20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர்லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியகதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் இது முதலாவது நிகழ்வல்ல.
தாயகம் பத்திரிகைக்கான தடை, அதன் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் மீதான மிரட்டல், தேடல்சஞ்சிகை விற்பனை நிலையங்கள் மீதான மிரட்டல், தேடக நூலக எரிப்பு, பத்திரிகையாளர்டி.பி.எஸ். ஜெயராஜ் மீதான தாக்குதல், வானொலி இயக்குனர் இளையபாரதி மீதான தாக்குதல்,என ஊடகங்கள் மீதான வன்முறைகள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. சுதந்திரமாக கருத்தை
முன்வைக்கும் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் கனடாவில் பல்வேறு தரப்பினரின் வன்முறைக்குமுகம்கொடுத்தே வந்துள்ளன. விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலின் அங்கமாகவேபுலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதானதாக்குதல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக் கருத்துக்களம் ஆரோக்கியமான சமூகத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகும்.கருத்தை கருத்தால் முகம் கொடுக்கும் ஓரு சமூகம் உருவாக்கப்படவேண்டிய காலகட்டமிது.எமது அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தி வளமான எதிர்காலத்தைவென்றெடுக்கவேண்டிய காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீண்டகாலத்திற்கு எம்மை பின்னோக்கித் தள்ளிய சுதந்திர மறுப்புகளை, அடக்குமுறைகளை அறவே
அகற்றி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அனைவரதும் கடமை.இதை அடிப்படையாகக் கொண்டே 1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை
பன்முகத்தன்மைக்காயும் கருத்துத் சுதந்திரத்திற்காயும் தேடகம் குரல்கொடுத்து வருகிறது.
“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தைசொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார் ”என்று பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர் சொன்னது போன்று நீதிக்கும் சமத்துவத்திற்குமாக போராடும்மக்கள் குலாம், சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் இத்தகையை அச்சுறுத்தல்களை நிச்சயம்
எதிர்த்தே தீருவர்.
உதயன் பத்திரிகை மீதான இவ் வன்முறையை தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராய் வன்முறையைத் தூண்டும் சக்திகளை இனங்கண்டு அவர்களை மறுதலிக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டுமெனவும்கேட்டுக்கொள்கிறது.
22.02.2010
தேடகம்
தமிழர் வகைதுறைவள நிலையம் -கனடா
tel:416 840 73 35
கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது. இப் பத்திரிகை கடந்த காலங்களில் அராஜகத்துக்கு துணை போயுள்ளது. இப் பத்திரிகையை பற்றிய தனது விமர்சனத்தை எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டும்
பங்குதாரர்களின் ஒத்துழைப்போடு இலண்டனில் இயங்கிவந்த புலிகளின் பெரிய ஆதரவாளராகிய TILCO ஸ்தாபனம் பெரிய Hotel ஓன்றை யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கிறது.London இலில் உடைக்கப் படவில்லை. ‘உன்னுடைய நண்பர்கள் இலங்கை சென்று மகிந்தவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். நீ உன்னுடைய ஒபிஸ்க்கு போய்ப் பார். உனக்கு ஒரு செய்தி கிடைக்கும்.’ என்பது
உதயன் எழுதிய கருத்திற்காக உதைக்கப்பட்டதா அல்லது பங்குப் பணத்தை கூட்டாளிகளுக்குத் தெரியாமல் மகிந்தவிடம் கொடுத்ததற்காக உதைக்கப்பட்டதா? அந்த மகிந்த சரசம் முதலீட்டுக்கான முயற்சி மட்டுமே.பங்குதாரர்களிடையான முடிச்சவிழ்ப்பு விவகாரம் கருத்துச் சுதந்திரமாய்ப் படுவது தேடகம்’ எதைத் தேடியலைகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
முற்றிலும் விளம்பரப் பலகையாய்,தமிழ் மக்களின் பேரால் அரச எச்சிலில் வாழ்ந்த,கனடியப் புலிகளின் அராஜகங்களுக்கு துணை போன உதயனுக்கு கருத்துகளும் இருந்தனவோ. அதென்னமோ எல்லோரும் பணம் இருக்கிற பக்கமாய் தேடுகிறார்கள்,அதற்காக வாடுகிறார்கள்.வாதிடுகிறார்கள்.
சக விடுதலை அமைப்புகள் தம் சக போராளிகளின் நினைவஞ்சலி போட ஏற்காத பத்திரிகாதர்மம் உள்ளவர். பணமே ஒரே குறிக்கொலானவர்கள் வரிசையில்…. இவரும் ஒருவர்.
இன்றும் பிரபலம் தேடும், “பிரபல ஊடகவியலாளர்” என்ற வரிசையில் “இந்த தினசரிப் பத்திரிகைகள் தற்பொழுதும் தமிழ் இனவாத வெறியை தமிழ் மக்கள் மத்தியில் தீவிரமாக ஊட்டி, அவர்களை நாசகாரப் பாதையில் தள்ளி வருகின்றன. எனவே அவைகளை மக்கள் நிராகரிக்கும் பொருட்டு புலம் பெயர் தமிழ் ஜனநாயக சக்திகளின் “நிதியுதவி”யுடன், இலங்கை தமிழ் மக்களுக்கென நடுநிலைமையுள்ள தினசரி பத்திரிகை ஒன்று அங்கு ஆரம்பிக்கப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறவர்கள்….
மாற்று…தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு… என்ற முகமூடியில், மாற்று தமிழ் ஜனநாயகவாதிகளின் முதுகில் சாவரி செய்ய முயல்பவர்கள்….தேசபக்தி சொல்லும் தேசம் இழந்தவர்கள்…..தேசம் இழந்து பிழைப்பு தேடுபவர்கள்….. பிழைப்பிற்க்காக தேசம் தேடுபவர்கள்……. பிழைப்பில்லாமல் தேசம் தேடுபவர்கள்….இப்படியே தேடும் தேடல்கள்.. .
ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் பற்றி எக்காலமிடுபவர்கள்….மக்கள் சக்தியை புரியாதவர்கள்….மனிதவுரிமை அமைப்புகளின் தயவில் காலத்தை ஒட்டி, இன்று மனிதவுரிமை மீறல்களுக்கு சாயம் பூசும் பிரபலங்களாக…ஊடகவியலாளர்களாக “தமிழ்” “ஜனநாயகம்” என்று சொல்லி எஜமானர் கொடுக்கும் நிதி போதாமல், “நடுநிலைமை” என்று சொல்லி ஜனநாயகத்திற்கு மேல் பிழைப்பு நடத்த முயலும் ஜனநாயக சவாரிகள்….பெயருக்கும், பணத்திர்க்குமான அலையும் பிரபலமெனும் சவாரிகள்….
ஊடகவியலாளர்கள் கடத்தப்படும், கொல்லப்படும் நாடிலிருந்து வந்து……..
இப்படியும் ஊடகவியலாளர்கள் உள்ளனர்.
“நடுநிலைமை”….உண்மை….உண்மைக்கு உண்மை …….”தாயகம்” ஜோர்கிற்கே உரித்தானது.
மற்றவர்களெல்லாம்……வாசகர்களே நிங்களே சொல்லுங்கள்.
எல்லாவற்றிக்கும் மனித நேயம்; மனிதாபிமானம் வேண்டும்!.
கனடாவில் உள்ள ஈழத் தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் சுமார் 300,000 ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்பினர் கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போது, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், அதற்கான அறிகுறிகள் எவையும் இதுவரையில் தெரியவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் சிலரது தேசியக்கலாச்சாரமாய் வன்முரை மாறீ நமது முகங்களூக்கு லேபில்கள் ஒட்டப்பட்டு விட்டன.கோப்பப்பட்டால் அதை காட்டுவதற்கு கறூவல்கள் கையைத்தான் தூக்குவார்கள் தமிழரில் சிலர் கல்லைத் தூக்குகிறார்கள்.கீலே விழுகிற கழுசானும் இழுத்து,இழுத்து நடக்கிற தமிழ் பொடிகள் சிலரது காக்கா வலிப்பு நடையும்.பிலட், பிரோ தமிழும் கடவுள்தான் இந்தக் குன்சுகலை காப்பாற்ற வேண்டுமென்றூ இராம் அண்ணா கட்டியுள்ள கோயில்ல் கற்பூரம் கொழுத்த வைக்குது.அந்த கரம்பொன் கந்தசாமி கோயில் முருகந்தான் இந்தப் புள்லைகளூக்கு புத்தியைக் கொடுக்கோணூம்.
Canadian security officials are concerned that last year’s defeat of Sri Lanka’s Tamil Tiger rebels could trigger attacks like the 1985 Air India bombings, says a new report.
The International Crisis Group study quotes unnamed Canadian law enforcement officials saying that supporters of the Liberation Tigers of Tamil Eelam might resort to terrorism.
“While there are no signals yet that the rump LTTE is planning a terrorist act, it only takes a handful of committed cadre in the diaspora bent on violence to have a deadly impact,” the report says.
“For example, Canadian law enforcement officials have been concerned that, if left unchecked, LTTE activities could result in an event similar to the terrorist bombing of an Air India jet in 1985, which was planned and funded by Sikh separatists in Canada.”
For more:
http://www.nationalpost.com/news/canada/story.html?id=2608595
தேடகம் சொல்லுகிற விடயத்தை விட்டு விட்டு வேறெங்கோ போய் விளக்குக் கம்பத்தில் தூக்குகிற அரசியலுக்குள் போகப் போகிறோமா?
உதயனை மக்கள் முன் அம்பலப் படுத்துவடு சரி. அடித்துநொறுக்குவது?
இந்த நடத்தைக்கும் யாழ் நூலகத்தை எரித்த காடையர்களின் செயலுக்கும் என்ன வேறுபாடு?
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.
மக்கள் விரோதச் செயல்களை மக்கள் முன் அம்பலப் படுத்த வேண்டும்.
கள்ளர் கூட்டத்துக்கு மாற்று காடையர் கூட்டமல்ல.
தமிழ் ‘விஜிலான்டே’ (vigilante) கும்பல்கள் வேன்டாமே.
பங்குதாரர்களின் பாகப்பிரிவினையை,பவுத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழ்க் கலாச்சாரப் பேரழிவுடன் சமப்படுத்தி கருத்துப் புனைவது, தேடகச் சிவன்கள் தேடுவது எதுவென்று புரிகின்றது.
“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தைசொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார் ”
மகிந்தவின் சிந்தனைகளைக் காப்பாற்ற தேடகம் ‘கரும்புலிகளை’ அனுப்பப் போகிறார்களோ?
தேடகத்தினர் மட்டுமல்ல, நானறிய இயக்கங்களின் பேரிலான அரஜகத்துக்கு முகம் கொடுத்தவர்கள் பலர்.
நான் தேடகத்தில் உறுப்பினல்ல. தொடர்பு வைத்திருப்பவனுமல்ல.
தயவு செய்து உங்கள் பார்வைக் கோளாற்றைத் திருத்திக் கொண்டால் பயனுள்ள உரையாடல்கள் இயலுமாகும்.
நாளை எதிர்வு போன்றோரின் வாயை அடைக்க வேறெவரும் வன்முறையில் இறங்கினல் அதற்கு எதிராகப் பேசப் போவதும் யார் என்று தெரிந்ததனாலேயே தேடகத்தின் மீதான இம் மூர்க்கத்தனமான தாக்குதலை விமர்சித்தேன்.
தேடகம் குறிப்பிட்ட பத்திரிகையை நியாயப்படுத்தி அறிக்கை விட்டால் அதை விமர்சிக்கலாம்.
எல்லாம் அறிந்த தலைவர்மாருக்கு ஆமாப் போட்டுப் பழகிய மரபில் மாற்றுக் கருத்துக்கு முகம் கொடுப்பதென்பது லேசில் பழகி வராது.
ஆனாலும் பழைய விளக்குக் கம்பத் தீர்ப்பு அணுகுமுறையையும் மிரட்டல்களயும் இன்னும் பல காலம் பேண இயலாது.
உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கான கண்டனக் கூட்டம்:
“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தைசொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார் “ – பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர்
சனிக்கிழமை Canada, Scarbourgh Civic Centerல் தேடகம் அமைப்பினரால் (Tamil Resource Centre) கனடாவில் இலவசமாக வெளியிடப்படும் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது.
இதில் பலர் கலந்து kondirunthaalum குறிப்பாக oodakavillaalarkal
என்று ஒரு சிலரே கலந்து கொண்டதுடன், உதயன் வாசகர்கள் என்றும் கலந்து கொண்டவர்களைக் காணக்கூடியதாக இல்லை. குறிப்பாக தேடக அமைப்பை சேர்ந்தவர்களுடன், திரு கனகமனோகரன் அவர்கள், திரு. கனகசபாபதி, அவர்கள், திரு. கந்தவனம் அவர்கள் முக்கியமாக கலந்து கொண்டனர்.
இது உதயன் ஆசிரியர் கடந்த காலங்களில் விட்ட தவறுகள், ஊடகத்தன்மையை புதைகுழி தோண்டி புதைத்தமைக்கு ஓர் மக்களின் தீர்ப்பா அல்லது என்ன நடந்தாலும் நமக்கேன் வம்பு, இலவச பத்திரிகை உதயன் ஆசிரியர் ஆச்சு, அவர் வளர்த்தவர்கள் இன்று அலுவலகத்தை உடைப்பார்கள், நாளை ஒன்று சேர்வார்கள் என்றோ, தெரியவில்லை.
இங்கு உரையாற்றிய இன்னொரு புலியின் குரலான “கீதவாணி” நடா. இராஜ்குமார் அவர்கள் பேசும்போது குறிப்பிடார், “இங்கு ஆறு வானொலிகள், பதினைந்திற்கு மேற்ப்பட்ட பத்திரிகைகள், பல சஞ்சிகைகள், பல இணைய தளங்கள் இருந்தாலும் ஒருவரும் இங்கு இல்லை”. இதில் இவரின் ஆதங்கம் தெரிந்தது. மேலும் அவர் பேசும்போது தனது நிலையை விளக்கும் பொது, தான் புலிப்பாட்டு பாடி இவ்வளவு நாளும் இருந்ததை, “ஒவ்வொரு மனிதனிற்கும் ஒவ்வொரு கொள்கை விருப்பு, வெறுப்பு உள்ளது” என்பதி சூசகமாக எடுத்துரைத்துடன், தான் உதயன் ஆசிரியரை உடன் பேட்டி கண்டு தனது வானொலியில் போட்டதற்கு தனக்கு பல அச்சுறுத்தும் தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் வருவதாகவும், அத்தொலைபேசி எண்களை தன்னுடன் தற்போதும் வைத்திருப்பதாகவும், இப்படி அச்சுறுத்தல்களுக்கு கனடாவில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதயும் நினைவுபடுத்தி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தினார்.
அடுத்ததாக உரையாற்றிய Canadian Tamil Broadcasting Corporation (CTBC ) னின் புலிக்குரல் “தென்புலோலியூர்” கிருஸ்னலிங்கம், “ஊடக சுதந்திரம்; ஜனநாயகம்; கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், “வன்முறையால் சந்தித்ததை நந்திக்கடலில் பார்த்தோம்” என்று கூறியதுடன், உதயன் பத்திரிகை அலுவலகத்தை தாக்கியவர்கள் இன்னும் யார் என்று தெரியவில்லை (இனம்-தெரியாதவர்கள்) என்று குறிப்பிட்டதுடன், “இந்த அமைதி பூங்காவை குழப்பபோகிறோமா? கனடிய பாதுகாப்பு அமைச்சரே பாதுகாப்பு இல்லாமல் உள்ளார்”, என்று குறிப்பிட்டு இவரும் யார் அலுவலகத்தை தாக்கியவர்கள் என்பதை சொல்லாமல் நழுவிவிட்டார்.
இதன்பின் உரையாற்றிய தமிழர் விடுதலை கூட்டணியின் மூத்த உறுப்பினரும், பொதுநலவாதியும், சட்டத்தரணியுமான திரு கணகமனோகரன் அவர்கள் பேசும்போது, தனது அனுபவங்களை, தான் சந்தித்தவைகளை நினைவு கூறுமிடத்து, தனது பன்னிரண்டு வருட பழைய காரை புது கார்களில் திரிபவர்கள் உடைத்ததையும், ஓர் முறை தனது ஆக்கம் ஒன்று உதயனில் வந்ததையிட்டு தான் உதயன் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டபோது, உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் மனைவி தொலைபேசியை எடுத்தவிடத்து, தான் லோகேந்திரலிங்கத்தை கேட்க, “அவர் வெளியில் நிற்கிறார், உலகத்தமிழர் பிரதம ஆசிரியர் கமல் வெளியே கூட்டிக்கொண்டே கதைக்கிறார்” என்றும் தனது ஆக்கத்தால் உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அச்சுறுத்தப்பட்டதை நினைவு கூர்ந்ததுடன், ஓர் சுவாரசியமான…உண்மையான விடயம் ஒன்றும் பகிர்ந்தார் அதாவது தான் ஈழவேந்தன் அவர்களை சந்திக்கும் பொது “அமிரின் சிலையையும் உடைத்துப்போட்டான்கள்” என்று சொல்ல, “அமிருக்கு எங்கே சிலை இருந்தது?” என்று ஈழவேந்தன் கேட்டாராம்.
கடைசியாகப் பேசிய உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், தனது ஆரம்ப பத்திரிகை துறையை நினைவு கூர்ந்தவிடத்து, எண்பதுகளில் ஈழத்திலிருந்து வெளிவந்த தனது “மாற்று” சஞ்சிகை பற்றி கூறுமிடத்து, அக்காலத்தில் விடுதலை அமைப்பினர் தனது சஞ்சிகை வாங்குவது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் வள்ளத்தில் கட்டி அனுப்புவார்களேன்ரும் ஒரு முறை, கிட்டு தலைமையிலானவர்கள் TELO வை அடிக்கும்போது TELO வினர் இருந்த ஓர் வீட்டில் “மாற்று” சஞ்சிகை இருப்பதை பார்த்துவிட்டு தன்னை விசாரித்தவிடத்து, அப்போ நல்லூருக்கு பொறுப்பாக இருந்தவர், “இது ஒரு சஞ்சிகை இவரை விடுங்கள்” என்று கேட்டதற்கு இணங்க கிட்டு விட்டதை நினைவு கூர்ந்து, அவ் நல் மனிதர் தற்போது கனடாவில் இளம் சட்டத்தரணியாக இருப்பதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் அவர் பேசும் பொது இன்று தனது அலுவலகம் உடைக்கப்பட்டது, கருத்திற்க்காகவில்லை என்றும், வர்த்தகப் போட்டியாலேயே என்றும் கூறியதோடு, தனக்கு ஓர் விளம்பரம் 1000 டொலருக்கு எடுக்கக்கூடியதாக உள்ளதென்றால், மற்றவர்கட்க்கு 100 டொலருக்கு எடுக்கக்கூடியதாக உள்ளது என்று கூறியதுடன், “பலர் இங்கு வரவில்லை; பலர் சமூகமளிக்கவில்லை; ஊடகம் புனிதமான தொழில்; ஊடகம் அறிவோடு சம்பந்தப்பட்டது; ஆனால் இங்கு ஒருவரும் இல்லை” என்று தனது ஆதங்கத்தை கூறினார்.
அத்துடன் தனது அலுவலகம் உடைத்ததை சொல்லும்போதும், இனம்-தெரியாதவர்களேன்றே அப்படியே அதை விட்டதுடன், உலகத்தமிழர் பத்திரிகை பிரதம ஆசிரியர் கமலுடன் தான் தொடர்பில் உள்ளதாகவும், தினசரி பேசுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, வயிற்று வலி தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்” இங்கு உரையாற்றிய உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும் இதுவரை இங்கு புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி ஓர் தவறானா செய்தியை கொடுத்ததுமட்டுமல்லாமல் ஓர் மாயையை உருவாக்கி வைத்ததற்கு பெரும் வகித்துள்ளார்கள். அத்துடன் இவர்களுக்கு இன்னும் ஒன்று விளங்கவேண்டும், இங்கு ஜனநாயகத்திக்காக குரல் கொடுக்க சக பத்திரிகையாளர் ஒருவரும் இக்கூட்டத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவில்லை என்பதையும், தமக்கு மக்கள்…. வாசகர்கள் மத்தியில் இருக்கும் மரியாதையும். இன்று உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும் புரிந்திருக்கும், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களை அழைத்திருந்தால் வயது வித்தியாசமின்றி கூட்டம் அலை மோதியிருக்கும்.
இச் சம்பவத்திற்கு ஒரு மாதம் முன் இதே Canada , Toronto வில் 1982 ம் ஆண்டு யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து இதே அமைப்பின் தலைவரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்-சுழிபுரம் “புதியபாதை” ஆசிரியர், சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்களின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இக் கருத்தரங்கிற்கு எத்தனை ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தார்கள் என்பது கேள்ளிவிக்குறியே.
ஆனால் அக்கருத்தரங்கு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் புளொட் உறுப்பினர் திரு. நிலாநேசன் அவர்கள் இக்கண்டனக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தது காணக்கூடியதாக இருந்தது.
மேலும் தேடகம் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும்
கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் கண்டன கூட்டம் பலரின் ஊடகங்களுக்கான அடக்குமுறைகள், ஜனநாயகத்திர்க்கான மறுதலிப்புகள் முதலியவற்றின் கருதுப்பரிமாறல்களுடன், மே 18 இன் பின் நடந்த முதல் ஊடகத்திற்கெதிரான தாக்குதல் என்று பேசப்பட்டதுடன் முன்பு உதயன் பத்திரிகை போன்று மஞ்சரி பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டு அப்பத்திரிகை தடை செய்யப்பட்டதையும், “தாயகம்” பத்திரிகை தடை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்கள்.
இதிலிருந்து உண்மையை உண்மையாக எழுதாமல், உண்மைகளை மறைத்து, திறுத்தி எழுதும் ஊடகவியாளர்கள் இனியாவது திருந்துவார்களா?
ஊடகம் என்பது, மக்களுக்காக; மக்களுக்கு செய்தியை சொல்வதற்காக; ஊடகங்கள் மக்களின் ஓர் அங்கம்; காலையில் எழுந்தவுடன் தினசரி பத்திரியையில் என்ன தலைப்பு செய்தி என்று பார்க்கிறோம்; தொலைக்காட்சியில் என்ன செய்தி என்று உடன் பார்க்கிறோம்; வானொலியை திருகி என்ன செய்தியென்று கேட்கிறோம்; ஊடகங்களையே நம்புகிறோம்; இன்று இப்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தனிய தமிழ் ஊடகங்களோ, கனடிய ஊடகங்களோ குரல் கொடுக்கவில்லை, ஊடகதர்மத்திர்க்காக அனைத்து ஊடகங்களும் குரல் கொடுத்துள்ளன.
இவற்றை உண்மைகளை திரித்து எழுதும் உதயன் பத்திரிகை போன்றவர்கள் இத்தருணத்திலாவது உணர்ந்து திருந்துவார்களா?
எல்லாவற்றிக்கும் மனிதாபிமானமும்; மனித நேயமும் வேண்டும்!