இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் கருணை மனுவை, தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆளுநர் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராஜீவ் கொலையையொட்டிக் ‘குற்றம்’ இழைக்காமலேயே தண்டனை பெற்ற – தமிழகம் முழுவதும் தாக்கப்பட்ட – தி.மு.க. தொண்டர்களின் தலைவர் கருணாநிதி இக்கருணை மனுவின் மீது கருத்துச் சொல்லியாக வேண்டும்.
இந்நால்வரின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம். இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.
இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இராஜீவ் கொலையுண்ட போதும் நாம் இந்தக் கருத்தைத்தான் முன் வைத்தோம். இன்று இந்நால்வரின் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதையும் அதே அடிப்படையில்தான் கோருகிறோம்.
அடுத்து இந்தத் தீர்ப்பும் தண்டனையும் சட்டவிரோதமானது என்கிறோம். ஏற்கனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகி விட்டது. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்கு மூலங்கும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவைதான்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்டரீதியாகச் செல்லத் தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறோம்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்ற போதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற போதிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும், ஆளுநர் பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இப்போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.
“ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவிய போதிலும், அவர்களது நன்மைக்காவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு இராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றி கெட்டத்தனமாகப் புலிகள் அமைதிப்படைச் சிப்பாய்களைக் கொன்றனர்; தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் இராஜீவையும் கொன்றுவிட்டனர்” – என்ற பொய்ப் பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, ‘அமைதி’ப் படையின் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில்தான் இராஜீவ் இருந்தார் என்பது வரையிலான பல உண்மைகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மரணதண்டனையை ஆதரிக்கும் சோ முதல் வாழப்பாடி ராமமூர்த்தி ஈறான அனைவரும் இப்பொய்களையே தம் தரப்பு வாதங்களாக முன்வைக்கின்றனர்.
எனவே, இப்பொய்ப்பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆளுநரின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றன.
இந்நிலையில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவோரின் அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது.
இன்று நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்குப் பெரிதும் முனைந்து வருபவர்கள் (அநேகமாக) அனைவருமே, அன்று இராஜீவ் கொலை செய்யப்பட்டபோது ‘கொலையாளி’களை வன்மையாகக் கண்டித்தார்கள்; இராஜீவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்; இந்தக் கொலை சி.ஐ.ஏவின் சதி என்றார்கள்; இதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் விசாரித்து யாரைக் குற்றவாளி என முடிவு செய்தாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கட்டுமென்றும் முன்மொழிந்தார்கள்.
இத்தகைய போக்குகளை விமரிசித்து இராஜீவ் கொலைக்கான நியாயங்களை நாம் எழுதினோம். அதன் விளைவாக நாம் ‘மல்லிகையின்’ (சிறப்புப் புலனாய்வுப் படையின் அலுவலகம்) மணத்தை நுகர நேர்ந்ததுடன், ஏராளமான தோழர்கள் தடா, தே.பா.சட்டம், ராஜத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிறை செல்லவும் நேர்ந்தது. எனினும் ‘ஈழத்தமிழன்’ என்று சொன்னாலே வேட்டையாடப்பட்ட ஒரு காலத்தில், ஈழ ஆதரவு எனப் பேசினாலே கைது செய்யப்பட்ட காலத்தில் ‘புத்திசாலித்தனமாக’ மவுனம் சாதிப்பதை விட வெளிப்படையாக பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவ்வாறு செய்தோம்.
அன்று அரசியல் பேசாமல் “நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என்று சட்டவாதத்தில் நுழைந்து தப்ப முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீண்டும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் முன்முயற்சியை இழக்காமல் சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது வேறு, சட்டவாதத்தையே அரசியலாக்கி கொள்வதென்பது வேறு.
சட்டவாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் சட்டம், நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமேயொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவேதான் “ஒரு ஆக்கிரமிப்பு போர் குற்றவாளியைக் கொன்றதற்குத் தூக்கு தண்டனையா’ என்ற கேள்வியை இன்றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை முதன்மைப்படுத்தியும் இயக்கம் எடுக்க முடியவில்லை. அதன்மீது அதிருப்தி தெரிவிக்க மட்டுமே முடிகிறது.
நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” – என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் “ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?” என்று பார்ப்பனத் திமிருடன் சோ கேட்டால் “அப்போதே கேட்காதது தவறுதான்” என்று பதிலிளிக்கிறார் இரமாதாஸ். இதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த நால்வருக்காகப் பேசாமல் பொதுவாக மரணதண்டனை ஒழிப்பு பற்றிப் பேசும் கருணாநிதி, வைகோ, போன்றோரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட வேண்டிய மதவெறிக் கொலைகாரன் தாக்கரே போன்றோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது.
இறுதியாக சோனியாவே ‘குற்றத்தை’ மன்னித்துவிட்டார். யாரையும் தூக்கிலிட வேண்டுமெனத் தானோ, தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக்கூறிவிட்டார். ‘மிகக் கொடிய கொலையை செய்த குற்றவாளிகளுக்கும்’ இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் ராமதாஸ். மரண தண்டனை ரத்தாவதற்கு முன்னால் இராஜீவ் கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்டபூர்வமான உண்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்து விட்டார் ராமதாஸ்.
ஜெயின் கமிசன் அறிக்கையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த காங்கிரசு – சோனியாவின் திடீர்க் கருணைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
புலிகளின் விரோதம் தேவையில்லை என்பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக்கூடிய ‘அனுதாப அரசியல்’ ஆதாயம் வரை, காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் சோனியாவின் மனிதாபிமானம் நால்வரையும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து – வெகுசனக் கருத்திலும் – விடுதலை செய்துவிடும். “மரண தண்டனை ஒழிப்பு – மனிதாபிமான” முழக்கத்தின் சாதனை இது.
என்னதானிருந்தாலும் நான்குபேரைத் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்துக் கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.
மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – கருணையினால் அல்ல.
நன்றி : வினவு
Hi
Though Indian forces made so much damage to Thamils in Srilanka,one can not justify the killings of Rajiev, if LTTE had done that killing (since not proved jet). At the same time, in this mordern world ‘death sentance’ cannot be acceptable.
இந்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது அதில் அய்யம் இல்லை அதே இந்திய அரசு தான் புலிகளுக்கு ஒரு காலத்தில் ஆயுதம் பணம் இருப்பிடம் வழங்கி ஆதரித்தது இப்பொழுது சொல்லுங்கள் இந்திய அரசை புலிகளை ஆதரித்ததற்காக தூக்கிலிடுவதா/ ஆயுள் தண்டனைக் கொடுப்பதா அல்லது பிறகு அப்பழ் வித்தமிழர்களை கொன்றதற்காக தண்டிப்பதா?புலிகள் இராணுவ அமைப்பு அதனால் யாருக்கு வேன்டுமானலும் மரண தண்டனை அளிக்க்கலாம் அப்பவி மக்கள் உள்பட முள்ளிவாய்க்கலில் மனித கேடயங்கள
ஆக்கலாம் மரண தண்டனை மனித நேயம் அற்றது என்று முழக்கமிடும் மனித நேய ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி சற்று முன்னர் வரை ராசபட்சேவைக் கைது செய்து தூக்கிலிட வேண்டும் என்று கேட்டீர்களே?? இப்பொழுது நீங்கள் காந்திப்,புத்தகத்தைப்படித்து கருத்து சொல்லுவது அவருக்கும் சேர்த்தா அல்லது ___ ( இதற்கு எனக்கு தமிழ் இனத்துரோகி பட்டம் வழங்கப்படும்
புலிகள் ஒருபோதும் தமிழ்அப்பாவி பொதுமக்களை திட்டமிட்டுக் கொல்லவில்லை. ஈபீஆர்எல்எப்ம் புளொட்டும் ரெலோவும் ஈபிடிபி …. இந்திய சிறிலங்கா துணைக்குழுவாகவிருந்த ஆயுதாரிகளே தவிர அப்பாவிகள் அல்ல. துரையப்பா அமிர்தலிங்கம் நீலன் … போன்றோர் தமிழின துரோகிகள். இவர்களது மரணத்திற்கு நேர்மையுள்ள 90வீதத்திற்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர் துளியேனும் கவலைப்படவில்லை. உங்களை போன்ற இந்திய சிறிலங்கா அடிபொடிகள்கள்தான் இது பற்றி பேசுகிறீர்கள்.
இந்தியாவின் கபடமுகத்தை 1986லேயே புரிந்த புலிகள் இந்தியாவிடமிருந்து விலகிவிட்டனர். 1987 ஆண்டிற்குப் பிறகே இந்திய அஜாரகம் தமிழீழமக்கள் மீது நேரடியாக கட்டவிழத்தொடங்கியது. பிறகெப்படி இந்திய அஜாரகத்திற்கு புலிகளை குற்றம் சாட்டுவீர்கள்.!
முதலில் ஒரு அரசென்றால் என்ன அதன் பொறுப்புக்கூறும் கடப்பாடு எத்தகையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புலிகள் அப்பாவி தமிழர்களை திட்டமிட்டு கொன்றிருந்தால் எப்படியாம் 90 வீதத்திற்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர்கள் அவர்களை ஆதரித்தார்கள்??? சும்மா லங்கா புவத்தின் கட்டுக்கதை தகவல்திரிப்புக்களை இங்கு சொல்லாதீர்கள் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு.
ராஜபக்சாவை தண்டிக்கச் சொல்லி தமிழர்கள் மாத்திரம் கேட்கவில்லை மனிதமுள்ள மக்கள் நாடுகள் மனிதவுரிமை அமைப்புக்கள் ஐநா நிபுணர்குழு …. என சர்வதேச சக்திகளே கேட்கிறது.
மனிதம் மனிதவுரிமை கிலோ என்ன விலையெனக் கேட்கும் ரசியா சீனா இஸ்லாமிய நாடுகள் போலி ஐனநாயகநாடான இந்தியாதான் ராஜபக்சாவின் தமிழின படுகொலைக்கு வக்கலாத்து வாங்குகின்றன.
புதிசா ஒன்றும் உங்களிற்கொன்றும் துரோகிப்பட்டம் இங்கு தரப்படாது நீங்கள்தான் அதை உங்கள் ஆயுட்காலத்திற்கும் வைத்திருப்பேன் என அடம்பிடிக்கிறீர்கள்.
இப்ப நீங்களென்ன சொல்கிறீர்கள் தமிழின அழிப்பிற்காக தங்கள் எசமான் ராஜபக்சா தண்டிக்கப்படணுமா! இல்லை கெளரவிக்கப்படணுமா! பதிலை நேரடியாக சொல்லுங்கள் பார்க்கலாம்!
லங்கபுவத் …என்று அடிக்கடி கூறுகிறீர்களே அதையெல்லாம் தமிழ் நாட்டில் எந்த கேபிள் டி.வி. இணைப்பாளரும் வழங்குவதில்லை. மேலும் தமிழ் நெட் புதினம் ஆகியவை எல்லாம் இணையத்தில் காணாமல் போனபின் இனி ஒரு வில் வருவதைத்தான் படிக்க வேண்டியுள்ளது. எனவே ஈழத்தமிழர்களின் உண்மை நிலை எங்களுக்கு ஓரளவுக்குத்தான் தெரியும். ஆனால் அதற்கும் தமிழ் நாட்டில் நடக்கும் தற்பொழுதைய நிகழ்வுகளுக்கும் என்ன தொடர்பு? எம்மை யாரும் அழைக்கவில்லை. என்று நான் கருதவில்லை. தமிழர்களே திரண்டு வாருங்கள். என்று இணையத்திலும் அவர் விளம்பரங்களிலும் கூவிக்கூவி அழைத்திருந்தார்கள். அதனால்தான் அதைப்பற்றி எழுத வேண்டியுள்ளதாயிற்று. உங்களுடைய அகராதியில் புலி ஆதரவு மக்கள் மட்டும்தான் தமிழர்கள் போல. காந்தியைப் பற்றி எனக்கு பெரிய மாயை இல்லைபகத்சிங்க் செய்தி எல்லொருக்கும் தெரியும் தானே/. ஆனால் பொறுக்கி புறம்போக்கு என்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் கேள்வி அதுவல்ல. தமிழினத் தலைவரான சத்யராஜ் என்ற நடிகர் மோட்டார் சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்து காந்தி சொன்னதாக ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து வடித்தார். அதனால் தான் அவருடைய கருத்து எல்லோருக்குமா அப்சல் குருவுக்கும் சேர்ந்ததா? பிகார் சிறையில் மரண தண்டனையை எதிர் நோக்கி காத்து இருக்கும் 4 மாவோயிஸ்டுகளுக்கும் சேர்ந்ததா? அல்லது மூவருக்கு மட்டும்தானா? என்று கேட்டிருந்தேன். நீங்கள் காந்தியைத்திட்டி விட்டு பதில் அளிக்காமல் விட்டுவிட்டீர்கள்…………..துரோகி எதிரி நண்பன் ……என்று தனக்கு தெரிந்த தெரியாத யாருக்கும் மனித நேயத்தை இம்மியளவும் காட்டாது புலிகளுக்கும் அதைக் கண்டிக்காத புலிவேடதாரிகளுக்கும் தாங்களுக்கும் இப்பொழுது காந்தி மனித நேயம் எல்லாம் தேவைபடுகிறது.அய் நா பண்ணாட்டு நிறுவனம் ராஜபட்சேவைத் தூக்கில் இடுமா இல்லையா என்பது அல்ல சிக்கல் மனித நேயத்தின் அடிப்படையில் மரணதண்டனையைக் கேட்டது ஏன்? இதுதான் கேள்வி. உங்களுடைய வெறித்தனமான பதில்களில் இருந்து நீங்கள் ஒரு அடிப்பட்ட புலியாகவோ அல்லது சூடுகண்ட பூனையாகவோ இருக்கலாம். அப்படி இருப்பின் உங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுடைய உணர்ச்சி புரிகிறது. ஆனால் மிகை உணர்ச்சி ஒரு தலைமுறை தமிழர்களையே ஆதரித்த பின்னரும் அதை கைவிடமாட்டேன். என்ற உங்களைப்பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. கரும்பிலிகள், சிறுவர்கள் இவர்கள் எல்லாம் தானாகவே இணைந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அய்நா அறிக்கை அதைப்பற்றி என்ன கூறுகிறது. என்பதையும் கவனிக்கவும். வரலாற்றுத்தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் வேறு பாதையே தெரியாது போய்விடும். வெந்த புண்ணில் மேலும் வேல் பாய்ச்ச விரும்பவில்லை.
ராஜீவை கொன்றது மக்கள் கலை இலக்கிய கழகம் என்று லண்டனிலிருந்து கிட்டு ஒரு அறிக்கை விட்டார். ராஜீவுக்காக ஈழ தமிழர்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள் என்ற தலைப்பில் [ இந்திய அரசால் கைது செய்யபடுவோம் என்று அஞ்சி தமிழ் தேசியம் பேசுபவர்கள் ,திராவிடம் பேசியவர்கள் வாய் மூடி இருந்த சந்தர்ப்பவாத நிலையில் ] புதிய கலாசாரம் மேற் சொன்ன கட்டுரை வெளியிட்ட்ருன்தது.
புலிகளுக்கு இன்று பரிந்து பேசுபவர்கள் குறிப்பாக தமிழ் தேசியம் பேசும் இடது சாரிகள் ,அவர்கள் என்றுமே அதிகாரிகளையும் ,ஆள்பவர்களையும் சார்ந்தே இயங்கினார்கள் என்பதையும் இடதுசாரிகளை அவர்கள் தமக்கு எதிரிகளாகவே கருதியதையும் வசதியாக மறைக்கிறார்கள்.
ராஜீவை தாங்கள் கொல்லவில்லை என்று பிரபாகரன் பி.பி.சி க்கு பேட்டி கொடுத்தார்.ஆயினும் இந்திய பத்திரிகைகள் தொடர்ந்து புலிகள் மேல் குற்றம் சாடியே வந்தனர்.அது தம்மேல் சுமத்தப்பட்ட வீண் பழி என்றால் புலிகள் அதனை கழைய போதிய அக்கறை காட்டவில்லை என்றே எண்ணுகிறேன்.நல்ல வாய்ப்பாக கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ” அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று சொல்லப்பட்ட பதிலும் இந்திய அரசக்கு உவப்பளிக்கும் ஒரு பதிலாக அமைந்து விட்டது. இன்று பல புலி இயக்க அனுதாபிகளும் இந்த விசயத்தில் தடுமாறுவதை நாம் காணலாம்.
அரச அதிகார வர்க்கத்தையும் ,உளவுபடைகளையும் நம்பி நடத்தபட்ட ஒரு “தேசிய போராட்டம் ” பல அவிழ்க்க முடியாத மர்மங்களை கொண்டதாகி பல குழப்பங்களுக்கும் உள்ளாகி விட்டது.எம்.ஜி.ஆர் 1983 இல் இரண்டு கோடி பிரபாகரனுக்கு கொடுத்தார் என்றால் அங்கே தொடங்கி விட்டது இந்திய அரசின் கைவேலை.
T.சௌந்தர்,
எம்.ஜி.ஆர் 1983 இல் இரண்டு கோடி பிரபாகரனுக்கு கொடுத்தார் என்றால் அங்கே தொடங்கி விட்டது இந்திய அரசின் கைவேலை. நடந்த உண்மையை அறிந்து கொள்ளுங்கள் எம்.ஜி.ஆர் அவர்கள்
1984 இல் plot , telo , eros , eprlf ltte ஆகிய இயக்கங்களை ஒன்று இணையும் மாறு ஒரு சந்திப்புக்கு இயக்க பிரதி நிதிகளை கலந்து கொள்ளுமாறு திகதி குறிப்பிட்டு செய்தி பத்திரிகைகளில் வந்தது இச் செய்தியை
தி. மு.க வினர் எம்.ஜி.ஆர் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் திகதி குறிப்பிட்டு இயக்க பிரதி நிதிகளை கலந்து கொள்ளுமாறு செய்தி பத்திரிகைகளில் வந்தது. இச் செய்தியை பார்த்த புலிகள் ஒரு உண்மையை
அறிந்து கொண்டனர் தி .மு . க வினர் தங்கள் அரசியல் லாபத்துக்காக இந்த சந்திப்பை செய்கின்றார் என தி மு க வினர் அறிவித்த திகதியில் சந்திப்பு நடைபெற்று பத்திரிகைகளில் செய்தி வந்தது ஆனால்
இச் சந்திப்பில் புலிகள் கலந்து கொள்ள வில்லை என, இதை தொடந்து எம்.ஜி.ஆர் செய்தி பத்திரிகைகளில் வந்தது தாங்கள் குறிப்பிட்ட திகதியில் புலிகளுடன் மட்டும்தான் நடைபெறும் என்று சந்திப்பில்
புலிகள் தரப்பில் அன்டன் பாலசிங்கம் , சங்கர் கலந்து கொண்டனர் எம்.ஜி.ஆர் இவர்களிடம் நீங்கள் ஏன் கருணாநிதி சந்திப்புக்கு போகவில்லை என்று கேட்டார் அதற்க்கு தாங்கள் குறிப்பிட்ட திகதிக்கு பின்
அவர்கள் திகதி குறிப்பிட்டு இருந்தால் போயிருப்போம். இதை சொன்னவுடன் எம்.ஜி.ஆர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அன்றில் இருந்து எம்.ஜி.ஆர் புலிகளுக்கும் நெருக்கம் ஏற்பட்டு பல கோடி ரூபாக்கள் வழங்கினர். எம்.ஜி.ஆர் தமிழ் ஈழ மக்களையும் புலிகளையும் உண்மையாக நேசித்தார் என்பதுதான் உண்மை .
ஒவ்வொரு விடுதலைப்போராட்டங்களின் பின்னாலும் ஏதோ ஒரு புறச்சக்தியின் கரங்கள் இல்லாமல் போராட்டம் நடந்ததாக வரலாறு கிடையாது.இந்தியா எம்மை அரவணைத்து பயிற்சி தரும்போது அத்தனை இயக்க போராளிகளிற்கும் தெரிந்திருந்த விடயம் என்னவென்றால் இந்தியா ஒருபோதும் தனிநாடு என்ற கொள்கையை ஏற்காது தனக்கு அனுகூலமான எதையாவது திணித்துவிடவே முயலும் இருந்தாலும் நமக்கு இந்தியாவை விட்டால் வேறு வழி அப்போது இல்லை என்பதே.
அதற்கு காரணமும் உண்டு,அது, நாம் மக்கள் போராட்டம் என்ற ஒன்றில்லாமல் தனியே ஆயுதம்,இயக்கம் என்றவற்றை மட்டும் நம்பியதால் வந்த வினையாகும்.
நிர்மலன் கூறுவதுபோல் தனியே புலிகள் மட்டுமே இதை உணரவில்லை யாவரும் உணா்ந்திருந்தார்கள் ஆனால் வேறு வளி இருக்கவில்லை என்பதே எனது வாதம். சில வேளை புலிகளிற்கு புலம்பெயா்ந்தவா்களின் வளியாக உதவி கிடைக்காதிருந்திருந்தால் அவா்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.
ஒரு நாட்டின் தலைவரை கொன்றதற்காக (நான் இங்கே ராயீவின் கொலையை யார் செய்திருந்தாலும் கண்டிக்கிறேன் ஏனெனில் தேவையற்ற ஒன்று) பளி வாங்கும் மனோபாவமும் அந்தக்கொலையின் பத்தாவதோ பதினைந்தாவதோ நிலையில் குற்றம் புரிந்ததாக கருதப்படும் சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றத்துடிக்கும் ஒரு நாடும் அதன் சட்டதிட்டங்களும் இவா்கள் இன்னும் கொஞ்சம் கூட வழா்ச்சியடையவில்லை என்பதை காட்டுகிறது, இந்த நிலையில் வல்லரசாக மாறப்போவது நகைப்பிற்குரியது.
நிர்மலன்,
சகோதரக்கொலையில் யாவருக்கும் பங்குண்டு ஆனால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை நாம் ஒருபோதும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது அதை நாம் மறுப்போமாயின் நாம் மறுபடியும் தவறுகளை செய்யப்போகிறோம் என்று அா்த்தமாகிவிடும்.
அப்ப ஈபீஆர்எல்எப்ம் புளொட்டும் மக்கள் போராட்டமெனச்சொன்னது வெறும் கப்ஸா என்கிறீர்கள்.
இந்தியாவின் நயவஞ்சகத்தை உணர்ந்த புலிகளால் இந்தியாவைவிட்டு விலக முடிந்தது எனெனில் ஏன் மற்ற இயக்கங்களால் முடியவில்லை? அப்ப அவர்கள் ஈழத்திற்கு போராடவரவில்லை என்பது தெளிவாகிறது. அதெப்படி புலிகளிற்கு புலம்பெயர்ந்தவர்கள் உதவிய மாதிரி ஏன் மற்றவர்களிற்கு உதவ முன்வரவில்லை? புலிகளைவிட ஈபீஆர்எல்எப்ம் புளொட்டும் ஆட்தொகையில் வெட்டிவீர சித்தாந்த வாய்வீச்சில் அந்நேரம் முன்னிலையில் இருந்தவர்களே.
ஆக புலிகள் உண்மையான போராளிகளாய் இருந்ததை மக்கள் உணர்ந்தார்கள் அவர்கள் பின் அணிதிரண்டனர். எப்பவும் தமிழன் போராட துணிந்தவன். இந்நிலையில் அவர்கள் ஏன் புலிகளிற்கு உதவிசெய்யாது விடுகிறார்கள்? எனவே உங்கள் ஊகம் எந்த தர்க்க நியாயமற்றது.
சகோதரபடுகொலையா! யார் யாருக்கு சகோதரன் என் இன சகோதரனை இந்திய சிறிலங்கா துணைக்குழுவாய் இருந்து கொன்றவனை. என் இனச்சகோதரிகளை இந்திய சிறிலங்கா படையுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவு புரிந்து கொன்றவர்கள். எமதினத்தை எதிரிக்கு காட்டிக் கொடுத்தவர்கள்/ கொடுப்பவர்கள் சகோதரமா??? ஒருபோதும் இல்லை.
போராடி மரணித்த மாவீரர்கள் 35000. சிறிலங்கா இந்தியா அரசபயங்கர வாதத்தாலும் தமிழ்(???) ஒட்டுக்குழுக்களாலும் சிறிலங்கா முஸ்லீம் காடையர்களாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் 350000 க்கு மேல்.
சிறிலங்கா முஸ்லீம்களையும் தமிழ்(???) ஒட்டுக்குழுக்களையும் முற்றாக புறக்கணிக்காமல் விடுவதுதான் பெரும் தவறாக இருந்தது. இனியும் இருக்கப் போகுது.
இந்த கட்டுரை பன்னிரண்டு வருடங்களின் முன்னர் வெளியானது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பத்திரிகையில் வெளிவந்தது, இப்போதும் பொருத்தமாக உள்ளது தான் இதன் சிறப்பு. புலிகளின் கிட்டு லண்டனில் இருந்து மக்கள் கலை இலக்கியக் கழகம் தான் இந்தக் கொலையை செய்திருக்கும் என கோழைத்தனமகக் காட்டிக் கொடுத வேளையில் அவர்களையும் ஈழத் தமிழர்களையும் அப்போ ஆட்சியிலிருத பாசிஸ்ட் ஜெயா,,, துரத்தித் துரத்தி வேட்டையாடினார், இப்போ மறுபடி அந்த நாட்களை அதே தேசிய வியாபாரிகள் கண்முன்னால் கொண்டு வருகிறார்கள்.
மரணதண்டணை நிறைவேற்றுவதை 150 க்கு மேற்பட்டநாடுகளில் தடைசெய்யப் பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தி பிறந்தநாட்டில் திரேஸ அம்மையார் வந்து வாழ்ந்து மானிடத்திற்கு புகழ்சேர்த்த இந்தியா என்கிற மாபெரும் நாட்டில் நாம் மரணதண்டணையை நிறைவேற்றியே தீருவோம் என்று அடம் பிடித்தால் நாம் என்ன செய்வோம்?. இந்தியயரசியல்யாண்மைக்கே அழிவுகாலம் நெருங்கிக் கொண்டி
யிருக்கிறது என்பதாகவே பொருள்படவேண்டும்.
எய்தவன் யாரோ இருக்க அம்புக்கு தண்டணை?. தவறாக இருந்தாலும் ஒரு இனத்தின் பெயரில்-நம்பிக்கையின் பெயரில் ஆதரவு கொடுப்பது தவறா? புலிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களும் தண்டனை கொடுக்க வேண்டுமாக இருந்தால் ஈழத்தமிழருக்கு 50 வீதமானவர்களுக்கும் புலம்பெயர்தமிழருக்கு 99 வீதமானவர்களுக்கும் தண்டனை கொடுக்கப் படவேண்டும்.
இதெல்லாம் நடைமுறைக்கும் இயங்கிலுக்கும் மறுபக்கத்தில் மனுநீதிக்கும் சாத்தியமா?
பலகோடிசனத்தொகையுடைய நாட்டின் தலைவன். வேண்டுமானால் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். பலமதங்களுக்கும் பல இனங்களும் அதிபதி. இப்படியான ஒரு தவைைனை கொல்வது என்பது ஒரு அற்பபுத்தி படைத்தவனாலேயே சாத்தியக் படகூடியது தொன்று. இதற்கு புலித்தலைமைகளை கைதிசெய்து தண்டணையை நிறைவேற்றுவதே நியாமானது… இதுகாலம் கடந்தல்லவா? நாம் வந்து விட்டோம்!.
மரணதண்டணையை எதிர்நோக்கி நாட்களை எண்ணிகொண்டிருபவர்கள் நளினி உட்பட பயங்கரவாதத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் தமது இனஉணர்வைத்தான் புலிகளுடன் உறவுகொண்டதின் மூலம் வெளிப்படுத்தினார்கள். இவர்கள் மாபெரும் இந்தியாவின் தலைவரை கொல்வதற்கு நாம் சதிசெய்கிறோம் என்பதை ஒற்றைக்கண் சிவராஜனை தவிர யாருக்கும் தெரியாது. ஆகவே இவர்கள் சூழ்நிலை கைதிகள். குற்றவாளிகளாக இன்று தூக்குக் கயிறு இவர்களை வரவேற்கிறது. இந்தியாவின் அரசியலில் எல்லாமே நீதியாகதான் நடந்து கொண்டிருக்கிறதா? இந்த நால்வரையும் தூக்கில் ஏற்றிவிட்டால் நீதி பூர்ணத்தும் அடைந்து விடுமா?
இளநீர்குடித்தவன் தப்பிப்போக கோம்பை சூப்பியவன் தண்டணை பெறுவதைத் தான் இன்றுவரை கண்டுவருகிறோம். குற்றவாளியாக சந்தேகித்து போலீஸ்வரை கொண்டு வந்து அடிபோட்டு முடிந்தால் சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்குவதைத் தான் இந்தியா மறைமுக அரசியலாகக் கொண்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைக்கு கொலையை புலிகள் மூலம் தூண்டிவிட்டவர்களே இந்த ´மரணதண்டணையை நிறைவேற்ற வேண்டும் என அங்கலாப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
எது எப்படியிருந்தாலும் எதைசாதிக்க துடிக்கிறீர்களோ? அது சதாரண இனஉணர்வுள்ள அப்பாவிமக்களே! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என நீங்கள் நினைத்தால்.. உங்களுக்கு எவ்வளவு பெரிய அழிவு காத்திருக்கிறது.
ஒரு இந்திய பிரதமர் ஒரு சிங்களஇராணுவ சிப்பாயின் துவக்குப் பிடியால் அடிவாங்குவதில் இருந்து கொடும்புலிகளின் தற்கொலைவெடிகுண்டுக்கு பலியாகுதலும் இனிவேண்டாம். அப்பாவிகள் ஆயுள்தண்டணை பெற்று தூக்கு தண்டணை பெறுவதும் இனிவேண்டவே! வேண்டாம்.
1ஏன் போராளி இயக்கத்திற்கு ஆயுத பயற்சி கொடுத்தார்கள் ?
2 இந்தவிற்கு இதனால் என்ன ஆதயம் கிடைதர்து ?
3 ஆயுத பயற்சி கொடுத்தது ஈழா தமிழனின் நலத்திற்க இல்லை இந்தியாவின் நலத்திற்க ?
//அதெப்படி புலிகளிற்கு புலம்பெயர்ந்தவர்கள் உதவிய மாதிரி ஏன் மற்றவர்களிற்கு உதவ முன்வரவில்லை?//நிர்மலன்
புலிகளின் தாக்குதல்கள் ரசிக்கத்தக்கவை, அதுமட்டுமல்ல தமிழ்ர்களை இலங்கை இராணுவம் அழிக்கவும் உதவின. இதனால் அகதிகள் அந்தஸ்து யாவருக்கும் கிடைத்தன. பின்னர் புலிக்கு உதவி செய்தவ்ர்களே வன்னிக்குப் போகாமல் ஆகாயமார்க்கமாக யாழ்ப்பாண்த்திற்கு போய்வந்தனர். தமிழர்களின் எண்ணமொன்று,சொல்வதொன்று,செயலொன்று.-துரை
100% of Thamils support for freedom struggle. But 90% of thamils did not differentiate among the freedom fighters whether they are PLOT, LTTE, EPRLF, TELO or EROS. But these movements (especially LTTE ) tried to manupulate people for their sake. Hope we have good future without group politics.
கருணையினால் அல்ல எதைக் கொண்டும் மூவர்கள் தண்டனையை குறைக்க வேண்டும். என்று அரசிடம் கோர இயலாது. கருணை என்று சொல்ல விரும்பவில்லை எனில் மனித நேயம், மனித உரிமை, உயிர்காப்பு என்று சொல்லிக் கொள்ளலாம். கட்டுரை ஆசிரியர் ஒரு புதிய ஆனால் ஆபத்தான கருத்தியலை முன்வைத்துள்ளார். அதை நான் விளங்கிக்கொண்ட அளவில் சுருக்கமாக இப்படி சொல்லலாம்.
1.அரசு எப்பொழுதும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறது.
2. அதற்கு எதிராக தனி மனிதர்கள் குழுக்கள் செய்யும் கொலைச் செயல்கள் ஏற்புடையவே. அந்த வகையில் ராசீவ் காந்தி கொலையும் ஏற்புடையதே. அதற்கு உதவி செய்த மூவரின் செயலும் ஏற்புடையதே.
3. மக்களுக்கு நன்மையை செய்த இம்மூவரையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த கருத்தியலை மேலோட்டமாக சரியானதாகவும் மார்க்க்சீய கருத்தியலை உள் வாங்கிக் கொண்ட புரட்சிக்கார தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருப்பது போல் தோன்றும் ஆனால் இது ஒரு பெரிய வரலாற்றுப் பிழையான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வாதத்தின் அடிப்படையில் எந்த தனி மனித படுகொலையும் சரியானது என்று வாதிடலாம். பாபர் மசூதி இடிப்பு முதல் கோவை குண்டுவெடிப்பு வரை நாடாளுமன்ற தாக்குதல் முதல் மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் இப்படி எல்லாவற்றையும் அரசுக்கு எதிரானது என்று அமெரிக்காவிற்கு எதிரானது என்று கூறி வாதிடலாம். இதனால் எல்லாம் மரணம் அடைபவர்கள் 90% பொது மக்கள் மற்றும் சில அரசு அதிகாரிகள் அவ்வளவுதான். அரசு எந்த கேடும் இல்லாமல் நன்றாகத்தான் தன்னுடைய ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறது. மேலும் ராசீவ் காந்தி பற்றிய செய்தியில் அவர் கொல்லப்பட்ட போது முதன்மை அமைச்சராகக் கூட இல்லை. தேர்தலில் போட்டியிட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அப்படி வைத்துக்கொண்டால் எந்த முன்னாள் இந்நாள் தலைவரையும் அவரைக்காண வந்த பொது மக்களையும் குண்டு வெடிப்பில் கொலை செய்துவிட்டு இது அரசின் வன்முறைக்கு எதிர்வினை என்று வாதிடலாம். இது பிழையான மார்க்சீய பார்வையாகும். கார்ல் மார்க்ஸ் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய விடுதலைக்கு என்று செய்கின்ற எல்லா செயல்களையும் வரலாறு ஏற்றுக் கொள்கிறது. என்று சொல்லி இருக்கிறார். இங்கு அழுத்தம்…………….. மக்கள் செய்கின்ற செயல்கள் என்பதில் இருக்கிறது. அதை விடுத்து தனி மனிதர்கள் சிறுகுழுக்கள் தங்களுடைய விருப்பப்படி செய்கின்ற செயல்கள் யாவும் வரலாற்று செயல்களாக கொள்ளப்பட மாட்டாது. மார்க்சீயம் என்றும் தனி மனித கொலைகளை சமூகத் தீர்வாக ஏற்றுக் கொண்டது இல்லை. இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எனில் லெனின் எழுதிய……… இடது சாரி தீவிரவாதம் ஒரு சிறுபிள்ளைத்தனம் என்ற நூலினைப் பார்த்தல் நல்லது. இன்று இந்த சிறுபிள்ளைத்தனம் வளர்ந்து கொத்து கொத்தாக மக்களைக் கொல்லும் அளவிற்கு சென்று விட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நில உடமையாளரையும் ஒன்றன்பின் ஒன்றாக கொலை செய்து விட்டால் நில உடமையை ஒழிந்து போகும். என்று தவறான கருத்துடன் தொடங்கப்பட்ட ….. இயக்கம் 60 ஆண்டு காலத்தில் சீர் குலைந்து போயிற்று. இன்று மாவாயிஸ்டுகள் கூட தனி மனித கொலைகளை கருத்தியல் அளவில் ஆதரிப்பதில்லை. நக்சல்.. இயக்கத் தலைவர்களில் ஒருவரான கனு சன்யால்………. அண்மையில் கண்ணீர் சிந்தக்கூட ஆளில்லாமல் தனிமையில் இறந்து போனார்.