளைக் கொன்று குவித்துள்ளது.

சதாம் ஹுசைனிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக அமரிக்கா ஈராக்கில் நிகழ்த்திய மனிதப் படுகொலை இன்னும் சில மில்லியன் பிணங்களைக் குவித்துள்ளது.

இப்போது லெபனானில் கடாபியிடமிருந்து ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் அவசர அவசரமாக மீட்டெடுக்கப்பதாக கூறிய மேற்கின் நலன்கள் லிபியாவில் காட்டுத் தர்பார் நடத்தியிருக்கின்றது.

மேற்கின் நலன்கள் ஜனநாயகம் என்றால் என்ன என்ற உலகப் பொதுப்புத்தியை உருவாக்கியுள்ளது. மனிதாபிமானம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை போன்ற அனைத்துமே மேற்கின் நலன்களுக்கான உள்ளடக்கத்தையே கொண்டிருக்கிறது.

மேற்கின் சந்தையாக ஏனைய நாடுகளை மாற்றுவதற்கு, சுதந்திரம், ஜனநாயகம், கருத்துரிமை, வன்முறை என்பதற்குரிய உள்ளடக்கம் உருவாக்கப்பட்டது.

மேற்கின் பொருளாதார நலன்களுக்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் அனைத்துமே வன்முறை என வரையறை செய்யப்பட்டது. இவ்வாறு வரையறை செய்யப்பட்ட வன்முறையைக் கையாள்வதற்கு அவர்களின் “ஜனநாயக வழிமுறையாக” தன்னார்வ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஒடுக்கு முறைக்கு எதிராக மக்கள் போராட எத்தனிக்கும் ஒவ்வொரு சூழலிலும் தன்னார்வ நிறுவனங்கள் அவர்களைச் சமாதானப்படுத்தும். இந்த நிறுவனங்களின் பிரதான பணி என்பது அவற்றிற்கு கொடுப்பனவுகளை வழங்கும் ஏக போக முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ற வியாபாரப் புறச் சூழலை உருவாக்க்குவது என்பதே.

ஆக, ஒடுக்கப்பட்ட நாடுகளில் முதலிடுவதற்கும் சுரண்டுவதற்குமான ஜனநாயகமும் சுதந்திரமும் மட்டுமே மேற்குலகின் ஒரே நோக்கம். உலகத்தின் ஜனநாயகம், சுதந்திரம் குறித்த சிந்தனை முறையும் இதன் அடிப்படையிலேயே புனையப்பட்டுள்ளது. இவற்றிற்கு அப்பால் புதிய வகையான ஜனநாயகம் குறித்த கருத்துப் பொது வெளியை உருவாக்குவதிலிருந்தே “நிபந்தனையற்ற” கருத்துரிமை குறித்த முடிபிற்கு நாம் வந்தாக முடியும்.

“ஒரு தனிமனிதன் தனது கருத்தை மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் வெளியிடும் சுதந்திரம்” என்பதே கருத்துச் சுதந்திரமாகக் கருதப்பட்டது. மேற்கு நாடுகளதும் அவற்றின் மூன்றாமுலக முகாமைத்துவ ஏஜண்டுகளதும் வசதிக்காக உருவாக்கப்பட்ட இவ்வகையான கருத்துச் சுதந்திரம் ஒரு வகையான வன்முறையை அதிலும் அதிகார வர்க்கத்தின் வன்முறையை உள்ளடக்கியிருந்தது.

இப்போது மகிந்த ராஜபக்சவின் பேரினவாதக் கருத்தியலைப் பாதிக்காமல் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை எதிர்பார்த்தால் அது இனப்படுகொலையை ஊக்குவிக்கும் வன்முறையாக மாற்றமடைகிறது.

உலகின் பெரும்பான்மை மக்கள் ஏகாதிபத்தியங்கள் அறிமுகப்படுத்திய ஜனநாயக முறைமைக்குள்ளும் சுதந்திரத்தினுள்ளும் சிக்கவைக்கப்படுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு இன்னொரு ஜனநாயக முறைமை அதுவும் அவர்களின் நலன்களுக்கான ஜனநாயக் முறைமையும் சுதந்திரமும் இருப்பதாகத் தெரியாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.

கருத்துச் சுதந்திரமும் அதனை வெளியிடுவதற்கான ஜனநாயகமும் இந்த அடிப்படைகளை முன்வைத்தே கட்டமைக்கப்படுகின்றது. ஆக, கருத்துச் சுதந்திரம் கூட நிபந்தனைக்களுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்க வேண்டும்.

அதுவே மக்களின் ஜனநாயகத்தைக் கோரி நிற்கிறது. ஆக, மக்களின் ஜனநாயகம் என்றால் என்ன?

உலகில் பெரும்பான்மையான மக்கள் அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கபடுகின்றனர். அவ்வாறு ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படும் போதெல்லாம் அவர்கள் அதற்கு எதிராகப் போராடுதலும் தவிர்க்க முடியாத நிபந்தனையாகி விடுகிறது. ஒடுக்கு முறையின் வடிவங்கள் வேறுபடினும் அவை அதிகாரத்திலுள்ள வர்க்கத்தின் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒடுக்கு முறையின் பண்பிற்கு ஏற்ற வகையில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் தன்மையும் மாறுபடுகிறது.

ஆக, போராட நிர்பந்திக்கப்படும் மக்கள் முதலில் தமது உரிமைகளுக்காகப் போராடுவதற்கான ஜனநாயக் உரிமைகளை கோருகின்றனர். அவர்களின் போராட்டத்தின் குறித்த வளர்ச்சி நிலையில் பெரும்பான்மை மக்களின் அதிகாரம் சிறுபான்மையினரின் அதிகாரத்திற்கு எதிராக நிறுவப்படும்.

பொதுவாக மூன்றாமுலக் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் என்பது அடிப்படை முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கூடக் கடைப்பிடிப்பதில்லை. அதற்கான அரசியல் அழுதங்களும் சமூகத் தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. வெளிப்படையான வன்முறையே அவர்கள் ஆட்சியளர்கள் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போதுமானதாக அமைந்திருந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் இதே வன்முறை பாசிசமாக வளர்ச்சியடைய இடைவெளியின்றிய ஒடுக்குமுறை உருவாகியது மட்டுமன்றி இலங்கை அப்பாவி மக்களின் கொலைக் களமாக மாற்றமடைந்துள்ளது.

* இலங்கை அரசின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராடும் ஜனநாயகம் அங்கே முற்றாக மறுக்கப்பட்டுகிறது. இதனை நியாயப்படுத்த புலிகளின் தொடர்ச்சியான இருப்பு, காரணமாக முன்வைக்கப்படுகிறது. இதனால் தான் இலங்கை அரசுடனான இணக்க அரசியல் என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்முறையாகவே கருதப்ப்படும்.

* மக்கள் போராட முற்படும் போதெல்லாம் அதற்கு உறுதுணையாக அமைவதும் சாத்தியமான சூழ்நிலைகளில் போராட்டங்களில் பங்களிப்பதும், குறினப்பான சூழலில் அவ்ற்றை ஊக்குவிப்பதும் சமூகப்பற்றுள்ள மனிதர்களின் கடமையாகும். மேற்கு நாடுகளின் நிதிக் கொடுப்பனவுகளில் இயங்கும் தன்னார்வ உதவி நிறுவனங்களோ மக்கள் போராடும் போது அவற்றைத் தற்காலிகமாக சமரசம் செய்வதற்கான திட்டமிடல்களை மேற்கொள்கின்றன. இவை மனிதாபிமான உதவிகள் என்ற தலையங்கத்தில் மூன்றாமுலக நாட்டு மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் தலையீடு செய்கின்றன. மக்களின் போராடும் உரிமைக்கு எதிரான “மனிதாபிமான” வன்முறையை இவ்வாறான தன்னார்வ நிறுவனங்கள் கட்டவிழுத்துவிட்டுள்ளன.

* மக்கள் போராடும் முற்படும் போது அவர்களைப் பார்வையாளர்களாக மாற்றி போராட்டத்தைச் சில குழுக்களின் அல்லது தனி மனிதர்களின் உரிமையாக மாற்றும் ஜனநாயக மறுப்பிலிருந்து மற்றொடு வகையான வன்முறை உருவாகிறது. இதுவும் மக்களின் போராடும் சுதந்திரத்தை மறுக்கும் வன்முறையாக மாற்றமடைகிறது. ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களின் வன்முறையின் ஊற்றுமூலமும் அவற்றின் மக்கள் விரோதக் கூறுகளும் கூட இதனை அடிபடையாகக் கொண்டவையே.

பன்னாட்டு நிறுவனங்கள் மக்கள் மீதான வன்முறையை ஏனைய வடிவங்களிலும் பிரயோகித்தாலும் இன்றைய இலங்கைச் சூழலில் மேற்குறித்த மூன்று அடிப்படைக் கூறுகள் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துக்கின்றன.

புலிகளின் வன்முறையும் கருத்துச் சுதந்திரமும்.

மக்களிலும் அதிகாமக அரசியல் கட்சி பலமையும் போது, மக்களின் கண்காணிபிலிருந்து அவை விலகிச்செல்லும் போது அது மக்கள் விரோத நிலையை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாத அரசியல் செயற்பாடாக மாற்றமடையும். இவ்வாறு அன்னியபடுத்தும் செயற்பாடுக உலக விடுதலை இயக்க்ங்கள் மத்டியில் ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஈழப் போராட்டத்தில் இந்திய அரசின் தலையீடு இதனைச் சிறப்பாகவே செய்து முடித்திருக்கின்றது. மக்களின் போராட்டத்தை சில இராணுவக் குழுக்கள் தமது சொத்தாக உருமாற்றிய விடுதலை இயக்கங்கள் தமது குழுவாத நலன்களுக்காக மோதிக்கொண்டன. இந்த மோதல்களைத் திட்டமிட்ட இராணுவ ஒடுக்குமுறையாக மேற்கொண்ட புலிகள் இயக்கம் தனிப்பெரும் அமைப்பாக உருவானது.
இவ்வாறு உருவாக்கப்பட விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு புறத்தி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தைத் தலைமை தாங்கிய அதே வேளை மறுபுறத்தில் மக்கள் மீதான ஒடுக்கு முறையையும் பிரயோகித்தது.இதற்கு எதிராக போராட முனைந்த மக்களை புலிகளின் மையத் தலைமையை நோக்கித் இசைவாக்கம் அடையச் செய்வதற்கக குறியீடுகளின் புனிதம் முன்வைக்கப்ப்பட்டது. குறிபாக தேசியத் தலைமை, புலிகளின் சின்னங்கள் என்பன குறிப்பிடப்படலாம். இங்கு இச்சின்னங்கள் விமர்சனக்களுக்கு அப்பாற்பட்ட புனிதத்தைக் கொண்டவையாகப் கருத்தமைக்கப்பட்டது.
புலிகள் இன்று இல்லை. புலிகளின் இருப்பு என்பது அதன் இராணுவ பலத்திலும் இராணுவ வெற்றிகளிலும் மட்டுமே தங்கியிருந்தது. இராணுவ வெற்றிகளை அரசியல் சாதனையாகவும் புனிதமானதாகவும் புனைவதற்கு இன்று சாத்தியமற்ற சூழலில் புலிகளின் இருப்பு கருத்தியல் அளவில் கூட சாத்தியமற்றதாகிவிட்டது. எது எவ்வாறாயினும் புலம் பெயர் நாடுகளில் புலிகளின் புனிதம் குறித்த கருத்தும் சிந்தனையும் இன்னும் ஆளுமை செலுத்தும் போக்கையே காணலாம். இதற்கு மூன்று பிரதான காரணங்களை முன்வைக்கலாம்.

1. இலங்கை அரசின் தொடரும் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும்.

2. புலிகள் இன்னமும் வாழ்வதான இலங்கை அரசின் பிரசாரம்.

3. புலிகள் இன்னமும் நமது எதிரிகள் எனப் பிரச்சாரம் மேற்கொள்ளும் இலங்கை அரச ஆதரவாளர்களின் பரப்புரைகள்.

இவை அனைத்தும் புலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும் புலிகள் சார்ந்த சிந்தனை முறையினை மேலும் உரமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக புலி சார் சிந்தனை வட்டத்துள் இயங்கும் புலம் பெயர் அமைப்புக்களும் அதே வேளை புலி எதிர்ப்புக் குழுக்களும் தமது வன்முறை சார்ந்த, மக்கள் விரோத , ஜனநாயக மறுப்பு  அரசியலை முன்வைப்பதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது.

(புலியெதிர்ப்புக் குழுக்கள் எவ்வாறு வன்முறை சார் அவதூறுப் பிரச்சாரங்களை குறுக்கு வழிகளில் மேற்கொள்கின்றனர் என்பது வரை நாளை மிகுதிப்பகுதி பதியப்படும்…)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மட்டக்களப்பில் வங்கிக் கொள்ளை : ஒருவரும் கைதாகவில்லை

Comments 9

  1. S.G.Ragavan says:
    15 years ago

    என்னைப் பொறுத்தவரையில் இன்று புலிக்கொடியா? பூனைக்கொடியா? என்பது பற்றி எவ்வித அக்கறையுமில்லை. வன்னியில் சம்பூரில் வாகரையில்
    வகைதொகையின்றி படுகொலை செய்யப் பட்ட ஒருலட்ச்சத்திற்கு மேற்பட்ட எம்மக்களின் அவலங்கள் யாரின் தலைமையிலும் அம்பலப் பட்டாலும் ஏற்றுகொள்ளுவேன். படுகொலைக்கு உதவிய 17 நாடுகளையும் மகிந்த & கம்பெனி அம்பலப் படுத்துமேயானால் மகிந்தவின் கம்பனியை யும் வாழ்த்துவேன். எமது சகல அவலங்களும் அகலும் வரை, அந்த அவலங்களை எந்த காட்டேறி எதிர்த்து நிண்டாலும் அந்த காட்டேரிகளையும் ஆதரிப்பேன்.

    • chandran.raja says:
      15 years ago

      திரு ராகவன்! விவசாயிகளுக்கு போய்சேர´வேண்டிய தண்ணீரை மறித்து துருசை பூட்டியதிருந்து முல்லைத்தீவு மணல்பரப்பில் கருவாடக காய்ந்ததிலிருந்து முழுக்க முழுக்க தமிழ்மக்களின் சிந்தனைகளில் கொல்லோச்சிய புலம் பெயர்தமிழ்மக்களிடம் தான் நீங்கள் குறைகண்டு கொள்ள வேண்டும்.

      இந்த விதத்தில் மகிந்தா கொம்பனியையோ சர்வதேசியத்திடமோ குற்றம் சுமத்துவதில் எந்த சுகமும் இல்லை. வெறும் அறியாமையே!.

    • THAMIL MARAN says:
      15 years ago

      இங்கிலாந்தில் கிரிக்கெட்டை எதிர்கும் கூட்டம்தான் இன்றூ மதியச்சாப்பாட்டிற்கு தயிர் நல்லதா? நெய் நல்லதா? என பட்டி மன்றம் நடத்துகிறது.எனக்கு புலிக் கொடியில் சம்மதம் இல்லை.அது மனிதத்திற்கெ எதிரானது.சிங்க கொடி கூடாது என பெசிக் கொண்டு புலிக் கொடியை ஆதரிக்க முடியாது.

    • yyyy says:
      15 years ago

      ராகவன்,
      புலிக் கொடிக்கும் கட்டுரைக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக தெரியவில்லையே? கருத்துச் சுதந்திரம் பற்றி தான் கட்டுரை பேசுகிறது.

  2. நவநீதன் says:
    15 years ago

    கருத்து சுதந்திரம் , ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாவற்றையும் புலிகளிடம் தான் நாம் கற்று கொள்ளவேண்டும்.விரைவில் தலைவர் வெளி வந்து வகுப்பு எடுப்பார்.

    நவநீதன்
    01.07.11

  3. Kumar says:
    15 years ago

    உலகில் எங்காவது ஒரு நாடு தனியே நின்று சா்வதேச அதிகாரவா்க்கத்துடன் சாராது தனக்கென்று பேச்சு,எழுத்து,சனநாயகம்,பொருளாதார கொள்கைகள் என்பவற்றை உதுவாக்கி நிலைத்துவிட வழி உண்டா?( அதாவது இன்னொரு சனநாயக சுதந்திர முறையில் தனித்து நிற்பது) அனேகமாக சாத்தியமேயில்லை.

    மனிதனின் வாழ்க்கை முறையும் தேவைகளும் மிகவும் வேகமாக மாறிக்கொண்டு செல்வதால் ஒன்றில் இன்னொன்று தங்கி இருக்கவேண்டிய நிலை தவிர்க்கமுடியாததாக மாறிவருகிறது இதற்கு இன்றய சீனா கூட விதிவிலக்கல்ல வல்லரசாக மாறிவரும் சீனா நம்பி இருக்கும் பெரிய சந்தை அமேரிக்கா என்பதும் அமேரிக்கவின் நிர்ப்பந்தங்களுக்கு சீனா பதில் கூறவேண்டிய நிலையில் உள்ளபோது சிறிய நாடுகளும் அதில் சண்டியன்களாக இருக்கும் தலைவா்களும் எந்த மட்டில்.

    இறுதியாக கியூபா கூட தனது கொள்கைகளை தளா்த்த தொடங்கியுள்ளது அதாவது இனிமேல் மேற்குலகின் வியாபார சிந்தனைகளை உள்வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு ஏற்பட்டுவிட்டது.

  4. S.G.Ragavan says:
    15 years ago

    Mr Y நாங்கள் நிரம்ப கதைத்தோம் செயலில் தோற்றுப் போனோம் இந்த இடைவெளியை புலிகள் சரியாப் பயன் படுத்தினார்கள். அதன் நன்மை தீமைகளை நாம் எல்லோரும் அனுபவித்தோம் இன்றும் அதே இடைவெளி!….. மக்கள் வதை படுகிறார்கள், அவலப் படுகிறார்கள்.
    சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக விடுதலை , பேரினவாதத்தின் இனச் சுத்தீகரிப்பு இவை எவற்றிலும் மாற்றம் இல்லை நாளை நாம் எல்லோரும் சேர்ந்து இன்னுமொரு புலியை விரும்பியோ விரும்பாமலோ உருவாக்கி விடுவோம் பின்பு அவர்களை திட்டுவோம் என்றில்லாமல்
    தீர்க்கமாக நல்ல முடிவுகளை எடுத்து அதனை முன்னெடுத்துச் செல்வோம். புலி எதிர்ப்பும் புலி ஆதரவு என்பதற்கும் அப்பால் எமது வேலைத்திட்டங்கள், கருத்துக்கள் என்பன முன்னகர்த்திச் செல்லப் படவேண்டும் அது எம்மக்களின் விடுதலையை
    சேதாரங்களின்றி பெற்றுத் தருவதாக இருத்தல் வேண்டும். மகிந்தவை யதார்த்த வாதியாக உருவாக்கி வெளி உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் காட்டிய பெருமை எம்மையே சார்ந்தது. அறிவில் கூடிய இனமாக எம்மை வலிந்து காட்டி தற்ற்பெருமை வரட்டு கவுரவம் என்பவற்றை வலிந்து திணித்த நாம் உண்மையில் முதல் தர மூடையர்கள் நாம் என்பதில் எனக்கு மற்று கருத்தில்லை. சமூக அக்கறையுள்ள ஒரு புத்திஜீவியை காட்டுங்கள் ஜீவன் கூலையும் ராஜன் கூலையும் புத்திஜீவிகளாக கொண்டாடுவோர் நாம். சிங்களவர்களுக்கு எல்லாம் அப்புகாத்து தொழில் செய்து எங்களை புதியீவிகளாக இனம் கண்டவர் நாம், கல்லோயா குடியேற்ற திட்டத்திற்கு
    உதவிய பொறியியல் கெட்டிக்காரர்கள் நாம், மொத்தத்தில் பாடமாகி ஒப்புவிப்பதில் வெற்றி கண்ட நாம் தமிழ் மக்களின்
    விடுதலையிலும் அவ்வாறு செய்யலாம் எனக் கனாக் கண்டவர்கள் நாம்.

    நான் எதனையும் மறுக்கவில்லை. ஒரு சமூகத்தில் பிற்போக்கு கூறுகளை களைந்து முற்போக்கு சமூகத்தை உருவாக்குதலே
    விடுதலைப் போராட்டம் ஒன்றின் வெற்றியாகும். ஆகவே பிற்போக்கு கூறுகளை மாற்றுவதில் ஈடுபாடு காட்ட வேண்டும்
    இதனையே நான் அனைவரின் கடமையாக பார்கிறேன். சந்திரன் ராயாவிடம் இருந்தும் தான்.

    புலிகள் எனக் கூறும் கடும் போக்கு வாதிகளின் கருத்தியலை ஒப்பு நோக்கும் போது மகிந்தவுக்கு என்ன குறை என யாரும் கேட்பதில்
    இருக்கும் நியாயம் நெஞ்சை உறுத்த வல்லது. இருக்கட்டும் இன்றைய சூழல் மகிந்த அண்ட் கோ பற்றியதோ புலிகள் பற்றியதோ அல்ல எமது மக்கள் பற்றியதே.

  5. நிர்மலன் says:
    15 years ago

    “மக்கள் வதை படுகிறார்கள் அவலப் படுகிறார்கள்.”
    என்ற நீலிக்கண்ணீர் ஊடாக சிறிலங்கா அரசபயங்கரவாத ஊடகப்பிரச்சாரம் நன்றாகத்தான் முன்னெடுக்கப்படுகிறது. இதை மறைக்க இருக்கிறதே போலிக் கொம்முனிச வேசம்.

  6. S.G.Ragavan says:
    15 years ago

    மக்கள் வதைபடுகிறார்கள் அவலப் படுகிறார்கள் என ஸ்ரீலங்கா அரசு பிரச்சாரம் செய்கிறதா? எங்கே நடக்கிறது ? அப்ப புலிகள் எனப் படுவோர் என்ன சொல்கின்றனர் மக்கள் வதை படவில்லை எனவா? நான் நினைக்கிறேன் நீங்கள் கே.பி யை மனதில் வைத்துச் சொல்கிறீர்கள். பரவாயில்லை நீங்கள் புலிகளின் அனுதாபியா? அல்லது புலியா? உங்களிடம் என்னில் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி! கே.பி யை இன்று துரோகி எனக் கூறுவோர் (புலிகள்) அன்று மலேசியாவில் KP பேசி கொண்டிருந்த போது எவ்வாறு KP யை மாத்திரம்,
    இலங்கை புலனாய்வு பிரிவு எப்படி கைது செய்தது? மற்றயவர்களை எப்படி விட்டு வைத்தது.? விடுதலைப் புலிகள் மர்மங்கள்
    நிறைந்தவர்கள் என யாரோ எழுதியது நிதர்சனமானது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...